ADVERTISEMENT

TNPSC Group-4 Questions and Answers

டி.என்.பி.எஸ்.சி.(TNPSC) குரூப் -4 தேர்வு

பொதுத்தமிழ் – இலக்கணம்

1. ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிக.
டயாபெட்டிக் பேஷண்ட் ஸ்வீட் சாப்பிடுவதை ஸ்டாப் செய்ய வேண்டும்
a . சர்க்கரை நோயாளிகள் ஸ்வீட் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்
b . நீரிழிவு நோயாளிகள் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்
C. நீரிழிவு நோயாளிகள் ஸ்வீட் சாப்பிடுவதை தடுக்க வேண்டும்
d . சர்க்கரை வியாதிக்காரர்கள் இனிப்பு சாப்பிடக்கூடாது
e . விடை தெரியவில்லை
விடை: b
2. கீழ்க்காணும் கூற்றுக்களில் இடம்பெறும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிக.
குறிக்கும்
I. ‘பூ ‘ எனும் சொல் மலரையும் , பெண்ணையும் குறிக்கும்
II . ‘ பா ‘ எனும் சொல் செய்யுளையும் , எழுத்தையும் குறிக்கும்
III . ‘ வா ‘ என்பது ‘ வருதல் ‘ எனும் வினையைக் குறிக்கும்
IV . ‘ கோ ‘ என்பது கோவிந்தனின் பெயர் a . IV , III மற்றும் II சரியானவை
b . IV , II மற்றும் | சரியானவை
c . IV , I மற்றும் III சரியானவை
d . I , II மற்றும் III சரியானவை
e . விடை தெரியவில்லை
விடை: d
3. ஓரெழுத்து ஒரு மொழி எத்தனை உள்ளன?
a . நாற்பத்திரண்டு
b . ஐம்பத்திரண்டு
c . முப்பத்திரண்டு
d . எழுபத்திரண்டு
e . விடை தெரியவில்லை
விடை: a
4.பொருந்தாதவற்றைச் சுட்டுக.
a . நாடி இனிய சொலின்
b . இனிய உளவாக இன்னாத கூறல்
c . காயும் ஒருநாள் கனியாகும்
d . பண்பின் தலைபிரியாச் சொல்
e . விடை தெரியவில்லை
விடை: c
5. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
தலை , தழை , தளை
a . சிரசு , புல் , கட்டுதல்
b . சிரசு , இலை , பறவை
c . தலைவன் , கிளை , மீன்
d . அரசன் , செடி , மரம்
e . விடை தெரியவில்லை
விடை: a
6. அவன் ஊருக்குப் போகாமல் இரான் – எவ்வகைத் தொடர்?
a . எதிர்மறைத்தொடர்
b . உடன்பாட்டுத் தொடர்
c . பிறவினைத் தொடர்
d . பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
e . விடை தெரியவில்லை
விடை: d
7. ஒழுங்குபடுத்திய சொற்றொடரைக் கூறுக.
“ அரசவைக் கவிஞராகத் தமிழக அரசின் திகழ்ந்தார் ”
a . தமிழக அரசின் அரசவை கவிஞராகத் திகழ்ந்தார்
b . தமிழக அரசின் அரசவைக் கவிஞராக திகழ்ந்தார்
c . தமிழக அரசின் அரசவை கவிஞராக திகழ்ந்தார்
d . தமிழக அரசின் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தார்
e . விடை தெரியவில்லை
விடை: d
8. விடைக்கேற்ற வினாவைத் தேர்க
“ கீழோர் ஆயினும் தாழ உரை ”
a . தாழ உரைக்க வேண்டும் – ஏன் ?
b . கீழோர் எப்படி இருக்க வேண்டும் ?
c . கீழோரிடம் எப்படிப் பேச வேண்டும் ?
d . கீழோர்க்கு நன்மை எது ?
e .விடை தெரியவில்லை
விடை: c
9. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று – இத்தொடரில் பயின்று வரும் அணி யாது ? a . இல்பொருள் உவமை அணி
b . உருவக அணி
c . வேற்றுமை அணி
d . பிறிது மொழிதல் அணி
e . விடை தெரியவில்லை
விடை: a
10. கீழ்க்காண்பனவற்றுள் சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க
a . பெண்களுக்கு கிடைக்க வேண்டியவை பெண்கல்வி , பெண்ணுரிமை , சொத்துரிமை
b . ஏழைகளுக்கு பொருள் பெறாமல் வாதாடி நீதி பெற்று தந்தார்
c . மாறன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான்
d . திரைப்படம் மக்களை தன்பால் ஈர்த்து கட்டி போடவல்லது
e . விடை தெரியவில்லை
விடை: c
11.கீழ்வருவனவற்றில் பண்புத்தொகை அல்லாதவை
a . வெண்தயிர்
b . சேவடி
c . செந்நெல்
d . சுடரொளி
e . விடை தெரியவில்லை
விடை: d
12. ‘இன்னாச்சொல் ‘ என்பதற்குப் பொருத்தமான எதிர் சொல்லைக் கண்டுபிடி
a . இனிய சொல்
b . இனிமையற்ற சொல்
c . இழிவான சொல்
d . விரிவான சொல்
e . விடை தெரியவில்லை
விடை: a
13. வழூஉச் சொல்லற்ற தொடர் எது?
a . கதவை நன்றாகத் தாப்பாள் போடவில்லை
b . கதவை நன்றாகத் தால்ப்பாள் போடவில்லை
c . கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போடவில்லை
d . கதவை நன்றாகத் தாள்ப்பாள் போடவில்லை
e . விடை தெரியவில்லை
விடை: c
14. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது? a . கண்ணன் அம்மாவிடம் உத்தரவு பெற்று திரைப்படத்திற்குச் சென்றான்
b . நாளுக்கு நாள் விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது
c . கண்ணன் தேநீர்க் கடைக்குச் சென்றான்
d . மாதவி அழகாக அலங்காரம் செய்திருந்தாள்
e . விடை தெரியவில்லை
விடை: c
15. அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே
இவ்வடியிலுள்ள ‘ அல் ‘ என்பதன் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
a . காலை
b . மாலை
c . இரவு
d . பகல்
e . விடை தெரியவில்லை
விடை: d
16. நேரிசையாசிரியப்பாவின் ஈற்றயலடிக்குரிய சீர்
a . நாற்சீர்
b . முச்சீர்
c . ஐஞ்சீர்
d . அறுசீர்
e . விடை தெரியவில்லை
விடை: b
17. இரண்டு உதடுகள் குவிவதால் பிறக்கும் எழுத்துக்கள்
a . உ , ஒ
b . இ , ஈ
C. அ , ஆ
d . ப , ம
e . விடை தெரியவில்லை
விடை: a
18. எவ்வகை வாக்கியம் எனக்கண்டறிக. ஐயோ, முள் குத்தி விட்டதே!
a . வினா வாக்கியம்
b . கட்டளை வாக்கியம்
C. உணர்ச்சி வாக்கியம்
d . செய்தி வாக்கியம்
e . விடை தெரியவில்லை
விடை: c

மேலும் படிக்கTNPSC Group-4 Questions and Answers

19. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
‘ சித்தன்னவாசல் ஓவியங்கள் அழகுமிக்கவை ’
a . வினா வாக்கியம்
b . கட்டளை வாக்கியம்
c . உணர்ச்சி வாக்கியம்
d . செய்தி வாக்கியம்
e . விடை தெரியவில்லை
விடை: d
20.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
என்னால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறப்பட்டது
a . செய்வினை வாக்கியம்
b . செயப்பாட்டு வினை வாக்கியம்
c . தொடர் வாக்கியம்
d . கலவை வாக்கியம்
e . விடை தெரியவில்லை
விடை: b
21. ‘ ஆற்றுணா வேண்டுவ(து) இல் ‘ – இப்பழமொழியில் உள்ள ‘ ஆற்றுணா ‘ என்பதன் பொருள்.
a . அரையன்
b . வழிநடை உணவு
C. அரண்மனை
d . திருவிழா
e . விடை தெரியவில்லை
விடை: b
22. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
a . ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி
b . எலிக்குப் பகை பூனை , நண்டுக்குப் பகை நரியும் கொக்கும் , தவளைக்குப் பகை பாம்பும் பருந்தும்
c . கேணி நீர்ப்படு சொறித்தவளை கூப்பிடுகுதே
d . சேற்று நண்டு சேற்றைக் குழைத்து ஏற்றடைக்குதே
e . விடை தெரியவில்லை
விடை: b
23. துணி கலையரசியால் தைக்கப்பட்டது – இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு
a . கலையரசி துணி தைத்தாள்
b . கலையரசி தைத்தாள் துணி
c . கலையரசி என்ன தைத்தாள்
d . கலையரசி துணியைத் தைத்தாள்
e . விடை தெரியவில்லை
விடை: d
24. ” ஒறுத்தாரை ஒன்றாக வையாரே ” – இத்தொடரில் “ ஒறுத்தார் ” என்பதன் இலக்கணக் குறிப்பு
a . முற்றெச்சம்
b . தொழிற்பெயர்
c . வினையாலணையும் பெயர்
d . வினையெச்சம்
e . விடை தெரியவில்லை
விடை: c
25. வா – என்னும் வேர்ச் சொல்லின் வினையெச்சத்தைக் கூறு.இேத
a . வந்தான்
b . வந்து
C. வருதல்
d . வந்த
e . விடை தெரியவில்லை
விடை: b

மேலும் படிக்கTNPSC Group-4 Questions and Answers

ADVERTISEMENT

26. பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க
a . ஏலாதி
b . ஆசாரக் கோவை
c . திரிகடுகம்
d . சிறுபஞ்சமூலம்
e . விடை தெரியவில்லை
விடை: b
27. ‘ இல்லை ‘ – என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக.
a . தெரிநிலை வினைமுற்று
b . எதிர்மறை பெயரெச்சம்
c . குறிப்பு வினைமுற்று
d . வியங்கோள் வினைமுற்று
e . விடை தெரியவில்லை
விடை: c
28. ‘ Might is Right ‘ இதன் தமிழாக்கம்
a . ‘ கடமையே உரிமை ‘
b . ‘ வல்லான் வகுத்ததே வாய்க்கால் ’
c . ‘ வலிமையே சரியான வழி ‘
d . ‘ ஒற்றுமையே வலிமை ‘
e . விடை தெரியவில்லை
விடை: b
29. ” யாழ் கேட்டு மகிழ்ந்தாள் ” – இவ்வாக்கியத்தில் யாழ் என்பது
a . சொல்லாகு பெயர்
b . கருத்தாகு பெயர்
c . கரியவாகு பெயர்
d . கருவியாகு பெயர்
e . விடை தெரியவில்லை
விடை: d
30. ” எயிறு ” என்னும் சொல் – சொல்லின் எவ்வகை?
a . திரிசொல்
b . இயற்சொல்
c . வினைத்தரிசொல்
d . பெயர்த்திரிசொல்
e . விடை தெரியவில்லை
விடை: d
31. அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல் கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
a . எதுகை மட்டும் வந்துள்ளது
b . எதுகையும் , மோனையும் வந்துள்ளது c . எதுகை , மோனை , அந்தாதி வந்துள்ளன
d . மோனை மட்டும் வந்துள்ளது
e . விடை தெரியவில்லை
விடை: d
32. ” கார்குலாம் ” – எனும் சொல் தொகையைக் குறிக்கும்?
a . ஐந்தாம் வேற்றுமைத் தொகை
b . மூன்றாம் வேற்றுமைத் தொகை
c . ஆறாம் வேற்றுமைத் தொகை
d . நான்காம் வேற்றுமைத் தொகை
e . விடை தெரியவில்லை
விடை: c
33. அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது
a . மலையைப் போன்றது
b . கடலைப் போன்றது
c . வளர்பிறையைப் போன்றது
d . தேய்பிறையைப் போன்றது
e . விடை தெரியவில்லை
விடை: c