ADVERTISEMENT

முதுமையைத் தடுக்கும் முத்தான வழிகள்

Contents
  1. முதுமையைத் தடுக்கும் முத்தான ஐந்து வழிகள்:
    1. வெள்ளைச் சர்க்கரை:
    2. சன்ஸ்கிரீன் க்ரீம் அல்லது லோஷன் பயன்படுத்துங்கள்:
    3. முறையான தூக்கம் அவசியம்:
    4. நல்லெண்ணெய் மசாஜ்:
    5. கற்றாழை மாஸ்க்:
  2. 40 வயதிலும் 20 போல் இருக்க சில குறிப்புகள்!
    1. 1. மன நிலை முக்கியம்:
    2. 2. உடல் மேல் கவனம்:
    3. 3. பொழுதுபோக்கு:
    4. 4. ஆரோக்கிய உணவு:
    5. 5. நல்ல நட்பு:
  3. மன அழுத்தம் போக்கும் அழகுத்தாவரங்கள்:
    1. 1 ) வீப்பிங் ஃபிக் / ஃபைக்கஸ் பென்ஜமினா:
    2. 2 ) மணி பிளான்ட் ( போதோஸ் ):
    3. 3 ) அரீகா பால்ம்:
    4. 4 ) ஸ்நேக் பிளான்ட் / மரூள்:
    5. 5 ) சைனீஸ் எவர்கிரீன் / அக்லோனிமா:
  4. உடல் எடையைக் குறைக்க சிறிய மாற்றங்களே போதும்!
    1. வாட்டர் தெரபி:
    2. நார்ச்சத்து உள்ள உணவு:
    3. புரோட்டீன் அவசியம்:
    4. நன்றாக மென்று உண்ணவும்:

முதுமையைத் தடுக்கும் முத்தான ஐந்து வழிகள்:

வயது முப்பதைத் தாண்டிய பிறகும், நாற்பதைக் கடந்த பிறகும், அனைவருக்கும் “ நமக்கு வயதாகிறதே ” என்கிற கவலை மெல்ல ஆக்கிரமிக்க ஆரம்பிக்கும். வயதாவதைத் தடுக்க முடியாது. ஆனால் வயதாகும் வேகத்தைக் குறைக்கலாம். சரிவிகித உணவு, சருமப் பராமரிப்பு, போதிய அளவு தண்ணீர் அருந்துதல், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை ஆகியவை வயதாவதைக் குறைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதிக செலவுகள் இல்லாமல் உங்கள் சருமத்தை வயதாவதிலிருந்து தடுக்க இதோ ஐந்து வழிகள்….

வெள்ளைச் சர்க்கரை:

நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டானாலும் கொஞ்சம்தானே சாப்பிடுகிறோம் என உண்ணும் இனிப்புகள் கெடுதலையே உண்டாக்கும். வெள்ளைச் சர்க்கரை நல்ல சருமத்துக்கு எதிரி. சர்க்கரை சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும். சருமம் வறட்சியடைந்தால் சுருக்கத்தையும் தொய்வையும் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: பெண்களுக்கான சில மருத்துவ குறிப்புகள்

சன்ஸ்கிரீன் க்ரீம் அல்லது லோஷன் பயன்படுத்துங்கள்:

சூரியக் கதிர்கள் சருமத்தைச் சேதப்படுத்நினை சேதப்படுத்துவதைத் தடுப்பதில் சன்ஸ்கிரீன் க்ரீம்கள் முக்கிய பங்காற்றுகின்றன. எஸ்.பி.எப் 30-க்கும் மேலே உள்ள சன்ஸ்கிரீன் க்ரீம்கள் மட்டுமே பலன் அளிக்கக்கூடியவை . எஸ்.பி. எப் 50 உள்ள சன்ஸ்கிரீன் க்ரீமை இரண்டு லேயராக தடவுங்கள். கழுத்து, மற்றும் கழுத்தின் கீழ்ப்பகுதி வரை தடவுவது அவசியம். ஏனெனில் முகத்தின் சருமத்தை விட, இந்தப் பகுதிகள் வயதான தோற்றத்தை பளிச்சென்று பிரதிபலிக்கக்கூடியவை.

ADVERTISEMENT

முறையான தூக்கம் அவசியம்:

எட்டு மணி நேர உறக்கம் என்பது புத்துணர்ச்சிக்கும், ஆரோக்கியமான மனநிலைக்கும் மட்டுமல்ல, அது பல்வேறு பலன்களையும் கொடுக்கும். இரவில் தூங்கும் போது, உடல் ஓர் அற்புதத்தை நிகழ்த்துகிறது. மன அழுத்தம் தரும் ஹார்மோன்களைக் குறைத்து, வளர்ச்சி தரும் ஹார்மோன்களை அதிகரிக்கிறது. இது செல்களைப் புதுப்பித்து சருமத்தைப் பொலிவுறச் செய்கிறது. சரியாக எட்டு மணி நேரம் உறங்க முடியாவிட்டாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் உறங்கச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

நல்லெண்ணெய் மசாஜ்:

குளிப்பதற்கு முன் ஆர்கானிக் நல்லெண்ணெய் கொண்டு முகம் மற்றும் உடலை மசாஜ் செய்வது வயதாவதைத் தடுக்கும் மிகச் சிறந்த வழி. காலை நேரத்தில் நல்லெண்ணெய் மசாஜ் செய்துவிட்டு குளிப்பது மிகச் சிறந்த பலனைத் தரும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நல்லெண்ணெய் சருமத்துக்குள் ஆழமாக ஊடுருவி ஈரப்பதமாக்கும். இது இளமைத் தன்மையை பராமரிக்க முக்கியமானது. அழுக்கு மற்றும் இறந்த சரும செல்கள் வெளியேறும்.

கற்றாழை மாஸ்க்:

வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தக் கூடிய, முதுமையை தள்ளிப்போடும் கற்றாழை மாஸ்க் செய்முறை…..

கற்றாழையில் உறுதியான ஆண்டி ஏஜிங் கூறுகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு மேசைக்கரண்டி கற்றாழை சாறு அல்லது ஜெல்லுடன் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவுங்கள். வாரம் 2 – 3 முறை இந்த மாஸ்கை அப்ளை செய்யுங்கள். நல்ல பலனைக் கொடுக்கும். ஒவ்வொரு முறையும் புதிதாகத் தயாரித்துப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.

40 வயதிலும் 20 போல் இருக்க சில குறிப்புகள்!

முதுமை அல்லது வயதாவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் நமது உடலை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள கண்டிப்பாக முடியும். பொதுவாகவே திருமணத்துக்குப் பிறகு பெண்கள் தங்களைக் கவனித்துக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

ADVERTISEMENT

மேலும் படிக்க: சில எளிய மருத்துவ குறிப்புகள்

குடும்பம், வீடு, குழந்தை என அவர்கள் தங்களை ஒரு கூட்டுக்குள் அடைத்துக்கொண்டு தங்களையே மறந்து குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருப்பார்கள். இன்றைக்கு நிலைமை கொஞ்சம் மாறியுள்ளது. பல பெண்கள் தங்களது உடல் நலன் மீது அக்கறை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சிலருக்கு ஆசை இருந்தாலும் எப்படி பின்பற்றுவது என்ற குழப்பம் இருக்கிறது. அவர்களுக்காக சில டிப்ஸ்…..

1. மன நிலை முக்கியம்:

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மகிழ்ச்சியான, அமைதியான மன நிலை அவசியம். இந்த உலகில் பிரச்சினைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. நாம் அனைவரும் எத்தனையோ பிரச்சினைகளைக் கடந்தே வந்திருப்போம். அதனால் இனிமேல் புதிதாக ஏதும் பிரச்சினை வந்தால், அட , நான் பார்க்காததா? என்று நினைத்துக் கொண்டு, திடமாக அவற்றைக் கடக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் மனதுக்கும், முகத்துக்கும் புதுப்பொலிவைத் தரும். அடிக்கடி நீங்கள் ஆரோக்கியமானவராகவும், மகிழ்ச்சி பானவராகவும் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

2. உடல் மேல் கவனம்:

நாம் வாழ்வதே இந்த உடலின் மூலம் தான். ஆகவே, உடல் மீது நமக்கு மிகுந்த அக்கறை வேண்டும். எனவே, முதலில் கவனிக்க வேண்டியது தூக்கம். வாரத்துக்கு 4 முதல் 6 தடவையாவது சின்னச் சின்ன உடற்பயிற்சிகளைச் செய்வது அவசியம். நிம்மதியான தூக்கம் உங்கள் உடலின் செல்களை புத்துணர்வு அடையச் செய்யும். உடற்பயிற்சி செய்வது தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும். இவை இரண்டும் நீங்கள் எப்போதும் நல்ல உடல் நிலையைத் தக்க வைக்க உதவும்.

3. பொழுதுபோக்கு:

டி.வி பார்ப்பதே பெரும்பாலானோரின் பொழுது போக்காக இருக்கிறது. இன்னும் சிலருக்கு அதற்கு நேரம் கூட கிடைப்பதில்லை. தையல், எம்ப்ராய்டரி அல்லது வேறு ஏதாவது ஒன்றை உங்களுக்கு பிடித்ததாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். ஒரு நாளில் குறைந்தது 5 நிமிடங்களாவது உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கை செய்வதென்று முடிவு செய்து தொடங்குங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் மன நிலையின் மாற்றத்தை…!

ADVERTISEMENT

4. ஆரோக்கிய உணவு:

நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு நல்ல உணவு முக்கியம். உங்கள் உடல் நலத்துக்கு ஏற்றவாறு, உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம். வீணாகப் போகிறது என்பதற்காக வயிற்றுக்குள் கொட்டினால், வீணாவது உங்கள் உடல்தான் என்பதைப் புரிந்து நடக்க வேண்டும்.

5. நல்ல நட்பு:

எப்போதுமே நம்மைச் சுற்றியிருப்பவர்களின் செயல்களே நம்மைப் பாதிக்கும். அதனால் சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து நட்பு கொள்வது மிக முக்கியமானது. நல்ல நண்பர்களே உங்களுக்குப் பெரிய ஊக்க சக்தி. இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது நம் மனநிலை. வயதாகிவிட்டது என்ற மன நிலையை தூக்கி எறிந்து விடுங்கள். இவற்றையெல்லாம் தொடர்ந்து பின்பற்றினால், நீங்கள் எப்போதும் 20 தான்.

மன அழுத்தம் போக்கும் அழகுத்தாவரங்கள்:

பச்சைப் பசேலென்ற சூழல் ரம்மியமூட்டுவதுடன் மனதுக்கு அமைதியைத் தரும். கண் இமைகளை அசைக்காமல் சில நிமிடங்கள் மரம், செடிகளைப் பார்த்துக்கொண்டிருந்தாலே எத்தகைய மன அழுத்தம் இருந்தாலும் அவை நம்மைவிட்டு விலகிவிடும். இன்றைய சூழலில் பசுமை நிறைந்த இடங்களை தேடிப்போக முடியாது. நாம் வசிக்கும் இடங்களிலேயே பசுமையான சூழலை உருவாக்கி மகிழலாம்.

மேலும் படிக்க: உணவும் ஆரோக்கியமும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது

செடி வளர்ப்பதில் பலருக்கு ஆர்வம் உண்டு. சிலர் பொழுதுபோக்குக்காக செடி வளர்ப்பார்கள். இன்றைய கொரோனா காலகட்டத்தில் அது பேருதவியாக இருக்கும். எங்கு திரும்பினாலும் கொரோனா பற்றிய செய்திகள் மனதை பதைபதைக்க வைக்கின்றன. தொலைக்காட்சிகள், சமூகவலைத் தளங்களில் கொரோனா குறித்த எதிர்மறையான தகவல்களையே காணமுடிகிறது. தோட்டக்கலையில் ஆர்வம் காட்டுவதன் மூலம் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு கிடைக்கும்.

ADVERTISEMENT

மணி பிளான்ட் போன்ற அழகுச் செடிகளை வளர்த்தால் அவை சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துவதுடன் நமக்கு பல்வேறு பலன்களை அள்ளித் தரும். அவை குறித்து பார்ப்போம்.

1 ) வீப்பிங் ஃபிக் / ஃபைக்கஸ் பென்ஜமினா:

வீட்டின் வெளிப்புறம் மட்டுமல்லாமல் வீட்டின் உள்ளேயும் வளர்ப்பதற்கு சிறந்த செடிகள் இவை. காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைடு, பென்சீன், குளோரோ எத்திலீன் போன்றவற்றை அழித்து காற்றை சுத்தப்படுத்தும்.

2 ) மணி பிளான்ட் ( போதோஸ் ):

மணி பிளான்ட் செடியை வீட்டில் வளர்த்தால் பணம் கொட்டும் என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பிளான்ட் வளர்த்தால் பணம் வருகிறதோ இல்லையோ சுத்தமான காற்று கிடைக்கும். வீட்டைச் சுற்றியோ அல்லது வீட்டின் உள்ளேயோ மணி பிளான்ட் செடியை வளர்த்தால் அது காற்றினை மாசுபடுத்தும் நச்சுப்பொருட்களை உட்கிரகித்து காற்றை சுத்திகரிக்கும்.

3 ) அரீகா பால்ம்:

இந்தச் செடியை பராமரிப்பது சற்று சிரமமாக இருந்தாலும், காற்றை சுத்தப்படுத்துவதில் மிகச்சிறப்பாக செயலாற்றும் தாவரமாகும். இது ஆக்சிஜனை அதிக அளவில் உற்பத்தி செய்வதுடன் வீட்டைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.

4 ) ஸ்நேக் பிளான்ட் / மரூள்:

இந்தத் தாவரம் 100-க்கும் மேற்பட்ட காற்று மாசுபாடுகளை அழிக்கக்கூடியது. தண்ணீர் இல்லாவிட்டாலும்கூட பல நாட்கள் உயிர்ப்போடு இருக்கும். பொதுவாக இந்தத் தாவரத்தை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. இதை ஆங்கிலத்தில் ‘ மதர் இன் லா டங் ‘ என்பார்கள். ‘மாமியார் நாக்கு’ என்று இதை கிண்டலாகச் சொன்னாலும் இந்தத் தாவரம் நமக்கு நல்லதையே செய்யும்.

ADVERTISEMENT

5 ) சைனீஸ் எவர்கிரீன் / அக்லோனிமா:

இது மிக அதிக அளவில் தயாரிக்கக்கூடியது, வீட்டில் பெரிதாக வெளிச்சம் இல்லாத இடத்திலும்கூட இந்தத் தாவரம் வளரும். எத்தனை செடிகள் வேண்டுமானாலும் வளர்க்கலாம். அறையில் வளர்ப்பது சிறந்தது.

இந்தச் செடி என்றில்லை, இன்னும் பல செடிகள் உள்ளன. அவற்றில் உங்களுக்கு விருப்பமான செடி எதுவோ, உங்கள் வீட்டுக்கு எது பொருந்துமோ, அதை வாங்கி வளர்க்கலாம். வீட்டை அலங்கரிப்பதுடன் காற்றைத் தூய்மைப்படுத்தி மனதுக்கு நிம்மதியை தரும்.

அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்கள் தோட்டம் வளர்க்க நிலம் இல்லையே என்று வருத்தப்பட வேண்டாம். இவற்றை வீட்டின் உள்ளேயே வளர்க்கலாம். பெரிய அளவில் இடமும் தேவையில்லை, பராமரிக்கவும் தேவையில்லை. பூச்சிகள் வராமல் பார்த்துக்கொண்டால் போதும். பெரிய அளவில் செலவில்லாமல், பராமரிக்க நேரம் தேவைப்படாமல் இருப்பதால் இந்தத் தாவரங் வாங்கி வளர்க்கலாம். இவை தாமாகவே வளர்ந்து உங்களுக்கு நன்மை தரும்.

உடல் எடையைக் குறைக்க சிறிய மாற்றங்களே போதும்!

உடலின் எடை சீராக இருக்க வேண்டும் என்பதுதான் பலரது விருப்பம். ஆனால், அவசரமான வாழ்க்கை சூழலில் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக ஒரு சிலருக்கு உடலின் எடை அதிகரித்து விடுகிறது. அதிக உடல் எடை என்ற சிக்கல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பாதிக்கிறது.

இன்றைய வணிக உலகில் உடல் எடையை குறைக்க ஏராளமான வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உடல் எடையை தகுந்த அளவில் பராமரிப்பதற்கு முதன்மையான பரிந்துரைகள் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு ஆகிய இரண்டும் தான். நடைமுறை வாழ்க்கையில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமாகவும் உடல் எடையைச் சீராக வைத்திருக்க முடியும். அதற்கான வழிகள்…

ADVERTISEMENT

வாட்டர் தெரபி:

தினமும் தண்ணீருக்கு பதிலாக வெந்நீர் அருந்துவது செரிமானத்துக்கு நல்லது. அதனால், உடலின் தேவையற்ற கொழுப்பு கரைய உதவுகிறது. சாப்பிடுவதற்கு 15 நிமிடம் முன்னதாகவும், சாப்பிட்ட பின்னர் 30 நிமிடம் கழித்தும் ஒரு டம்ளர் சுடுநீர் அருந்துவது நல்லது. அதன் மூலம், உணவின் அளவு சுமார் 13 சதவீதம் வரை குறையும், நொறுக்குத் தீனி சாப்பிடும் உணர்வு ஏற்பட்டால் தண்ணீர் அருந்தலாம்.

நார்ச்சத்து உள்ள உணவு:

பீன்ஸ், ஆரஞ்சு, ஓட்ஸ், கொள்ளு போன்ற நார்ச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீண்ட நேரம் பசி ஏற்படாது என்பதுடன், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை வெளியேற்றுவதிலும் நார்ச்சத்து உணவு வகைகளுக்கு முக்கிய பங்களிப்பு இருக்கிறது.

புரோட்டீன் அவசியம்:

முட்டை, பாதாம், மீன், அவக்கோடா ஆகியவற்றில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. அவை, அதிகமான பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. குறைவான அளவு சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தும், மேலும், குறைந்த அளவு கலோரிகளை கொண்டிருப்பதால் விரைவாக எடையைக் குறைக்க உதவுகின்றன.

நன்றாக மென்று உண்ணவும்:

உண்ணும் முறை காரணமாகவும் உடல் எடை அதிகரிக்கக்கூடும். அதாவது, உணவை சாப்பிடும் முறை மற்றும் அதற்கான நேரம் போன்ற விஷயங்கள் மூளையில் பதிவாகி இருக்கும். அவசரமாக சாப்பிடும் போது மூளையில் அது பதிவாகாமல் போகக்கூடும். இதனால், உணவின் பெரும்பகுதி கெட்ட கொழுப்பாக மாறலாம். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் , உணவை 21 முறை மென்று உண்பதால் அது மூளையில் பதிவாகி, சீரான விளைவை ஏற்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.