TNPSC Group 4 Questions 2024

பகுதி அ (Q41 – Q50)
41. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது.
(A) அண்ணா நூற்றாண்டு நூலகம்
(B) திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
(C) கன்னிமாரா நூலகம்
(D) தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
(E) விடை தெரியவில்லை
விடை: D
Read More: TNPSC Group 4 Questions 2024 பகுதி அ (Q31-Q40)
42. மஞ்சட்காமாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வரும் செடி.
(A) கீழ்க்காய்நெல்லி
(B) கீழாநெல்லி
(C) கீழ்வாய்நெல்லி
(D) இவை மூன்றும்
(E) விடை தெரியவில்லை
விடை: D
43. உப்பளத் தொழிலாளர் உவர்ப்பு வாழ்க்கையைக் குறிக்கும் புதினம்.
(A) அலைவாய்க் கரையில்
(B) கரிப்பு மணிகள்
(C) ஒரு கடலோர கிராமம்
(D) சேற்றில் மனிதர்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: B
44. ‘தினத்தந்தி’ நாளிதழில் பணியாற்றிய தமிழ்ப் படைப்பாளர்.
(A) மா. இராமலிங்கம்
(B) ப. சிங்காரம்
(C) ஜெயகாந்தன்
(D) பிச்சாமூர்த்தி
(E) விடை தெரியவில்லை
விடை: B
45. முத்துராமலிங்கத்தேவரை ‘தேசியம் காத்த செம்மல்’ என்று பாராட்டியவர் யார்?
(A) ப. ஜீவானந்தம்
(B) திரு. வி. கலியாணசுந்தரனார்
(C) காமராசர்
(D) அறிஞர். அண்ணா
(E) விடை தெரியவில்லை
விடை: B
46. உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர்.
(A) விளக்கப்படம்
(B) கருத்துப்படம்
(C) செய்திப்படம்
(D) பிரசாரப்படம்
(E) விடை தெரியவில்லை
விடை: C
47. தமிழ் மொழியில் நவீனக்கதை இலக்கியத்தினை தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர்.
(A) பி. எஸ். ராமையா
(B) கு. ப. ராஜகோபாலன்
(C) கல்கி
(D) புதுமைப்பித்தன்
(E) விடை தெரியவில்லை
விடை: D
48. தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக உருவாக்கியவர்.
(A) ந. முத்துசாமி
(B) கலாப்ரியா
(C) சுரதா
(D) பாவாணர்
(E) விடை தெரியவில்லை
விடை: A
49. காந்தியடிகள் பெற்றோரிடம் அன்பாக நடந்துக்கொள்ள காரணமாக அமைந்த நூல் எது?
(A) பகவத் கீதை
(B) அன்பு உள்ளம்
(C) அரிச்சந்திர நாடகம்
(D) சிரவண பிதுர்த்தி
(E) விடை தெரியவில்லை
விடை: D
50. பொருத்துக:
(a) அலெக்சாண்டர் பெயின் 1. குறியீடுகளை மின்னாற்றழுடன் அச்சிடுதல்
(b) ஹாங்க் மாக்னஸ்கி 2. இணைய வணிகம்
(c) ஜான் – ஷெப்பர்டு பாரன் 3. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்ந்திரம்
(d) மைக்கேல் ஆல்ட்ரிச் 4. தானியங்கிப் பண இயந்திரம்
(a) (b) (c) (d)
(A) 1 3 4 2
(B) 1 4 2 3
(C) 1 3 2 4
(D) 2 4 1 3
(E) விடை தெரியவில்லை
விடை: A