வறண்ட கூந்தலை மிருதுவாக்க சில யுக்திகள்:
சிலருக்கு, அடிக்கடி தலைக்கு குளிப்பதாலும், வெளிப்புறத்தில் உள்ள மாசுக்களின் பாதிப்பாலும், கூந்தல் வறண்டு காணப்படும். மேலும், கூந்தலுக்கு வண்ணம் பூசுதல், ரசாயன சிகிச்சை போன்றவையும் கூந்தலை வறண்டு போகச் செய்வதுடன், பலவீனமாகவும் ஆக்குகின்றன. இதை சரி செய்ய சில வழிகள் இதோ!
வாரம் ஒரு முறை, கூந்தலில் ஆலிவ் எண்ணெய் தடவி, நன்றாக ஊறவைத்து, தலைக்கு குளிக்கலாம். இது கூந்தலை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும். தலைமுடி உலர்ந்த பின், 1 சொட்டு கள் ஆலிவ் எண்ணெய் பூசினால் கூந்தல் பட்டுப் போல் மென்மையாகும். 2 தேக்கரண்டி காற்றாழை ஜெல், 3 சொட்டு தேங்காய் எண்ணெய், 1 கப் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை ‘ ஸ்பிரே ‘ போன்று பயன்படுத்தலாம். கற்றாழையில் உள்ள வைட்டமின் சி, அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை வறண்ட கூந்தலை மென்மையாக்கும்.
மேலும் படிக்க: உணவும் ஆரோக்கியமும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது
தேங்காய் எண்ணெய் வறண்ட மற்றும் சேதமடைந்த முடியை சரி செய்து, ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது. இரவில் ஊற வைத்த ஒரு கப் வெந்தயத்தை, மைபோல அரைத்து, 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் மற்றும் ஒரு கப் தயிருடன் சேர்த்துக் கலக்க வேண்டும். இந்த கலவையை கூந்தலின் வேர் முதல் நுனி வரை தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து, தலைக்குக் குளிக்கவும். கடுகு எண்ணெய் கூந்தலை மிருதுவாகவும், பொலிவானதாகவும் மாற்றும்.
தயிர் கூந்தலுக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும். வெந்தயம் கூந்தலுக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும். ஒரு வாழைப்பழத்தை நன்றாக மசித்து அத்துடன், கால் கப் கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் மற்றும் 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தலைமுடியின் வேர்ப்பகுதியில் படும்படி அக்கலவையைத் தடவி, 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசவும். வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம், கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் கூந்தலில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக்கொள்ள உதவுகின்றன.
அரை லிட்டர் பால் ஆகியவற்றை, ஒன்றரை லிட்டர் எலுமிச்சை பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, நல்லெண்ணெய்யில் சேர்த்து கலக்க வேண்டும். அந்த கலவையைக் காய்ச்சி, வடிகட்டி தலை முடியில் தடவினால், வறண்ட முடி மென்மையாகும். இளநரை வராது. முடி நீண்டு, அடர்த்தியாக வளரும். முட்டையின் வெள்ளைக் கருவை சிறிதளவு, ஆலிவ் எண்ணெய்யில் கலந்து, கூந்தலின் வேர்ப் பகுதி முதல் நுனி வரை தடவவும். பிறகு குளிர்ந்த தண்ணீரில் தலைக்கு குளிக்கவும். இதனால் கூந்தல் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.
சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் :
தினமும் குளிப்பதுடன் நன்றாக அயர்ன் செய்த உடையை உடுத்தி, அழகுசாதனப் பொருட்களை அணிந்தால்போதுமென்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், சிலர் கை, கால்களில் உள்ள நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை. உடல் அவயங்கள் பற்றி பலர் கவலைப்படுவதில்லை . அடிக்கடி மெனிக்யூர் செய்து விரல் நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். கண்ணை உறுத்தும் நிறங்களை நகங்களின் மீது பூசுவதற்குப் பதிலாக மென்மையான நிறங்களைப் பயன்படுத்துவது நல்லது. ஒருவரது முகத்தை மட்டும் வைத்து அழகை மதிப்பிட்டுவிட முடியாது. தலை முதல் கால் வரையிலான ஒவ்வொரு உறுப்பையும் எவ்வளவு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்தே அழகு அமைகிறது. நடை, உடை, பாவனை என அனைத்தையும் உள்ளடக்கிய இது உங்களைத் தொழிலிலும் மிளிர வைக்கக்கூடியது. உங்களை நீங்களே அழகாக்கிக்கொள்ள, ‘ செல்ப் க்ரூமிங் ‘ என்ற பயிற்சி உதவியாக இருக்கும். சுயமாக சீர்படுத்தும் இந்த பயிற்சியை மிக எளிதாக கற்றுக்கொள்ளலாம் .
மென்மையான வாசனைத் திரவியங்கள் :
வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது, சிலர் அடர் வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவார்கள். அதைத் தவிர்ப்பது நல்லது. ஆண்களைவிட பெண்கள் பயன்படுத்தும் சில மென்மையான வாசனைத் திரவியங்கள் பலரையும் ஈர்க்கும்.
முகம் எப்போதும் பிரகாசமாக இருக்க :
முகத்தை அழகாகக் காண்பிக்க அதிகமாக மேக்கப் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை. மிகக்குறைவான மேக்கப்புடனோ அல்லது மேக்கப்பே இல்லாமல் இருந்தாலே போதும். நிம்மதியான உறக்கம் மற்றும் கவலையை புறந்தள்ளி மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் பயிற்சியை செய்தாலே, முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும். அடர் நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு அடுத்தவரை முகம் சுழிக்க வைக்காமல் இருப்பதும் நலமே. எளிமை பல இடங்களில் பாராட்டை பெற்றுத் தரும். இடத்துக்கு ஏற்ப நகை, உடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். பார்ப்போர் கண்களை உறுத்தும் விதமாக அதிக நகையும், கண்களைக் கூசும் ஆடைகளையும் அணிந்தால் நம் மீதான மதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. அதேபோல் உடைக்கேற்ப காலணிகளைத் தேர்வு செய்வது முக்கியம்.
உடல் ஆரோக்கியம் :
உடற்பயிற்சி செய்வது உடலை அழகாகவும், கட்டுகோப்புடனும் வைத்துக் கொள்ள உதவும். எளிமையான உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி, தியானம் ஆகியவற்றை தினமும் மேற்கொண்டால் மனம் புத்துணர்ச்சியாக இருப்பதுடன் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
இயற்கை பொருட்களைப் பயன்படுத்தலாம் :
சருமத்தை ஒவ்வொரு பருவத்துக்கு ஏற்ப சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இதனால், சரும ஒவ்வாமை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். வெயில் காலத்தில் சருமத்தைப் பாதிக்காத கிரீம்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ரசாயனம் கலந்த அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தாமல் இயற்கை பொருட்களைப் பயன்படுத்தலாம்.
என்ன பேசுகிறோம் என்பதில் கவனம் :
என்ன பேசுகிறோம் என்பதில் கவனம் வேண்டும். நாம் சொல்வதை சுருக்கமாகவும், தெளிவாகவும் பேச வேண்டும். தேவையில்லாமல் நீட்டி முழக்கினால் மற்றவர்கள் முகம் சுளிக்க நேரிடும் என்பதால் கவனம் தேவை. இவை அனைத்தையும் முறையாகப் பின்பற்றினால் எந்த இடத்திலும் நீங்கள் நட்சத்திரமே.
இளநரையை தடுக்க இயற்கையை நாடுங்கள்:
கருகருவென நீண்டு வளர்ந்த கூந்தலுக்காக பெண்கள் ஏங்குவதுண்டு. ஆண்களும்கூட தைராய்டு ஹார்மோன்களில் காலத்திலும் தலைமுடியை கருமையாக்க மெனக்கெடுவார்கள். பொதுவாக முகத்துக்கு அழகு தருவதில் தலைமுடியின் பங்கு மிக முக்கியமானது. இளம் வயதிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கி விட்டால் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, முடியை கருப்பாக்குவதற்காக என்னென்ன மருத்துவம் இருக்கிறதோ அத்தனையையும் தேட ஆரம்பித்து விடுகிறோம். உண்மையில் ஆசிய மக்களுக்கு 25 வயதிலிருந்து முடி நரைக்கத் தொடங்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இளநரை ஏற்பட காரணம் ? ‘ மெலனோசைட்ஸ் ‘ என்னும் நிறமியே, தலை முடி மற்றும் தோலுக்கு நிறத்தைக் கொடுக்கிறது. தோலில் உள்ள ‘ மெல னோசைட்ஸ் ‘ குறையத் தொடங்கினால், தலைமுடி நரைக்கத் தொடங்கும். பரம்பரை இளநரை, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் தைராய்டு ஹார்மோன் பிரச்சினை போன்றவற்றுக்காக நீண்டகாலம் மருந்துகள் சாப்பிடுவது , மன அழுத்தம், புற ஊதாக் கதிர்களின் பாதிப்பு, சுற்றுச்சூழல் மாசு போன்ற பல்வேறு காரணங்களால் இளநரை ஏற்படலாம். உண்மையில் இளநரை வந்துவிட்டால், அதை மாற்ற முடியாது என்பதே உண்மை.
நோய் பாதிப்பின் காரணமாகவோ அல்லது சத்துக்குறைபாடுகளாலோ இளநரை ஏற்பட்டால், அதை சரிசெய்ய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இளநரை வந்தால் மீண்டும் அவர்களது தலைமுடியை கறுப்பு நிறமாக மாற்ற வாய்ப்பு இல்லை.
இளநரை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
வைட்டமின் பி 12 சத்துக் குறைபாடு, இளநரை ஏற்பட மிக முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. வைட்டமின் பி 12, பி 6 புரதம், இரும்பு, தாமிரம் போன்ற சத்துக்கள் இளநரை வராமல் தடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. ஆகையால், உணவில் இந்த சத்துகள் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம்.
தைராய்டு ஹார்மோன்களில் பிரச்சினை ஏற்பட்டால், அது இளமையிலேயே நரைக்க ஒரு காரணமாக அமைகிறது. பொதுவாக பெண்களுக்குத்தான் தைராய்டு ஹார்மோன் பிரச்சினை அதிகம் ஏற்படும். எனவே அறிகுறிகளைக் கவனமாக கண்டறிந்து உரிய நேரத்தில் சரியான மருத்துவம் மேற்கொண்டால் இளநரை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
மேலும் படிக்க: பெண்களுக்கான சில மருத்துவ குறிப்புகள்
முடி பராமரிப்புப் பொருள்களான லோஷன், கண்டிஷனர் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதாலும் ஏற்படலாம். கலரிங், பிளீச்சிங் மற்றும் ரசாயனப் பொருள்கள் நிறைந்த ஷாம்புக்களை, அடிக்கடி தலையில் தேய்த்துக் குளிப்பதாலும் இளநரை உண்டாகலாம். எனவே, முடிந்த வரை தலைமுடியில் பாதிப்பு ஏற்படாதவாறு இயற்கை முறையில் பராமரித்து வர வேண்டும்.
மன அழுத்தத்துக்கு ‘ நோ ‘ சொல்லுங்கள். மன அழுத்தத்துக்கும் இளநரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். கூந்தலை கருமையாக்கும் வழிகள்? இயற்கை முறையில் விளைந்த மருதாணி, அவுரி இலையை காயவைத்துப் பொடியாக்கி, கலரிங் செய்ய பயன்படுத்தலாம். கறிவேப்பிலை, மருதாணி, அவுரி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி போன்றவற்றை அரைத்து, தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளிக்கலாம். இவை அனைத்தையும் சேர்த்து எண்ணெய்யில் காய்ச்சி ஆறவைத்தும் தலையில் தேய்த்து வரலாம். கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிடுவது, கறிவேப்பிலையில் டீ தயார்செய்து குடிப்பது போன்றவையும் இளநரை குறைபாட்டை சரிசெய்ய உதவும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இவற்றை செய்வது நல்லது.
பற்கள் பராமரிப்பில் கவனம் கொள்ளுங்கள் !
பற்களின் நிறம் எப்படி இருந்தாலும், அவற்றில் ஏற்படும் பாதிப்புகள் தொண்டைக்கு பரவி, பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால், இதயம் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. பற்களை எப்போதும் சுத்தமாக பராமரிப்பது மிக அவசியம். அடிக்கடி இனிப்பு சாப்பிடுவது, தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி அருந்துவது, குளிர்ந்த நீரை குடிப்பது ஆகியவற்றாலும் பற்களில் பாதிப்பு ஏற்படும். அவற்றை குணப்படுத்தக்கூடிய சில பாட்டி வைத்திய குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.
அத்தி இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்த நீரை, வெதுவெதுப்பாக ஆற்றி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண், ஈறுகளில் சீழ் பிடித்தல் போன்ற பிரச்சினைகள் குணமாகும். ஆலம் மொட்டு, பாகற்காய் இலை, நந்தியா வட்டை வேர் இவற்றில் ஏதேனும் ஒன்றை அடிக்கடி நன்றாக மென்று, பல்வலி உள்ள பகுதியில் சிறிது நேரம் வைத்திருந்து, வெளியே எடுத்து விட்டு வாய் கொப்பளிக்க பல் வலி அகலும்.
மேலும் படிக்க: சில எளிய மருத்துவ குறிப்புகள்
வன்னிக்காயை கொதிக்க வைத்த நீரை வெது வெதுப்பாக ஆற்றி, வாய் கொப்பளிக்க ஈறு வீக்கம் மற்றும் வலி ஆகியவை நீங்கும். மேலும், நாக்கு மற்றும் வாயில் புண்கள் இருந்தாலும் ஆறிவிடும். வேர்ப்பட்டையை நீர் விட்டுக் காய்ச்சி, அதை வெதுவெதுப்பான பதத்தில் வாய் கொப்பளித்து வர ஈறுகள் உறுதியாகும். பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல் கூச்சம் நீங்கும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரை பெற்று உண்பது சிறந்தது.
வீட்டிலேயே தயாரிக்கும் பற்பொடி:
தலா 10 கிராம் கற்றைக் காம்பு மற்றும் படிகாரம் தலா 25 கிராம் சீமைச் சுண்ணாம்பு மற்றும் கிராம்பு ஆகியவற்றை பொடித்து சலித்து தயாரித்த பொடி கொண்டு, காலை மற்றும் மாலை பல் தேய்த்து வர பற்களில் ஏற்படும் ரத்தக்கசிவு, ஈறுகளில் ஏற்பட்ட புண்கள் ஆகியவை குணமாகும். பொடித்த கற்பூரம் கால் ஸ்பூன், அரைத்த வேப்பிலை பொடி அரை ஸ்பூன், உப்பு அரை ஸ்பூன், சர்க்கரைத் தூள் ஒரு ஸ்பூன் மற்றும் நான்கு சொட்டு எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து, அதன் மூலம் வாரம் இரண்டு முறை பல் துலக்க, ஈறுகள் வலுவாகி, பற்கள் வெண்மையாக பளபளக்கும்.
புங்கம் பட்டையை தூள் செய்து, நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்ற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அரை லிட்டர் நல்லெண்ணெய்யில் பத்து கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி, மெழுகு பதம் வரும்போது, புங்கம் பட்டை கசாயத்தை சேர்த்து காய்ச்சி இறக்கவும். இந்த கலவை மூலம் தினமும் இரண்டு வேளை வாய் கொப்பளித்து வர பல்வலி, பல் கூச்சம் அகலும், பல்லுக்கு உறுதியை அளித்து சொத்தை ஏற்படாமலும் தடுக்கும்.