ADVERTISEMENT

எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்

உணவே மருந்தென வாழ்ந்த நாம் சிறிது காலம் துரித உணவுகளின் பின்சென்று நம் நலத்தை தொலைத்து மருந்தே உணவென மாறிப்போயிருந்தோம் . தற்போது தான் , மீண்டும் நம் பாரம்பரிய உணவுகள் குறித்த அறிவுத் தேடல் தலைதூக்கி வருகின்றது.

பூங்கார் அரிசி :

பெண்களுக்காகவே இயற்கை தந்த அற்புத கொடை பூங்கார் அரிசி. சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். பெண் நலம் காக்கும் பொக்கிஷம் ‘ பூங்கார் அரிசி ‘, 1952 – ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல பாரம்பரிய நெல்வகைகள் அழிந்தன. அந்த வெள்ளப்பெருக்கில காப்பாற்றப்பட்ட ஒரு சில பாரம்பரிய நெல் ரகங்களில் பூங்கார் அரிசியும் ஒன்று. அப்படி காப்பாற்றப்பட்ட அரிய நெல் ரகமான பூங்கார் தான் பெண்களின் கருப்பையை காக்கும் வரம்.

மேலும் படிக்க: உணவுப்பொருட்களை வீணாக்காமல் சமைப்பது எப்படி

அந்த நல்வழியில்தான் பூங்காரின் அருமையும் நம் நவின பெண்களின் கவனத்துக்கு வருகின்றது . இன்றைய சூழலில் கருத்தரிப்பு மையங்கள் பெருகிவிட்டன . ஆனால் , அந்த காலத்தில் பெண்கள் பூப்பெய்த காலத்திலிருந்து பிரசவித்த காலம் வரை உடல் உறுதியுடன் இருக்க , தினமும் உணவில் பூங்கார் அரிசியை உண்டு வந்தார்கள். அந்தளவிற்கு பெண் நலனை காக்கும் பொக்கிஷமாக இந்த அரிசி பயன்பட்டு வந்துள்ளது .

ADVERTISEMENT

எல்லா காலச்சூழ்நிலையிலும் வறண்ட நிலத்தில் விளையக்கூடிய நெல்லாக இருக்கும் பூங்கார் அரிசி பல வளமான சத்துக்களை பெண்களுக்கு வழங்கி வருகிறது . பூங்கார் அரிசியின் எண்ணற்ற பயன்கள் : நார்ச்சத்து , தயாமின் , கார்போஹைட்ரேட் , ஆன்ட்டி ஆக்சிடென்ட் , வைட்டமின்கள் என பல எண்ணற்ற சத்துக்கள் இந்த அரிசியில் அடங்கியுள்ளன . பெண்களின் ஹீமோகுளோபினை அதிகரிப்பதோடு , அவர்களின் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களை சரிசெய்கிறது . கர்ப்பக்காலங்களில் பெண்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் இந்த ஒரே அரிசி தருகிறது . உடலை வலுப்படுத்தி , கருப்பையை பலமாக்குவதோடு சுகப்பிரசவத்திற்கும் வழிவகுக்கிறது . அதோடு மட்டுமின்றி , சர்க்கரை அளவையும் சீராக வைக்கிறது . பிரசவித்த காலத்தில் ஆறுமாத காலம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் , தாய்ப்பால் நன்கு சுரப்பதோடு , குழந்தைக்கும் இதன் சத்துக்கள் கிடைக்கும்.

பூங்கார் அரிசியை சாதமாகவோ அல்லது கஞ்சியாகவோ செய்து சாப்பிடலாம் . இந்த அரிசியில் இட்லி , தோசை , இடியாப்பம் போன்றவையும் செய்து உண்ணலாம் . பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும் இந்த அரிசியை உண்ணலாம் . வளரும் தளிர்கள் சிறுவயதிலேயே இதை உண்ணும்போது அதிக பலத்தோடு இருப்பார்கள் . அதிலும் குறிப்பாக பெண்குழந்தைகளின் இடுப்பு எலும்பு சிறுவயதிலேயே உறுதியாவதற்கு பூங்கார் அரிசியின் சத்துக்கள் பெரிதும் துணை புரிகின்றன. உணவேமருந்து மருந்தேஉணவு. உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும். எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்.

கிச்சிலி சம்பா அரிசி:

  • பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.

தூய மல்லி அரிசி:

ADVERTISEMENT
  • உள் உறுப்புகள் வலுவாகும்.

குழியடிச்சான் அரிசி:

  • தாய்ப்பால் ஊறும்.

காட்டுயானம் அரிசி:

  • நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

அறுபதாம் குறுவை அரிசி:

  • எலும்பு சரியாகும்.

இலுப்பைப்பூசம்பார் அரிசி:

  • பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

தங்கச்சம்பா அரிசி:

ADVERTISEMENT
  • பல், இதயம் வலுவாகும்.

நீலம் சம்பா அரிசி:

  • இரத்த சோகை நீங்கும்.

சீரகச் சம்பா அரிசி:

  • அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

கார் அரிசி:

  • தோல் நோய் சரியாகும்.

குடை வாழை அரிசி:

  • குடல் சுத்தமாகும்.

கருப்பு கவுணி அரிசி:

ADVERTISEMENT
  • புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

கருடன் சம்பா அரிசி:

  • இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

மாப்பிள்ளை சம்பா அரிசி:

  • நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

சிவப்பு அரிசி:

  • கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

கருங்குறுவை அரிசி:

  • இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.யோக சக்தியையும் தரும்.

பிசினி அரிசி:

ADVERTISEMENT
  • மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

குள்ளகாற் அரிசி:

  • இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்.

சூரக்குறுவை அரிசி:

  • பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

வாலான் சம்பா அரிசி:

  • சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

மூங்கில் அரிசி:

  • மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

சேலம் சன்னா அரிசி:

ADVERTISEMENT
  • தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

கருத்தக்கார் அரிசி:

  • மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

சிவப்பு மட்டை அரிசி:

  • இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது.

கை குத்தல்:

  • உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.

கைக்குத்தல் பொன்னி:

  • எல்லா வயதினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தரும் மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது

காலாநமக் அரிசி:

ADVERTISEMENT
  • புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

வாடன் சம்பா அரிசி:

  • அமைதியான தூக்கம் வரும்.

கல்லுண்டைச்சம்பா:

  • இதை உண்பவர்களுக்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். மிகுந்த வார்த்தை வளமும் உண்டாக்கும்.

அன்னமழகி:

  • மிகவும் இனிப்பு சுவையுள்ள‌ அன்னமழகி அரிசி சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்க கூடியது. உடலுக்கு சுகத்தை கொடுக்கும்.

சிவப்பு மட்டை அரிசி:

  • இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது.

குண்டு சம்பா:

ADVERTISEMENT
  • அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.

காடைச்சம்பா:

  • இந்த அரிசி பிரமேக சுரமும், குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும். விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.

புழுகுச்சம்பா:

  • வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும். தாகம் நீங்கும்.

மணக்கத்தை:

  • தோல் நோய்கள் அனைத்தையும் போக்கும். புண்கள், ரணங்கள் ஆகியவற்றை குறைக்கும்.

மணிச்சம்பா:

  • அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிகசுகத்தை உண்டாக்கும்.

கோரைச் சம்பா:

ADVERTISEMENT
  • அரிசி வாதப்பித்த நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி தரும். உட்சூடு, நமைச்சல், அதிமூத்திரம் இவைகளை நீக்கும்

காளான் சம்பா:

  • உடலுக்கு மலை போன்ற உறுதியையும், சுகத்தையும் தரும். சில வாத ரோகத்தையும் குறைக்கும்.

மல்லிகை சம்பா:

  • நாவிற்கு மிகவும் ருசியானது. தேகத்திற்கு சுகத்தையும், உறுதியையும் தரும். கரப்பான், பிரமோகம், உடல் வெப்பம் ஆகியவற்றை போக்கும்.

குறுஞ்சம்பா:

  • விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயைநீக்கும்.

மிளகு சம்பா:

  • உடலுக்கு சுகத்தை தரும். பசியை உண்டாக்கும். வாதம் போன்ற பல விதமான ரோகத்தை போக்கும்.

குன்றுமணிச் சம்பா:

ADVERTISEMENT
  • அரிசியில் வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.

கார் அரிசி:

  • உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.

கைவரை சம்பா:

  • உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும்.

மைச்சம்பா:

  • வாதம், பித்தம் போன்ற கோளாறுகளை குறைக்கும். வாத கோபம்,வாந்தி போன்றவற்றை போக்கும்.

சீதாபோகம்:

  • உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாகும். அஜீரணத்தை குறைக்கும்.

ஈர்க்கு சம்பா:

ADVERTISEMENT
  • கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும்.

மூச்சுக்குழல் நோயை விரட்டும் ‘ சித்தரத்தை ‘ :

மருத்துவக் குணம் நிறைந்த ‘சிற்றரத்தை ‘ , பேச்சு வழக்கில் ‘ சித்தரத்தை’யாகி அப்பெயரே பழகிப் பரவலாகி நிலைத்து விட்டது . கிழங்கு வகையைச் சேர்ந்த இதில் சிற்றரத்தை ‘ , ‘ பேரரத்தை ‘ என இருவகை உண்டு .

சித்தரத்தை இந்தியாவில் விளையும் பயிராகும் . இதன் வேர் மருத்துவக் குணம் உடையது . மஞ்சள் , இஞ்சியைப் போல இதுவும் கிழங்கு வகையாகும் . இது இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால் கிழக்காசிய நாடுகளில் இதனைச் ‘ சீன இஞ்சி ‘ என்று அழைக்கிறார்கள் . இது காரச் சுவை கொண்டது .

இது கோழை , கபத்தை அகற்றும் . உடல் வெப்பத்தைக் குறைக்கும் . பசியைத் தூண்டும் . மணம் தருவதுடன் செரிமான ஊக்கியாகவும் செயல்படும் . சித்தரத்தை நெடுங்காலமாக தென் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிற ஒரு மூலிகையாகும் . சித்த , ஆயுர்வேத வைத்தியர்கள் கபம் , வாதம் , வீக்கம் , இழுப்பு , இருமல் , காய்ச்சல் போன்றவை குணமாக இதைப் பயன்படுத்துவார்கள் . நுரையீரலில் உள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன்மிக்கது என்பதால் கொரோனா காலத்தில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் படிக்க: தனிப்பட்ட சுகாதார குறிப்புகள்

ADVERTISEMENT

சித்தரத்தை நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு சுவாசம் எளிதாக நடைபெற உதவுகிறது . மூச்சுக்குழல் மற்றும் தொண்டையில் உள்ள சளியை வெளியேற்றுகிறது . ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்புக்குள்ளான சில விலங்குகளுக்கு சித்தரத்தை சாறு சிறு அளவில் கொடுக்கப்பட்டதும் மூச்சிழுப்பு ( ஆஸ்துமா ) சீரடைந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது .

ஒரு காலத்தில் அனைத்து வீடுகளிலும் மருந்துப் பெட்டிகளில் சித்தரத்தை இடம் பெற்றிருந்தது . கபம் , சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இதைச் சிறந்ததொரு மருந்தாக நம்பினர் . கக்குவான் இருமல் உள்ள குழந்தைகளுக்குச் சித்தரத்தையை அரைத்துத் தேனில் குழைத்துக் கொடுக்க , இருமலின் தாக்கமும் இழுப்பும் குறைந்தது . இது ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால் இதை வாயிலிட்டு சுவைக்க வாய் நாற்றம் மறையும் . இதன் நறுமணம் காரணமாக பல வகை ஆயுர்வேத மருந்துகளில் இதை சேர்ப்பதுண்டு .

சித்தரத்தை அரிப்பு , வீக்கம் , பல் நோய் போன்றவற்றிற்கும் நல்லது . ருமாடிஸம் , ஜுரம் போன்ற வற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது . ஒரு துண்டு சித்தரத்தையை வாயிலிட்டு மென்றால் , தொண்டையில் கட்டும் கோழை , வாந்தி , இருமல் தணியும் . குழந்தைகள் இருக்கும் வீடுகளில் சித்தரத்தையைக் கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும் . குழந்தைகளுக்குச் சளி , இருமல் ஏற்படும்போது , சிறிதளவு சித்தரத்தையைத் தூளாக்கி , அரை தேக்கரண்டி தேனில் குழைத்துக் கொடுக்கவேண்டும் . இது எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தாது . செரிமானத்தைத் தூண்டும் .

சித்தரத்தை , அதிமதுரம் , தாளிசம் , திப்பிலி இவற்றை சமபங்கு எடுத்து , வறுத்துப் பொடி செய்து ஒரு கண்ணாடிப் பாட்டிலில் காற்று புகாமல் அடைத்து வைத்துக்கொண்டால் , மூன்று மாதங்கள் இதன் திறன் குறையாது . இதன் மருத்துவச் செயல்பாட்டுக்கு , அதன் மாறாத குணம் முக்கியம் . அடிக்கடி சளி , இருமல் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளுக்கும் , இளைப்பிருமல் எனும் ஆஸ்துமாவால் அவதிப் படுவோருக்கும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்தப் பொடியை கால் தேக்கரண்டி எடுத்துத் தேனில் குழைத்து , காலையில் உணவுக்கு முன்னர் கொடுத்து வரலாம். இப்படி சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள  பல பிரச்சனைகள் தீரும்.

ADVERTISEMENT