ADVERTISEMENT

தனிப்பட்ட சுகாதார குறிப்புகள்

உணவுப் பொருட்களை கையாளுவோருக்கான தனிப்பட்ட சுகாதார குறிப்புகள்:

சமையல் என்பது மிகவும் சிறப்பான ஒன்று அதை சமைப்பவர்கள் அதை விட சிறப்பானவர்கள் என்றே சொல்ல வேண்டும். அதனால் சமைக்கும்போது மிகவும் சுத்தமாகவும் தூய்மையாகவும் சமைக்க வேண்டியது அவசியமாகும். நாம் எவ்வளவு சுவையாக சமைக்கிறோம் என்பதை விட நாம் எவ்வளவு சுத்தமாக சமைக்கிறோம் என்பதே முக்கியம். அதனால் சமைப்பவர்கள் அனைவரும் சுத்தமாகவும் சுகாதாரமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

சுகாதாரக் குறிப்புகள்:

அநேகர் தீங்கு விளைவிக்கும் ஏதாவது ஒரு வகை கிருமியைத் தங்கள் உடலில் சுமந்து செல்லுகின்றனர். தங்கள் சுயமரியாதையைக் காத்துக் கொண்டு, பிறருக்கும் மரியாதையளிக்க, தனிப்பட்ட முறையில் உயர்தரமான சுகாதாரப் பழக்க வழக்கங்களை கையாளுவது அவரவர் பொறுப்பாகும். சுத்தம் மக்களிடம் தான் ஆரம்பிக்கிறது. முக்கியமான தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயத்தை இப்படிப்பட்ட தனி நபர் சுகாதாரப் பழக்க வழக்கங்கள் நீக்கி விடும்.

கைகளை சரிவரக் கழுவுவது எப்படி?

கைகளைக் கழுவவதற்காகவே பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ள வாஷ்பேசினில் எப்போதும் உங்கள் கைகளைக் கழுவுங்கள். வேறு எந்த கழுவு தொட்டியையும் ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.

மேலும் படிக்க: உணவுப்பொருட்களை வீணாக்காமல் சமைப்பது எப்படி

ADVERTISEMENT

அதாவது ஆகாரம் தயாரிக்கப் பயன்படும் கழுவு தொட்டிகளில் மற்றும் பாத்திரம் கழுவும் பதிவுத் தொட்டிகளில் கிருமிநாசினி சோப்பால் வெந்நீர் கொண்டு நுரை பொங்க, கைகள், மணிக்கட்டுகள், முன்னங்கைகளில் தேய்த்துக் கழுவுமாறு பயன்படுத்துங்கள்.

நகங்களுக்கு அடியிலுள்ள அழுக்கை நீக்க சுத்தமான நகம் தேய்க்கும் பிரஷ் பயன்படுத்துங்கள் அல்லது நகங்களை முழுவதுமாக சுத்தமாக வெட்டி விடுங்கள்.இரு கைகளையும் சேர்த்து நன்கு நுரை பொங்கத் தேய்த்து, சுத்தமான ஓடிவரும் நீரில் கைகளை நன்றாக அலம்புங்கள். சுத்தமான பேப்பர் துவாலை அல்லது சூடான உலர்கருவி பயன்படுத்தி கைகளை முழுமையாகத் துடைத்து உலரவிடுங்கள். கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது நமக்கு மட்டுமன்றி நம்மைச் சுற்றியுள்ள எல்லோருக்கும் நல்லது.

தினசரி தனிப்பட்ட சுகாதாரம் ஒழுங்கு முறைகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது?

தினசரி கையாளும் அத்தியாவசிய சுகாதாரப் பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். தினமும் இரண்டு முறை குளியுங்கள். ஒவ்வொரு நாளும் காலுறை மற்றும் உள்ளாடைகளை மாற்றுங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு இருமுறை பற்களைத் துலக்குங்கள். ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பின்னும் துலக்குவது நல்லது அப்படி தினமும் செய்ய முடியவில்லை என்றால் சாப்பிட்டபிறகு வாய் கொப்பளிப்பது மிகவும் நல்லது. கை நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், அளவுக்கு அதிகமாக நகப்பூச்சு, ஒப்பனை சாதனங்கள், அல்லது வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள்.

ஏழு சுகாதார ஒழுக்கக் குறிப்புகள்?

  1. உங்கள் வேலையை ஆரம்பிக்கும் முன்னரும் பின்னரும் கைகளை நன்கு கழுவுங்கள்.
  2. தோல், மூக்கு, தொண்டை, வயிறு சம்பந்தமான எந்த ஒரு கோளாறு உங்களுக்கு ஏற்பட்டாலும் அதற்கு சரியான சிகிச்சை எடுத்துவிட்டு பின்பு எந்த ஒரு வேலையையும் ஆரம்பிக்கவும்.
  3. கைகளில் வெட்டுக் காயங்கள், புண்கள் இருந்தால் அதை நீர் புகாத ஒட்டு துணியால் மூடி விடுங்கள்.
  4. எப்போதும் பொருத்தமான, சுத்தமான ஆடை அணிந்து சுத்தமாக இருங்கள்.
  5. நீங்கள் தினமும் பயன்படுத்தும் உபகரணங்கள், பாத்திரங்களை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
  6. உங்கள் தனிப்பட்ட சுத்தத்தை, அனுதினமும் கைக்கொள்ளும் பழக்கத்தை முறையாக்குங்கள்.
  7. ஒருபோதும் யாவரும் பார்க்கும்படி துப்பவோ, இருமவோ, தும்மவோ வேண்டாம். ஒரு கைக்குட்டையைப் பயன்படுத்துங்கள்.

உபகரணங்கள், பாத்திரங்களைக் கையாளுவது எப்படி?

பீங்கான் பாத்திரங்கள்,கண்ணாடிப் பாத்திரங்கள் மற்றும் சமையலுக்கான பாத்திரங்கள், உபகரணங்களைக் கையாளும் போது அவற்றில் உணவு இருக்கும் பகுதியை உங்கள் கைகள் தொடாதவாறு அவற்றைப் பிடிக்க வேண்டுமென்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

அதாவது உணவு எப்பகுதியில் வைக்கப்படுமோ அல்லது வாடிக்கையாளர்கள் எப்பகுதியை தொடுவாரோ அதை உங்கள் கைகளால் தொடக் கூடாது.

இப்படிச் செய்வதால் உங்கள் கைகளுக்கும், நீங்கள் கையாளும் உபகரணங்களுக்கும் இடையில் குறுக்காக மாசுபடுவதைத் தவிர்க்கக் கூடும்.

கண்ணாடிக் குவளைகளை விளிம்பு அல்லது அடியில் பீங்கான் சமையல் பாத்திரங்களைக் கைப்பிடியில் பிடிக்க வேண்டும்.

கீறல் விழுந்த அல்லது உடைந்து போன உணவுப் பாத்திரங்கள், கண்ணாடி சாமான்கள் அல்லது சமையலறைப் பாத்திரங்களை அகற்றி அப்புறப்படுத்தி ஒழித்து விட வேண்டும்.

ADVERTISEMENT

மேலும் படிக்க: ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்

முள் கரண்டிகள் அல்லது இடுக்கிகளைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களைக் கையாளுங்கள், கைகளைப் பயன்படுத்த வேண்டாம்.

அனாவசியமாக, உணவைக் கையாளுவதைத் தவிர்த்து விடுங்கள். உணவை ருசிபார்க்க, அதற்கெனப் பயன்படுத்தும் பிரத்தியேகக் கரண்டிகளைப் பயன்படுத்துங்கள் – உங்கள் விரல்களையல்ல.

அனைத்து உணவுப் பாத்திரங்கள், கண்ணாடிப் பாத்திரங்கள், உபகரணங்கள், சமையல் பாத்திரங்களை நன்றாகக் கழுவி, சுத்தமான மேற்பரப்புகளில் அவற்றை பத்திரமாக வையுங்கள்.

உங்கள் பணியிட மேஜை பகுதிகளை சுத்தமாக வையுங்கள். ஒவ்வொரு நாளின் வேலைநேர முடிவிலும் அதை நன்கு சுத்தம் செய்யுங்கள். அனைத்துப் பாத்திரங்களையும் சுத்தமாக வைத்தப் பயன்படுத்திய பின்னர் அவற்றை ஒழுங்காக, சுத்தமாக அடுக்கி வையுங்கள்.

ADVERTISEMENT

அடிப்படை சுகாதாரம்

நடவடிக்கைகள் தகவல்கள்:

உணவை சேமித்தல், தயாரித்தல், சமைத்தல், பரிமாறுதல் ஆகிய அனைத்து நிலைகளிலும் உணவு மாசுபடாதபடி அதை காத்துக் கொள்ளுதல் வேண்டும். மோசமான சுகாதார பழக்கவழக்கங்கள், நமக்கும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அது பெரிய நஷ்டத்தை விளைவிக்கும். மிகவும் மோசமான சுகாதார தரம் கொண்ட உணவு வளாகத்தினுள் போகவோ, அங்கு உணவு அருந்தவோ, யாருக்கும் விருப்பம் இருக்காது. அனேக மக்கள் வெளியே உணவருந்தும் இந்நாட்களில், பெருமளவில் மக்கள் வந்து உணவருந்தும் இடங்களின் எண்ணிக்கையும் பெருகி நிற்பதால், உணவின் மூலம் விஷ பாதிப்பு ஏற்படும் தருணங்களும் அதிகரித்து வருகின்றன.

நினைவில் கொள்க:

பாக்டீரியா கிருமிகளுக்கு கதகதப்பான வெப்பநிலை உணவும் ஈரப்பதமும் தேவை. எளிதில் அபாய பாதிப்புக்குள்ளாக கூடிய உணவுகளை அபாய பகுதிக்கு வெளியே பாதுகாப்பு வேண்டும்.

அதிக அளவு அபாயத்துக்கு உட்பட கூடிய உணவுகள் எவை?

சமைத்து வைக்கப்பட்ட மாமிச, கோழி வகைகள், சமைத்து வைக்கப்பட்ட மாமிச, உணவு வகைகள் மற்றும் மசாலா வகைகள், குழம்புகள், பால், பாலாடை, பால் சம்பந்தப்பட்ட உணவு வகைகள், சமைக்கப்பட்ட அரிசி உணவு, சமைக்கப்பட்ட முட்டைகள், முட்டையால் தயாரிக்கப்படும் உணவு வகைகள் அதாவது(மயோனைஸ்) சிப்பி மீன்கள் மற்றும் கடல் உணவு.

உணவு விஷம் ஆவதற்கு காரணங்கள் அல்லது உணவு எப்படி விஷமாகிறது?

பாக்டீரியா, வைரஸ்கள், இரசாயன பொருட்கள், உலோகங்கள், விஷத்தன்மை உள்ள செடி வகைகள்.

உணவு எவ்வாறு மாசுபடுகிறது?

பொதுவாக மக்களிடம் கிருமிகள் தங்கியிருக்கும் இவர்கள் நேரடியாக தங்கள் கைகள் மூலம் தும்மல், இருமல் மூலமும் உணவை மாசுபடுத்துகின்றனர் அல்லது மாசுபடுத்தும் கழிவுநீர் மூலமாக மாசுபடும். சமைக்கப்படாத உணவு பெருமளவில் குறிப்பாக அபாயம் விளைவிக்கக் கூடியது. வெட்டுப்பட்ட மாமிசமும், கோழி இறைச்சியும், அதிக அளவு கிருமி நிறைந்தவை. பால், முட்டை சிப்பி மீன்களும் அப்படியே. கோழி இறைச்சியை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து அறையின் உஷ்ண நிலைக்கு கொண்டு வரும் போது அதிலிருந்து வடிகின்ற நீர், துடைக்கும் துணிகள், எளிதில் கிருமி தொற்றும் அபாயம் கொண்ட உணவுகள், உபகரணங்கள் மீது வடிய விடக்கூடாது.

ADVERTISEMENT

சமைக்கப்படாத காய்கறிகள் மீதுள்ள மண் அகற்றப்பட வேண்டும்.  பூச்சிகளும் தூசியும் உணவு பகுதிகளுக்குள்ளும், உணவின் மீதும், உணவின் மேற்பகுதிகளையும், பாக்டீரியாவை புகுத்தி விடும். செத்த ஈக்கள் உணவிற்குள் விழலாம், கரப்பான் பூச்சிகள் பாக்டீரியாவை சுமந்து திரிகின்றன, எலிகளும், மிருகங்களும், பாக்டீரியாவை சுமந்து திரிந்து உணவையும், உணவின் மேற்பகுதிகளையும் மாசு படுத்த கூடும். கழிவுகளும் வீணான உணவுப் பொருட்களும் ஈக்களை கவர்ந்து இழுக்கின்றன. இவை உணவுப் பொருட்கள், உணவு பகுதிகளை மாசுபடுத்த இடமளிக்கக் கூடாது.

மேலும் படிக்க: உணவும் ஆரோக்கியமும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது

சில சமயங்களில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இவற்றை உருவாக்கும் மூலப் பொருட்களிலிருந்து எளிதில் கிருமி மற்றும் அபாயம் கொண்ட உணவு வகைகளுக்குள் நேரிடையாக கடந்து செல்கின்றன. கைகள், துணிகள், உணவுப் பொருள்களின் மேற்பரப்புகள், கைகளுடன் தொடர்பு கொள்ளும் சாதனங்களின் மேற்பரப்புகள்(கதவு கைப்பிடிகள், கழிவு தொட்டி கைப்பிடி போன்றவை) இவற்றின் மூலம் தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் பரவும் அபாயம் உண்டு என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

உணவு மாசுபடாது பாதுகாக்க செய்ய வேண்டியவை:

கூடுமானவரை உணவை மூடி வைக்கவேண்டும். இடிக்கிகள், தட்டுகள், பரிமாறும் சாதனங்கள் இவற்றைப் பயன்படுத்தியே உணவைக் கையாளுங்கள். சமைக்கப்படாத உணவு பொருட்களை, எளிதில் கிருமி தொற்றும் அபாயம் கொண்ட உணவுப் பொருட்களிலிருந்து எப்போதுமே பிரித்து வையுங்கள்.

சமையலுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் தனித்தனியாக பிரித்து, எளிதில் மாசுபடும் அபாயம் கொண்ட உணவுப் பொருட்களுக்குரியவை என்றும், சமைக்கப்படாத உணவுப் பொருட்களுக்குரியவை என்றும் வெவ்வேறாகப் பிரித்துப் பயன்படுத்துங்கள். பூச்சிகள், மிருகங்கள், பறவைகள் போன்றவை உணவு அறைகளுக்குள் நுழைவதையும் அல்லது உணவுப் பண்டங்களை தொடுவதையும் தடுக்க வேண்டும். எலிகள் பாதிக்கக் கூடாது இறுக்கமான மூடியுள்ள அடைப்பான்களில் உணவுப்பொருட்களை சேமித்து வையுங்கள். எப்போதும், தனிப்பட்ட உயர்தரமான சுகாதார விதிகளை சிறப்பாகக் கைக்கொள்ள மறவாதீர்கள். உணவுப் பொருட்களைக் கையாளும் போது அணிய வேண்டிய பொருத்தமான உறைகளை அணிந்து கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

உண்ணத் தகுதியற்ற அல்லது வீணான உணவுப் பொருட்களை உடனே அகற்றி, எளிதில் மாசுபடும் அபாயமுள்ள உணவு வகைகளை விட்டு அவற்றை அப்புறப் படுத்துங்கள். உணவு பொருட்கள், உபகரணங்களைத் தரையில் வைக்க வேண்டாம். குளிர்சாதனப் பெட்டியிலிருந்து, அறையின் உஷ்ண நிலைக்கு வருமாறு வைக்கப்பட்டு, உறைந்த மாமிசம், கோழி இறைச்சியிலிருந்து வடியும் நீர், எளிதில் மாசுபடும் அபாயம் கொண்ட உணவு வகைகளிலோ, உணவு மேற்பகுதியிலோ விழாதபடி, அத்துடன் தொடர்பு கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: இல்லத்தை அழகாக்கும் எளிய வழிமுறைகள்

சுத்தம் செய்யும் சரியான கிருமி நாசினி முறைகளைப் பயன்படுத்துங்கள். தகுதியான, பொருத்தமான, சரியான, சுத்தமான உபகரணங்களைப் பயன்படுத்துங்கள். கை துடைக்கும் துணிகள் சுத்தமாக இருக்க வேண்டும். உணவு பரிமாறும் பாத்திர வகைகளில் உணவு இருக்கும் பகுதிகளை கையால் தொடுவதை தவிர்க்க வேண்டும். கை கழுவுவதற்காக பதிக்கப்பட்ட கழிவு தொட்டிகளில் உணவு பொருட்கள், உபகரணங்களை ஒருபோதும் கழுவக் கூடாது. அனைத்து உணவுப் பொருட்களிலும் கொஞ்சம் பாக்டீரியா இருக்கத்தான் செய்யும். உணவை விஷமாக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, இப்பொருட்களை மேலும் மாசுப்படுத்தாதபடி தடுப்பது முக்கியம் என்றாலும், இவை உணவுப் பொருட்களில் பன்மடங்கு பெருகுவதைத் தடுப்பது மிகவும் முக்கியமான செயல். உணவு தயாரிக்கும் போது எளிதில் மாசுபடும் அபாயமுள்ள உணவு வகைகளை அபாய எல்லைக்கு அப்பால் வையுங்கள்.

உலர்ந்த உணவுப் பதார்த்தங்களை ஈரப்பதமின்றி வைக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடிய உஷ்ண நிலையில், எந்த ஒரு உணவுப் பொருட்களும் வைக்கப்படவே கூடாது. குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டு, அறையின் உஷ்ண நிலை வருமாறு வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை, எளிதில் மாசுபடும் அபாயம் கொண்ட உணவு வகைகளின் அருகில் வைக்கக் கூடாது.

3 comments

Leave a Reply

Your email address will not be published.