ADVERTISEMENT

சில எளிய மருத்துவ குறிப்புகள்

இஞ்சி, எலுமிச்சை, தேன் – எளிய பாட்டி வைத்திய குறிப்புகள்:

வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களை பயன்படுத்தி, உடல் உபாதைகளை குணப்படுத்தும் ‘ பாட்டி வைத்தியம் ‘ பாரம்பரிய பழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பிடப்படும் சில எளிய மருத்துவ குறிப்புகளை இங்கே காணலாம். அதிமதுரம் 200 கிராம் எடுத்து , இடித்து , மண் சட்டியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் அரை லிட்டர் இஞ்சி சாற்றை ஊற்றி , பருத்தி துணியால் மூடி, இஞ்சி சாறு 200 மில்லியாக சுண்டும் வரை வெயிலில் வைக்க வேண்டும் . அந்த சாற்றை காலை மற்றும் இரவு உணவுக்கு முன்னர் கால் டீஸ்பூன் எடுத்து வெந்நீருடன் கலந்து பருகினால், வறட்டு இருமல், சளியால் ஏற்படும் இருமல், பித்தம் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும் .

உடல் பலம் பெறவும், தூக்கமின்மை சரியாகவும், ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுக்கள் நீங்கவும் , 100 மில்லி எலுமிச்சம் பழச்சாற்றில் , பொடியாக நறுக்கப் பட்ட 50 கிராம் சின்ன வெங்காயத்தை கலந்து , வேக வைத்து உண்ணலாம். எலுமிச்சம் பழச்சாறு 4 தேக்கரண்டி , வெந்நீர் 10 தேக்கரண்டி எடுத்துக் கொண்டு 5 கிராம் கடுக்காய் தோலை சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் . அதை இளஞ்சூடாக்கி வாய் கொப்பளித்து வர வேண்டும். இதனால் தொண்டைப் புண், ஈறு பிரச்சினைகள், பல் வலி ஆகியவை நீங்கும்.

மேலும் படிக்க: உடல் ஆரோக்கியத்திற்கு சில குறிப்புகள்

அரை லிட்டர் எலுமிச்சம் பழச்சாற்றில், கால் கிலோ பாதாம் பருப்பை சேர்த்து வேக வைத்து, நிழலில் உலர்த்தவும் . உலர்ந்த பருப்பை பொடியாக்கி அதனுடன், அரை கிலோ தேனை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை, காலை மற்றும் இரவு உணவுக்குப் பின் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டால் உடல் இளைப்பு, உடல் வறட்சி நீங்கும்.

கால் லிட்டர் எலுமிச்சை பழச்சாற்றை கொதிக்க வைத்து , இளஞ்சூடாக ஆறவைத்து , அதில் அரை கிலோ தேன் சேர்த்துக் கிளறவும். இதை மூன்று வேளையும் உணவுக்குப் பின் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர, வாய்ப்புண், வாய் துர்நாற்றம் நீங்கும்.

ADVERTISEMENT

தேன் 50 மில்லி , மாம்பழச்சாறு 150 மில்லி கலந்து , தினமும் உணவுக்குப் பின் , சாப்பிட்டு வர , உடல் வலு வடையும் . வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும். இதை சாப்பிடும்போது , தயிர் , உருளைக்கிழங்கு மற்றும் எண் ணெய்யில் பொரித்த உணவு வகைகளை உண்ணக் கூடாது.

ஆரோக்கியமான தூக்கம்

யார் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும்.

வயதுதூக்கம் நேரம்:

0-3 மாதங்கள் – 14-17 மணி நேரம்

4-11 மாதங்கள் 12-15 மணி நேரம்

ADVERTISEMENT

1-2 வயது – 11-14 மணி நேரம்

3-5 வயது – 10-13 மணி நேரம்

6-13 வயது – 9-11 மணி நேரம்

14-17 வயது – 8-10 மணி நேரம்

18-64 வயது – 7-9 மணி நேரம்

ADVERTISEMENT

65 வயதுக்கு மேல் – 7-8 மணி நேரம்

தூக்கம் என்பது உடலுக்கும், மனதுக்கும் நாம் கொடுக்கும் ஓய்வு. லேசான தூக்கம், ஆழமான தூக்கம், கனவுத் தூக்கம் என தூக்கத்தில் பல உள்ளன. ஆரோக்கியமான தூக்கம் என்பது 6 முதல் 7 மணி நேரம் வரை சீராகத் தூங்குவது. ஆனால், பலருக்கும் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு சீரான தூக்கம் இருப்பதில்லை. தூக்கத்தில் தான் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், புதுப்பிக்கவும் தேவையான பல நடவடிக்கைகள் நம் உடலில் நடைபெறுகின்றன.

தூக்கத்தின் நன்மைகள்:

பசியின்மை, வளர்சிதை மாற்றம், வளர்ச்சி மற்றும் குணப்படுத்துதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களின் சுரப்பை சீராக்கும். மூளையின் செயல்பாடு, செறிவு, கவனம் மற்றும் சிந்தனைத்திறனை மேம்படுத்தும். எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும். இதய நோய், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். மனச்சோர்வை சரி செய்யும்.

விரைவான தூக்கத்துக்கு:

உடல் சோர்வாக இருந்தால் தூக்கம் எளிதாக வரும். ஆனால், ஒரு சிலருக்கு உடல் சோர்வாகவே இருந்தாலும் தூக்கம் வராது. இவர்கள் முடிந்தவரை, பகல் நேரத்தில் இயற்கையான வெளிச்சத்தில் இருப்பது நல்லது. இதனால் இரவில் தூக்கம் விரைவாக வரும். உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள், தூங்க செல்வதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பே, அனைத்து பயிற்சிகளையும் செய்து முடித்துவிட வேண்டும்.

மேலும் படிக்க: ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்

ADVERTISEMENT

இரவு தூக்கத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன்பே, நமது உடல் தூங்குவதற்குத் தயாராக தொடங்கி விடுகிறது . எனவே மதியம் 12 மணிக்கு பிறகு டீ, காபி போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. காபியில் உள்ள ‘ காபின் ‘ நமது உடலில் ஒன்பது மணி நேரம் வரை நீடித்து இருக்கும். இது தூக்கத்தை பாதிக்கும். தூங்க செல்லும் முன்பு இளம் சூடான நீரில் குளிப்பது, தியானம் செய்வது, துணையுடன் அல்லது குடும்பத்துடன் பேசுவது, நாட்குறிப்பு எழுதுவது, புத்தகம் படிப்பது அல்லது மங்கலான வெளிச்சத்தில் இசையை கேட்பது போன்ற செயல்கள், மனதையும், உடலையும் இறுக்கத்திலிருந்து தளர்வடையச் செய்து, எளிதாக தூக்கத்தை வரவழைக்கின்றன .

தொலைக்காட்சி, அலைபேசி, கணினி போன்றவற்றிலிருந்து வெளிப்படும் ‘மின்னணு நீல ஒளிக்கதிர்கள்’ நம் மூளையை அதிக நேரம் விழிக்க வைத்திருக்கின்றன. ஆகையால், தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பாக, தொலைத் தொடர்பு சாதனங்களில் இருந்து, நம்மை நாமே விடுவித்துக் கொள்வது நல்லது.

புங்க மரத்தின் மருத்துவ பயன்கள்:

குறைவான பராமரிப்பில் தாமாகவே வளர்ந்து பல்வேறு நன்மைகளை அளிக்கும் மர வகைகளில் புங்க மரமும் ஒன்று. வீட்டுக்கு வெளியே காம்பவுண்டு சுவர் ஓரமாக ஒரு புங்க மரக்கன்றை நட்டு வைத்து, ஆரம்ப காலங்களில் மட்டும் பாதுகாத்து வந்தால் போதும் தாமாகவே வளர்ந்து, குளிர்ச்சியான நிழலைத் தருவதுடன், பலவிதமான நோய்களை விரட்டும் மருந்தாகவும் பயன்படும் . புங்க மரத்தின் இலைகள், மலர்கள், விதை, பட்டை, வேர் ஆகியவை பல்வேறு மருத்துவ குணம் கொண்டவை. அவற்றைப் பற்றி இங்கே காண்போம்.

கொழுப்பை குறைக்கும் புங்க விதை:

புங்க மரத்தின் முதிர்ச்சியான காய்களை பறித்து, அவற்றை வெயிலில் உலர்த்தி, உள்ளே இருக்கும் பருப்பை தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும், காலையில் ஒரு புங்கம் பருப்பை பொடியாக்கி இரண்டு டம்ளர் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க விட்டு, அரை டம்ளர் அளவுக்கு சுண்டியதும், வடிகட்டி ஆற வைத்து அருந்த வேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுத்தன்மை அகலும். சிறுநீர் குறைவாக வெளியேறும் பிரச்சினை இருந்தால், இந்த பொடியை சுடுநீரில் கலந்து அருந்தலாம். அதனால், சிறுநீர் உற்பத்தி பெருகி, ஆரோக்கியம் மேம்படும்.

நீரிழிவை கட்டுப்படுத்தும் புங்க மலர்:

நீண்ட காலமாகவே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த புங்கம் பூவை முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். நவீன மருந்துகளின் வருகையால், தற்போது புங்கம் பூவின் பயன்கள் பலருக்கும் தெரியாமல் போய் விட்டது. புங்க மரம் பூக்கும் காலத்தில் பூக்களை சேகரித்து, வெயிலில் உலர்த்தி, பொடியாக்கி, தினமும் ஒரு டீஸ்பூன் அளவு, ஒரு டம்ளர் நீருடன் கலந்து கொதிக்க வைத்து, கால், வடிகட்டி டம்ளராக சுண்டியதும், பருகலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் இதனை இரண்டு அல்லது மூன்று தடவை பருகி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம், மேலும், ரத்தத்தில் உள்ள தேவையற்ற மாசுக்கள் வெளியேறவும் இது உதவுகிறது. இதனை உபயோகிப்பதற்கு முன்பு மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது.

ADVERTISEMENT

மூட்டுவலியை அகற்றும் புங்க எண்ணெய்:

புங்க விதை எண்ணெய் மூட்டு வலி அகல உதவுகிறது. பாதிக்கப்பட்ட மூட்டுகளின் மீது தடவி, லேசாக மசாஜ் செய்து, சிறிது தூரம் மெதுவாக நடைப்பயிற்சி மேற்கொண்டால் மூட்டு வலி அகலும். தொடர்ந்து சில நாட்களுக்கு இந்த முறையை பின்பற்றி வந்தால், மூட்டுவலி தொந்தரவில் இருந்து விடுபடலாம்.

தொடர் இருமல் கட்டுப்பட:

பருவ நிலை மாற்றம் காரணமாக சிலருக்கு ஏற்படும் இருமல் எளிதாக குணமாவதில்லை. குழந்தைகளும் இருமல் காரணமாக கடுமையாக பாதிக்கப் படுவதுண்டு. இந்த சிக்கலை கட்டுப்படுத்த புங்க விதை பருப்பை பொடி செய்து, சிறிதளவு தேன் கலந்து குழைத்து, சுவைத்து சாப்பிட்டால், தொடர்ச்சியான இருமல் உடனடியாக கட்டுப்படும்.

இதர மருத்துவ பயன்கள்:

புங்க இலை சாறு, அஜீரண கோளாறு, பேதி தொந்தரவுகளை குணப்படுத்துகிறது. தோலில் அரிப்பு நீங்க புங்க இலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து கழுவ அரிப்பு நீங்கும். மருத்துவ குணம் கொண்ட புங்கையை உபயோகிப்பதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமானது.

கறிவேப்பிலையின் பயன்கள்:

தென்னிந்தியாவின் பாரம்பரியமான சமையலில், கறிவேப்பிலை தவறாமல் இடம் பெற்றிருக்கும். தாளிக்கும்போது வாசனைக்காக சேர்க்கப்படுகிற கறிவேப்பிலை, ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது. இதில் கால்சியம் , இரும்பு , வைட்டமின் ஏ, பி, பி 2, சி போன்ற சத்துக்கள் உள்ளன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கறிவேப்பிலையின் பயன்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

மேலும் படிக்க: உணவுப்பொருட்களை வீணாக்காமல் சமைப்பது எப்படி

ADVERTISEMENT

கண் பார்வை:

கறிவேப்பிலையில் ‘ கரோட்டீன் ‘ எனும் ஊட்டச்சத்து அதிக அளவில் உள்ளது. இது கண்களில் உள்ள நரம்புகளின் செயல்பாட்டை சீராக்கி, பார்வைத் திறனை மேம்படுத்தக் கூடியது. வயது முதிர்ச்சியினால் கண்களில் ஏற்படும் ‘ கண் புரை ‘ நோயையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

ரத்த சோகை:

ரத்த உற்பத்திக்கு அவசியமான இரும்புச்சத்து கறிவேப்பிலையில் அதிக அளவில் உள்ளது. தினமும் ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை வெந்நீரிலோ, பாலிலோ கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை குணமாகும். காலையில் எழுந்தவுடன் நான்கு அல்லது ஐந்து கறி வேப்பிலை இலைகளோடு, ஒரு பேரீச்சம்பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால், ரத்த சிவப்பணுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும்.

வயிற்றுக் கோளாறுகள்:

கறிவேப்பிலையில் செரிமானத்தை சீராக்க உதவும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. தினமும் காலையும், மாலையும், ஒரு டீஸ்பூன் வேப்பிலை பொடியை, சம அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகும். 20 கறிவேப்பிலை அரைத்து வடிகட்டிய சாற்றினை, ஒரு டீஸ்பூன் தேனில் கலந்து உட்கொண்டால் வயிற்றுப் போக்கு சரியாகும். தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை மென்று தின்றால் வயிற்றுக் கடுப்பு குணமாகும். 20 கறிவேப்பிலை இலைகளை அரைத்து , மோருடன் கலந்து குடித்தால் வாந்தி, குமட்டல் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

நீரிழிவு:

தினமும் காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பாக, சிறிது கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தாலோ, சாறு பிழிந்து பருகி வந்தாலோ, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராகும்.

கல்லீரல், சிறுநீரகச் செயல்பாடுகள்:

20 மி.லி. கறிவேப்பிலை சாற்றுடன், ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்து தினமும் பருகி வந்தால் சிறுநீரகப் பிரச்சினைகள் குணமாகும். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின்கள் கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுப் பொருட்களை நீக்கி அதன் செயல்பாட்டை சீராக்கும்.

ADVERTISEMENT

மேலும் படிக்க: பெண்களுக்கான சில மருத்துவ குறிப்புகள்

இதய நோய்கள்:

கறிவேப்பிலையை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் இதயத்தின் தசைகளை வலிமையாக்கி, இதய நோய்கள் ஏற்படாமல் காக்கும்.

முடி வளர்ச்சி:

கறிவேப்பிலையை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், இளநரை, முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சினை கள் தீரும். கூந்தல் நன்றாக செழித்து வளரும்.

தோல் நோய்கள்:

தினமும் காலை உணவுக்கு முன்னர் , சிறிது கறிவேப்பிலை இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் குணமாகும். சருமம் பொலிவோடு, ஆரோக்கியமாக இருக்கும்.