ADVERTISEMENT

ஒரு தாயின் பாசப் போராட்டம்

விஜய் ரூமுக்கு(Room) சிவகாமியும் முத்தையாவும் வருகிறார்கள். சிவகாமி விஜயை பார்த்து விஜய் என்ன பா ஆச்சு… என்ன பா தலையிலே இவ்வளவு பெரிய கட்டு என்கிறாள். அதற்கு விஜய், சின்ன காயம் தான் அம்மா, கட்டு போட்டதுனால அப்படி தெரியுது, எல்லாம் சரியாகிவிடும் என்கிறான். அதற்கு முத்தையா, டேய் விஜய் உனக்கு இப்படி ஆயிடுச்சேனு போன்(Phone) வந்ததுமே உங்க அம்மாவுக்கு கையும் ஓடல காலும் ஓடல, பதறிப் போயிட்டா, பச்சைத் தண்ணீர் கூட குடிக்கவில்லை நேரா இங்க வந்துட்டா என்கிறார்.

உடனே சிவகாமி, கிரகப்பிரவேசம் நடந்த அடுத்த நாளே இந்த மாதிரி ஆயிருக்குனா!!! ஒரு வேளை நீ வீடு வாங்கின நேரம் சரியில்லாமல் இருந்திருக்குமோ??? உனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை என்று தெரியும், ஆனால் நல்ல காரியம் பண்ணும்போது நாளும் கிழமை எல்லாம் பார்க்கணும், என்னமோ எனக்கு மனசு சரியில்ல என்கிறாள்.

காட்சி(Scenario) 1:

அதற்கு முத்தையா, பேசாம எல்லாம் சேலத்திலேயே இருந்திருக்கலாம், நீ சென்னைக்கு குடி வந்ததுக்கு அப்புறம் நான் இப்படி எல்லாம் நடக்குது அப்படினா இது ஏதோ தப்பா இருக்கும்னு எனக்குத் தோணுது, நான் சொல்றது உனக்கு புரியுதா???இனிமேல் தான் நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் என்கிறார். அதற்கு சிவகாமி, ஏங்க நான் தான் ஒரு தடவ சொல்லிட்டேன்-ல அப்புறம் ஏன் திரும்பத் திரும்ப நீங்க அதையே பேசிட்டு இருக்கீங்க என்கிறாள். அதற்கு முத்தையா, நீ பேசாமல் இரு சிவகாமி நான் என் மனசுல பட்டத கூட சொல்லக் கூடாதா!! இங்க பாரு விஜய், நீ சென்னையில் வீடு வாங்குறேன் என்று சொன்னப்பவே நான் சொன்னேன் வேண்டாம் நம்ப ஜோசியர் கிட்ட ஆலோசனை கேட்டுக் கொள்ளலாம் என்று நீ தான் கேட்காம பண்ணிட்ட என்கிறார்.

காட்சி(Scenario) 2:

அதற்கு சிவகாமி, அப்பா உன் நல்லதுக்கு தானே சொல்றாரு, இனிமேல் எது செஞ்சாலும் நாளும் கிழமையும் பார்த்து பண்ணு விஜய் என்கிறாள். அதற்கு விஜய், பேசி முடிச்சிட்டீங்களா!!! எனக்கு ஒன்னும் ஆகல அம்மா, கீழே விழுந்ததில் தலையில சின்ன காயம் அவ்வளவு தான், Scan கூட பண்ணி பார்த்தாச்சு, பயப்படுற மாதிரி எதுவும் இல்லைன்னு சொல்லிட்டாங்க என்கிறார். உடனே சிவகாமி, நம்ம செஞ்ச புண்ணியம் தாங்க நம்ம பிள்ளைய காப்பாத்திருக்கு, இதோ பாருங்க அடுத்த வாரமே குலதெய்வம் கோவிலுக்கு போய் பொங்கல் வைத்து சாமி கும்பிடணும் என்கிறாள்.

ADVERTISEMENT

உடனே விஜய், அப்பா….. அம்மா ஆரம்பிச்சிட்டாங்க, இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாம் எனக்கு செட்டாகாது, நீங்களாச்சு அம்மாவாச்சு என்ன ஆள விடுங்க என்கிறான். அதற்கு சிவகாமி, உனக்கு எல்லாத்துலயும் விளையாட்டு தான் விஜய், ஏதோ நம்ப கும்பிட்ட சாமியால தான் பெருசாகமல் இதோட போயிடுச்சு, இதோ பாரு விஜய், நாள் செய்யாதத கோல் செய்யும் கோல் செய்யாதத குலதெய்வம் செய்யும்-னு சொல்லுவாங்க, எதை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கவே கூடாது, அதனால் அடுத்த வாரத்துல ஒரு நல்ல நாள் பார்த்து எல்லாரும் போய் நம்ம குல தெய்வத்த கும்பிட்டுட்டு வந்து விடுவோம் விஜய் என்கிறாள்.

காட்சி(Scenario) 3:

உடனே விஜய், இப்போ என்ன குலதெய்வம் கோவிலுக்கு பொங்கல் வைக்க வேண்டும் அவ்வளவு தானே வச்சுக்கோங்க, என்ன ஆள விடுங்க என்கிறான். உடனே முத்தையா, ஆமா விஜய் நீ இங்க தனியா இருக்க இசை எங்க என்கிறார். அதற்கு விஜய், அது வந்து இசை தாயம்மாவை கூப்பிட போயிருக்கா!!! என்கிறான். அதற்கு சிவகாமி, தாயம்மாவா??? அது யாரு விஜய் என்கிறாள்.

காட்சி(Scenario) 4:

அதற்கு விஜய், அம்மா நான் சொல்ல மறந்துட்டேன், நான் இன்றைக்கு உயிரோட இருக்கேன்னா அதுக்கு காரணம் உங்க குலதெய்வம் கிடையாது, நான் வீடு வாங்கியிருக்கிற Area-ல தாயம்மா-னு ஒரு அம்மா இருக்காங்க, அவங்க தான் கார் என் மேல ஏற்றாமல் காப்பாத்தினாங்க, என்ன பொருத்த வரைக்கும் இந்த நிமிஷம் தாயம்மா தான் எனக்கு குலதெய்வம், அவங்க தான் என் உயிர காப்பாத்துனாங்க, நீங்க ஏதாவது செய்றதா இருந்தால் அவங்களுக்கு ஏதாவது செய்யணும் என்கிறான். உடனே சிவகாமி, அதெல்லாம் சரி விஜய், சுந்தர் எங்க என்கிறாள். உடனே சுந்தர் பாட்டி நான் இங்கே இருக்கிறேன் என்கிறான். உடனே சிவகாமி, செல்ல குட்டி வாடா தங்கம் என்ன பா இங்கே தான் உட்கார்ந்திருந்தியா!!! என்கிறாள். உடனே சுந்தர், பாட்டி அப்பாவுக்கு அடிபட்டுருச்சி பாவம் என்கிறான்.

காட்சி(Scenario) 5:

அந்த நேரத்தில் இசை உள்ளே வருகிறாள். அத்தை மாமா எப்ப வந்தீங்க!!! என்று கேட்கிறாள். உடனே சிவகாமி, அதெல்லாம் இருக்கட்டும், நேற்று கிரகபிரவேசம் நல்ல படியாக நடந்தது, ஏன் கேட்கிறேன்னா, கிரகப்பிரவேசம் முடிந்த அடுத்த நாளே இந்த மாதிரி ஆயிருக்கு-னு சொன்னா…. ஏதாவது குறை இருந்தால் தான் இந்த மாதிரி காட்டும்-னு பெரியவங்க சொல்லுவாங்க என்கிறாள். அதற்கு இசை, கிரகப்பிரவேசம் எல்லாமே நல்ல படியாக தான் நடந்துச்சு அத்தை, அக்கம் பக்கத்திலிருந்த எல்லாமே வந்து இருந்தாங்க என்கிறாள். அதற்கு சிவகாமி, அது சரி மா, வந்தவங்க எல்லார் கண்ணும் ஒரே மாதிரி இருக்கும்-னு சொல்ல முடியாது, கண் திஷ்டியால கூட இப்படி ஆயிருக்கலாம் என்கிறாள்.

மேலும் படிக்கநல்லது செய்வதால் வரும் அவமானங்கள்

ADVERTISEMENT

காட்சி(Scenario) 6:

உடனே விஜய், அம்மா கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா!!! சரி இசை தாயம்மாவைக் கூப்பிடு என்கிறான். அதற்கு இசை, அவங்க இங்க இல்ல விஜய் கிளம்பி போய்ட்டாங்க, எல்லா இடத்துலயும் தேடிட்டேன், ஆனால் அவங்கள கண்டுபிடிக்க முடியல என்கிறாள். உடனே விஜய், என்ன இசை அவங்களால தானே நான் உயிரோடு இருக்கிறேன், நான் ஒரு நன்றி கூட சொல்லாமல் இருக்கேன் ஆனால் அவங்க கிளம்பி போய்ட்டாங்க என்று வருத்தப்படுகிறான். உடனே இசை, நீங்க ஒன்னும் டென்ஷன்(Tension) ஆகாதீங்க விஜய், போற வழியில தாயம்மா வீட்டுக்கு போயிட்டு அவங்கள பார்த்து நன்றி சொல்லிவிட்டு போகலாம் என்கிறாள். உடனே விஜய், சரி Thanks இசை, அவங்கள நீ சரியா புரிஞ்சுகிட்டல்ல அது வரைக்கும் சந்தோஷம் என்கிறார்.

காட்சி(Scenario) 7:

உடனே சிவகாமி காயத்தை தொட்டு ரொம்ப வலிக்குதா விஜய் என்கிறாள். உடனே விஜய், இல்ல மா பரவா இல்லை என்கிறான். உடனே முத்தையா, விஜய் டிஸ்சார்ஜ்(Discharge) ஆகி வீட்டுக்கு போன கையோட இசைக்கும் சுந்தருக்கும் விஜய்க்கும் உன் கையால சுற்றிப் போடு என்கிறார். அதற்கு விஜய், அப்பா நீங்களுமா!!!!! என்று சொல்லிச் சிரிக்கிறான்.

காட்சி(Scenario) 8:

தாயம்மா வேக வேகமா8க வந்து வீட்டுக்குள் நுழைகிறார். தெரசா வீட்டு வெளியில் உட்கார்ந்து இருக்கிறாள். உடனே தாயம்மா, அவளை வேகமாக வீட்டிற்குள் இழுத்து கதவை மூடுகிறார். உடனே தெரசா, இவ்வளவு நேரம் எங்க போன தாயம்மா, நான் உனக்காக எவ்வளவு நேரம் காத்துகிட்டு இருக்கேன் தெரியுமா?? நான் உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் என்று கோபப்படுகிறாள். அதற்கு தாயம்மா, இங்க பாரு தெரசா நம்ம உடனே கிளம்பனும், சீக்கிரம் உன் டிரஸ்(Dress) எல்லாம் எடுத்து வச்சுக்கோ என்கிறார். அதற்கு தெரசா, நான் உன் கூட வர மாட்டேன், உன் பேச்சு கா என்கிறாள். அதற்கு தாயம்மா, இங்க பாரு நீ என் செல்லம் தானே, அம்மா என்ன சொன்னாலும் கேட்க தானே, நீ போய் உன்னோட துணியெல்லாம் எடுத்து வை, நம்ம ஊருக்கு போறோம் சரியா என்கிறார்.

காட்சி(Scenario) 9:

அதற்கு தெரசா, நம்ம ஊருக்கு போறது இருக்கட்டும், நான் முதல எதுக்காக உனக்காக காத்துட்டு இருந்தேன் கேளு அப்போதான் நான் உன்கூட பேசுவேன் என்கிறாள். உடனே தாயம்மா, எதுக்காக தெரசா காத்துட்டு இருந்தா!!!! என்கிறார். அதற்கு தெரசா, சிரித்துக்கொண்டே இங்க பாரு என்று சொல்லி ஒரு படத்தை காட்டி, நான் படம் வரைந்து இருக்கிறேன் என்று சொல்லி அதை காட்டுகிறாள். அதைப் பார்த்த தாயம்மா மிகவும் சந்தோஷப்படுகிறார். உடனே தெரசா, அந்த படத்தில் உள்ள உருவத்தைக் காட்டி இது நீ…. இது நான்… எப்படி வரைந்திருக்கிறேன் பார்த்தியா!!! என்று சொல்கிறாள். உடனே தாயம்மா, என் தெரசா புத்திசாலி-னு எனக்கு தெரியுமே, சரி நீ போய் துணியெல்லாம் எடுத்து வை, எல்லாத்தையும் மறக்காமல் எடுத்து வைக்கணும் சரியா என்கிறார். அதற்குத் தெரசா, சரி நாம எங்க போறோம்-னு சொல்லு தாயம்மா என்கிறாள்.

காட்சி(Scenario) 10: 

உடனே தாயம்மா, அது வந்து நம்ப ஆந்திராவுக்கு போறோம், என்ன அப்படியே நின்னுட்டு இருக்க முதல உன் துணியெல்லாம் எடுத்து வை என்கிறார். உடனே தெரசா, எனக்கு ஆந்திரா பிடிக்கல நான் வரமாட்டேன் என்கிறாள். உடனே தாயம்மா, சரி நீயே சொல்லு நம்ப எந்த ஊருக்கு போகலாம்-னு அந்த ஊருக்கு போகலாம் என்கிறார். உடனே தெரசா, தெரியல நீயே சொல்லு என்கிறாள். உடனே தாயம்மா, எங்க போறோம் ஏன் போறோம் எல்லாம் கேட்காத, நான் போற வழியில சொல்றேன், இப்போ அடம் பிடிக்காமல் உன் பொருள் எல்லாம் எடுத்து வை என்கிறார். உடனே தெரசா, நான் பொருள் எல்லாம் எடுத்து வைக்க மாட்டேன் தாயம்மா, நீ எதுக்கு என்று சொன்னால் தான் நான் வருவேன் போ, கோகிலா அக்கா மணி அண்ணன் அப்புறம் என் பிரெண்ட்ஸ்(Friends) எல்லாம் இங்க தான் இருக்காங்க, அவங்கள எல்லாம் விட்டுட்டு நான் வரமாட்டேன் போ என்கிறாள். அதற்கு தாயம்மா, இங்க பாரு தெரசா அடம் பிடிக்காத அப்புறம் உன்னை நான் விட்டுட்டு போய் விடுவேன் என்கிறார்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 11:

உடனே தெரசா, கோபமாக போய் உட்கார்ந்து அழுது கொண்டு இருக்கிறாள். உடனே தாயம்மா, தெரசா….. தெரசா….. இப்போ எதுக்கு அழுற என்கிறார். உடனே தெரசா, நீ என்ன விட்டுட்டு போயிடுவேனு சொன்னல்ல என்று சொல்லி அழுகிறாள். உடனே தாயம்மா, உன்னை விட்டுட்டு நான் எப்படி மா போவேன், எனக்கு உன்னை விட்டா வேற யாரும்மா இருக்கா, நாம் 2 பேரும் சேர்ந்து போகலாம் சரியா என்கிறார். உடனே தெரசா, ஊருக்கு போகலாம்-னு சொன்னல்ல தாயம்மா போகலாமா!!! என்றாள்.

உடனே தாயம்மா, இத்தனை வருஷமா யாரு கண்ணில் படக்கூடாது என்று ஒளிஞ்சு ஒளிஞ்சு வாழ்ந்துட்டு இருந்தேனோ, அவங்கள நான் இன்றைக்கு பாத்துட்டேன், அவங்க என்ன பார்த்தா உயிரோடவே விட மாட்டாங்க, நான் சாகுற பத்தி கூட எனக்கு கவலை இல்லை, ஆனால் என் நான் பெத்த புள்ளையோட உயிருக்கு ஆபத்து வந்துருமோனு எனக்கு பயமா இருக்கு, என் மகன் உயிரோடு இருக்கணும், அதற்காகத்தான் நான் இத்தனை வருஷமா வாழ்ந்துட்டு இருக்கேன், என் பையனுக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆயிடுச்சுன்னா இத்தனை வருஷமா நான் பட்ட பாடெல்லாம் வீணாகப் போய்விடும், என் தியாகத்துக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும், என் உயிரே போனாலும் என் பையன நான் சாக விட மாட்டேன், என் உயிரை கொடுத்தாவது அவன நான் காப்பாற்றுவேன் என்கிறார்.

காட்சி(Scenario) 12:

உடனே தெரசா, என்ன தாயம்மா சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல என்கிறாள். உடனே தாயம்மா, இதெல்லாம் உனக்கு புரியாது மா, ஆண்டவன் உனக்கு அந்த சக்தியை கொடுக்கல, அதுவும் ஒரு வகையில் நல்லது தான், கொடூரமான மனுஷங்க வாழுற இந்த உலகத்துல அதைப் பற்றி எதுவுமே தெரியாமல் ஒரு குழந்தையா வாழுறது ஒரு வகையில் நல்லது தான், தெரசா நம்ப இனி மேல் இங்க இருக்க வேண்டாம், நம்ம போற இடத்துல உனக்கு நிறைய பிரெண்ட்ஸ்(Friends) கிடைப்பாங்க, நீ கவலையே படாதே என்கிறார். அதற்குத் தெரசா, தாயம்மா நீ அழுகாத அப்புறம் எனக்கும் அழுக வரும்-ல இனிமேல் நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன், நான் அடம் பிடிக்க மாட்டேன் என்கிறாள். உடனே தாயம்மா, தெரசாவை கட்டிப்பிடித்து அழுகிறார்.

காட்சி(Scenario) 13:

ஹாஸ்பிட்டலில்(Hospital) விஜய்க்கு சிவகாமி ஜூஸ்(Juice) போட்டுட்டு இருக்காங்க, விஜய் போனில் ஏதோ பார்த்துக்கொண்டு இருக்கிறார். உடனே சிவகாமி, தலையில அடிபட்டுருக்குல்ல விஜய், சும்மா போன(Phone) பார்த்துட்டே இருந்தா தல தான் வலிக்கும் என்கிறார். அதற்கு விஜய், Bore அடிக்குது அம்மா என்ன வேற என்ன தான் பண்ண சொல்ற என்கிறார். அதற்கு சிவகாமி, ஜூஸ் போட்டுட்டு இருக்கேன் இது குடிச்சிட்டு பேசாம கண்ணை மூடி தூங்கு, ஒரு மாசமா கிரகபிரவேசம் வீடு Registeration அது இதுன்னு சொல்லி ரொம்ப பிசியா(Busy) இருந்திருப்ப, வீட்டுக்கு போன உடனே மறுபடியும் ஆபீஸ்(Office) வேலை-னு பிஸியாகி(Busy) விடுவாய், இங்க இருக்கிற வரைக்கும் எந்த டென்ஷனும்(Tension) இல்லாம ரெஸ்ட்(Rest) எடு பா என்கிறார்.

காட்சி(Scenario) 14:

பிறகு ஜூஸ் போட்டு விஜய்க்கு குடிக்க சொல்லி கொடுக்கிறாள். அந்த சமயத்தில் வாலியும் தாராவும் விஜயை பார்க்க வருகிறார்கள். விஜய் வாலியை பார்த்துக் கொண்டே இருக்கிறார். உடனே வாலி, என்ன விஜய் அப்படி பாக்குறீங்க, நான் தான் உங்க காதல் மனைவி இசை அக்காவோட தம்பி என்கிறான். உடனே விஜய், Sorry உங்களை எனக்கு நல்லா தெரியும், இங்க திடீர்னு உங்களைப் பார்த்ததும் என்ன சொல்றது-னு தெரியல, ப்ளீஸ் உட்காருங்க என்கிறார். உடனே வாலி, பரவாயில்லை தேங்க்ஸ்(Thanks) அப்புறம் இது என் Wife தாரா என்கிறான். உடனே தாரா, ஹாய்(Hi) பிரதர்(Brother) உடம்பு எப்படி இருக்கு, வலி இருக்கா என்கிறாள். அதற்கு விஜய், இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லை அப்புறம் இவங்க என்னோட அம்மா சிவகாமி என்கிறார்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 15:

உடனே வாலியும் தாராவும் சிவகாமிக்கு வணக்கம் சொல்கிறார்கள். உடனே தாரா, Aunty நான் இசையோட அத்த பொண்ணு, I Mean இசையோட அப்பா உங்க சம்பந்தியும் எங்க அம்மாவும் அண்ணன் தங்கச்சி என்கிறாள். உடனே சிவகாமி அப்படியா மா என்கிறாள். உடனே விஜய், அம்மா வாலி ஒரு அட்வகேட்(Advocate) நான் ஏற்கனவே உங்க கிட்ட சொல்லி இருக்கேன்-ல ஞாபகம் இருக்கா??? இவர தான் இசையோட அப்பா தத்து எடுத்திருக்காரு என்கிறார். அதற்கு சிவகாமி, ஆமா பா நீ சொல்லி இருக்க ஞாபகம் இருக்கு என்கிறார். உடனே வாலி, விஜய் உங்களுக்கு நடந்தது தெரிஞ்சதும் நானும் இவளும் பதறிப் போய்ட்டோம், உடனே உங்களைப் பார்க்கணும்-னு கிளம்பி வந்துட்டோம், அன்றைக்கு உங்க வீட்டுக்கு கூட வந்தேன், ஆனால் உங்கள தான் பார்க்க முடியல என்கிறான். அதற்கு விஜய், ஆமா நான் அங்க தான் இருந்தேன், நீங்க தான் வந்ததும் கிளம்பிட்டீங்க என்கிறார்.

மேலும் படிக்கதந்தையின் அன்பிற்கு ஏங்கும் மகள்

காட்சி(Scenario) 16:

உடனே தாரா, பிரதர்(Brother) உங்க மேல கார் ஒண்ணு வேகமா மோதுனதா கேள்விப்பட்டோம், அந்த கார் நம்பர் ஏதாவது Note பண்ணிங்களா!!! என்கிறாள். அதற்கு விஜய், நல்லா யோசிச்சு பார்த்துட்டு இல்ல நோட் பண்ணல, அவசரத்துல யாரும் அத கவனிக்கல என்கிறார். உடனே வாலி, அந்த கார் டிரைவரை(Driver) பார்த்தீங்களா?? ஏதும் அடையாளம் தெரிஞ்சதா??? என்கிறான். உடனே விஜய், இல்ல யாரு-னு தெரியல என்கிறார். உடனே தாரா, இசை எங்கே என்கிறாள். அதற்கு விஜய், கீழே Doctor-அ பார்க்க போய் இருக்கா, இப்போ வந்துருவா என்கிறார். உடனே வாலி, அப்புறம் கேட்கணும்-னு நினைச்சேன், யாரோ ஒரு அம்மா Accident-ல இருந்து உங்களை காப்பாத்துனதா சொன்னாங்க என்கிறான். அதற்கு விஜய், ஆமா அவங்க பெயர் தாயம்மா, அவங்க தான் என்ன காப்பாத்துனாங்க, அவங்க மட்டும் என்ன தள்ளிவிடலானா அந்தக் கார் என் மேல மோதி நான் பீஸ் பீஸா ஆயிருப்பேன் என்கிறார்.

காட்சி(Scenario) 17:

உடனே சிவகாமி, அந்த மாதிரி எல்லாம் பேசாத விஜய், மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பேசாம இரு என்கிறார். அப்புறம் தாராவை பார்த்து, இங்க பாரு மா உன்னோட மாமா பொண்ணு தானே இசை, அந்த உரிமை-ல உன்கிட்ட ஒரு விஷயம் கேட்குறேன், காதலிக்கிறது என்ன அவ்வளவு பெரிய குற்றமா??? அதோட இல்லாம இசை ஒண்ணும் வெறும் பயல கல்யாணம் பண்ணிக்கலையே, இன்றைய தேதிக்கு விஜய்க்கு சேலத்துல கோடிக்கணக்கில் சொத்து இருக்கு, இப்போ சென்னை-ல சொந்த சம்பாத்தியத்தில் வீடு வாங்கி இருக்கான், இப்பேர்ப்பட்ட என் பையன உங்க மாமா பிடிவாதமா ஏத்துக்கமாட்டேன் சொல்றது எனக்கு என்னமோ சரியா படல மா, அப்புறம் என் மனசுல பட்டதை சொல்லிட்டேன், நீ எதுவும் தப்பா எடுத்துக்காத மா என்கிறாள்.

காட்சி(Scenario) 18:

உடனே தாரா, அய்யோ ஆன்ட்டி(Aunty) நீங்க சொன்னதுல எந்த தப்பும் இல்ல, Infact இசை விஷயத்துல என் மாமா ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று எனக்கே புரியவில்லை என்கிறாள். உடனே வாலி, அப்பாவுக்கு இசை ஒரே பொண்ணு, செல்லமா வளர்த்துட்டாங்க, இசை தன் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காமல் வீட்டை விட்டு வெளியில் போயிட்டாங்கன்னு இசை மேல வருத்தம் இன்னும் இருக்கு, ஆனால் இசையை அவரு வெறுக்கல, இன்னும் அதே பாசம் இருக்கு, அதனால தான் கிரகப்பிரவேசத்திற்கு புடவையும் Sweet Box-ம் வாங்கி கொடுத்து விட்டார் என்கிறான். உடனே தாரா, Aunty நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க, நாங்க எதுக்கு இருக்கோம், மாமா கிட்ட பேசிட்டு தான் இருக்கோம், அவரோட மனசை மாத்தி கூடிய சீக்கிரத்து-ல இசையை அவருடன் சேர்த்து வைக்க தான் போறோம், நீங்க வேணா பார்த்துக்கிட்டே இருங்களே!!!! என்கிறாள்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 19:

உடனே சிவகாமி, இங்க பாரு மா தாரா, இசை அம்மா இல்லாத பொண்ணு, அப்பா அரவணைப்பில் வளர்ந்த பொண்ணு, அப்படிப்பட்ட அவரே இசையை வெறுத்து ஒதுக்குவதை இசையால தாங்கிக்க முடியல, அத நினைத்து அவ மனசுக்குள்ளேயே அழுகிறது எனக்கு மட்டும் தான் தெரியும், உன்னை நான் கெஞ்சி கேட்கிறேன், கூடிய சீக்கிரம் இசையை அவங்க அப்பா கூட சேத்து வச்சுரு மா, உனக்கு புண்ணியமா போகும் என்கிறாள். உடனே வாலி, ஆன்ட்டி(Aunty) நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க, சிஸ்டர் அவங்க அப்பா கூட சேர்த்து வைக்க வேண்டியது எனது கடமை என்கிறான்.

காட்சி(Scenario) 20:

அப்போது இசை திடீரென உள்ளே என்ட்ரி(Entry) கொடுக்கிறார். வாலியைப் பார்த்து, என்ன சொன்ன…. என்ன சொன்ன….. எங்க அப்பா கூட சேர்த்து வைக்கப் போறியா??? யாரு கூட யார சேர்த்து வைக்க போற நீ??? ஆமா எனக்கும் என் அப்பாவுக்கும் நடுவுல நீ யாரு??? விஜய் இவர்களை யாரு உள்ளே விட்டது, வெளியே போக சொல்லுங்க, சொல்றது உன் காதில் விழவில்லையா!!! வெளியே போ என்கிறாள். உடனே வாலி, சிஸ்டர்(Sister) ஏன் கோபப்படுகிறீர்கள், விஜய்க்கு இப்படி ஆயிடுச்சுன்னு பார்க்க வந்தோம், ஏன் நாங்க வரக்கூடாதா!!! எங்களுக்கு அந்த உரிமை கூட கிடையாதா சிஸ்டர்(Sister) என்கிறான். உடனே இசை, முதல இந்த சிஸ்டர்-னு(Sister) கூப்பிடுறத நிறுத்து, நீ சிஸ்டர்-னு(Sister) கூப்பிடுற ஒவ்வொரு தடவையும் எனக்கு Irritating-அ இருக்கு என்கிறாள்.

காட்சி(Scenario) 21:

உடனே தாரா, ஏன் எங்கள கண்டாலே உனக்கு பிடிக்க மாட்டேங்குது இசை, நாங்க அப்படி என்ன செஞ்சுட்டோம் என்கிறாள். அதற்கு இசை, நீ பேசாத, இப்போ நீங்களா வெளிய போறீங்களா? இல்ல ஹாஸ்பிடல்(Hospital) அட்மின்-ல(Admin) கம்ப்ளைன்ட்(Complaint) பண்ணவா என்கிறாள். உடனே விஜய், சாரி(Sorry) வாலி என்கிறார். உடனே வாலி, It’s Ok விஜய் நாங்க கிளம்புறோம், அப்புறம் உங்களுக்கு இந்த Accident-ல ஏதாவது ஹெல்ப்(Help) வேணும்னாலும் தயங்காம என்னை காண்டக்ட்(Contact) பண்ணுங்க என்கிறான். உடனே இசை, அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல நீ கிளம்பு என்கிறாள். உடனே வாலியும் தாராவும் கிளம்புகிறார்கள்.

மேலும் படிக்கஒரு ஏழைத் தாயின் சோகக் கதை

காட்சி(Scenario) 22:

உடனே சிவகாமி, எதுக்கு இசை இவ்வளவு கோபப்படுற, என்ன இருந்தாலும் அவ உன் அத்த பொண்ணு தானே, அதோட இல்லாம அந்த பையன வேற உங்க அப்பா தத்து எடுத்து இருக்காரு-னு சொல்றாரு, அப்போ உனக்கு தம்பி முறை தானே என்கிறாள். உடனே இசை, அத்தை Please அவன பத்தி பேசாதீங்க, எனக்கு தலை வலிக்குது என்கிறாள். உடனே சிவகாமி, தலை வலிக்குதா?? வேணும்-னா ஜூஸ் குடிக்கிறியா?? என்கிறாள். உடனே இசை, எனக்கு ஒன்னும் வேண்டாம் அத்தை என்கிறாள். உடனே விஜய், Cool-அ இரு இசை, ஏன் இப்படி டென்ஷன்(Tension) ஆகுற, Take it easy இசை என்கிறான்.

ADVERTISEMENT

உடனே இசை, உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு, வலி இருக்கா என்கிறாள். உடனே விஜய், நான் நல்லா தான் இருக்கேன், அவங்க ரெண்டு பேரும் பார்த்துட்டுப் போகலாமுன்னு தானே வந்தாங்க, அவங்கள இப்படி அவமானப்படுத்தி அனுப்புறது தப்பில்லையா என்கிறான். உடனே இசை, இதை எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல விஜய், அப்பா என்ன விட்டு விலகி இருக்கிறதுக்கு இவங்க தான் காரணமோனு எனக்கு சந்தேகமா இருக்கு என்கிறாள். உடனே விஜய், தேவையில்லாத கற்பனை பண்ணாத இசை, வாலியை பார்த்தா எனக்கு தப்பா தோணுல என்கிறான். உடனே இசை, பொண்ணுங்க Guess எப்போதுமே சரியா தான் இருக்கும் விஜய், எதிர்காலத்தில் இப்படித்தான் நடக்கும் என்று யோசிக்கிறனால தான் பெண் புத்தி பின் புத்தி-னு சொல்றாங்க, அது உங்களுக்கு தெரியுமா????என்கிறாள்.

காட்சி(Scenario) 23:

உடனே விஜய் சிரிக்கிறான். உடனே இசை, ஏன் இப்போ சிரிக்கிறீங்க!!! என்கிறாள். உடனே விஜய், பெண் புத்தி பின் புத்திக்கு இவ்வளவு அழகான விளக்கத்தை யாருமே கொடுத்தது இல்ல அதான் சிரிச்சேன் என்கிறான். உடனே இசையும் சிரிக்கிறாள். உடனே சிவகாமி, அப்புறம் இசை மாமாவும் சுந்தரும் எங்க என்கிறாள். உடனே இசை, சுந்தரும் மாமாவும் வெளிய இருக்காங்க அத்தை, அப்புறம் விஜயை பாத்துக்கோங்க, நான் வீட்டுக்கு போய் சமைத்து எடுத்துட்டு வரேன், நான் போயிட்டு வரேன் பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள். உடனே சிவகாமி, என் பிள்ளைய இந்த ஜூஸை குடிக்க கூட விட மாட்டேங்கிறீங்க என்று சொல்லிக் ஜூஸை கொடுக்கிறார், விஜயும் ஜூஸை வாங்கி குடிக்கிறார்.

காட்சி(Scenario) 24:

தாயம்மாவைப் பார்ப்பதற்காக இசையும் முத்தையாவும் கோகிலாவை அழைத்துக்கொண்டு தாயம்மா வீட்டிற்கு வருகிறார்கள். இசையும் கோகிலாவும் காரை விட்டு இறங்கி விடுகிறார்கள். ஆனால் முத்தையா நீங்க போயிட்டு வாங்க நான் காரிலேயே இருக்கேன், வெளியில் மண்டைய பொளக்குது என்கிறார். உடனே இசையும் கோகிலாவும் தாயம்மாவைப் பார்க்கச் செல்கிறார்கள். உடனே கோகிலா, தாயம்மாவைப் பற்றிய இசையிடம் கூறிக் கொண்டே வருகிறாள். தாயம்மாவை இங்கே இருக்கிற எல்லாருக்கும் பிடிக்கும், எல்லார்கிட்டயும் பாசமாக பழகும், ஒரு உதவி-னு கேட்டுட்டா ஓடி வந்து செய்யும், அதனால இங்க இருக்கிற எல்லாத்துக்கும் தாயம்மானா ரொம்ப இஷ்டம்.

காட்சி(Scenario) 25:

ஆரம்பத்தில் உங்களுக்கு தாயம்மாவை பிடிக்கல தானே, எனக்கு தெரியும், தாயம்மா கூட ரொம்ப ஃபீல்(Feel) பண்ணுச்சு, அது ஒன்னும் இல்ல அந்த படத்தில் தனுஷ் ஒன்னு சொல்லுவாரே……என்ன பார்த்தா பிடிக்காது!!!! பார்க்க பார்க்க தான் பிடிக்கும்-னு……..அந்த மாதிரிதான் தாயம்மா……தாயம்மாவை பார்த்த உடனே பிடிக்காது, பார்க்கப் பார்க்க தான் பிடிக்கும், இப்ப பார்த்தீங்களா??? தாயம்மாவை இப்போ உங்களுக்கும் பிடிச்சு போச்சுல்ல அதனால தான் நீங்க தாயம்மாவை தேடி வந்து இருக்கீங்க, அதான் தாயம்மா…. தாயம்மா கிட்ட ஒரு முறை பேசி பழகி விட்டால் போதும் அவங்கள பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டாங்க, வாங்க…. வாங்க…. என்று சொல்லி அழைத்து செல்கிறாள். அப்போது தாயம்மா வீடு மூடி இருக்கிறது. உடனே இசை, வீடு மூடி இருக்கு என்கிறாள். உடனே கோகிலா, இல்ல இசை அம்மா, உள் தாப்பா தான் போட்டு இருக்கு உள்ளே தான் இருக்கும் வாங்க பார்க்கலாம் என்று சொல்லி அழைத்துச் செல்கிறாள்.

காட்சி(Scenario) 26:

தாயம்மா ஊருக்கு செல்வதற்காக கிளம்பி கொண்டு இருக்கிறார். நல்ல வேளை அந்த கொலைகாரன் கண்ணுல நான் படல, ஒரு வேளை என்னை பார்த்து இருந்தாங்கன்னா அவ்வளவு தான், இவ்வளவு நாளா நான் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாக போய் இருக்கும், இனி மேல் ஒரு நிமிடம் கூட இந்த ஊரில் இருக்க கூடாது, தெரசா போகலாம் வா என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே யாரோ கதவை தட்டுகிறார்கள், அதை பார்த்து தாயம்மா மிகவும் பயந்து யாரா இருக்கும் என்று சொல்லி பயத்துடன் கதவை பார்த்து கொண்டு இருக்கிறார்.

ADVERTISEMENT