ADVERTISEMENT

ஒரு ஏழைத் தாயின் சோகக் கதை

தாயம்மா ஊரை விட்டுப் போக வேண்டும் என்று சொல்லி கிளம்பி கொண்டு இருக்கிறார். அப்போது யாரோ கதவை தட்டுகிறார்கள். தாயம்மா மிகவும் பயந்து போய் யாரென்று ஜன்னல் வழியாக பார்க்கிறார். வெளியில் கோகிலா கதவை தட்டிக் கொண்டு இருப்பதை பார்க்கிறார். கோகிலா எதுக்கு இப்போ இங்க வந்து இருக்கிறாள் என்று தெரியவில்லையே என யோசித்துக் கொண்டு இருக்கிறார். தாயம்மா மைண்ட் வாய்ஸ்(Mind Voice) தெரசா ஊருக்கு போறோம்-னு சொல்லிட்டா என்ன பண்ணுறது!!!!

காட்சி(Scenario) 1:

உடனே தாயம்மா தெரசாவிடம் போய், அம்மா உனக்கு சாக்லேட்(Chocolate) வாங்கி தரேன், ஊருக்கு போற விஷயத்தை யாருக்கும் சொல்லக் கூடாது என்கிறார். உடனே தெரசா, ஏன் சொல்லக்கூடாது என்று கேட்கிறாள். அதற்கு தாயம்மா அய்யயோ!!!! தெரசா இது ஒரு விளையாட்டு, நம்ம ஊருக்கு போறேன்னு தெரிஞ்சா அப்புறம் நம்ம தோற்றுப் போய் விடுவோம், அப்புறம் எனக்கு சாக்லேட்(Chocolate) கிடைக்காது என்கிறார். உடனே தெரசா, அப்படியா!!! அப்போ நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் என்கிறாள். கோகிலா வெளியில் நின்று தாயம்மா…. தாயம்மா…. என அழைத்துக் கொண்டே இருக்கிறாள்.

காட்சி(Scenario) 2:

உடனே தாயம்மா கதவை திறந்து வா கோகிலா என்கிறார். உடனே திரும்பிப் பார்த்தால் பின்புறம் இசை நின்று கொண்டு இருக்கிறாள். தாயம்மா இசையை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறார். உடனே இசை, தாயம்மா விஜய் கண் முடிச்சதுமே உங்கள தான் கேட்டார், நடந்த எல்லாத்தையும் அவர் தான் எனக்கு சொன்னார், நான் தான் அவசரப்பட்டு ஏதேதோ பேசிட்டேன், நீங்க மட்டும் இல்லனா அவருக்கு என்ன வேணாலும் நடந்திருக்கலாம், என்ன மன்னிச்சிடுங்க தாயம்மா….. நான் அப்படி எல்லாம் பேசி இருக்கக் கூடாது, நான் ஏதோ கோவத்துல அப்படி பேசிட்டேன் என்கிறாள். அதற்கு தாயம்மா, அய்யயோ என்னம்மா நீங்க பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க, உங்க இடத்தில் யாரு இருந்தாலும் அப்படிதான் பேசி இருப்பாங்க மா, தம்பிக்கு எதுவும் ஆகலல அது வரைக்கும் ரொம்ப சந்தோஷம் மா, ஐயோ நான் வேற உங்களை வெளியே நிக்க வச்சி பேசிட்டு இருக்கேன் உள்ளே வாங்க என்கிறார்.

காட்சி(Scenario) 3:

உடனே இசை, இல்ல தாயம்மா இன்னொரு நாள் வரேன், உங்கள பார்த்து சாரி(Sorry) கேட்க தான் வந்தேன், இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு, அன்றைக்கு நீங்க Sweet Box-அ கீழே போட்டதுனால நான் அப்படி பேசிட்டேன், நீங்க எதையும் மனசுல வச்சுக்காதீங்க தாயம்மா என்கிறாள். உடனே தாயம்மா, என்னம்மா நீங்க பழச எல்லாம் பேசிட்டு இருக்கீங்க, அது எல்லாத்தையும் நான் அப்போவே மறந்துட்டேன், நீங்க முதல உள்ளே வாங்க மா என்கிறார். அதற்கு இசை, இல்ல தாயம்மா காரில் விஜய் ஓட அப்பா வெயிட்(Wait) பண்ணிட்டு இருக்காரு, டயம்(Time) ஆச்சு நான் கிளம்பனும் என்கிறாள். உடனே தாயம்மா, நீங்க முதல் முதல வீட்டுக்கு வந்திருக்கீங்க, குடிக்க தண்ணி கொண்டு வரேன் குடிச்சுட்டு போங்க என்று சொல்லி தண்ணியை எடுக்க வீட்டின் உள்ளே போகிறார்.

காட்சி(Scenario) 4:

அப்போது தெரசா கோகிலாவை பார்த்து கோகிலா என்கிறாள். உடனே கோகிலா, ஏய் கோகிலா இல்ல Google கோகிலா என்கிறாள். உடனே தெரசா, இங்க பாரு நான் படம் வரைந்து இருக்கிறேன் என்று சொல்லி அவள் வரைந்த படத்தை காட்டுகிறாள். உடனே கோகிலா, அழகா இருக்குது நீ வரைந்தாயா??? ஐயோ அழகா இருக்குது, என் செல்லம் என்று சொல்லி மிகவும் சந்தோஷமாக இசையிடம் காட்டி, அம்மா எப்படி வரைந்து இருக்கிறாள் பார்த்தீங்களா?? அழகாக வரைந்து இருக்கிறாள் அல்லவா என்கிறாள். உடனே இசை, சிரித்துக்கொண்டே அழகா இருக்கு, அப்புறம் இது தாயம்மாவோட சொந்த வீடா என்று கேட்கிறாள். அதற்கு கோகிலா, நீங்க வேற மா, சொந்த வீட்டில இருக்கிற அளவுக்கு எல்லாம் தாயம்மாவுக்கு வசதி இல்லை, பாவம் அதற்கு ஆதரவு யாரும் இல்லை மா, ஒத்தை ஆளா இந்தப் பிள்ளையைப் வச்சிட்டு கஷ்டப்படுது, எங்கள மாதிரி அதுவும் ஒரு அன்னாடம் காட்சி தான் என்கிறாள்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 5:

அப்போது முத்தையா காரில் உட்கார்ந்து போன் பேசிக்கொண்டு இருக்கிறார். இசையை பார்க்கிறார், இசை வர மாதிரி தெரியல உடனே அவரே காரை விட்டு இறங்கி போய் இசை டைம்(Time) ஆயிடுச்சு, வந்த வேலை முடிஞ்சிடுச்சா என்கிறார். அதற்கு இசை, முடிஞ்சிருச்சு மாமா இப்போ வந்துருவோம் என்கிறாள். உடனே முத்தையா, இல்ல மா விஜய்க்கு ஹாஸ்பிடலுக்கு சாப்பாடு எடுத்துட்டு போகணும் அதான் என்கிறார். அப்போது திடீரென தெரசா முத்தையாவின் மூக்கு கண்ணாடியை எடுத்து அவள் கண்ணில் போட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறாள். உடனே கோகிலா, அப்படி எல்லாம் பண்ணக்கூடாது கண்ணாடியை கொடு என்று சொல்லி தெரசாவிடம் கண்ணாடியை வாங்கி முத்தையாவிடம் கொடுத்துவிட்டு மன்னிச்சுக்கோங்க ஐயா இது தாயம்மா பொண்ணு தான், கொஞ்சம் மூளை வளர்ச்சி இல்லை என்கிறாள். உடனே முத்தையா, இசை நான் காரில் Wait பண்றேன், கொஞ்சம் சீக்கிரம் வந்துரு மா என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார். அவர் அந்தப் பக்கம் போனதும் தாயம்மா உள்ளே இருந்து தண்ணி கொண்டு வந்து இசைக்கு கொடுக்குறாங்க.

காட்சி(Scenario) 6:

உடனே தெரசா, கோகிலா உனக்கு ஒன்னு தெரியுமா??? நானும் தாயம்மாவும் ஊருக்கு போறோம் என்கிறாள். உடனே கோகிலா, என்ன தாயம்மா அப்படியா??? என்கிறாள். உடனே தாயம்மா, இல்ல கோகிலா அவ சும்மா சொல்லுறா என்கிறார். உடனே தெரசா, ஆமா ஆமா நான் சும்மா தான் சொன்னேன் அப்போ தானே சாக்லேட் கிடைக்கும் என்கிறாள். உடனே இசை, காலையிலிருந்து நீங்களும் கோயில் Hospital-னு அலைந்து இருப்பீர்கள்… தெரசாவை கூட்டிட்டு வீட்டுக்கு வரீங்களா?? சாப்பாடு ரெடி பண்றேன் சாப்பிட்டு வரலாம் என்கிறாள். உடனே தாயம்மா ரொம்ப யோசிக்கிறாங்க. அதற்கு கோகிலா, என்ன தாயம்மா யோசிக்கிற அதான் அம்மாவை கூப்பிடு வாங்க போயிட்டு வர வேண்டியது தானே என்கிறாள்.

மேலும் படிக்கபழிவாங்கும் எண்ணத்தின் உச்சகட்டம்

காட்சி(Scenario) 7:

உடனே தெரசா, எனக்கு சாக்லேட்(Chocolate) கிடைக்கும்-ல என்கிறாள். உடனே இசை, எங்க வீட்டுக்கு வா நான் நிறைய சாக்லேட்(Chocolate) தரேன் என்கிறாள். உடனே தெரசா, நம்ம போகலாம் தாயம்மா, அவங்க தான் சாக்லேட் தரேன் சொல்றாங்கல்ல என்கிறாள். உடனே தாயம்மா, சரி இசை அம்மா நீங்க முன்னாடி போங்க நான் பின்னாடியே வர்றேன், வீட்டில் பாத்திரம் எல்லாம் போட்டது போட்டபடி அப்படியே இருக்கு, நான் கழுவி வச்சிட்டு வர்றேன் என்கிறார். அதற்கு இசை, சரி தாயம்மா ஆனால் சீக்கிரம் வந்துடுங்க என்கிறாள். உடனே தாயம்மா, சரி மா நான் சீக்கிரம் வந்திடுறேன், அப்புறம் சுந்தர் எங்க அம்மா என்கிறார். அதற்கு இசை, அவன் காரில் தூங்கிட்டு இருக்கான், அப்போ நாங்க கிளம்புறோம் என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்புகிறாள். அப்புறம் இசை, கோகிலா, முத்தையா எல்லாம் காரில் கிளம்புகிறார்கள். இதுல Twist என்னன்னா???? தாயம்மாவும் முத்தையாவும் பார்த்துக்கவே இல்லை, அது ஏன் எதற்காக எல்லாம் போக போக புரியும்.

காட்சி(Scenario) 8:

இசை கோகிலா முத்தையா மூன்று பேரும் காரில் கிளம்பிய கொஞ்ச நேரத்துல தாயம்மாவும் தெரசாவும் ஊருக்கு கிளம்புகிறார்கள். உடனே தெரசா, நம்ப இப்போ அவங்க வீட்டுக்கு தானே போறோம் தாயம்மா என்கிறாள். அதற்கு தாயம்மா, ஆமா ஆமா அங்க தான் போறோம் நீ பேசாம வா என்று சொல்லி அழைத்துச் செல்கிறார்.

ADVERTISEMENT

ஆனந்தம் வில்லாவை காட்டுகிறார்கள். இசை முத்தையா சுந்தர் கோகிலா 4 பேரும் காரை விட்டு இறங்குகிறார்கள். உடனே முத்தையா, வீடு ரொம்ப அழகாத்தான் இருக்கு இசை என்கிறார். உடனே இசை, சிரித்துக்கொண்டே உள்ளே வாங்க மாமா என்று சொல்லி அழைத்துச் செல்கிறாள்.

காட்சி(Scenario) 9:

அப்போது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஹஸ்பெண்ட் அண்ட் வைஃப்(Husband and Wife) வந்து, ஒரு நிமிடம் இசை என்று அழைக்கிறார்கள். ஹஸ்பெண்ட்(Husband) பெயர் இளங்கோ, வைஃப்(Wife) பெயர் வசந்தி. உடனே வசந்தி, அப்புறம் விஷயம் கேள்விப்பட்டேன், மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, விஜய் இப்போ எப்படி இருக்கிறார், ஒன்னும் பிரச்சனை இல்லையே என்கிறாள். அதற்கு இசை, அவர் நல்லாத் தான் இருக்காரு, ஒன்னும் பிரச்சனை இல்லை என்கிறாள். அதற்கு இளங்கோ, இந்த ஆக்சிடென்ட்(Accident) எப்படி மா நடந்தது என்கிறார். அதற்கு கோகிலா, பெரிய ஆக்சிடென்ட்(Accident) எல்லாம் இல்ல, தாயம்மா கூட இருந்ததால சார(Sir) காப்பாட்டாங்க தலையில் லேசான அடி அவ்வளவு தான் என்கிறாள். உடனே வசந்தி, ஏய் கோகிலா பேசிட்டு இருக்கோம்-ல ஏன் அவசரப்படுற கொஞ்சம் பொறுமையாக இரு என்கிறாள்.

காட்சி(Scenario) 10:

உடனே இளங்கோ, அப்புறம் முத்தையாவை பார்த்து, ஆமா…… சார் யாருன்னு சொல்லவே இல்லை என்று கேட்கிறார். உடனே இசை, என்னோட மாமனார் என்கிறார். உடனே இளங்கோ, வசந்தி, முத்தையா மூன்று பேரும் வணக்கம் சொல்லிக் கொள்கிறார்கள். பின்பு இளங்கோ அவரை அறிமுகம் செய்து கொள்கிறார், என்னோட பெயர் இளங்கோ, நான் ஆர்.டி.ஓ(RTO) ஆபீஸர்(Officer), விஜய்க்கு தலையில் அடிபட்டு இருக்கு, அதனால லேசான அடின்னு அஜாக்கிரதையா இருந்துவிடாதீர்கள், எங்கேயாவது Blood Lock ஆயிருக்கும், அது இப்போது தெரியாது, பின்னாடி ஒரு நாள் ஏதாவது பிரச்சனை வரும், அப்போது தான் தெரியும், எதுக்கும் ஒரு ஸ்கேன்(Scan) மட்டும் எடுத்துப் பாத்துருங்க என்கிறார். அதற்கு இசை, எல்லா ஸ்கேனும்(Scan) எடுத்து பார்த்தாச்சு சார், நீங்க சொல்ற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை, விஜய் பேர்பெக்ட்லி அல்ரைட்-னு(Perfectly Alright) டாக்டர் சொல்லிட்டாரு என்கிறாள். உடனே இளங்கோ, சிரித்து கொண்டே ஒன்னும் இல்லன்னா சந்தோஷம் தான், கிரகப்பிரவேசம் நடந்த உடனே இப்படி ஆயிருக்குல்ல அதான் சொல்றேன் என்கிறார்.

உடனே வசந்தி, அதுவும் ஹோமத் தீயில் வெந்த சாம்பல கொட்ட போகும் போது கோவில் வாசலில் வச்சு நடந்திருக்குனா இதை சாதாரணமாக எடுத்துக்க முடியுமா!!! ஏதோ சாமி குத்தம் என்று நினைக்கிறேன், எதுக்கும் ஒரு நல்ல ஜோசியரா பாருங்க, பரிகாரம் எதுவும் பண்ண சொன்னா பண்ணிருங்க, ஒரு வேளை உங்களுக்கு நேரம் சரியில்லையோ அதனால தான் இப்படி நடந்திருக்குமோ என்கிறாள்.

காட்சி(Scenario) 11:

உடனே கோகிலா, மேடம்(Madam) நேரம் எல்லாம் நல்லா தான் இருக்கு, அதனால தான் மேடம்(Madam) இந்த வில்லாவில் ஒரு வீடு வாங்கி குடி வந்து இருக்காங்க, நீங்க வாங்க இசை அம்மா போகலாம் என்கிறாள். உடனே இளங்கோ, ஏய் கோகிலா எதுக்கு இப்போ பறக்குற, நாங்க தான் பேசிட்டு இருக்கோம்-ல, சார் உங்க பையனும் மருமகளும் இப்போது தான் சொந்தமாக வீடு வாங்கி குடி வந்திருக்காங்க, விஜய்க்கு இப்படி நடந்தது வருத்தமா தான் இருக்கு, விஜயும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம் என்ன பண்றது நேரம் சரியில்லை என்றாள் இந்த மாதிரி நடக்கிறத யாராலும் தடுக்கவே முடியாது, ஏதோ விஜய்க்கு ஒன்னும் ஆகல அதனால சந்தோஷப்பட வேண்டியது தான் என்கிறார். உடனே கோகிலா, சார் நீங்க இன்னும் ஆபீஸ் போகலயா என்கிறாள். உடனே இளங்கோ, முறைத்துக் கொண்டே போகணும் போகணும் என்கிறார்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 12:

உடனே இசை, நீங்க உள்ள வாங்க மாமா என்கிறாள். உடனே வசந்தி, ஒரு நிமிஷம் இசை, இப்ப தான் எனக்கு ஞாபகம் வருது, உங்களுக்கு முன்னாடி ஒருத்தர் இந்த வீட்டை வந்து பார்த்தாரு, அவருக்கு வீடு ரொம்ப பிடிச்சு போயிடுச்சு, உடனே வாங்க வேண்டும் என்று சொல்லி அட்வான்ஸ்(Advance) கொடுத்துவிட்டு போனார், ஆனால் திரும்பிப் போற வழியில் ஆக்சிடெண்ட் (Accident) ஆயி Spot-லையே இறந்து விட்டார் என்கிறாள். உடனே கோகிலா, அப்படியா??? நானும் இங்கே தான் இருக்கிறேன், இப்படி ஒரு சம்பவம் நடந்த மாதிரியே தெரியலையே என்கிறாள். உடனே வசந்தி, அப்புறம் நான் என்ன பொய்யா சொல்றேன், நீ பேசாமல் இரு கோகிலா என்கிறாள். உடனே கோகிலா, இந்த கோகிலா சாதாரண கோகிலா இல்லை Google கோகிலா, எனக்கு தெரியாம இங்கே எதுவுமே நடக்காது, விஜய் சாருக்கு(Sir) முன்னாடி இந்த வீட்ட யாருமே புக்(Book) பண்ணல, எனக்கும் அது நல்லாவே தெரியும் என்கிறாள். உடனே வசந்தி, நீ சும்மா இரு கோகிலா, உனக்கு என்ன தெரியும், அந்த வீட்டை ஏற்கனவே Book பண்ணவரு செத்துப் போனது உண்மை தான் என்கிறாள்.

காட்சி(Scenario) 13:

உடனே இசை, இங்க பாருங்க வசந்தி மேடம்(Madam) எனக்கு இந்த செண்டிமெண்ட்(Sentiment) எல்லாம் பெருசா நம்பிக்கை இல்லை, கோகிலா போகலாம், மாமா உள்ளே வாங்க என்று சொல்லி அவர்களை உள்ளே அழைத்துச் செல்கிறாள். உடனே இளங்கோ, வசந்தியை தனியாக அழைத்துச் சென்று ஆமா வசந்தி இந்த வீட்டுக்கு அட்வான்ஸ்(Advance) கொடுத்தவர் ஆக்சிடெண்டில்(Accident) இறந்து விட்டார் என்று சொன்னியே…. அது எனக்குத் தெரியாமல் எப்போ நடந்தது என்கிறார். அதற்கு வசந்தி, ஐயோ உண்மையிலேயே அப்படி எதுவும் நடக்கல, சும்மா அடிச்சு விட்டேன் என்கிறாள். உடனே இளங்கோ, எதுக்கு அப்படி சொன்ன என்கிறார்.

அதற்கு வசந்தி, பின்ன என்னங்க, இந்த வீட்டை என் தம்பிக்கு வாங்கலாம்-னு இருந்தேன், ஆனால் அதுக்குள்ள இவங்க வந்து வாங்கிட்டாங்க, ஏதாவது சொல்லி விரட்டலாம் என்று பார்த்தால் அந்த இசை மசியவே மாட்டேங்கிறாளே என்கிறாள். உடனே இளங்கோ, இத முன்னாடியே என்கிட்ட சொல்லியிருந்தா நானும் அந்த பொம்பள பயப்படுற மாதிரி இன்னும் ஏதாவது சொல்லி இருப்பேன் என்கிறார். உடனே வசந்தி, சரி விடுங்க பாத்துக்கலாம் என்று சொல்கிறாள், பின்பு இருவரும் அந்த இடத்தை விட்டுக் கிளம்புகிறார்கள்.

மேலும் படிக்கஒரு தாயின் பாசப் போராட்டம்

காட்சி(Scenario) 14:

மணி சைக்கிளில் வந்து கொண்டிருக்கிறான். அதே வழியில் தாயம்மாவும் தெரசாவும் வந்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது தெரசா தாயம்மாவிடம் ஐஸ்க்ரீம்(Ice Cream) கேட்கிறாள். தாயம்மாவும் நான் வாங்கி தரேன் என்று சொல்லி அழைத்துச் செல்கிறார். மணி தாயம்மாவை பார்த்து விடுகிறார். தாயம்மாவை பார்த்து எங்க போறீங்க என்று கையசைத்து கேட்கிறார். உடனே தாயம்மா அது வந்து தெரசாவுக்கு உடம்பு சரியில்ல அதான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறேன் என்கிறார். உடனே மணி, தாயம்மா கையிலிருக்கும் பையை பார்க்கிறார். உடனே தாயம்மா, பையை மறைத்து, சரி நான் வரேன் பா என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். உடனே மணி, சரி என்று சொல்லிவிட்டு அந்தப் பையை பார்த்துக்கொண்டே கிளம்புகிறார்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 15:

தாயம்மா தெரசாவை கூட்டிட்டு வேகமாக ஒரு பஸ்ஸில் ஏறி சென்ட்ரல் பஸ் ஸ்டாப்பில்(Central Bus Stop) இறங்கி உள்ளே நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்போது தாயம்மா ஒரு அம்மா மேல் மோதுகிறார், திரும்பிப் பார்த்தால் அங்கு சிவகாமியும் முத்தையாவும் நிற்கிறார்கள், அதை பார்த்த தாயம்மா மிகவும் பயந்து போய் அவர்களை பார்க்கிறார். சிவகாமியும் முத்தையாவும் தாயம்மாவை முறைத்து பார்க்கிறார்கள். தாயம்மா பயந்து கீழே குனிந்து கொண்டு இருக்கிறார். அப்போது ஒரு அம்மா குரல் கேட்கிறது, நிமிர்ந்து பார்த்தால் சிவகாமியும் முத்தையாவும் இல்லாமல் வேறு இருவர் நிற்கிறார்கள்.

தாயம்மா சிவகாமியும் முத்தையாவும் எங்கே என்று தேடுகிறார், அவர்களை காணவில்லை, அதாவது தாயம்மா மோதுயது வேறு இருவர், தாயம்மா கண்ணுக்கு அவர்கள் சிவகாமியும் முத்தையாவும் மாதிரி தெரிந்திருக்கிறது, அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார். தெரியாமல் இடிச்சுட்டேன், மன்னிச்சுக்கோங்க என்கிறார். அவர்களும் சரி மா பார்த்து போங்க என்று சொல்லி விட்டுக் கிளம்புகிறார்கள்.

காட்சி(Scenario) 16:

தாயம்மா தெரசாவை கூட்டிட்டு கிளம்புகிறார். உடனே தெரசா, நம்ப எங்கே தாயம்மா போறோம் என்கிறாள். உடனே தாயம்மா, நம்ம ஊருக்கு போறோம் என்கிறார். உடனே தெரசா, எந்த ஊருக்கு என்கிறாள். உடனே தாயம்மா, தெரியல மா, எந்த பஸ் கிடைக்குதோ அந்த பஸ்-ல ஏறி உட்கார்ந்துக்க வேண்டியது தான், அது எங்கு போய் சேருதோ அதான் நம்ம ஊரு வா என்று சொல்லி அழைத்துச் செல்கிறார்.

தாயம்மாவும் தெரசாவும் ஒரு Chair-ல் போய் உட்காருகிறார்கள். அப்போது தெரசா, தாயம்மா நம்ம போற ஊருல எனக்கு பிரெண்ட்ஸ்(Friends) எல்லாம் இருப்பாங்களா?? என்கிறாள். உடனே தாயம்மா, கண்டிப்பா இருப்பாங்க மா என்கிறார். உடனே தெரசா, கோகிலா அக்கா ஏன் நம்ம கூட வரவில்லை என்கிறாள். உடனே தாயம்மா, அவ பின்னாடி வருவா என்கிறார். உடனே தெரசா, கோகிலா அக்கா வருவாங்களா….. சூப்பர் சூப்பர் என்று சொல்லி கையை தட்டி சிரிக்கிறாள்.

காட்சி(Scenario) 17:

அப்போது தாயம்மா திடீரென பிளாஷ்பேக்கை(Flash Back Scene-அ) நினைத்து அழுது கொண்டு இருக்கிறார். ரொம்ப தெரசா, தாயம்மா…. தாயம்மா…. ரொம்ப பசிக்குது தாயம்மா என்கிறாள். ரொம்ப தாயம்மா, நான் போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன், நீ எங்கேயும் போகக்கூடாது இங்கேயே இருக்கணும் என்கிறார். உடனே தெரசாவும் சரி தாயம்மா நான் எங்கேயும் போகமாட்டேன் என்று சொல்கிறாள். உடனே தாயம்மா, எழுந்து போய் தெரசாவுக்கு சாப்பிட ஏதாவது வாங்கலாம் என்று சொல்கிறார்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 18:

இசை காய்களை கட்(Cut) செய்து கொண்டு இருக்கிறாள். முத்தையா வீட்டை சுற்றி பார்த்துவிட்டு, மேற்கு வாசல், வடக்கு பார்த்த சாமி ரூம்(Room), பெரிய Bed Room, காற்றோட்டமான ஹால்(Hall), ரொம்ப வாஸ்து பார்த்து தான் உன் புருஷன் இந்த வீட்டை வாங்கியிருப்பான் போல என்கிறார். அதற்கு இசை, அவருக்கு வாஸ்துல எல்லாம் நம்பிக்கை இல்லை மாமா, ஹால்(Hall) இங்க இருந்தா தான் அப்பாவுக்கு பிடிக்கும், பூஜை ரூம் இப்படி தான் இருக்கனும் அப்ப தான் அம்மாக்கு பிடிக்கும் அப்படின்னு எல்லாத்தையும் பார்த்து பார்த்து தான் இந்த வீட்டை வாங்கினார்,          Room-க்கு என்ன பெயிண்ட் பண்ணனுங்குறதுல இருந்து பாத்ரூமுக்கு என்ன டைல்ஸ் போடணுங்குறது வரைக்கும் பார்த்து பார்த்து பண்ணுனாரு, இதெல்லாம் நீங்க எப்போதுமே அவர் கூட இருக்கனுங்குற ஆசைல தான் மாமா, நீங்க எப்போதுமே எங்க கூடவே இருக்கீங்களா மாமா என்கிறாள்.

மேலும் படிக்கநல்லது செய்வதால் வரும் அவமானங்கள்

காட்சி(Scenario) 19:

அதற்கு முத்தையா, இருக்கிற பரம்பரை சொத்தே நாலு தலைமுறைக்கு இருக்கு, அப்படி இருக்கும் போது என் புள்ள அவனோட தனி உழைப்பில் ஒரு புது வீடு வாங்கி இருக்கானு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு, விஜய் என் பிள்ளை-னு சொல்லிக்கிறதுல எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு, என்ன தேவிக்கு ஒரு நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணிட்டோனா அப்புறம் எங்க இரண்டு பேருக்கும் என்ன வேலை, நாங்க ரெண்டு பேரும் இங்கேயே வந்து தங்கி விடுகிறோம் என்கிறார். அதற்கு இசை, அதைப் பத்தி எல்லாம் நீங்க கவலையே படாதீங்க மாமா, அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம், அவளுக்கு ஏத்த மாதிரி நல்ல பையனா பாத்து நாங்க கல்யாணம் பண்ணி வைக்கிறோம் என்கிறாள். அதற்கு முத்தையா, ரொம்ப சந்தோஷம் இசை என்கிறார். உடனே இசை, சரி மாமா இருங்க நான் வரேன் என்று சொல்லி எழுந்து போய் சமையல் வேலையை பார்க்கிறாள்.

காட்சி(Scenario) 20:

உடனே முத்தையா, சரி என்று சொல்லி கேரட் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். அப்போது அவருக்கு ஒரு போன் வருகிறது, அந்த Call-ல பார்த்ததும் முத்தையா மிகவும் பதற்றமாக இசையை பார்க்கிறார். பின்பு போனை எடுத்துக் கொண்டு வெளியே போகிறார். இசை சமையல் வேலையை முடித்துவிட்டு விஜய்க்கு Tiffen-ல் சாப்பாடு கட்டிக் கூடையில் வைத்து எடுத்து வருகிறாள், இங்கே வந்து பார்த்தால் முத்தையாவை காணவில்லை. உடனே இசை முத்தையாவை எல்லா இடத்திலும் தேடி பார்க்கிறாள், ஆனால் முத்தையா எங்கு போனார் என்றே தெரியவில்லை, உடனே இசை சுந்தரரை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு(Hospital) கிளம்புகிறாள்.

காட்சி(Scenario) 21:

ஹாஸ்பிட்டலில்(Hospital) விஜய் தூங்கி கொண்டு இருக்கிறார். சிவகாமி உட்கார்ந்து ஏதோ புக்(Book) படித்துக் கொண்டு இருக்கிறாள். அப்போது சிவகாமிக்கு முத்தையாவிடம் இருந்து போன்(Phone) வருகிறது. சிவகாமி போனை எடுத்து சொல்லுங்க என்கிறாள். உடனே முத்தையா, பக்கத்தில் யாராவது இருக்காங்களா!!! என்கிறார். உடனே சிவகாமி, எழுந்து வெளியே போகிறாள். பிறகு முத்தையாவும் சிவகாமியும் ஏதோ பேசுறாங்க, ஆனால் என்னன்னு தெரியல, Because அவங்க பேசுறத Mute பண்ணிட்டாங்க, இதுல இருந்து என்ன தெரியுது!!!!! அவங்க ரெண்டு பேரும் பேசுறதுல ஏதோ ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது, அது மட்டும் நல்லா தெரியுது, அப்படி என்ன முக்கியமான விஷயம்-னு போக போகத் தான் தெரியும், ஆனால் இரண்டு பேரும் ரொம்ப சந்தோஷப்படுறாங்க, கடைசியாக முத்தையா, நீயும் அங்க வந்துடு, நானும் வந்துவிடுகிறேன் என்று சொல்லி போனை வைக்கிறார். அப்புறம் அந்த இடத்தை விட்டு சிவகாமி கிளம்பி போறாங்க.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published.