ADVERTISEMENT

பழிவாங்கும் எண்ணத்தின் உச்சகட்டம்

தாயம்மா, விஜய், சுந்தர் மூன்று பேரும் காரில் போய்க் கொண்டு இருக்கிறார்கள். அப்போது விஜய் கிரகப்பிரவேசத்தில் தாயம்மா பாடிய பாட்டை பற்றி சொல்லிக் கொண்டு வருகிறார். அந்த பாட்டை கேட்கும் போது மனசு ஏதோ பண்ணுச்சு, அதையும் தாண்டி ஏதோ ஒரு உணர்வு எப்படி சொல்றதுன்னு தெரியல தாயம்மா என்கிறார். அதற்கு தாயம்மா, அது ஒண்ணுமில்ல தம்பி, அந்தப் பாட்டோட ராகம் அப்படி, அதனால அப்படி தான் இருக்கும், எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கும் என்கிறார். அதற்கு விஜய், இல்ல தாயம்மா அதையும் தாண்டி ஏதோ ஒரு உணர்வு, எப்படி சொல்றதுன்னு தெரியல, அந்த பாட்டு கேட்கும் போது மனசுக்குள்ள ஏதோ ஒரு இனம் புரியாத இருட்டு வந்த மாதிரி இருந்தது என்கிறார்.

காட்சி(Scenario) 1:

அதற்கு தாயம்மா, என்ன சொல்றீங்க தம்பி ஒன்னும் புரியல என்கிறார். அதற்கு விஜய், இல்லை ஒன்னுமில்லை தாயம்மா, கோவிலுக்கு ஸ்ட்ரைட்டா(Straight) போகணுமா என்று கேட்கிறார். அதற்கு தாயம்மா, இல்லை இடது கைப் பக்கம் திரும்பனும் அதோ தெரியுது பாருங்க அதான் தம்பி கோவில் என்கிறார். விஜயும் கரெக்டா(Correct) கோவிலுக்கு வெளியில் வந்த காரை நிறுத்திவிட்டு இந்த கோவில் தானா?? அடேங்கப்பா இவ்வளவு பெரியதாக இருக்கிறது என்கிறார். பின்பு தாயம்மா, விஜய்,சுந்தர் மூன்று பேரும் காரை விட்டு இறங்குகிறார்கள். தாயம்மா கையில் இசை கொடுத்துவிட்ட சாம்பல் இருக்கிறது. சுந்தர் அந்த சாம்பலை பார்த்து என்ன இது என்கிறான். அதற்கு விஜய், இரு(Wait) சொல்கிறேன் என்கிறார்.

காட்சி(Scenario) 2:

உடனே தாயம்மா, தம்பி உள்ள குருக்கள் இருப்பாரு அவர்கிட்ட கேட்டீங்கனா இந்த சாம்பலை எங்க கொட்டுறதுனு சொல்லுவாரு என்கிறார். அதற்கு விஜய், சாம்பல கொட்டனும் அளவு தானே, அதுக்கு எதுக்கு நான் வரனும் நீங்களே போயிட்டு வந்திருங்க தாயம்மா என்கிறார். அதற்கு தாயம்மா, இல்ல தம்பி இசை அம்மா உங்களை தானே கொட்ட சொன்னாங்க, நான் சும்மா உங்களுக்கு வழிகாட்ட தானே வந்தேன் என்கிறார்.

அதற்கு விஜய், ஆள விடுங்க எனக்கு இந்த சாமி, சம்பிரதாயம் இதுல எல்லாம் சுத்தமாக நம்பிக்கை இல்லை, இசைக்கு வீட்டில் வேலை இருக்குன்னு சொன்னதுனாலதான் நான் வந்தேன், நீங்க என்ன பண்றீங்கனா!! இந்த சாம்பலை நீங்களே எடுத்துட்டு போய் அத என்ன பண்ணணுமோ அதை நீங்களே பண்ணிடுங்க ப்ளீஸ்(Please) இந்த கோயிலுக்கு வரது எல்லாம் எனக்கு சுத்தமாக செட்டாகாது, அப்புறம் ஒரு நிமிடம் என்று சொல்லி விஜய் Purse-லிருந்து 100 ரூபாய் எடுத்து தாயம்மாவிடம் கொடுத்து இதை உண்டியலில் போட்டுருங்க, அப்புறம் என்ன தப்பா நினைச்சுக்காதீங்க, எனக்கு சின்ன வயசுல இருந்தே கோயில் சாமி இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை, அதுக்கு காரணம் இருக்கு, அது எல்லாத்தையும் நான் மறக்கனும்-னு நினைக்கிறேன் என்கிறார். அதற்கு தாயம்மா, சரி என்று சொல்லிவிட்டு கோவில் உள்ளே செல்கிறார்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 3:

வாலி விஜயை Follow செய்து கொண்டு அவன் இருக்கும் இடத்திற்கு வந்து ஒரு ஓரமாக நின்று கொண்டு விஜய் என்ன செய்கிறான் என்று கவனித்துக் கொண்டிருக்கிறான். தாயம்மா கோவில் உள்ளே சென்று புரோகிதரிடம் சாம்பலை காட்டி, சாமி இது பூஜையில் வைத்த சாம்பல் இத எங்க கொட்டணும் என்கிறார். அதற்கு புரோகிதர் அங்க கொட்டணும் என்று சொல்லி ஒரு இடத்தை காட்டுகிறார். தாயம்மா அந்த சாம்பலை அங்க கொட்ட போகிறார்.

காட்சி(Scenario) 4:

வாலி விஜயை என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறான். அப்போது திடீரென சூட்கேஸில்(Suitcase) இருந்து 2 லட்சம் பணத்தை எடுத்து கார் டிரைவரிடம் கொடுக்கிறான். அந்தக் கார் டிரைவர் பெயர் சேகர். உடனே சேகர், 2 லட்சம் எனக்கு எதுக்கு சார் என்று கேட்கிறான். அதற்கு வாலி, நீ பண்ண போற காரியத்துக்கு என்கிறான். அதற்கு சேகர், நான் என்ன சார் பண்ணப் போறேன் என்கிறான். உடனே வாலி, முதல இந்த பணத்தை வாங்கிக்கோ என்கிறான். உடனே சேகரும் அந்த பணத்தை வாங்கிக் கொள்கிறான். உடனே வாலி, அதோ அங்கு நிக்கிறான் பாரு, அவனை நல்லா பாத்துக்க சேகர் என்கிறான். உடனே சேகர் விஜயையும் சுந்தரரையும் பார்க்கிறான்.

காட்சி(Scenario) 5:

அப்போது சுந்தர் விஜயிடம் டாடி(Daddy) நம்ம வீட்டுக்கு யாரு வராங்க என்று கேட்கிறான். அதற்கு விஜய், தாத்தா பாட்டி வரப்போறாங்க என்கிறார். அதற்கு சுந்தர் டாடி(Daddy) அவங்க எனக்கு நிறைய சாக்லேட்(Chocolate) வாங்கிட்டு வருவாங்கனு மம்மி(Mummy) சொன்னாங்க, நான் உங்களுக்கு தர மாட்டேனே என்று மிகவும் அழகாக கூறுகிறான். அதற்கு விஜய், ம்ம்ம் அப்படியா??? என்கிறார். உடனே சுந்தர் கோவிலில் இருக்கும் ஒரு யானை சிலையை காட்டி Daddy வாங்க அங்க போகலாம் என்கிறான். விஜயும் சுந்தரரை அங்கு அழைத்துச் செல்கிறார். அந்த யானை சிலையை பிடித்து சுந்தர் விளையாடிக் கொண்டிருக்கிறான். இதை வாலியின் கார் டிரைவர் சேகர் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.

காட்சி(Scenario) 6:

உடனே வாலி, இவன தூக்கணும், இந்த காரில் அடித்து தூக்கணும், அவன் உயிரோட இருக்கக் கூடாது, அவன் உயிர் இந்த கோவில் வாசலில் தான் போகணும்-னு இருக்கு, நீ அடிச்சு தூக்கு டா, இங்க பாரு நீ எதுக்கும் பயப்படாதே, இந்தக் கார் அந்த ஈஸ்வரமூர்த்தி பேர்-ல தான் இருக்கு, உனக்கு எந்த பிரச்சனையும் வராது, அப்படியே உனக்கு ஏதாவது ஒன்னுன்னா நான் விடுவேனா நான் காப்பாற்றுவேன் டா, எனக்காக நீ இத பண்ணுவேன்னு தெரியும், நீ எதையும் யோசிக்காதே நான் இருக்கேன், உள்ளே போன பொம்பள வெளியே வரதுக்கு முன்னாடி காரியத்தை முடிக்கனும். அவன் கத்துற சத்தம் என் காதுல அப்படியே கேட்கணும் டா, அதை கேட்டு சந்தோஷபடனும், அவன் இப்பவே இங்கேயே பிணமாக போகனும் புரியுதா என்கிறான். உடனே சேகர், புரியுது சார்(Sir) பண்ணி விடுகிறேன் என்கிறான்.

காட்சி(Scenario) 7:

உடனே வாலி, காரை விட்டு கீழே இறங்கி விடுகிறான், கொஞ்ச தூரம் போய் ஒரு மாதத்தின் பின் மறைந்து நின்று கொண்டு சேகருக்கு கால்(Call) செய்து சேகர் ரெடியா என்கிறான். உடனே சேகர், நான் ரெடி(Ready) சார் என்கிறான். உடனே வாலி, அவன அடிச்ச அடுத்த நிமிடமே பறக்கனும் டா, மாட்டினால் பெரிய பிரச்சனையாகிவிடும் சரியா என்கிறான். அதற்கு சேகர், அதெல்லாம் மாட்ட மாட்டேன் Sir என்கிறான். உடனே வாலி, எதிரிலே யாரும் இல்லல என்கிறான். அதற்கு சேகர், எதிரில் யாரும் இல்லை சார், நம்ம கிட்ட சாகுறதுக்குனே நடு ரோட்டுல நின்னு பேசிட்டு இருகிறான். உடனே வாலி, சரி சேகர் விட்டுறாத அவன விடவே விடாதே என்கிறான். உடனே சேகர், சரி சார் என்று சொல்லிட்டு காரை ஸ்டார்ட்(Start) செய்கிறான், வேகமாக விஜயை நோக்கி வருகிறான்,

ADVERTISEMENT

காட்சி(Scenario) 8:

அப்போது தாயம்மா கோவிலின் உள்ளே இருந்து வெளியே வருகிறார். கார் ஒன்று விஜயை நோக்கி வேகமாக வருவதை கவனிக்கிறார். உடனே விஜயை பின்புறமாக இழுத்து விடுகிறார், விஜய் வேகமாக கோவிலின் படிக்கட்டில் போய் விழுந்து நெற்றியில் நன்கு அடிபட்டு ரத்தம் வருகிறது. தாயம்மா மிகவும் பயந்து அழுகிறார். தம்பி எழுந்திரு!!! தம்பி எழுந்திரு!!! என்று கூறுகிறார். ஆனால் விஜய் மயக்கமாக இருக்கிறார். உடனே தாயம்மா, யாராவது ஹாஸ்பிட்டலுக்கு(Hospital) போன் பண்ணுங்க, தண்ணியாவது கொண்டு வாங்க, ஆம்புலன்சுக்கு(Ambulance) சொல்லுங்க என்று அழுது கொண்டே சொல்கிறார்.

மேலும் படிக்கநல்லது செய்வதால் வரும் அவமானங்கள்

காட்சி(Scenario) 9:

வீட்டில் இசை கத்தியில் காய் கட்(Cut) செய்து கொண்டு இருக்கிறாள். அப்போது தெரியாமல் கையை கட்(Cut) செய்து கொள்கிறாள். கையை தண்ணீரில் காட்டுகிறாள், ஆனால் ரத்தம் வருவது நிற்கவே இல்லை, உடனே மஞ்சளை எடுத்து போடலாம் என்று நினைத்து மஞ்சளை எடுக்கிறாள், ஆனால் மஞ்சள் கை தவறி கீழே கொட்டி விடுகிறது. உடனே இசை மிகவும் பயந்து விடுகிறாள், எல்லாம் தப்பு தப்பா நடக்கிறது என்று யோசித்து கொண்டு இருக்கிறாள். வெள்ளிக்கிழமை அதுவுமா மஞ்சள் கீழே கொட்டிடுச்சு என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறாள். அப்போது திடீரென Unknown நம்பரிலிருந்து போன்(Phone) வருகிறது. இசை போனை அட்டெண்ட் செய்து பேசுகிறாள். இசை மிகவும் பதட்டமாக பேசுகிறாள். இசையின் முகம் அப்படியே மாறுகிறது, இசை அழுதுகொண்டே என்ன சொல்றீங்க??? ஆக்சிடென்ட்-அ(Accident) எப்படி என்கிறாள், விஜய்க்கு ஆக்சிடென்ட்(Accident) என்ற செய்தியை கேட்டதுமே இசை அப்படியே போனைக் கீழே போட்டு விட்டு மயங்கி விழுந்து விடுகிறாள்.

காட்சி(Scenario) 10:

விஜயை ஆம்புலன்சில்(Ambulance) ஏத்திட்டு ஹாஸ்பிடலுக்கு(Hospital) கொண்டு போயிட்டு இருக்காங்க. தாயம்மாவும் சுந்தரும் ஆம்புலன்சில் விஜய் கூடவே போறாங்க, சுந்தர் அழுது கொண்டே இருக்கிறான், தாயம்மாவும் அழுது கொண்டே சுந்தரருக்கு ஆறுதல் கூறுகிறார். அப்போது அங்கிருந்த சிஸ்டர்(Sister) தாயம்மாவிடம் இந்த போன் கீழே கடந்தது, அதுல இருக்கிற Last நம்பருக்கு கால் பண்ணி பேசினேன், அவங்க Wife பேசினாங்க, நான் Inform பண்ணிட்டேன், அவங்க வந்துடுவாங்க நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க என்கிறாள். உடனே தாயம்மா, தம்பிக்கு ஒன்னும் ஆகாதுல்ல என்கிறார். அதற்கு சிஸ்டர், ஹாஸ்பிடல் போனதும் டாக்டர் செக்(Check) பண்ணிட்டு சொல்லுவாரு என்கிறாள். தாயம்மா மைண்ட் வாய்ஸ்(Mind Voice)தம்பியும் கோயிலின் உள்ளே வந்து இருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்காது, இசை அம்மா கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறார். விஜயை பார்த்து பார்த்து தாயம்மா அழுது கொண்டே இருக்கிறார், சிறிது நேரத்தில் ஹாஸ்பிடலுக்கு வந்து விடுகிறார்கள்.

காட்சி(Scenario) 11:

ஹாஸ்பிட்டல் உள்ளே போனதும் டாக்டர் வருகிறார். என்ன ஆச்சு என்று Sister கிட்ட கேட்கிறார். உடனே சிஸ்டர், தலையில அடிபட்டுருக்கு டாக்டர் என்கிறாள். உடனே தாயம்மா, கோவில் வாசலில் உள்ள படிக்கட்டில் மோதி கீழே விழுந்துவிட்டார் என்கிறார். உடனே டாக்டர், ஓகே ஓகே புரியுது, சரி நான் Check பண்றேன் என்று சொல்லி கையை பிடித்து பல்ஸ் Check பண்றாங்க, அப்புறம் நான் ஸ்டாப்பா(Non-Stop) Bleeding ஆயிட்டு இருக்கு, அதனால் Immediate-அ எமர்ஜென்சிக்கு(Emergency) கூட்டிட்டு போங்க அப்புறம் Blood Sample எடுத்துவிட்டு Blood Bank-க்கு Inform பண்ணிடுங்க என்கிறார். டாக்டர் தாயம்மாவை பார்த்து நீங்க Patient-க்கு அம்மாவா!!! சிஸ்டர் Patient ஓட அம்மாகிட்ட Details, Sign எல்லாம் வாங்கிட்டு Immediate-அ Admission போட்டுருங்க என்கிறார். பின்பு Ward boy ஒருவர் Form Fill up பண்ணனும் வாங்க என்று சொல்லி தாயம்மாவை அழைத்து செல்கிறார். ரிசப்சனில்(Reception) ரிஜிஸ்டர்(Register) செய்ய Details கேக்குறாங்க, தாயம்மா Details எல்லாம் சொல்லிட்டு Sign போடுறாங்க.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 12:

பின்பு தாயம்மாவும் சுந்தரும் விஜயை போய் பார்க்கிறார்கள். அப்போது சுந்தர் அழுது கொண்டே பாட்டி அப்பாவுக்கு என்ன ஆச்சு, ஏன் ஊசி போடுறாங்க, அப்பாவுக்கு ஒன்னும் ஆகாதுல்ல என்று சொல்லி அழுகிறான். உடனே தாயம்மா, அதெல்லாம் ஒன்னும் ஆகாது கண்ணா என்கிறார். உடனே சுந்தர், எப்போது வீட்டுக்கு போவோம் என்கிறான். அதற்கு தாயம்மா, சீக்கிரம் வீட்டுக்கு போய் விடுவோம் அப்பாவுக்கு சரியானதும் எல்லாம் ஒன்னா சேர்ந்து வீட்டுக்குப் போய்விடலாம் என்கிறார். உடனே சுந்தர், அம்மா எப்போ வருவாங்க என்கிறான். அதற்கு தாயம்மா, உனக்கு பசிக்குதா?? நான் வேணா போய் உனக்கு பால் வாங்கிட்டு வரேன் குடிக்கிறியா?? என்கிறார். அதற்கு சுந்தர், எனக்கு என் அம்மா தான் வேணும் அம்மாவ வர சொல்லுங்க நான் வீட்டுக்கு போகணும் என்கிறான். அதற்கு தாயம்மா எந்த பதிலும் சொல்லாமல் சுந்தரை கட்டிப் பிடித்து அழுது கொண்டே இருக்கிறார்.

காட்சி(Scenario) 13:

இசை அழுது கொண்டே ஹாஸ்டலுக்கு(Hospital) வருகிறாள். சுந்தரை கட்டிப் பிடித்து அழுகிறாள். சுந்தரும் அழுகிறான், அப்பா கீழே விழுந்து தலையில ரத்தம்……என்று சொல்லி அழுகிறான். இசை அழுதுகொண்டே விஜயை பார்க்கிறாள். உடனே தாயம்மா, பயப்படாதீங்க இசை அம்மா தம்பிக்கு ஒன்னும் ஆகாது என்கிறார். அப்போது ஐசியு-வில் இருந்து சிஸ்டர் ஒருவர் வெளியில் வருகிறார். உடனே இசை, சிஸ்டர் இப்போ எப்படி இருக்கு என்கிறார். உடனே சிஸ்டர், நீங்க யாரு என்கிறார். அதற்கு இசை, நான் தான் அவரோட Wife என்கிறாள். உடனே சிஸ்டர், Patient-க்கு Heavy Injury, Blood ரொம்ப Loss ஆயிருக்கு, டாக்டர் உள்ளே ஸ்டிட்ச்(Stitch) போட்டுட்டு இருக்காங்க, கொஞ்சம் வெயிட்(Wait) பண்ணுங்க என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு கிளம்புகிறாள்.  உடனே இசை, அழுது கொண்டே Sorry விஜய், நான் உங்களை அனுப்பி இருக்கவே கூடாது, என் தப்பு தான், நான் தான் தப்பு பண்ணிட்டேன், என்னால தான் உங்களுக்கு இப்படி ஆயிடுச்சு, என்ன மன்னிச்சிடுங்க விஜய், என்னால தான் உங்களுக்கு இப்படி ஆயிடுச்சு என்று சொல்லி அழுகிறாள். உடனே தாயம்மா, இசை அம்மா உங்க நல்ல மனசுக்கு எதுவும் ஆகாது நீங்க பயப்படாதீங்க இசை அம்மா என்கிறார்.

காட்சி(Scenario) 14:

உடனே இசை, இந்த Accident எப்படி ஆச்சு என்றாள். உடனே தாயம்மா, நான் கோயிலுக்கு உள்ள சாம்பலை கொட்ட போனேன், திரும்பி வந்து பார்க்கும்போது தம்பி போன்(Phone) பேசிட்டு இருந்தாரு, அப்போது ஒரு கார் வேகமா வந்துச்சு என்று கூறுகிறார். உடனே இசை, நீங்க எதுக்கு சாம்பல கொட்ட போனீங்க??? ஹோமம் பண்ணன சாம்பல வீட்டு ஓனர்(Owner) தானே கொட்டனும், அதுக்கு தானே அவர் கிட்ட குடுத்து அனுப்பி இருந்தேன், அதை நீங்க எடுத்துட்டு போய் கொட்டினால் என்ன அர்த்தம், அதுவும் யாருன்னே தெரியாது நீங்க எடுத்துட்டு போய் எப்படி கொட்டலாம், அதனால தான் சாமி குத்தம் ஆகி இருக்கு, அதான் இந்த மாதிரி ஆயிடுச்சு என்கிறாள்.

மேலும் படிக்கபாசம் மற்றும் பணம் இவற்றில் எது வெல்லும்

காட்சி(Scenario) 15:

உடனே சுந்தர், பாட்டி தான் அப்பாவை கீழே தள்ளி விட்டாங்க, அப்பா கீழே விழுந்ததும் தலையில அடி பட்டுருச்சு என்கிறான். உடனே இசை, தாயம்மாவை கோபமாகப் பார்த்து, நீங்க தான் அவரை கீழே தள்ளி விட்டீங்களா?? அன்றைக்கு அப்படி தான் என் அப்பா ஆசையாக வாங்கிக் கொடுத்த Sweet Box-அ கீழே தள்ளி விட்டீங்க, இப்போ உங்களால தான் இவரு படுத்துக் கிடக்காரு, நாங்க என்னங்க உங்களுக்கு தப்பு பண்ணுனோம், ஏன் எங்களை இப்படி படுத்தீட்டு இருக்கீங்க, விஜய்க்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சு, உங்கள நான் சும்மா விடமாட்டேன், யாரு நீங்க, உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம், எதற்காக எங்க வீட்டுக்கு வந்தீங்க, என் முன்னாடி நிக்காதீங்க, தயவுசெய்து இங்கிருந்து போயிடுங்க, என் முகத்திலேயே முழிக்காதீங்க, காது கேட்கலையா உங்களுக்கு, ஏன் இன்னும் இங்கேயே நின்னுட்டு இருக்கீங்க… போங்க என்கிறாள்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 16:

உடனே ஒரு சிஸ்டர் வந்து Emergency Ward-ல நின்னுகிட்டு ஏன் இப்படி சத்தம் போட்டுட்டு இருக்கீங்க, ஏதாவது பேசணும்-னா வெளியில போய் பேசுங்க என்று சொல்லிவிட்டு ICU Room உள்ளே செல்கிறாள். உடனே இசை, தாயம்மாவை பார்த்து முறைக்கிறாள். உடனே தாயம்மா, அப்படி சொல்லாதீங்க இசை அம்மா, தம்பி கண்ண முழிச்சதுக்கப்புறம் நான் ஒரே ஒரு தடவை பார்த்துவிட்டு போயிடுறேன் என்று அழுது கொண்டே கூறுகிறார். இசை எதுவும் சொல்லாமல் கோபமாக போய் உட்கார்ந்து கொள்கிறாள்.

காட்சி(Scenario) 17:

ஐசியூ-வில்(ICU) விஜய்க்கு Treatment நடந்து கொண்டு இருக்கிறது. சிறிது நேரம் கழித்து ஐசியூ-வில்(ICU) இருந்து டாக்டர் வெளியில் வருகிறார். உடனே இசை, என்ன ஆச்சு டாக்டர், அவருக்கு எப்படி இருக்கு என்கிறாள். அதற்கு டாக்டர், நீ யாரு மா என்கிறார். அதற்கு இசை, நான் அவரோட Wife என்கிறாள். அதற்கு டாக்டர், காட் இஸ் கிரேட்(God is Great) மா, பெருசா எதுவும் Problem இல்லை, தலையில மட்டும் தான் சின்ன காயம், ஸ்டிச்சிங்(Stitching) போட்டு இருக்கோம், இன்னும் மயக்கத்தில் தான் இருக்காரு, மயக்கம் தெளிந்ததும் போய் பாருங்க பயப்படாதீங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். உடனே தாயம்மா டாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு கடவுளிடம் நன்றி என்று சொல்லி அழுது கொண்டு இருக்கிறார், அதை பார்த்த இசை தாயம்மாவை மிகவும் கோபமாக பார்த்து முறைத்துக் கொண்டே இருக்கிறாள்.

Leave a Reply

Your email address will not be published.