ADVERTISEMENT

பாசம் மற்றும் பணம் இவற்றில் எது வெல்லும்

சிவகாமிக்கு முத்தையாவிடம் இருந்து போன்(Phone) வருகிறது. சிவகாமி போனை எடுத்து சொல்லுங்க என்கிறாள். உடனே முத்தையா, பக்கத்தில் யாராவது இருக்காங்களா!!! என்கிறார். அதற்கு சிவகாமி, விஜய் தூங்கிட்டு தான் இருக்கான் என்ன விஷயம் சொல்லுங்க என்கிறாள். உடனே முத்தையா, நல்லதா போச்சு….. நம்ம சொன்ன மாதிரி Broker Documents ரெடி பண்ணிட்டானாம், இப்ப தான் போன் பண்ணி சொன்னான் என்கிறார். அதற்கு சிவகாமி, அப்படியா!!!! ஒரு நிமிஷம் இருங்க என்று சொல்லி சிவகாமி எழுந்து வெளியே போகிறாள். வெளியில் சென்று ஓரிடத்தில் நின்று கொண்டு இப்ப சொல்லுங்க என்ன சொன்னீங்க என்கிறாள். உடனே முத்தையா, ஒரு விஷயத்தை உனக்கு பத்து தடவ சொல்லணும், நம்ப சொன்ன மாதிரியே அந்த புரோக்கர்(Broker) டாக்குமெண்ட்(Documents) ரெடி(Ready) பண்ணிட்டானாம், இப்ப தான் போன் பண்ணி என்கிட்ட சொன்னான் என்கிறார். அதற்கு சிவகாமி அப்படியா!!!! ரொம்ப சந்தோஷங்க என்கிறாள்.

காட்சி(Scenario) 1:

அதற்கு முத்தையா, ம்ம்ம் அத வந்து வாங்கிக்க சொல்லி ஒரு அட்ரஸ்(Address) அனுப்பியிருக்கான், அதை வாங்கத் தான் நான் போயிட்டு இருக்கேன், நான் போயிட்டு வந்துர்றேன் என்கிறார். அதற்கு சிவகாமி, ஏங்க ஏங்க நீங்க மட்டும் தனியாவா போறீங்க?? நான் வரட்டுமா என்கிறாள். அதற்கு முத்தையா, வேண்டாம் மா நீயும் வந்துட்டா விஜய் கூட யாரு மா இருப்பாங்க என்கிறார். அதற்கு சிவகாமி, இன்னும் கொஞ்ச நேரத்துல இசை வந்துருவாங்க என்கிறாள். அதற்கு முத்தையா, ஆமா மா அவளும் சாப்பாடு ரெடி பண்ணிட்டு இருக்கா என்கிறார். அதற்கு சிவகாமி, அப்புறம் என்னங்க கிளம்பி வந்துர்றேன் என்கிறாள். அதற்கு முத்தையா, அப்படியா!!!! சரி நான் ஒரு அட்ரஸ்(Address) அனுப்புறேன், நீ ஒரு ஆட்டோ(Auto) பிடித்து அங்க வந்துரு, நானும் அங்க வந்துர்றேன் என்கிறார். உடனே சிவகாமி, சரிங்க நான் வந்துர்றேன் என்று சொல்லி போனை கட்(Cut) செய்கிறாள்.

காட்சி(Scenario) 2:

சிவகாமிக்கு ஒரே சந்தோஷம், எப்படியோ டாகுமெண்ட்ஸ்(Documents) ரெடி பண்ணியாச்சு, அதில் விஜய் கிட்ட கையெழுத்து வாங்கி ரிஜிஸ்டர்(Register) மட்டும் பண்ணிட்டோம்-னா நம்ம இத்தனை வருஷ தவ வாழ்க்கைக்கு பலன் கிடைச்ச மாதிரி தான் என்று சொல்லி மிகவும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே விஜயை வந்து பார்க்கிறாள், விஜய் தூங்கிக் கொண்டு இருக்கவும் திரும்பி போகிறாள். அப்போது விஜய் கண் விழித்து அம்மா எங்க போற என்கிறான். அதற்கு சிவகாமி, அது ஒன்னும் இல்ல பா டாக்டர் வந்து மருந்து எழுதிக் கொடுத்தார் கீழே Pharmacy போய் வாங்கிட்டு வந்துடுறேன் என்கிறாள். உடனே விஜய், என்ன!!!! டாக்டர் வந்தாரா??? என்கிறான். அதற்கு சிவகாமி, ஆமா விஜய், நீ தூங்கிட்டு இருக்கும் போது டாக்டர் வந்தாரு என்கிறாள். உடனே விஜய், சரி நீங்க போயிட்டு வாங்க…. அப்புறம் இசையும் அப்பாவும் எப்போ வருவாங்க என்கிறான். அதற்கு சிவகாமி, இப்போ வந்துருவாங்க பா ஏன் கேக்குற என்கிறாள். உடனே விஜய், ஒன்னும் இல்ல, நீங்க போயிட்டு வாங்க என்கிறான். உடனே சிவகாமி, சரி என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு கிளம்புகிறாள்.

காட்சி(Scenario) 3:

தாயம்மா தெரசாவை ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டு அவளுக்காக Snacks வாங்க செல்கிறார். அப்போது தெரசா விளையாடிக்கொண்டு இருப்பதை ஒருவன் தப்பான கண்ணோட்டத்தில் பார்த்து கொண்டு இருக்கிறான். அந்த சமயத்தில் தாயம்மா வந்துவிடுகிறார். தாயம்மா அவனைப் பார்த்து முறைக்கிறார், உடனே அவன் அந்த இடத்தை விட்டுப் போய் விடுகிறான். தெரசா தாயம்மா வாங்கி வந்த Snacks-ஐ சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாள். அந்த சமயத்தில் அந்தப் பக்கம் ஒரு கண்டக்டர்(Conductor) போகிறார். உடனே தாயம்மா, அவரிடம் போய் ஆந்திரா போற பஸ் எப்போ வரும் என்று விசாரிக்கிறார். அதற்கு அவர், இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்கிறார். உடனே தாயம்மா, சரி ஐயா ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு தாயம்மாவும் தெரசாவும் பஸ் ஸ்டாண்டில்(Bus Stand) வெயிட்(Wait) பண்ணிட்டு இருக்காங்க.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 4:

முத்தையாவும் சிவகாமியும் அந்த புரோக்கர்(Broker) சொன்ன அட்ரஸ் இல்(Address) வெயிட்(Wait) பண்ணிட்டு இருக்காங்க, ஆனால் அந்த புரோக்கர்(Broker) இன்னும் வரவில்லை, உடனே சிவகாமி, என்னங்க எப்போ தான் வருவாரு, எவ்வளவு நேரம் வெயிட் பண்றது என்று சொல்லி அந்த புரோக்கருக்கு போன்(Phone) செய்யப் போகிறாள். அதற்கு முத்தையா, நீ போன்(Phone) பண்ணாத அவன் ஏதாவது டிராபிக்கில்(Traffic) மாட்டி இருப்பான் வந்து விடுவான் என்கிறார். அந்த சமயத்தில் Correct-டாக Broker வருகிறார். முத்தையாவையும் சிவகாமியையும் பார்த்து வணக்கம் சொல்கிறார். உடனே சிவகாமி, என்ன யா சொன்ன Time-க்கு வர மாட்டியா??? என்கிறாள். உடனே புரோக்கர் கொஞ்சம் லேட்(Late) ஆயிடுச்சு மா என்கிறான்.

காட்சி(Scenario) 5:

உடனே முத்தையா, சரி நாங்க சொன்ன மாதிரி எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டல்ல என்கிறார். உடனே புரோக்கர், பண்ணிட்டங்க நீங்க சொன்ன மாதிரி விஜய் பேரில் இருக்க எல்லா சொத்துக்களையும் உங்க பெயரை போட்டு டாக்குமெண்ட்ஸ்(Documents) ரெடி பண்ணிட்டேன், ரிஜிஸ்டர்(Register) கிட்டயும் பேசி கரெக்ட்(Correct) பண்ணிட்டேன், அவரும் ரிஜிஸ்டர்(Register) பண்ணி தரேன்னு ஒத்துக்கிட்டாரு என்று சொல்லி டாக்குமெண்ட்ஸ்-ஐ (Documents) எடுத்துக் காட்டுகிறார். இந்த டாக்குமெண்ட்ஸ்-ல(Documents) விஜய் மட்டும் ஒரு கையெழுத்துப் போட்டால் போதும் சட்டப்படி சொத்து உங்கள் Control-க்கு வந்துரும், அதுக்கப்புறம் விஜயோட சொத்துக்களை நீங்க விற்கலாம், யாருக்கு வேணாலும் மாற்றி எழுதலாம், உங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது, அவ்வளவு ஏன் விஜய் நினைச்சாலும் உங்கள ஒன்னும் பண்ண முடியாது என்கிறான்.

மேலும் படிக்கஒரு ஏழைத் தாயின் வாழ்க்கைப் பயணம்

காட்சி(Scenario) 6:

அதற்கு சிவகாமி, கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் இத்தனை வருஷமா அனுபவிக்க முடியாமல் இருந்தோம், விஜய்க்கு நடந்த ஆக்சிடென்ட்ல(Accident) அவனுக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தா!!!! இத்தனை சொத்துக்கும் அவன் பொண்டாட்டி வாரிசு ஆயிருப்பா, நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கல, டாக்குமெண்ட்ஸ்(Documents) கொடுத்துட்டல்ல!!! இதுக்கு அப்புறம் நாங்க பார்த்துக்குறோம் என்று சொல்லி டாக்குமெண்டை(Document) மிகவும் சந்தோஷமாக பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.

உடனே Broker, ஆனா இதுல ஒரு சின்ன பிரச்சனை இருக்கு என்கிறான். உடனே முத்தையா, பிரச்சனையா!!! என்ன பிரச்சனை என்கிறார். அதற்கு Broker, ரிஜிஸ்டர்(Register) பண்ணி தரேன்னு சொன்னவரு இன்னும் நான்கு நாள் தான் இங்க இருப்பாரு, அதுக்கப்புறம் அந்த ரிஜிஸ்டர்(Register) வேற ஊருக்கு டிரான்ஸ்பர்(Transfer) ஆகி போகப் போறாரு, புதுசா வரவரு எப்படி இருப்பார் என்று சொல்ல முடியாது, அதனால் எவ்வளவு சீக்கிரம் விஜய்கிட்ட கையெழுத்து வாங்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கையெழுத்து வாங்கி கொடுத்தீங்கன்னா நல்லது என்கிறான்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 7:

அதற்கு சிவகாமி, அதைப்பத்தி நீ கவலைப் படாதே, நான் என்ன சொன்னாலும் எதுக்குன்னு கேள்வி கேட்காம செய்யுற மாதிரி தான் நான் விஜயை வளர்ந்திருக்கிறேன், இந்த பேப்பர(Paper) நீட்டி இந்த இடத்தில் கையெழுத்துப் போடு டா அப்படினா ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்காமல் கையெழுத்து போடுவான் என்கிறாள். உடனே புரோக்கர், அப்ப ரொம்ப நல்லதா போச்சு, நாளைக்கு கையெழுத்து வாங்கிட்டு வந்துட்டீங்கனா இரண்டே நாளில் வேலையை முடிச்சிடலாம், அப்புறம் இன்னொரு விஷயம் அந்த ஆபீஸர்(Officer) கண்ணுல பணத்தை காட்டுனா தான் வேலையே நடக்கும் என்கிறான். உடனே முத்தையா, அதைப் பத்தி நீ ஏன் கவலைப்படுற, இதோ இப்போதைக்கு அட்வான்ஸா(Advance) வச்சுகோ என்று சொல்லி பணத்தை கொடுக்கிறார். அப்புறம் வேலையை மட்டும் ஒழுங்கா முடித்து கொடுக்க சொல்லு, அந்த ஆளு டிரான்ஸ்ஃபர்(Transfer) ஆகுறதுக்குள்ள பெருசா கவனிச்சு அனுப்பிடலாம் என்கிறார்.

காட்சி(Scenario) 8:

உடனே புரோக்கர், ஐயா அப்புறம் இன்னொரு விஷயம் Stamp வாங்கி இதுல அட்டாச்(Attache) பண்ணி இருக்கணும், வர வழியில வாங்கலாம்-னு நினைச்சேன் ஆனால் மறந்துட்டேன் என்கிறான். உடனே முத்தையா, நீ எந்த வேலையையும் உருப்படியாக செய்ய மாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும், அந்த வேலையை நாங்க பார்த்துக்கிறோம் நீ கிளம்பு என்கிறார். உடனே புரோக்கர், சரி என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அப்புறம் முத்தையாவும் சிவகாமியும் காரில் கிளம்புகிறார்கள்.

காட்சி(Scenario) 9:

விஜய் ஹாஸ்பிட்டலில்(Hospital) தூங்கி கொண்டு இருக்கிறார் திடீரென Blood Reverse-அ ஏறுது, உடனே விஜய்க்கு வலி வந்து விடுகிறது, உடனே விஜய் கண் முழித்து டாக்டர்…..அம்மா….. Nurse என்று கத்துகிறார், ஆனால் யாருமே வரவில்லை, அந்த சமயத்தில் இசையும் சுந்தரரும் வருகிறார்கள். விஜய் வலியில் கத்திக் கொண்டு இருப்பதை பார்த்த இசை, என்ன ஆச்சு விஜய் என்று மிகவும் பதற்றமாக கேட்கிறாள்.

உடனே விஜய், Blood Reverse-அ ஏறுது இசை டாக்டர(Doctor) கூப்பிடு என்கிறான். உடனே இசை, டாக்டர்…… டாக்டர்……. என கத்திக்கொண்டே ஓடுகிறாள். பின்பு டாக்டரும்(Doctor) வருகிறார். டாக்டர் இசையை திட்டுகிறார், கொஞ்சம் கேர்ஃபுல்லா(Careful) இருக்க மாட்டீங்களா?? Blood Reverse-அ ஏறினால் என்ன ஆகும் தெரியுமா??? என்று சொல்லி திட்டிக்கொண்டே ட்ரீட்மெண்ட்(Treatment) செய்கிறார், என்ன மேடம் நீங்க இன்ஃபார்ம்(Inform) பண்ண மாட்டீங்களா??? நீங்க அவரு Wife தானே, இத கூட கவனிக்காம எங்க போனீங்க, இன்னும் கொஞ்சம் விட்டிருந்தா Blood Heavy Loss ஆயிருக்கும், அல்ரெடி(Already) தலையில அடிப்பட்டதுல ரொம்ப வீக்கா(Weak) வேற இருக்காரு, நீங்க தானே பக்கத்துல இருந்து கவனமா பாத்துக்கணும், இப்படியா பொறுப்பில்லாமல் இருப்பீங்க!!!! இனிமேலாவது கவனமா இருங்க, Patient கூடவே இருங்க, அதுக்குத்தானே Attender-அ Allow பண்றோம், இத விட வேற என்ன வேலை உங்களுக்கு……. என்று திட்டிவிட்டு கிளம்புகிறார்.

காட்சி(Scenario) 10:

உடனே இசை, என்ன விஜய் இது, அத்தையை விட்டுட்டு தானே போனேன், அவங்க எங்க போனாங்க, டாக்டர் சொன்னதை இப்ப கேட்டீங்கள்ள…… நான் மட்டும் வராமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும், என்னமோ தெரியல விஜய் எல்லாமே தப்பு தப்பா நடக்குது, ஒரு வேளை நம்ம புது வீட்டுக்கு வந்த நேரம் சரி இல்லையோ என்கிறாள். உடனே விஜய், ஐயோ லூசு பொண்டாட்டி…… கோயில் வாசலில் கார் வந்த வேகத்துக்கு என் மேல மோதி இருந்தா என் மண்டை சிதறி இருக்கும் ஆனால் தாயம்மா என்ன கரெக்டான(Correct) நேரத்துல வந்து காப்பாற்றி விட்டார்கள், இப்பவும் பாரு நீ சரியான நேரத்தில் வந்து என்னை காப்பாற்றி விட்டாய், நல்லா யோசிச்சு பாரு ரெண்டு விபத்திலிருந்து நான் தப்பிச்சுட்டேன் அப்படின்னா என்ன அர்த்தம் எனக்கு நல்லது நடக்கும் என்று தானே அர்த்தம், பெரியதாக நடக்க வேண்டியது இப்படி சின்ன விஷயமா போயிடுச்சு, அதான் சொல்லுவாங்களே…. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிடுச்சுன்னு, இங்க பாரு இசை நீயும் Positive-அ யோசிச்சு பாரு, வாழ்க்கையில நம்பிக்கை இருக்கலாம் ஆனால் மூடநம்பிக்கை இருக்கக் கூடாது என்கிறான். உடனே இசை, நீங்கள் சும்மா சமாளிக்க வேண்டாம், அத்தை எங்க போனாங்க எனக்கு அதை இப்ப சொல்லுங்க என்கிறாள்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 11:

உடனே விஜய், ஏய் ஏய் ஏன் இவ்வளவு கோவப்படுற எனக்கு தான் மருந்து வாங்க பார்மசி(Pharmacy) போனாங்க என்கிறான். அதற்கு இசை, எப்போ போனாங்க என்கிறாள். அதற்கு விஜய், கொஞ்சம் நேரம் இருக்கும் என்கிறான். அதற்கு இசை, அதானே வர வழியில தான் பார்மசி(Pharmacy) இருக்கு, நான் பாத்துட்டு தான் வந்தேன், அவங்க அங்க இல்ல, மாமாவும் என்கிட்ட சொல்லாம திடீரென்று கிளம்பி எங்கேயோ போயிட்டாரு, எனக்கு என்னமோ இரண்டு பேரும் சேர்ந்து தான் எங்கேயோ கிளம்பிப் போய் இருக்காங்க என்று தான் தோணுது, போறவங்க சொல்லிட்டாவது போய் இருக்கலாம்-ல விஜய், என்ன பழக்கம் இது, அதுவும் இந்த நிலைமையில உங்கள விட்டுட்டு போறதுக்கு அவங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு, இதெல்லாம் தப்பு விஜய், அவங்க இப்படி பண்ணுவாங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கல என்கிறாள்.

காட்சி(Scenario) 12:

உடனே விஜய், சரி ஏதாவது Emergency-அ கூட இருக்கலாம் அதான் போயிருப்பாங்க என்கிறான். அதற்கு இசை, உங்களுக்கு புரியுதா!!! இல்லையா!!! நீங்க Accident ஆயி படுத்து இருக்கீங்க, உங்கள பக்கத்துல இருந்து பார்த்துக்குறத விட அவங்களுக்கு என்ன பெரிதாக வேலை இருக்கு, எனக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை விஜய் என்கிறாள். உடனே விஜய், உனக்கு இசை-னு யார் பெயர் வச்சாங்க என்கிறான். அதற்கு இசை, இப்போ அதெல்லாம் எதுக்கு என்கிறாள். உடனே விஜய், இல்ல பாடுன பாட்டையே திரும்பத் திரும்ப பாடிட்டு இருக்கியே அதான் கேட்டேன், விடு இசை முடியல, காது வலிக்குது என்கிறான். உடனே இசை, விஜயை சிரித்துக்கொண்டே அடிக்கிறாள். உடனே விஜய், வலிக்குது காப்பாத்துங்க என்று செல்லமாக கத்துகிறான், இரண்டு பேரும் செல்லமாக அடித்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் படிக்கபழிவாங்கும் எண்ணத்தின் உச்சகட்டம்

காட்சி(Scenario) 13:

சிறிது நேரம் கழித்து இசை டாக்டரை பார்க்க போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள். அதற்கு விஜய், ஏன் எதுக்கு டாக்டரை பார்க்கப் போற என்கிறான். உடனே இசை, இல்ல விஜய் எனக்கு இந்த ஹாஸ்பிடல்(Hospital) Atmosphere கொஞ்சம் கூட பிடிக்கல, நம்ம ஹாஸ்பிடல்-ல இருந்தது போதும், நம்ம Discharge ஆகி வீட்டுக்கு போயிடலாம், நானே உங்களை பக்கத்துல இருந்து பார்த்துக்கிறேன் என்கிறாள். உடனே விஜய், ஆமா….. ஆமா…..

உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப்போன

ADVERTISEMENT

மாயம் என்ன பொன் மானே பொன் மானே……..

என்று விஜய் பாடுகிறான். உடனே இசை, விஜய் ஆரம்பிச்சுட்டீங்களா???? இருங்க நான் டாக்டர்கிட்ட போய் பேசிட்டு வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள். விஜய் மைண்ட் வாய்ஸ்(Mind Voice) அப்பா அம்மா இரண்டு பேரும் சொல்லாமல் போய் இருக்காங்க, எங்க போனாங்க என்று யோசித்துக் கொண்டே இருக்கிறான்.

காட்சி(Scenario) 14:

தாயம்மாவும் தெரசாவும் பஸ் ஸ்டாண்டில்(Bus Stand) பஸ்காக வெயிட்(Wait) பண்ணிட்டு இருக்காங்க. தாயம்மா எதையோ யோசித்துக் கொண்டு இருக்கிறார். உடனே தெரசா, தாயம்மா நம்ப எப்ப ஊருக்கு போவோம் என்கிறாள். உடனே தாயம்மா, பஸ் கிளம்பியதும் நம்ப போகலாம் என்கிறார். உடனே தெரசா, பஸ் எப்ப கிளம்பும் என்கிறாள். அதற்கு தாயம்மா, டிரைவர் வந்ததும் கிளம்பும் என்கிறார். உடனே தெரசா, டிரைவர் எப்ப வருவார் என்கிறாள். உடனே தாயம்மா, ஐயோ கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க தெரசா, கொஞ்சம் அமைதியா சாப்பிடு என்கிறார்.

உடனே தெரசா, எனக்கு போர்(Bore) அடிக்குது தாயம்மா, நான் வேணும்-னா இங்கே விளையாடட்டும்மா என்கிறாள். உடனே தாயம்மா, என்ன பண்ற தெரசா சொல்றத கேளு, பேசாம ஒரு இடத்தில் அப்படியே உட்காரு, இங்கெல்லாம் விளையாடக்கூடாது பஸ் எல்லாம் வேகமாக வரும் இடிச்சுட்டு போயிடுவாங்க மா என்கிறார். உடனே தெரசா, அதெல்லாம் முடியாது நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடலாம் என்கிறாள். உடனே தாயம்மா, என் கண்ணுல என் பொண்ணுல அமைதியாக உட்காரு மா, இங்க பாரு தெரசா எல்லாரும் உன்ன தான் பார்த்துட்டு இருக்காங்க என்கிறார். உடனே தெரசா, ஏன் தாயம்மா எல்லாரும் என்ன பாக்குறாங்க என்கிறாள். உடனே தாயம்மா, நம்ம ஊருக்கு போனதும் நானே சொல்றேன் கொஞ்சம் அமைதியா இரு மா என்கிறார்.

காட்சி(Scenario) 15:

முத்தையாவும் சிவகாமியும் காரில் வந்து இறங்குகிறார்கள். உடனே முத்தையா, அவன் இங்க தான் வரேன்னு சொல்லி இருந்தான், ஆனால் ஆள காணோம் என்கிறார். உடனே சிவகாமி, ஏங்க Stamp எல்லாம் வாங்கிட்டீங்களா!!!! என்கிறாள். அதற்கு முத்தையா, எல்லாம் வாங்கிட்டேன் மா, அதை வாங்கும் போது தான் மச்சான் போன் பண்ணி இங்க வர சொன்னான், அப்புறம் சிவகாமி இன்னும் கொஞ்ச நாளில் மொத்த சொத்தும் நம்ம கையில் தான் இருக்கும் என்கிறார்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 16:

அதற்கு சிவகாமி, ஏங்க நான் தெரியாம தான் கேக்குறேன் பவர்(Power) வாங்குவதானால் மட்டும் எல்லா சொத்தும் நம்மளோடதுனு ஆயிடுமா என்கிறாள். உடனே முத்தையா, கிட்டத்தட்ட அப்படித்தான் பவர் ஆஃப் அட்டார்னி(Power of attorney) மட்டும் வாங்கிட்டா எல்லா சொத்தையும் நம்ப அனுபவிக்கலாம், இல்லன்னா நம்ம யாருக்கு வேணாலும் விற்கலாம், ஒரு பைய நம்மள கேள்வி கேட்க முடியாது என்கிறார். அதற்கு சிவகாமி, சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க, இசையோட அப்பா வக்கீல், நாளைக்கு இசை அவங்க அப்பாவை கைக்குள்ள போட்டுகிட்டு இந்த டாக்குமெண்ட்(Document) செல்லாதுனு நம்ம மேல கேஸ் போட்டா என்னங்க பண்றது என்கிறாள். அதற்கு முத்தையா, இசைக்கும் அவங்க அப்பாவுக்கும் விரிசல் விட்டு இவ்வளவு பிரச்சனை போயிட்டு இருக்கு, இதுல விஜய்க்கு வந்து அவர் வாதாட போகிறாரா??? என்ன பேசுற நீ…. இதோ பார் சிவகாமி, உன் மனசை போட்டு குழப்பிக்காத, எல்லாம் நமக்கு சாதகமாக தான் நடக்கும் சரியா என்கிறார். உடனே சிவகாமியும் சிரித்துக் கொண்டே சரி சரி என்கிறாள்.

காட்சி(Scenario) 17:

முத்தையா அவருடைய மச்சானை பார்க்க ஒரு பஸ் ஸ்டாண்டில் வெயிட் பண்ணிட்டு இருக்காரு, அவர் கூட சிவகாமியும் இருக்காங்க, அதே பஸ் ஸ்டாண்டில் அதே பஸ் ஸ்டாண்டில் தான் தாயம்மாவும் தெரசாவும் ஆந்திரா பஸ்ஸுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க, தாயம்மா முத்தையாவையும் சிவகாமியையும் பார்த்து விடுகிறார், அதனால் பயந்து பயந்து மறைந்து மறைந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். தாயம்மா (மைண்ட் வாய்ஸ்(Mind Voice) அடக்கடவுளே இந்தப் பாவிங்க எங்களைத் தேடி இங்கேயும் வந்துட்டாங்களா!!! அவங்க கையில மாட்டினா என்ன கொன்னுட்டு எங்கேயோ இருக்கிற என் மகனையும் கொன்னுடுவாங்க!!!!! இவங்க கையில மட்டும் மாட்டவே கூடாது) தாயம்மாவும் தெரசாவும் அந்த இடத்தை விட்டுக் கிளம்புகிறார்கள்.

காட்சி(Scenario) 18:

தாயம்மாவும் தெரசாவும் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். உடனே தெரசா, நம்ம பஸ்-ல போகலையா தாயம்மா என்கிறாள். உடனே தாயம்மா, நமக்கு வெளியில கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு அப்புறம் போகலாம் என்கிறார். உடனே தெரசா, நான் அந்த பஸ்-ல தான் வருவேன் என்று அடம் பிடிக்கிறாள். உடனே தாயம்மா, நான் சொல்றதை கேளு, அந்த கொலைகாரப் பாவிங்க வேற வந்துட்டு இருக்காங்க என்கிறார். உடனே தெரசா, கொலைகார பாவிங்களா யாரு தாயம்மா என்கிறாள். உடனே தாயம்மா, உனக்கு சொன்னா புரியாது தெரசா, என் கூட வா, நான் உன்ன பஸ்-ல தான் கூட்டிட்டு போகப்போறேன் வா என்கிறார். உடனே தெரசா , பஸ் அங்கே தானே இருக்கு நீ இங்க கூட்டிட்டு போற என்னை ஏமாத்துறியா என்கிறாள்.

மேலும் படிக்கநல்லது செய்வதால் வரும் அவமானங்கள்

காட்சி(Scenario) 19:

திடீரென அந்த பக்கம் முத்தையாவும் சிவகாமியும் எதிரில் நடந்து வந்து கொண்டு இருக்கிறார்கள். தாயம்மா அவர்களைப் பார்த்து தெரசாவை மறுபடியும் வேறு பக்கம் கூட்டிக்கொண்டு போகிறார். அங்கு நிற்கும் ஒரு பஸ்ஸில் தாயம்மாவும் தெரசாவும் ஏறி விடுகிறார்கள். தாயம்மா தெரசாவை அந்த பஸ்ஸில் உட்கார வைத்து விட்டு, தெரசா நீ இங்கே உட்கார்ந்து இரு, அம்மாவுக்கு ஒரு சின்ன வேலை இருக்கு முடிச்சுட்டு வந்துடுறேன் என்கிறார். உடனே தெரசா, சரி நான் இங்கேயே இருக்கேன் நீ என்ன விட்டு எங்கேயும் போக மாட்டல்ல தாயம்மா என்கிறாள். உடனே தாயம்மா, உன்ன விட்டுட்டு நான் எங்க மா போக போறேன், நீ சமத்து பிள்ளையா இங்கேயே இருக்கணும் சரியா என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். உடனே தெரசா, சீக்கிரம் வந்துரு தாயம்மா என்கிறாள். அதற்கு தாயம்மா, சீக்கிரம் வந்துடுவேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 20:

தாயம்மா தெரசாவை பஸ்ஸில் உட்கார வைத்துவிட்டு முத்தையாவும் சிவகாமியும் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காக வருகிறார். முத்தையாவும் சிவகாமியும் மச்சானை தேடிக்கொண்டு இருக்கிறார்கள் , ஒரு வழியாக அவரை தேடி கண்டுபிடித்து விடுகிறார்கள், அவர் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து இருக்கிறார். உடனே முத்தையா, அவரிடம் போய் என்ன மச்சான் ஆபீஸ்ல(Office) வெயிட்(Wait) பண்றேன்-னு சொல்லிட்டு பஸ்-ல ஏறி உட்கார்ந்து இருக்க என்கிறார். உடனே மச்சான், இல்ல மாமா பஸ் எடுக்குறேன்-னு சொல்லிட்டாங்க அதான் வந்து உட்கார்ந்து விட்டேன் என்கிறார். உடனே முத்தையா, என்னமோ போ உன்னல்லாம் வச்சிக்கிட்டு என்ன பண்றது, சரி இதுல பணமும் லெட்டரும்(Letter) இருக்கு, பணத்தையும் லெட்டரையும் மறக்காம கொடுத்ததுரு மச்சான், அப்புறம் போய் சேர்ந்ததும் போன்(Phone) பண்ணு, என்று சொல்லிவிட்டு பணமும் லெட்டரும் கொடுத்துவிட்டு கிளம்புகிறார். முத்தையா சிவகாமியிடம் வந்து, நல்ல வேளை மா சரியான நேரத்துல போன் பண்ணுனான், ஒரு வேலை முடிஞ்சது, சரி வா கிளம்பலாம் என்று சொல்லிவிட்டு பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளம்புகிறார்கள்.

காட்சி(Scenario) 21:

இதையெல்லாம் தாயம்மா மறைந்து நின்று பார்த்துக்கொண்டு இருக்கிறார். முத்தையாவும் சிவகாமியும் கிளம்பியதை பார்த்துவிட்டு தாயம்மாவும் அந்த இடத்தைவிட்டு கிளம்புகிறார். பின்பு தெரசாவை உட்கார வைத்துவிட்டு வந்த பஸ்-க்கு வருகிறார், உள்ளே வந்து பார்த்தால் தெரசாவை காணவில்லை, அம்மா வந்துட்டேன் தெரசா.……. எங்க போனா இவ…….அவங்க போயிட்டாங்க வா நம்ப போகலாம்…..எங்க மா இருக்க……அம்மா உன்னை இங்கு தானே இருக்க சொன்னேன், தெரசா….. தெரசா…..தெரசா…..என்று அழுது கொண்டே பஸ் உள்ளே தேடுகிறார். தெரசாவை உள்ளே எங்கேயும் காணவில்லை, ஆனால் தெரசா சாப்பிட்ட Snacks மட்டும் உள்ளே இருந்தது, அதைப் பார்த்ததும் தாயம்மாவுக்கு பயம் அதிகமாகிவிட்டது, பஸ்-க்கு வெளியிலும் வந்து தேடுகிறார், ஆனால் தெரசா எங்கேயுமே இல்லை, தாயம்மா அழுது கொண்டே தெரசா….. தெரசா…..தெரசா…..என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.