தினசரி நடப்பு நிகழ்வுகள் 01-07-2022 (Daily Current Affairs)
- தினசரி செய்திகள்(Daily News)
- ஏக்தாத் ஷிண்டே முதல் – மந்திரி பதவி ஏற்றார்:
- ஐகோர்ட்டு மறுப்பு:
- உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பை முன்பே அறிவித்திருக்கலாமே?
- கொரோனா தொற்று உயர்வு:
- கல்வித்துறை உத்தரவு:
- முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்:
- முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் காப்பகத்திற்கு திடீர் ஆய்வு:
- தமிழகத்தில் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு:
- முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் – கல்வித்துறை உத்தரவு:
- திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்:
- உதவித்தொகை திட்டம்:
- எதிர்க்கட்சி வேட்பாளர்:
- வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி.சி -53 ராக்கெட்:
- புதிய திட்டம்:
- தேசிய மருத்துவர் தினம்: (National Doctors Day)
- இஸ்ரேல் நாடாளுமன்ற கலைப்பு:
- விளையாட்டு செய்திகள்:
தினசரி செய்திகள்(Daily News)
ஏக்தாத் ஷிண்டே முதல் – மந்திரி பதவி ஏற்றார்:
மராட்டிய அரசியலில் அதிரடி திருப்பமாக சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல் – மந்திரி பதவி ஏற்றார். பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர கட்சிசு பட்னாவிஸ் துணை முதல் – மந்திரி ஆனார்.
ஐகோர்ட்டு மறுப்பு:
அ.தி.மு.க. , பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கை விசாரிக்க முடியாது என்று ஐகோர்ட்டு மறுத்துள்ளது. ஐகோர்ட்டு உத்தரவை மீறி தீர்மானத்தை இயற்ற அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்புசட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பை முன்பே அறிவித்திருக்கலாமே?
உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்சி சார்ந்தபடி வங்களில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமி தயங்குகிறார் என்றும், உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பை முன்பே அறிவித்திருக்கலாம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று உயர்வு:
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் மக்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றத் தவறிவிட்டனர். எனவே தொற்றின் எண்ணிக்கை மளமளவென்று உயரத் தொடங்கியது. நேற்று ஒருநாள் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச்செயலகத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அந்தத்துறையின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகு ஏதாவது முடிவு எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறை உத்தரவு:
விரிவான தெளிவுரைகள் கிடைக்கும் வரை தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கூடாது என கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கும்பாபிஷேக விழா:
கும்பாபிஷேக விழாவையொட்டி திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ராஜகோபுர கலசங்கள் பாதுகாப்பாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் கொண்டு வரப்பட்டது. கோவில் அர்ச்சகர்கள், மேலாளர், கண்காணிப்பாளர் மற்றும் கோவிலுக்கு அம்மனை தரிசிக்க வந்த ஏராளமான பக்தர்கள் பூக்களை தூவி வரவேற்றனர்.
முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்:
புதிதாக கட்டப்பட்டுள்ள ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலத்தை மு.க. ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 55 ஆண்டுகள் அரசியலில் உள்ளேன். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் நான் விளம்பர பிரியரா? என்று ராணிப்பேட்டையில் நடந்த விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் காப்பகத்திற்கு திடீர் ஆய்வு:
கூட்ரோட்டில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் காப்பகத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். பின்பு பணியில் இல்லாத ஆசிரியர்கள், அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தமிழகத்தில் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு:
தமிழகத்தில் நடக்கஇருக்கும் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்காக டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் தனி இருக்கையில் வைத்து ஓட்டுப்பெட்டி கொண்டு வரப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரும் உடன் வருவார்.
முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் – கல்வித்துறை உத்தரவு:
கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, பள்ளி வளாகத்தில் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிகம் பயிலும் கல்வி நிலையங்கள் மூலமாக தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே பள்ளி வளாகத்தில் நுழையும் அனைத்து பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதித்த பின்னரே அனுமதிக்க வேண்டும். வெப்பநிலை அதிகமாக இருக்கும் நபரை முறையாக பரிசோதித்து தனிமைப்படுத்த வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய பள்ளி வளாகத்திற்குள் சோப்பு, சானிடைசர் இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். தனிமனித மற்றும் சமூக இடைவெளிகளை(Social Distance) கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வகுப்பறைகளில் உரிய காற்றோட்டம் அமைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள போதுமான அறிவுரை வழங்க வேண்டும். இந்த அனைத்து அறிவுரைகளையும் கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.
திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்க தீர்மானம். எடப்பாடி பழனிசாமி அரசியலில் சிற்பியாக உள்ளார். எனவே அவரை நம் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுவோம் என்றார். இதைத்தொடர்ந்து கூட்டத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உதவித்தொகை திட்டம்:
மாதம் ரூ .1,000 உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற மாணவிகள் விவரங்களை பதிவு செய்துகொள்ள அவகாசம் நீட்டிப்பு. 10 – ந்தேதி கடைசி நாள். அரசு பள்ளிகளில் 6 முதல் 12 – ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியை தொடரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதம் ரூ .1,000 வழங்கப்பட உள்ளது. இதற்காக தகுதியுள்ள மாணவிகள் தங்களுடையவிவரங்களை https://penkalvi.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, 30.6.2022 நேற்று -க்குள் விவரங்களை பதிவேற்ற உயர்கல்வித்துறை பதிவேற்றம் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
எதிர்க்கட்சி வேட்பாளர்:
யஷ்வந்த் சின்கா, முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு. எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டினார். ஜனாதிபதி தேர்தலில்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை நேற்று நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அவருக்கு ஆதரவு கூறியும், வாழ்த்து தெரிவித்தும் முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி.சி -53 ராக்கெட்:
சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பூமி கண்காணிப்பு செயற்கைகோள்களை சுமந்த படி பி.எஸ்.எல்.வி. சி -53 ராக்கெட் நேற்று(30-06-2022) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 – வது ஏவு தளத்தில் இருந்து 25 மணி நேர கவுண்ட்டவுனை முடித்துக் கொண்டு பி.எஸ்.எல்.வி. சி -53 ராக்கெட் நேற்று(30-06-2022) மாலை 6.02 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
புதிய திட்டம்:
சிறு , குறு , நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்தும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். சிறு , குறு , நடுத்தர நிறுவனங்கள் தங்கள் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை:
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் , இந்திய நகரங்களில் விமானங்களில் வந்து இறங்குகிற பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
தேசிய மருத்துவர் தினம்: (National Doctors Day)
இரவு பகல் பாராது மக்களுக்காக சேவை புரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் இனிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்….!(National Doctors Day)
மருத்துவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் தேசிய மருத்துவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் அதிபராக பதவி ஏற்றார்:
கடந்த மே மாதம் நடந்த அதிபர் தேர்தலில் பெர்டினான்ட் ஜூனியர் (வயது 64) அபார வெற்றி பெற்றார். அதிபர் பதவி ஏற்றதைத் தொடர்ந்து பெர்டினான்ட் மார்க்கோஸ் ஜூனியர் புதிய மந்திரிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இஸ்ரேல் நாடாளுமன்ற கலைப்பு:
இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. அந்த நாடு, 4 ஆண்டுகளில் 5-வது முறையாக பொதுத் தேர்தலை சந்திக்கிறது. அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று நப்தாலி பென்னட் அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பெஞ்சமின் நேட்டன்யாகு திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேலில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
விளையாட்டு செய்திகள்:
தள்ளி வைக்கப்பட்ட போட்டி:
கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி இன்று பர்மிங்காமில் தொடங்குகிறது. இந்த ஒரே டெஸ்ட் 2021-ம் ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளி வைக்கப்பட்ட போட்டியாகும்.
டி.என்.பி.எல் . கிரிக்கெட்:
6 – வது டி.என்.பி.எல் . 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை, திண்டுக்கல், நத்தம், சேலம், கோவை ஆகிய இடங்களில் நடக்கிறது : இதில் முதல் பகுதி ஆட்டங்கள் நெல்லையில் நடந்து முடிந்தது. நெல்லை அணியில் 3 – வது விக்கெட்டுக்கு
கைகோர்த்த பாபா அபராஜித்தும், சஞ்சய் யாதவும் சிக்சர் மழை பொழிந்து அணிக்கு வெற்றி தேடித்தந்தனர். நெல்லை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி. நெல்லை அணி தொடர்ச்சியாக பெற்ற மூன்றாவது வெற்றி(ஹாட்ரிக்) இதுவாகும்.
கோவைக்கு எதிரான போட்டியில் மதுரை அணி ‘திரில்’ வெற்றி:
6 – வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 8 – வது போட்டி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் . மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்து மதுரை பாந்தர்ஸ் அணி ‘ திரில் ‘ வெற்றியை பெற்றது.
லோகேஷ் ராகுலுக்கு ஆபரேஷன்:
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரும், துணை கேப்டனுமான லோகேஷ் ராகுல் வயிற்றின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடிக்கடி அவதிப்பட்டு வந்தார். அவரை சிறப்பு சிகிச்சைக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் ஜெர்மனிக்கு அனுப்பி வைத்தது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லோகேஷ் ராகுலுக்கு அடிவயிற்று பகுதியில் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. லோகேஷ் ராகுலுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. தற்போது காயம் குணமடைந்து வருகிறது.
சென்னையில் மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டி:
பெண்களுக்கான டபிள்யூ.டி.ஏ . சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி செப்டம்பர் 12 – ந்தேதி முதல் 18 – ந்தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடக்கிறது. தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் 24 வீராங்கனைகள் நேரடியாக பங்கேற்பார்கள். சென்னை ஓபன் டென்னிஸ் 2017 ம் ஆண்டு வரை சென்னையில் நடந்தது . அதன் பிறகு இந்த போட்டி புனேவுக்கு மாற்றப்பட்டது. மற்ற போட்டிகளின் அட்டவணை மற்றும் உடல்தகுதியை பொறுத்து சானியா மிர்சா இந்த போட்டியில் கலந்து கொள்வது முடிவாகும்.
ஆக்கி போட்டி இன்று தொடக்கம்:
15 – வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி இன்று முதல் 17 – ந் தேதி வரை ஸ்பெயினின் தெரசாவிலும் , நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீனிலும் நடக்கிறது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வருகிற 3 – ந் தேதி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.