ADVERTISEMENT

தந்தையின் அன்பிற்கு ஏங்கும் மகள்

காட்சி(Scenario) 1:

இந்த கதை ஆரம்பம் ஆகும் இடம் ஒரு Apartment. அந்த Apartment பெயர் ஆனந்தம் வில்லா. அந்த Apartment-இல் ஒரு வீடு தான், நம்ம கதாநாயகன் விஜய் வீடு. அந்த வீட்டிற்கு இன்று தான் கிரகபிரவேசம். அப்படியே Background Music ஓட வீட்டிற்கு வெளியில் இருந்து, வீட்டிற்கு உள்ளே போகிறோம். உள்ளே போனால், நம்ம கதாநாயகி இசை, பூஜை அறையில், பூஜை செய்து கொண்டு இருக்கிறார். சிறிது நேரம் கழித்து, பூஜை முடித்துவிட்டு பூஜை அறையை விட்டு வெளியே வருகிறார். அந்த சமயத்தில், வீட்டிற்கு வெளியிலிருந்து, வீட்டிற்கு உள்ளே புரோகிதர் வருகிறார். இசை அவரை உபசரித்து பேசி கொண்டு இருக்கிறார். அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது, கதாநாயகன் விஜய் வருகிறார். விஜயும் புரோகிதரை பார்த்து உபசரித்து பேச கொண்டு இருக்கிறார். அப்போது சில குட்டீஸ் ஓடிப்பிடித்து விளையாடி கொண்டு இருக்கிறார்கள். அதில் கடைசியாக ஒரு குட்டி பையன் ஓடி வருகிறான். அவன் தான் விஜய் மற்றும் இசையின் மகன் சுந்தர்.

காட்சி(Scenario) 2:

பிறகு புரோகிதர் இசையிடம், பூஜைக்காக சில பொருட்களை வாங்க சொன்னேனே வாங்கிவிட்டீர்களா? என்று கேட்கிறார். உடனே இசை, அதெல்லாம் வாங்கி வைத்து இருக்கிறேன் என்று சொல்லி, புரோகிதரை அழைத்து சென்று எல்லா பொருட்களையும் வரிசையாக சொல்லி கொண்டே, பொருட்களை காட்டுகிறார். இதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்த விஜய், வீட்டு கிரகபிரவேசத்துக்கு எதற்க்காக இவ்வளவு பொருட்களை வாங்கி இருக்கிறீர்கள் என்று கேலி செய்வது போல் கேட்கிறார். உடனே இசை புரோகிதாடம், அவர் கோவில் இருக்கும் ஊரில் இருந்திருக்கிறாரே தவிர, மழைக்கு கூட கோவில் பக்கம் ஒதுங்கியது இல்லை என்று கூறுகிறார். அதை கேட்ட புரோகிதர், அப்போ நீங்க சாமி இல்லனு சொல்கிறீர்களா? என்று கேட்கிறார். உடனே விஜய், சாமி இல்லனு சொல்லல, இருந்தா நல்லா இருக்கும் என்று தான் சொல்கிறேன் என்கிறார். (Vijay Mind Voice: கடவுள் மட்டும் இருந்திருந்தால் என் வாழ்க்கை இப்படி மாறி இருக்காது) இந்த கிரகபிரவேசம் எல்லாம் என் மனைவியின் திருப்த்திக்காக தான் என்று கூறுகிறார். புரோகிதர் கிரகபிரவேசம் எதற்க்காக செய்கிறோம் என்று விஜய்க்கு புரிய வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் விஜய் அதை ஏற்று கொள்ளும் மன நிலையில் இல்லை. எனவே அந்த பேச்சை அப்படியே விட்டு விடுகிறார்கள்.

காட்சி(Scenario) 3:

அப்புறம், கிரகபிரவேசத்தில் சாமி பாட்டு பாடுவது வழக்கம். சாமி பாட்டு பாட தெரிஞ்சவங்க யாராவது இருக்கிறார்களா? என்று புரோகிதர் கேட்கிறார். விஜயும், இசையும் அப்படி யாரும் இல்லையே என்று யோசித்து கொண்டு இருக்கிறார்கள். உடனே புரோகிதர் சரி ஒன்னும் பிரச்சனை இல்லை விட்டு விடுங்கள். பாட்டு இல்லை என்றால் பரவாயில்லை என்று கூறுகிறார். அதற்கு விஜய், பூஜை பண்றதே பெரிய விஷயம் இதுல பாட்டு ஒன்னு தான் பிரச்சனையா என்று கூறுகிறார். உடனே இசை, விஜய்…… விட்டா நீங்க கிரகபிரவேசமே வேண்டாம் என்று சொல்லிருவீங்க போல அப்படியா? என்று கேட்கிறார். சரி சரி நான் எதுவும் சொல்லவில்லை. நீங்க உங்க வேலையை பாருங்க என்று சொல்லிவிட்டு விஜய் அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார். இசையும், புரோகிதரும் அவங்க அவங்க வேலையை பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

காட்சி(Scenario) 4:

அடுத்து நம்ம பார்க்க போகிறது , விஜய் வீட்டில் வேலைக்கு இருக்கும் ஒரு கதாபாத்திரம். அவள் பெயர் கோகிலா, அவளுடைய கணவன் பெயர் மணி. மணியால் பேச முடியாது . அவர் ஊமை. கோகிலாக்கு மற்றொரு பெயரும் உண்டு. அந்தப் பெயர் என்னவென்றால் Google கோகிலா. அவள் விஜய் வீட்டில் நடக்கும் கிரகபிரவேசதுக்கு தேவையான வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்கிறாள். அந்த சமயத்தில் Food delivery பண்றதுக்கு ஒரு வண்டி வருகிறது. Food எல்லாம் எங்கு வைக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். உடனே கோகிலா, wait பண்ணுங்க நான் போய் விஜய் Sir கிட்ட கேட்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு செல்கிறாள்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 5:

இசை உடை மாற்றுவதற்காக அவளுடைய அறைக்கு சென்று கொண்டு இருக்கிறாள். அப்போது விஜய் வருகிறார். விஜயை பார்த்ததும் இசை, அவரை பார்க்காத மாதிரி போகிறாள். உடனே விஜய், என்ன என்னை பார்த்துவிட்டு பார்க்காத மாதிரி போகிறாய், என் மேல் எதும் கோவமா? என்று கேட்கிறார். அதற்கு இசை, ஐய்யயோ? நான் ஏன் உங்க மேல கோவபட போகிறேன். பக்தி, பூஜை அப்படினு பேசினாலே, பட்டும், பாடாத மாதிரி பேசுறது தானே உங்க வழக்கம் என்று கூறுகிறாள். அதற்கு விஜய் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் இசை சமாதானம் ஆகவில்லை. விஜய் இசையை பார்த்து நீ கோவப்படும் போது கூட ரொம்ப அழகா இருக்க என்று சொன்னதும் இசை சிரித்து விடுகிறாள்.

உடனே விஜய் Romance செய்ய ஆரம்பித்து விடுக்கிறார். அந்த நேரத்தில் சுந்தர் வந்து எனக்கு பலூன் வாங்கி தருகிறேன் என்று சொன்னீற்களே? வந்து வாங்கி கொடுங்கள் என்று கூறுகிறான். உடனே விஜய் நேரங்காலம் தெரியாம இவன் வேற!!! சுந்தர் நான் உனக்கு நிறைய பலூன் வாங்கி தரேன் இப்போது நீ போய் விளையாடு என்று அனுப்பி வைக்கிறார். மறுபடியும் Romance பண்ண ஆரம்பிக்கிறார். திடீரென, கோகிலா வருகிறாள். விஜய் Sir சாப்பாடு வந்துவிட்டது எங்கு வைக்க வேண்டும் என்று கேட்கிறாள். சாப்பாடு எங்க வைப்பாங்க, சமையலறையில் தானே!!!!அங்க வைக்கச் சொல்லுங்கள் என்று கூறி விஜய் கோகிலாவை அனுப்பி வைக்கிறார். அந்த சமயத்தை பயன்படுத்தி இசை அந்த இடத்தை விட்டு ஓடி விடுகிறாள். திரும்பி பார்க்கும்போது இசை அந்த இடத்தில் இல்லை.

மேலும் படிக்கதாயின் அன்பிற்காக ஏங்கும் மகன்

காட்சி(Scenario) 6:

ஒரு அறையின் உள்ளே போய், நான் உடை மாற்ற வேண்டும் என்று கதவை மூடிக் கொள்கிறாள். கதவை மூடிக்கொண்டு புடவை கட்டுகிறாள். அவளுக்கு புடவை கட்ட தெரியவில்லை. விஜய் அந்த நேரத்தில் கதவை தட்டுகிறார். இசை கதவை திறந்து என்ன வேணும் என்று கேட்கிறாள். அதற்கு விஜய் என்னுடைய உதவி ஏதாவது வேண்டுமா என்று கேட்கிறார். இசை விஜயிடம் எனக்கு புடவை கட்டத் தெரியாது அதனால் நான் சுடிதார் போட்டுக் கொள்ளவா?? என்று கேட்கிறாள். அதற்கு விஜய் நானே கட்டி விடுகிறேன் என்று சொல்லி புடவை கட்டி விடுகிறார். அப்போது இசைக்கு ஒரு சந்தேகம். உங்களுக்கு எப்படி புடவை கட்டி விட தெரியும் என்று சந்தேகமாக கேட்கிறாள். அதற்கு விஜய் YouTube பார்த்து கற்றுக்கொண்டேன். யூட்யூபில் நமக்கு தேவையான அனைத்து வீடியோக்களும் இருக்கின்றன என்று கூறி YouTube வீடியோ ஒன்றை எடுத்துக் காட்டுகிறார். அதை பார்த்த இசை சிரித்துக்கொண்டே அப்படியா சூப்பர் என்று கூறுகிறாள். அப்போது விஜய் சிரித்துக்கொண்டே, நம்ம ஊரில் கணவனை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் மனைவியை விட, சந்தேகப்படும் மனைவி தான் அதிகம் என்று கூறுகிறார். பிறகு புடவை கட்டிவிட்டுட்டு விஜய் அந்த இடத்தைவிட்டு கிளம்புகிறார்.

காட்சி(Scenario) 7:

அடுத்து நம்ம பார்க்கப் போகிற கதாபாத்திரங்கள் விஜயின் வளர்ப்புத் தந்தை மற்றும் தாய் பற்றி தான். விஜயின் வளர்ப்பு தந்தை பெயர் முத்தையா, வளர்ப்பு தாயின் பெயர் சிவகாமி. முத்தையா மற்றும் சிவகாமிக்கு பிறந்த ஒரே மகள் தேவி. சேலம் தான் முத்தையா பிறந்த ஊர். முத்தையா, சிவகாமி இருவரும் இப்போது அங்கு தான் இருக்கிறார்கள். முத்தையா ஓப்பனிங் சீன்ல தென்னந்தோப்பில் உட்கார்ந்து இளநீர் குடித்து கொண்டு இருக்கிறார். அந்தத் தென்னந்தோப்பின் பலர் வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். ஒருவர் தென்னம்பிள்ளையை மண்ணில் புதிதாக நட்பு வைத்துக் கொண்டு இருக்கிறார்.

ADVERTISEMENT

முத்தையா இளநீர் குடித்து முடித்துவிட்டு சிவகாமியை அழைக்கிறார். சிவகாமி சிரித்துக் கொண்டே திரும்பி “என்னங்க” என்று கேட்கிறாள் முத்தையா சிவகாமி இங்கே வா என்று அழைத்து என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு சிவகாமி விஜய்க்கு தான் போன் ட்ரை பண்றேன் என்று கூறுகிறாள். உடனே முத்தையா சரி அதை அப்புறம் ட்ரை(Try) பண்ணலாம், இப்போ நீ போய் அந்த தென்னம்பிள்ளைக்கு முதல் தண்ணீர் ஊற்று என்று கூறுகிறார். போன்-ஐ முத்தையாவிடம் கொடுத்துவிட்டு தென்னம்பிள்ளைக்கு தண்ணீர் ஊற்றி விட்டு அதை தொட்டு கும்பிட்டு விட்டு சிரித்துக்கொண்டே சிவகாமி வருகிறாள். முத்தையா சிவகாமியை இப்படி பக்கத்தில் வந்து உட்கார் என்று சொல்கிறார். சிவகாமியும் வந்து உட்காருகிறாள்.

காட்சி(Scenario) 8:

உடனே முத்தையா, என்ன சிவகாமி இதெல்லாம்? நம்ம பையன் விஜய் ஆசைப்பட்டான் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அந்தப் பொண்ணு இசையை கல்யாணம் செய்து வைத்தோம். கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் சேலத்திலிருந்து பிசினஸை(Business) பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது கல்யாணம் ஆன பிறகு சென்னையில் போய் வீடு வாங்கி, நம்ம சொல்ல சொல்ல கேட்காமல் அங்கே போய் குடியேறிவிட்டான். என்ன நடக்குது இங்கே?? ஏன் அந்த மகாராணி சேலத்தில் இருக்க மாட்டாங்களாமா??? வர வர உன் பிள்ளை நம்ம சொல்வதை கேட்காமல் இசை பேச்சைக் கேட்டுக்கொண்டு ரொம்ப ஆடுகிறான். இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதுனு எனக்கு ஒன்னும் புரியவில்லை…. என்று கோவமாக சொல்கிறார். அதற்கு சிவகாமி, எதற்காக அவனை திட்டுகிறீர்கள், என்ன இருந்தாலும் அவன் நம்ம பிள்ளை, அவனை திட்டாதீங்க என்று கூறுகிறாள்.

நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லவா….எல்லா விஷயத்திற்கும் இப்படி கோவப்படாதீங்க, கோவம் ஒரு பலம். அதை எங்கு பயன்படுத்த வேண்டுமோ அங்கு தான் பயன்படுத்த வேண்டும். தேவை இல்லாமல் எல்லா இடத்துலயும் காட்டிக்கொண்டு இருந்தால் அந்த கோபத்திற்கு மதிப்பு இல்லாமல் போய்விடும். நான் சொல்வது புரிகிறதா? கொஞ்சம் பொறுமையா இருங்க என்று சொல்லிவிட்டு, இசைக்கு வீடியோ கால்(Video Call) பண்ணி பேசுகிறாள். விஜய், இசை, சுந்தர் எல்லாம் வீடியோ காலில்(Video Call) முத்தையா, சிவகாமியுடன் பேசுகிறார்கள். கிரகப்பிரவேசத்திற்கு ஏன் வரவில்லை என்று இசை கேட்கிறார். அதற்கு முத்தையா, ஊரில் கும்பாபிஷேகம் அதனால் நாளை கண்டிப்பாக வருகிறோம் என்று கூறுகிறார். முத்தையா இசையிடம், உங்க அப்பாவை கிரகப்பிரவேசத்திற்கு அழைத்தாயா? என்று கேட்கிறார். முத்தையா அப்படிக் கேட்டதுமே இசை முகம் சோகமாக மாறிவிட்டது. இசையின் முகத்தை பார்த்த சிவகாமி, அவளுடைய மனதை புரிந்து கொண்டு, இசை நாங்க கோவிலுக்கு கிளம்ப மணி ஆகிவிட்டது அதனால் அப்புறம் பேசுகிறோம் என்று சொல்லிவிட்டு வீடியோ கால்-லை(Video Call) கட்(Cut) செய்கிறாள்.

காட்சி(Scenario) 9:

பின்பு முத்தையாவை சிவகாமி திட்டுகிறாள். என்னங்க உங்களுக்கு எப்போது எப்படி பேச வேண்டும் என்று தெரியாதா? நீங்க கேட்ட கேள்வியில் மருமகள் முகம் அப்படியே வாடி போயிடுச்சு என்று கூறுகிறாள். உடனே முத்தையா, இப்போது நான் என்ன கேள்வி கேட்டு விட்டேன் என்று என் மேல் இவ்வளவு கோபப்படுகிறாய். இசை தாயில்லாத பொண்ணு. அவளுக்குனு இருக்கிறது அவளோட அப்பா மட்டும் தான். இவர்கள் சென்னையில் வீடு வாங்கி கிரகப்பிரவேசம் பண்றாங்க, அதற்கு இசையோட அப்பாவை கூப்பிடாமல் இருந்தால் அது தப்பா? இல்லையா? அப்புறம் எதற்காக சென்னையில் ஒரு புது வீடு வாங்கி குடியேறனும் என்று கேட்கிறார். அதற்கு சிவகாமி, எதற்காக இப்போ எடுத்தோம், கவிழ்த்தோம் என்று பேசுறீங்க. எல்லா விஷயத்துலயும் ஒரு நிதானம் வேண்டும். இங்க பாருங்க, வாழ்க்கை ஒரு Chess Game மாதிரி, காய பார்த்துப் பார்த்து தான் நகர்கத்தனும், நம்ம இஷ்டத்துக்கு நகர்த்தினோம் என்றால், ஏதோ ஒரு கட்டத்தில் தோற்றுத்தான் போவோம் தெரிஞ்சுக்கோங்க…… என்று சொல்லி விட்டு எழுந்து செல்கிறாள்.

காட்சி(Scenario) 10:

விஜய், இசை, சுந்தர் மூன்று பேரும் காரில் ஒரு வீடு முன்னாடி போய் நிற்கிறார்கள். அது தான் இசையின் அப்பா வீடு. இசை தன் வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு அப்பாவை அழைப்பதற்காக ஒரு தாம்பூலத்தில் பழங்கள், பூ, பத்திரிக்கை எல்லாம் எடுத்துக் கொண்டு காரை விட்டு இறங்க போகிறாள். அப்போது விஜய் நானும் வரட்டுமா? என்று கேட்கிறார். அதற்கு இசை, வேண்டாம் விஜய், அப்பா கோவத்துல என்னை என்ன சொன்னாலும் தாங்கிக் கொள்வேன், ஆனால் உங்களை ஏதாவது சொன்னால் என்னால் தாங்க முடியாது, அதனால் நீங்களும் சுந்தரும் இங்கேயே இருங்கள். ஒரு வேளை நம்ம மேல கோபம் குறைந்து இருந்தால், நானே உங்களை வந்து கூட்டிட்டு போகிறேன் என்று சொல்லி விட்டு காரை விட்டு இறங்கி போகிறாள்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 11:

அப்போது சுந்தர், இது யாரு வீடு என்று கேட்கிறான். அதற்கு விஜய், இது உன் அம்மா வீடு. அந்த வீட்டின் உள்ளே உன் தாத்தா இருக்கிறார். இந்த ஊரிலேயே உன் தாத்தா தான் பெரிய வக்கீல். உன் அம்மா என்னை கல்யாணம் செய்து கொண்டது, உன் தாத்தாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் அவர் எங்ககிட்ட பேசுறது இல்லை என்று கூறுகிறார். இசை Gate-டை திறந்து உள்ளே போகிறாள். அதை Background Music கூட அப்படியே ஸ்லோ மோஷனில்(Slow Motion) காட்றாங்க. வீட்டின் உள்ளே நுழைந்து, அப்பா அப்பா என்று கூப்பிடுகிறார். உள்ளே இருந்து ஒருவர் வருகிறார். அவர் தான் ருத்ரன். அவர் இசையின் அப்பாவிடம் குமாஸ்தா வேலை பார்க்கிறார். இசையின் குரல் கேட்டு அறையை விட்டு வெளியே வந்து பார்க்கிறார். இசையை பார்த்த உடன் சிரித்து கொண்டே இசை எப்படி இருக்கிறாய் என்று கேட்கிறார். இசையும் நன்றாக இருக்கிறேன் Uncle நீங்க எப்படி இருக்கீங்க என்று கேட்கிறாள். அதற்கு ருத்ரன், எனக்கு என்ன மா அப்பாகிட்ட 25 வருடமாக குமாஸ்தா வேலை பார்க்கிறேன். என்ன அவர் குடும்பத்துல ஒருத்தனா தான் மதித்து நடத்துகிறார் என்று கூறுகிறார்.

மேலும் படிக்க: பழிவாங்கும் எண்ணத்தின் உச்சகட்டம்

காட்சி(Scenario) 12:

உடனே இசை, அப்பா எப்படி இருக்கிறார் என்று கேட்கிறாள். அதற்கு ருத்ரன், நீ அவர் விருப்பத்திற்கு மாறாக கல்யாணம் செய்து கொண்டதால் மனமுடைந்து போய் இருக்கிறார். உனக்கே தெரியும், அதற்கு அப்புறம் அவர் கிட்ட வேலை பார்க்கிற என் பையனை தத்து எடுத்துக்கொண்டார். இதை நானே எதிர் பார்க்கவில்லை. தன்னோட ஒரே வாரிசு வாலி தான் என்று அறிவித்து விட்டார் என்று கூறுகிறார். அப்போது வாலி வருகிறான். இசையை பார்த்து, (Sister)சிஸ்டர் எப்படி இருக்கிறீர்கள்…. நன்றாக இருக்கிறீர்களா? என்று கேட்கிறான். அதற்கு இசை, அங்கிள்(Uncle) நான் அப்பாவை பார்க்க வேண்டும் என்று கூறுகிறாள். அதற்கு ருத்ரன் அமைதியாக இருக்கிறார். உடனே வாலி, அப்பா உங்க பெயர் எடுத்தாலே Tension ஆகிறார். அதுவுமில்லாமல் அவருக்கு Blood Pressure வேற இருக்கு, இந்த நேரத்தில் நீங்க அவரைப் பார்ப்பது எனக்கு சரியாகப்படவில்லை என்கிறான். அதற்கு இசை அங்கிள்(Uncle) அவன பேச வேண்டாம் என்று சொல்லுங்கள். நான் அப்பாவைப் பார்த்தே ஆக வேண்டும். அவரிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என்று கூறுகிறாள்.

காட்சி(Scenario) 13:

ருத்ரன் கோர்ட் போகணும் வண்டிய எடுக்க சொல்லு என்று சொல்லிக்கொண்டே மாடியிலிருந்து இசையின் அப்பா ஈஸ்வரமூர்த்தி வருகிறார். அப்பாவை பார்த்தவுடன் இசை மிகவும் பாசத்தோடு அப்பா என்று அழைக்கிறாள். அதற்கு ஈஸ்வரமூர்த்தி, நீயா!!! என்று கோவமாக பார்க்கிறார். அப்போது ருத்ரன் பாப்பா உங்களைப் பார்க்க தான் வந்து இருக்கிறார்கள் என்று கூறுகிறார். அதற்கு ஈஸ்வரமூர்த்தி, நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை என்று சொல்கிறார். உடனே இசை, அப்பா நான் உங்க விருப்பத்திற்கு மாறாக கல்யாணம் செய்து கொண்டது தப்பு தான். ஆனா இப்போ நான் நல்லா இருக்கேன். உங்க மாப்பிள்ளை என்னை நல்லா பாத்துக்கிறார். சேலத்துல இருந்து சென்னைக்கு குடி வந்து இருக்கிறோம். இங்க புதுசா வீடு கட்டி கிரகப்பிரவேசம் வைத்திருக்கிறோம். இன்விடேஷன்(Invitation) கொடுக்கலாம் என்று வந்தேன். உங்க ஆசிர்வாதமும் வாழ்த்தும் எங்களுக்கு வேணும் அப்பா என்று சொல்கிறாள்.

காட்சி(Scenario) 14:

அதற்கு ஈஸ்வரமூர்த்தி, ருத்ரன் எனக்கு ஒரு பொண்ணு இருந்தா, அவ என் முகத்தில் கரியை பூசிவிட்டு எவனோ ஒருத்தன் கூட ஓடிப் போயிட்டா, இப்போ நான் தத்தெடுத்த வாலி தான் என் பிள்ளை, அவன் தான் எனக்கு எல்லாமே, எனக்கு பொண்ணு என்று சொல்லிக்கொண்டு யாரும் இந்த வீட்டுக்கு என்னை பார்க்க வரவேண்டாம் என்று சொல்லிவிடு, வந்தவங்க எல்லாம் போனதுக்கப்புறம் என்னை கூப்பிடு என்று சொல்லி விட்டு மாடிக்கு செல்கிறார். இசை அழுது கொண்டே இன்விடேஷனை(Invitation) அங்கேயே டேபிளில்(Table) வைத்து விட்டு வெளியே போகிறாள். உடனே வாலி, சிஸ்டர்(Sister) சிஸ்டர்(Sister) என்று அழைத்துக் கொண்டு இசை பின்னால் செல்கிறான். உடனே இசை, யாருக்கு யார் சிஸ்டர்(Sister) இனிமேல் அப்படி கூப்பிட கூப்பிடாதே…. என்று கோவமாக கூறுகிறாள். அதற்கு வாலி, சிஸ்டர்(Sister) பூக் கோவபடுறீங்க? கண்டிப்பா நம்ம அப்பா உங்க நல்ல மனசு புரிந்து கொள்வார் நம்பிக்கையோடு இருங்கள் என்று கூறுகிறான். அதற்கு இசை, என்ன சொன்னா? நம்ம அப்பாவா? அவர் எனக்கு மட்டும் தான் அப்பா. உனக்கு அவர் சீனியர்(Senior) அவ்வளவு தான். அப்பாவை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவர் என்னை வெறுப்பது போல் பேசினாலும் அவர் மனதில் நான் தான் இருக்கிறேன். இதெல்லாம் உனக்கு சொன்னால் புரியாது. இனிமேல் இந்த விஷயத்தில் தலையிடாதே என்று கோவமாக சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்புகிறாள்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 15:

Gate-க்கு வெளியே விஜய் நின்று கொண்டு இருக்கிறார். இசை வெளியே வந்ததும் என்ன ஆச்சு என்று கேட்கிறார். இசை எதுவும் சொல்லாமல் சோகமாக இருக்கிறாள். உடனே விஜய் இந்த உலகமே அழிந்தாலும் எனக்கு நீ, உனக்கு நான், என்று இருப்போம். தைரியமாக இரு என்று சொல்லி அங்கிருந்து இசையை அழைத்துச் செல்கிறார்.

இசை, அப்பா வீட்டில் நடந்தை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறாள். அதைப் பார்த்த விஜய், என்ன ஆச்சு, ஏன் Dull-லா இருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு இசை, அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று கூறுகிறாள். உடனே விஜய், இசை கையைப் பிடித்துக்கொண்டு நீ ஏன் இப்படி இருக்கிறாய் என்று எனக்கு புரிகிறது. நான் இப்போது ஒன்று சொல்கிறேன் எழுதி வைத்துக் கொள். உங்க அப்பா மனசு மாறி இதே வீட்டுக்கு ஒரு நாள் வரத்தான் போகிறார் என்று கூறுகிறார்.

காட்சி(Scenario) 16:

அதற்கு இசை, நான் மாசமா இருக்கேன் என்று தெரிந்தும் அவர் ஒரு தடவை கூட என்னை வந்து பார்க்கவில்லை. பிரசவத்திற்காக ஹாஸ்பிடலில்(Hospital) அட்மிட்(Admit) ஆகியிருந்தேன், அப்பவும் என்னைப் பார்க்க வரவில்லை, சுந்தர் பிறந்து இவ்வளவு வருஷம் ஆயிடுச்சு, ஒரு தடவை கூட அவனை பார்க்க வேண்டும் என்று தோன்றாதா???? இப்ப கூட வீடு தேடி போய் இன்விடேஷன்(Invitation) வைக்கப் போகிறேன், என்னை பார்த்ததும் எல்லாத்தையும் மறந்து விட்டு கட்டி பிடிப்பார் என்று நினைத்தேன், ஆனால் அவருக்கு என் மேல் கொஞ்சம் கூட கோபம் குறையவில்லை என்று சொல்லிக் கொண்டு அழுகிறாள். அதற்கு விஜய், பாசம் அதிகமாக இருக்கும் இடத்தில் தான் கோவத்தை காட்டுவோம், ஆனால் பெற்றோருடைய கோபம் எல்லாம் ரொம்ப நாள் இருக்காது இசை, நீ வேணா பாரு உங்க அப்பா கொஞ்ச நாளிலேயே, எல்லாத்தையும் மறந்து விட்டு உன் கிட்ட வந்து பேச தான் போகிறார் என்று கூறுகிறார்.

மேலும் படிக்க: ஒரு தாயின் பாசப் போராட்டம்

காட்சி(Scenario) 17:

ஈஸ்வரமூர்த்தி, இசை வைத்துவிட்டுப் போன இன்விடேஷனை(Invitation) கையில் வைத்துக்கொண்டு கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறார். அப்போது ருத்ரனும், வாலியும் வருகிறார்கள். உடனே ருத்ரன், என்ன ஆச்சு ஐயா, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு ஈஸ்வரமூர்த்தி, இசை வந்து போனதுக்கப்புறம் என்னமோ தெரியல, என் மனசு ரொம்ப பாரமாக இருக்கிறது. அவள் என் பேச்சை மீறி இந்த வீட்டை விட்டுப் போனது தப்பு தான், ஆனால் இப்போது நல்லா தானே இருக்கிறாள். ஒரு குழந்தைக்கு தாய் வேற ஆகிவிட்டால், புதிதாக வீடு வேற கட்டியிருக்கிறாள், இசையோட அம்மா இருந்திருந்தால் அவள இப்படி அம்போன்னு விட்டுட்டு இருப்பாளா?? எனக்கு தான் ஈகோ(Ego), ஈஸியா(Easy) ஜெயிக்க வேண்டிய வேண்டிய கேஸ்-ல(Case) தோற்றுப் போன மாதிரி ஒரு ஃபீல்(Feel), அவளை ஏத்துக்க முடியாம இந்த ஈகோ(Ego)தான் தடுக்கிறது.

ADVERTISEMENT

அவள் என் பொண்ணு தானே, எனக்கு இருக்கிற திமிர்ல பாதியாவது அவளுக்கு இருக்கும் அல்லவா?? அதனால் தான், அவள் நல்லா இருக்கானு எனக்கு தெரியணும்-ல!!! அவள் எடுத்த முடிவு தப்பு இல்லன்னு எனக்கு புரிய வைக்கணும்-ல!!!! அதுக்காகத்தான் இந்த இன்விடேஷன்(Invitation) கொடுத்துவிட்டுப் போயிருக்கிறாள் என்று மிகவும் வருத்தத்தோடு சொல்கிறார்.

காட்சி(Scenario) 18:

உடனே வாலி, அப்பா நீங்க இப்படி வருத்தப்பட்டு நான் பார்த்ததே இல்ல, சிஸ்டர்(Sister) எங்க இருந்தாலும் நல்லா இருப்பாங்க, தைரியமா இருங்க என்று கூறுகிறான். அதற்கு ஈஸ்வரமூர்த்தி, வாலி நான் உன்னைத் தான் மலை போல் நம்பி இருக்கிறேன், எனக்கு அப்புறம், நீ தான் அக்காவை நன்கு கவனித்து கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டுச் செல்கிறார். ஈஸ்வரமூர்த்தி அந்த இடத்தை விட்டு போனதுக்கு அப்புறம் வாலியும் ருத்ரனும் சிரித்துக் கொண்டே வெளியில் செல்கிறார்கள். உடனே ருத்ரன், எவ்வளவு ஜாலியாக இருந்தாலும் காரியத்துல கண்ணா இருக்கணும் வாலி. உன் வளர்ப்பு அப்பா வழி மாறி போற மாதிரி தெரியுது, இந்த ஆள் பேரில் இருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கு நீதான் ஒரே வாரிசு. ஒருவேளை இசையை அவர் ஏற்றுக்கொண்டார் என்றால், ஈஸ்வரமூர்த்தியோட வளர்ப்பு மகன் என்கிற அந்தஸ்தை நீ இழக்க வேண்டியிருக்கும். சொத்தெல்லாம் கைவிட்டு போயிடும். அப்புறம் நீ கடைசி வரைக்கும் அவரோட ஜூனியரா மட்டும் தான் இருக்க முடியும் என்று கூறுகிறார்.

காட்சி(Scenario) 19:

அதற்கு வாலி, Daddy எனக்கு இப்படியெல்லாம் நடக்குமென்று ஏற்கனவே தெரியும். அதனால் தான் உங்களுக்கே தெரியாமல் ஒரு பிளான்(Plan) வைத்திருக்கிறேன். இந்த கிரகப்பிரவேசம் தான் இசையோட கடைசி நாள், இன்னும் கொஞ்ச நேரத்துல இசையும், அவள் புருஷனும் சாக போறாங்க, ஏற்பாடு எல்லாம் பண்ணியாச்சு. இனி அந்த ஆண்டவனே வந்தாலும் அவர்களை காப்பாற்ற முடியாது என்று கூறுகிறான். அதற்கு ருத்ரன், என்னதான் பண்ணப்போற, எனக்கு ஒன்னும் புரியல என்கிறார். அதற்கு வாலி Wait and Watch என்று சொல்கிறான்.