கோகிலா தாயம்மாவிடம் இசை கோபப்பட்டத்திற்கான காரணத்தை எடுத்துச் சொல்கிறாள். உடனே தாயம்மா, சரி நீ சாப்பிட்டாயா?? என்கிறார். அதற்கு கோகிலா, நான் சாப்பிட்டேன் நீங்க சாப்பிடுங்க என்று சொல்லி தாயம்மா தெரசாவை உட்கார வைத்து சாப்பாட்டை பரிமாறி சாப்பிடச் சொல்கிறாள். அந்த மேடம் ரொம்ப நல்லவங்க தாயம்மா, அவங்க அப்பா குடுத்துவிட்ட Sweet-அ கீழே போடவும் கோவத்துல பேசிட்டாங்க, நீ எதுவும் மனசுல வச்சுகாத தாயம்மா என்கிறாள். உடனே தாயம்மா, கோகிலா சொல்வதை யோசித்துக் கொண்டே சாப்பாட்டை எடுத்து தெரசாவுக்கு ஊட்டி விடுகிறார்.
- காட்சி(Scenario) 1:
- காட்சி(Scenario) 2:
- காட்சி(Scenario) 3:
- காட்சி(Scenario) 4:
- காட்சி(Scenario) 5:
- காட்சி(Scenario) 6:
- காட்சி(Scenario) 7:
- காட்சி(Scenario) 8:
- காட்சி(Scenario) 9:
- காட்சி(Scenario) 10:
- காட்சி(Scenario) 11:
- காட்சி(Scenario) 12:
- காட்சி(Scenario) 13:
- காட்சி(Scenario) 14:
- காட்சி(Scenario) 15:
- காட்சி(Scenario) 16:
- காட்சி(Scenario) 17:
- காட்சி(Scenario) 18:
- காட்சி(Scenario) 19:
காட்சி(Scenario) 1:
விஜயும் சுந்தரும் அவர்கள் வீட்டில் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது அங்கே இசை வருகிறாள். இரண்டு பேருக்கும் தூங்குற ஐடியா இல்லையா என்கிறாள். அதற்கு விஜய், இசை நார்மலாகிவிட்டாயா(Normal) என்கிறார். அதற்கு இசை, எதற்காக அதை ஞாபகப்படுத்துறீங்க!!! இருங்க நான் உங்களுக்கு ஒரு விஷயம் காட்டுகிறேன் என்று சொல்லி தாயம்மா பாடின பாட்டு Tv-ல் போட்டு காட்டுகிறாள். அதற்கு விஜய், அந்த அம்மா பாடுறாங்கல்ல, அந்த பாட்டை கேட்டால் மனசுக்கு ஒரு மாதிரி ஆகுது, என்னனே தெரியல, ஒரு மாதிரி கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரி இருட்டாவே இருக்கு என்கிறார். அதற்கு இசை, நான் ஒண்ணும் அவங்க பாட்ட கேட்பதற்காக இதை போடல, கொஞ்சம் வெயிட்(Wait) பண்ணுங்க, இதுல ஒரு முக்கியமான சீன்(Scene) வரப்போகுது என்கிறாள். உடனே விஜயும் கவனமாக அந்த வீடியோவை பார்க்கிறார்.
காட்சி(Scenario) 2:
அப்போது தான் ஒரு விஷயம் விஜய்க்கு தெரியவருகிறது, தாயம்மாவுடன் சேர்ந்து விஜயும் அந்தப் பாட்டிற்கு வாயை அசைக்கிறார். அதைப் பார்த்ததும் விஜய் ஆச்சரியப்படுகிறார். உடனே இசை, என்ன விஜய் இது, சாமி பாட்டு எல்லாம் பாடுறீங்க என்கிறாள். அதற்கு விஜய், அட சாமியாவது?? பூதமாவது?? நானாவது சாமி பாட்டு பாடுறதாவது என்கிறார். அதற்கு இசை, அப்போ வீடியோ-ல(Video) பாடுறது நீங்க இல்லையா?? சரியான போங்கு ஆட்டமா இருக்கு என்கிறாள். அதற்கு விஜய், நான் தான் பாடுறேன், ஆனால் இதெல்லாம் என்னால நம்பவே முடியவில்லை இசை என்று கூறுகிறார்.
அதற்கு இசை, இதில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, கோயிலுக்கு போறது இல்ல, நீங்க எப்படி சாமி பாட்டு பாடுறீங்க, ஒரு வேளை பொண்டாட்டி பேரு இசை என்பதால் எனக்கே தெரியாம இசையில் ஆர்வம் வந்து மியூசிக்(Music) கத்துக்க ஆரம்பிச்சுட்டீங்களா?? என்கிறாள். அதற்கு விஜய், நீ வேற எனக்கு மியூசிக்ல(Music) சுத்தமா இன்ட்ரஸ்ட்(Interest) கிடையாது, ஆனால் இந்த பாட்டை கேட்கும் போது மனசுகுள்ள என்னமோ பண்ணுது என்கிறார்.
காட்சி(Scenario) 3:
அதற்கு இசை, Leave it விஜய், உங்களுக்கு அந்த பாட்டு பிடித்து இருக்கிறது, அதனால் அவங்க பாடும் போது நீங்களும் Hum பண்ணியிருக்கீங்க அவ்வளவு தான் விடுங்க என்கிறாள். அதற்கு விஜய், அப்படியில்லை இசை, அது எப்படி நான் அந்த பாட்டை பாடுகிறேன், அதுவும் முன்ன பின்ன கேட்காமலே பாடுகிறேன், என்று இசையிடம் சொல்லிக்கொண்டே மிகவும் குழப்பமாகவும் டிவியில்(Tv) தாயம்மா பாடிய வீடியோவை பார்த்துக் கொண்டே இருக்கிறார். இந்த சீன்(Scene) ஓட அன்று நைட் முடிவடைகிறது.
காட்சி(Scenario) 4:
காலை விடிந்ததும் சிவகாமி இசைக்கு வீடியோ கால்(Video Call) செய்கிறாள், கிரகப்பிரவேசம் எல்லாம் நல்லபடியாக முடிந்ததா?? என்று கேட்கிறாள். அதற்கு இசை, எல்லாம் நல்லபடியா முடிந்தது அத்தை என்கிறாள். அதற்கு சிவகாமி, விஜய் எங்கே என்கிறாள். அதற்கு இசை, அவர் வெளியே போயிருக்கிறார். அத்தை நீங்க எப்போது சென்னை வருகிறீர்கள் என்று கேட்கிறாள். அதற்கு சிவகாமி, அதை பற்றி சொல்லத் தான் கால்(Call) பண்ணினேன். கோவில் விசேஷம் எல்லாம் நல்ல படியாக முடிந்தது. இப்போ அங்க தான் கிளம்பி கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு மதியம் லஞ்ச்(Lunch) உங்க புது வீட்டில் தான் என்கிறாள். அதற்கு இசை, என்ன சொல்றீங்க?? நிஜமாகவா?? என்கிறாள்.
அதற்கு சிவகாமி, நிஜமாகத்தான் சொல்கிறேன், நீயும் விஜயும் நாங்கள் வரவில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டிங்கல்ல, அதை மாமா சொல்லி நைட் எல்லாம் புலம்பிட்டு இருந்தாரு, அதான் இன்னைக்கு மதியம் லஞ்ச்க்கு(Lunch) அங்க வந்திடுவோம் சந்தோசமா?? என்கிறாள். அதற்கு இசை, சிரித்துக் கொண்டே ரொம்ப சந்தோஷம் என்கிறாள். உடனே சிவகாமி, சரி மாமா கூப்பிடுகிறார் நான் போனை வைக்கிறேன் என்று சொல்லி போனை(Phone) கட்(Cut) செய்கிறாள். இசையும் சரி என்று சொல்லிவிட்டு போனை(Phone) கட்(Cut) செய்கிறாள்.
காட்சி(Scenario) 5:
இசை போனை(Phone) கட்(Cut) செய்துவிட்டு திரும்பி பார்க்கிறாள், அப்போது கிரகப்பிரவேசம் செய்து முடித்த ஹோம சாம்பல் ஹால்ல(Hall) இருக்கிறது. இசை அதைப் பார்த்துட்டு புரோகிதர் இதை கோயிலில் கொண்டு போட சொன்னார், ஆனால் இங்க பக்கத்துல கோயில் எங்க இருக்கு என்று தெரியவில்லையே என யோசித்து கொண்டு இருக்கிறாள். அப்போது கோகிலா Iron செய்த துணிகளை கொண்டு வருகிறாள், அம்மா புடவை ஜாக்கெட் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறாள். அதற்கு இசை, சரி அதை அங்கு வைத்து விடு என்று சொல்கிறாள். அதற்கு கோகிலா, சரி என்று சொல்லிவிட்டு Table-லில் துணிகளை வைக்கிறாள், அப்புறம் AC மாட்ட ஆள் வேணும் என்று கேட்டு இருந்தீங்கள்ள!! அவங்க இன்று மதியம் வரேன் என்று சொல்லி இருக்காங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.
மேலும் படிக்க: பழிவாங்கும் எண்ணத்தின் உச்சகட்டம்
காட்சி(Scenario) 6:
உடனே இசை, ஒரு நிமிடம் நில்லு கோகிலா, இங்க வா, இந்த சாம்பலை கோயிலில் கொட்டணும், இங்க பக்கத்துல எங்க கோவில் இருக்கிறது என்கிறாள். அதற்கு கோகிலா, கோவில் பக்கத்தில் தான் இருக்கிறது, ஆனால் எனக்கு தான் கடையில கொஞ்சம் வேலை இருக்கிறது என்கிறாள். அதற்கு இசை, அப்படியா???? இங்க கோவில் எங்க இருக்கும் என்று எனக்கும் தெரியாது, புது இடம் வேற நான் மட்டும் எப்படி தனியாக போவது என்று தெரியவில்லையே!!! என்கிறாள். அதற்கு கோகிலா, அம்மா நான் ஒன்று சொல்லட்டுமா??? இந்த சாமி, பூஜை எல்லாம் நல்லா தெரிஞ்சவங்க நம்ம தாயம்மா தான், அவங்கள வேணும்-னா கூட்டிட்டு போங்க என்கிறாள். அதற்கு இசை, ரொம்ப யோசித்து கொண்டே இருக்கிறாள். அதற்கு கோகிலா, என்ன அம்மா, நீங்க நேற்று நடந்ததையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?? தாயம்மா அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ள மாட்டாங்க, நான் வேணும்-னா அவங்ககிட்ட சொல்லி அனுப்பி வைக்கிறேன், நீங்க கூட்டிட்டு போயிட்டு வந்து விடுங்கள் என்கிறாள்.
காட்சி(Scenario) 7:
அதற்கு இசை, வேண்டாம் கோகிலா என்கிறாள். அதற்கு கோகிலா, என்ன ஆச்சு அம்மா என்கிறாள். அதற்கு இசை, என்னமோ தெரியல ஒரு சிலரைப் பார்த்தாலே பிடித்துவிடும், ஒரு சிலரைப் பார்க்கவே பிடிக்காது, எனக்கு முதல் பார்வையிலே தாயம்மாவை பிடிக்காமல் போயிடுச்சு, அதுமட்டுமில்லாம நேற்று எங்க அப்பா ஆசையாக வாங்கிக் கொடுத்துவிட்ட Sweet Box-அ வேற கீழே போட்டுட்டாங்க, இனிமேல் அவங்கள பாத்தாலே எனக்கு அந்த Incident தான் ஞாபகம் வரும், அதனால் வேண்டாம் எதுக்கு தேவையில்லாத டென்ஷன்(Tension) விடு என்கிறாள். அதற்கு கோகிலா, இல்லை அம்மா நீங்க தப்பா நினைக்காதீங்க, தாயம்மா உண்மையிலேயே ரொம்ப நல்லவங்க, பழகி பார்த்தா உங்களுக்கும் பிடிக்கும் என்கிறாள்.
அதற்கு இசை, வேண்டாம் கோகிலா கோவில் விஷயத்தை நானே பார்த்துக்கொள்கிறேன் இனிமேல் அவங்கள பத்தி என்கிட்ட பேசாத என்கிறாள். அதற்கு கோகிலா, சரி அம்மா என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்புகிறாள். இவர்கள் பேசுவதை தாயம்மா பார்த்துவிட்டு மிகவும் வருத்தத்துடன் அந்த இடத்தைவிட்டு கிளம்புகிறார்.
காட்சி(Scenario) 8:
வாலி மற்றும் ருத்ரன் இருவரும் ஒரு இடத்தில் நின்று கொண்டு இருக்கிறார்கள். உடனே ருத்ரன், இப்படி ஆசை காட்டி மோசம் செய்து விட்டாயே??? கிரகப்பிரவேசம் வீடு எழவு வீடாக மாறும் என்று நினைத்தேன், ஆனால் இப்படி ஆயிடுச்சே என்கிறான். அதற்கு வாலி, இல்ல Daddy அவங்க வீட்டிற்கு வேலை பார்ப்பதற்கு ஒரு கிழவி வந்திருக்கிறார், அவங்க தான் நான் கொடுத்த Sweet Box-அ கீழே கொட்டி இருக்கிறார்கள், நான் கொடுத்த Sweets எல்லாம் கீழே கொட்டி சிதறடிச்சு Daddy என்கிறான். அதற்கு ருத்ரன், சொந்த மகளை ஆணவ படுகொலை செய்த வழக்கில் ஈஸ்வரமூர்த்தி ஜெயிலுக்கு போய் விடுவான், எல்லா சொத்தும் நம்ம கைக்கு வந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போயிடுச்சே என்கிறான். அதற்கு வாலி, மனச விட்டு விடாதே Daddy, நீ நினைத்தது எல்லாம் நடக்கும் சொத்து நம்ம கைக்கு வரும் நீ கவலை படாதே Daddy என்கிறான். அதற்கு ருத்ரன், நல்ல வாய்ப்பை கோட்டை விட்டுட்டு இப்போ என்ன பண்ணப்போறே என்கிறான்.
காட்சி(Scenario) 9:
அதற்கு வாலி, சிரித்துக்கொண்டே கிடைத்த வாய்ப்பில் ஜெயிப்பவன் புத்திசாலி, ஆனால் வாய்ப்பை உருவாக்கி அதில் விளையாடி ஜெயிக்கிறவன் தான் அதிபுத்திசாலி, நான் உங்க மகன் Daddy, எத்தனை தடை வந்தாலும் அதையெல்லாம் தாண்டி போயிட்டே இருப்பேன் என்கிறான். அதற்கு ருத்ரன், டயலாக்(Dialogue) எல்லாம் நல்லா தான் இருக்கு, அடுத்து என்ன பிளான்(Plan) பண்ண போற என்கிறான். அதற்கு வாலி, பிளான் ரெடி(Plan Ready) Daddy, இந்த Attempt-ல ஆள காலி பண்றேன் என்கிறான். அதற்கு ருத்ரன், என்ன வேணாலும் பண்ணு, ஆனால் நீயும் நானும் மாட்டிக்க கூடாது…. ஜாக்கிரதையா பண்ணு என்கிறார். அதற்கு வாலி, தப்பு பண்றதும், தப்ப மாட்டிக்காம பண்றதும் எனக்கு கை வந்த கலை Daddy, நீ பொறுமையா இரு, ஒரு நல்ல செய்தியோட வரேன் என்று சொல்லி விட்டு காரில் ஏறி கிளம்புகிறான்.
காட்சி(Scenario) 10:
விஜய் காரில் வந்து வீட்டின் முன் இறங்குகிறார். அப்போது இசையும், சுந்தரும் வீட்டுக்கு வெளியில் வந்து கொண்டு இருக்கிறார்கள். இசை விஜயை பார்த்து, விஜய் அத்தை போன் பண்ணுனாங்க என்கிறாள். அதற்கு விஜய், தெரியும் எனக்கும் ஃபோன் பண்ணுனாங்க, அம்மாவும் அப்பாவும் இன்னைக்கு மதியம் சென்னை வந்து சேர்ந்திடுவாங்க அதானே!!!! இங்கப்பாரு இசை, அப்பா அம்மாக்கு பிடித்த Items-அ பார்த்து பார்த்து வாங்கிட்டு வந்திருக்கேன், நீ இன்னைக்கு பண்ற சமையலில் அவங்க அசந்துப் போயிடனும் சரியா என்கிறார். அதற்கு இசை, அத பத்தி நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க நான் பாத்துக்குறேன். மதியம் வெஜிடபிள்ஸ்(Vegitables) எல்லாம் Fresh-அ கிடைக்குமா?? என்கிறாள். அதற்கு விஜய், Fresh-அ தான் இருந்துச்சு, அடுத்த time நீயும் வா என்கிறார். அதற்கு இசை, கண்டிப்பாக போகலாம் என்கிறாள்.
காட்சி(Scenario) 11:
அப்புறம் அத்தை மாமா வருவதற்குள் வீட்டில் உள்ள ஹோம சாம்பலை கோவிலில் போய் கொட்டிட்டு வரணும் என்கிறாள். அதற்கு விஜய், சரி நீ போயிட்டு வந்துரு, ஆனால் நீ தனியாவா போவ, இந்த ஏரியா(Area) வேற உனக்கு தெரியாது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது தாயம்மா அந்த பக்கமாக போகிறார், விஜய் அவரை பார்த்து தாயம்மா…. தாயம்மா…. உங்கள தான் வாங்க என்கிறார். தாயம்மாவும் தயக்கமாக யோசித்துக் கொண்டே வந்து சொல்லுங்க தம்பி என்கிறார். அதற்கு விஜய், ஒரு ஹெல்ப்(Help) பண்ண முடியுமா?? ஹோமகுண்டத்தில் சாம்பல் அப்படியே இருக்கு, புரோகிதர் அத கோவிலில் கொண்டு கொட்ட சொன்னாரு, இசைக்கு ஏரியா(Area) அவ்வளவு ஒண்ணும் பழக்கம் இல்லை, கோவில் வரைக்கும் அவள கொஞ்சம் கூட்டிட்டு போயிட்டு வரீங்களா?? என்கிறார்.
காட்சி(Scenario) 12:
அதற்கு தாயம்மா சாமி காரியம்-னு சொல்றீங்க!! இதுக்கு கூட உதவி செய்யலன்னா எப்படி!! இசை அம்மா நீங்க சாம்பல் எடுத்துட்டு வாங்க போயிட்டு வந்துரலாம் என்கிறார். இசை மிகவும் தயக்கமாக யோசித்துக்கொண்டே நிற்கிறாள். அதற்கு விஜய், என்ன இசை கிளம்பு இன்னும் கொஞ்ச நேரத்துல அப்பா அம்மா வந்துருவாங்க, அதுக்குள்ள போயிட்டு வந்துரு என்கிறார். அதற்கு இசை, இல்லை விஜய் அத்தை மாமாவுக்கு சமைக்கனும் அதனால நீங்க போயிட்டு வந்துடுங்க என்கிறாள். அதற்கு விஜய், என்ன விளையாடுறியா??? நான் எப்ப கோயிலுக்கு போயிருக்கேன், அதெல்லாம் நமக்கு செட்(Set) ஆகாது, நீயே போயிட்டு வந்துரு என்கிறார். அதற்கு இசை, கோயிலுக்கு போயிட்டு வரதுக்குள்ள அத்தை மாமா வந்துருவாங்க, அவங்க வரும் போது வீட்ல சாப்பாடு ரெடி ஆகலனா நல்லா இருக்காதுல்ல, அதனால நீங்களே அவங்க கூட போயிட்டு வந்துடுங்க என்கிறாள்.
மேலும் படிக்க: ஒரு தாயின் பாசப் போராட்டம்
காட்சி(Scenario) 13:
உடனே தாயம்மா, தம்பி போன உடனே கோவிலில் சாம்பல கொட்டிட்டு வந்துரலாம், போவதும் தெரியாது, வருவதும் தெரியாது, சீக்கிரமா வந்துருவோம் என்கிறார். அதற்கு விஜய், இல்லை தாயம்மா நான் எப்படி கோவிலுக்கு வர முடியும் என்று யோசிக்கிறார். அதற்கு இசை, ஒரு நாள் கோயிலுக்கு போய்ட்டு வந்தா உங்க கொள்கைக்கு ஒரு பிரச்சனையும் வராது, சாமி பாட்டு எல்லாம் கூட சேர்ந்து பாடுவீங்க, ஆனால் சாமி நம்பிக்கை மட்டும் இல்லன்னு சொல்லுவீங்க, நீங்க கிளம்புங்க என்றாள். அதற்கு தாயம்மா, ஆமா தம்பி இங்க நின்னு பேசிட்டு இருக்க நேரத்துல கோயிலுக்கு போயிட்டு வந்திருக்கலாம், வாங்க தம்பி கிளம்பலாம் என்கிறார். அதற்கு விஜய், சரி நான் போயிட்டு வரேன் என்கிறார்.
காட்சி(Scenario) 14:
உடனே இசை, சரி வெயிட்(Wait) பண்ணுங்க, நான் போய் சாம்பலை எடுத்துட்டு வரேன், அப்புறம் சுந்தரரையும் கூட்டிட்டு போங்க, இவன் இங்கே இருந்தா என்ன ஒரு வேலையும் பண்ண விட மாட்டான் என்று சொல்லிவிட்டு சாம்பலை எடுக்க செல்கிறாள். சிறிது நேரம் கழித்து இசை சாம்பலை எடுத்து வந்து விஜயிடம் கொடுக்கிறாள். அப்புறம் விஜய் இதுல சாம்பல் இருக்கு, அப்புறம் கோவில் உண்டியலில் மறக்காமல் 100 ரூபாய் போட்டுருங்க புரிஞ்சதா?? என்கிறாள். அதற்கு விஜய், புரிஞ்சது புரிஞ்சது நல்லா புரிஞ்சது என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார். அதற்கு இசை, இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல, அப்பா அம்மா வரும் போது நீங்களும் இங்க இருந்தா நல்லா இருக்கும் சீக்கிரம் வந்துடுங்க என்கிறாள். அதற்கு விஜய், உத்தரவு மகாராணி என்று சொல்லி விட்டு காரில் கிளம்புகிறார்.
காட்சி(Scenario) 15:
தாயம்மா, விஜய், சந்தர் மூன்று பேரும் காரில் கோயிலுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். அப்போது வாலி, விஜய் காரை ஃபாலோ(Follow) பண்ணி கொண்டு இருக்கிறான். வாலி மைண்ட் வாய்ஸ்(Mind Voice) நேற்று எப்படியோ தப்பிச்சுட்டிங்க, இன்றைக்கு First உன்னை காலி பண்றேன் டா, அப்புறம் இசை, உன் குழந்தை எல்லாத்தையும் காலி பண்றேன் என்று கோவமாக சொல்லிக்கொண்டே விஜய் காரை ஃபாலோ(Follow) பண்ணி கொண்டு இருக்கிறான். விஜய் தாயம்மாவிடம் கோவில் இன்னும் எவ்வளவு தூரம் தாயம்மா என்று கேட்கிறார். அதற்கு தாயம்மா, இன்னும் கொஞ்ச தூரம் தான் தம்பி என்கிறார்.
காட்சி(Scenario) 16:
உடனே விஜய், அன்றைக்கு நடந்தத நீங்க மனசுல வச்சுக்காதிங்க, இசை ஏதோ டென்ஷனில்(Tension) அப்படி கத்திட்டா என்கிறார். அதற்கு தாயம்மா, நான் அதை அப்போவே மறந்துட்டேன் தம்பி, நீங்க கொடுத்து விட்டதாக சொல்லி கோகிலா சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தா, ரொம்ப நன்றி தம்பி என்கிறார். அதற்கு விஜய், இதற்கெல்லாம் எதுக்கு தாயம்மா நன்றி சொல்றீங்க, என்னனு தெரியல, உங்கள முதல் தடவை பார்த்ததும் ஏற்கனவே பார்த்து பழகிய மாதிரி எனக்கு தோணுச்சு தாயம்மா. அப்புறம் உங்க பொண்ணு எங்க என்கிறார். அதற்கு தாயம்மா, அவ வீட்ல இருக்கா தம்பி, அவளுக்கு பிறவியிலேயே மூளை வளர்ச்சி இல்லை, அதான் அப்படி இருக்கா என்கிறார்.
காட்சி(Scenario) 17:
அதற்கு விஜய், வீட்டில் வேற யாரெல்லாம் இருக்கீங்க என்கிறார். அதற்கு தாயம்மா, நான், என் அப்புறம் என் மகள் தெரசா, நாங்க ரெண்டு பேரு மட்டும் தான் என்கிறார். அதற்கு விஜய், நீங்க வெளிய வந்துட்டா அவங்கள யாரு பாத்துப்பாங்க என்கிறார். அதற்கு தாயம்மா, அவளே அவள பார்த்துக் கொள்வாள், அவளால் யாருக்கும் எந்த தொந்தரவும் வராது, அமைதியாத் தான் இருப்பாள் என்கிறார்.
மேலும் படிக்க: ஒரு ஏழைத் தாயின் வாழ்க்கைப் பயணம்
காட்சி(Scenario) 18:
அதற்கு விஜய், ஆமா நீங்க என்ன வேலை பாக்குறதா சொன்னிங்க?? என்கிறார். அதற்கு தாயம்மா, பெரிய பெரிய கம்பெனில வேலை பாக்குற ஆளுங்களுக்கு மதியம் சாப்பாடு செஞ்சு கொடுக்குற வேலை, எங்கள மாதிரி வீட்ல இருக்கிறவங்களுக்கு சமையலுக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கிக் கொடுத்துடுவாங்க, அவங்க கேட்கிற சாப்பாட தினமும் சமைத்து வச்சிடுவோம், அவங்க வந்து வண்டியை எடுத்துட்டு போயிட்டு அங்க இருக்க கம்பெனி ஆளுங்களுக்கு பரிமாறிடுவாங்க, என்ன மாதிரியே நிறைய பேரு இந்த வேலைய தான் பார்க்குறாங்க தம்பி, அதுமட்டுமில்லாமல் நம்ம வீட்டு பக்கத்துல இருக்கவங்க அப்போ அப்போ சமையல் வேலைக்கும் கூப்பிடுவாங்க அதுவும் பண்ணி தருவேன் தம்பி என்கிறார்.
காட்சி(Scenario) 19:
தாயம்மாவும் விஜயும் பேசிக் கொண்டு இருக்கும் போதே இடையில் சுந்தர் வந்து தாயம்மாவிடம் பாட்டி நேற்று நீங்க நல்லா பாடுனீங்க என்கிறான். அதற்கு தாயம்மா, அப்படியா கண்ணு, அந்த பாட்டு உனக்கு பிடிச்சதா!!! என் செல்லம், தங்கம் என்று சொல்லி சுந்தர் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுக்கிறார். அதற்கு விஜய், அந்த பாட்டை கேட்கும் போது மனசு ஏதோ பண்ணுச்சு, அதையும் தாண்டி ஏதோ ஒரு உணர்வு எப்படி சொல்றதுன்னு தெரியல தாயம்மா என்கிறார். அதற்கு தாயம்மா, அது ஒண்ணுமில்ல தம்பி, அந்தப் பாட்டோட ராகம் அப்படி, அதனால அப்படி தான் இருக்கும், எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கும் என்கிறார். அதற்கு விஜய், இல்ல தாயம்மா அதையும் தாண்டி ஏதோ ஒரு உணர்வு, எப்படி சொல்றதுன்னு தெரியல, அந்த பாட்டு கேட்கும் போது மனசுக்குள்ள ஏதோ ஒரு இனம் புரியாத இருட்டு வந்த மாதிரி இருந்தது என்கிறார்.