ADVERTISEMENT

ஒரு ஏழைத் தாயின் வாழ்க்கைப் பயணம்

ஓப்பனிங்க் சீன்ல(Opening Scene) இசை, கோகிலா, புரோகிதர் மூன்று பேரும் ஒரு துளசி செடி பக்கத்தில் நின்று கொண்டு இருக்கிறார்கள். புரோகிதர் இசையிடம், துளசி மாடத்திற்கு விபூதி, குங்குமம் வைக்க சொல்கிறார். அப்புறம் கங்கை தண்ணீர் எடுத்து ஊற்ற சொல்கிறார். பிறகு கையில் பூக்கள் கொடுத்து துளசி மாடத்தில் போட சொல்லிப் பூஜை செய்கிறார். இசையும் புரோகிதர் சொல்வதை வரிசையாக செய்கிறாள். புரோகிதர் இசையிடம், துளசி செடி வீட்டில் இருக்கிறது ரொம்ப விசேஷம், நாட்டில் இருக்கும் மூலிகைச் செடி எல்லாத்துக்கும் துளசியை தான் ராணி என்று சொல்வார்கள், துளசி இலைகளை சாப்பிட்டால் இருமல், சளி, காய்ச்சல், தும்மல் இது எல்லாமே இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும் என்று துளசிச் செடியின் பெருமையை புரோகிதர் இசைக்கு விளக்குகிறார். பின்பு துளசி செடியை சுற்றி வந்து தீபத்தைத் தொட்டு கும்பிடுங்கள் என்று புரோகிதர் இசையிடம் கூறுகிறார். இசையும் அவர் சொல்வதை எல்லாம் அப்படியே செய்கிறாள்.

காட்சி(Scenario) 1:

பின்பு புரோகிதர், ஏற்பாடு எல்லாம் சிறப்பாக செய்து விட்டீர்கள். பூஜைக்கு உண்டான ஏற்பாடு எல்லாம் நான் செய்து வருகிறேன், ஆனால் பாட்டு பாட தான் யாரும் இல்லை, அதான் ஒரு குறையாக இருக்கிறது. இசை, நீ பாட மாட்டியா?? என்று கேட்கிறார். அதற்கு இசை, எனக்கு பாட தெரியாது என்று கூறுகிறாள். அதற்கு புரோகிதர், ஏன் பாட்டு பாட கற்றுக் கொள்ள வில்லையா!!! இந்த காலத்து பெண்கள் எது தேவையோ அதை கற்றுக் கொள்வதில்லை, நான் போய் பூஜைக்கான வேலை பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார். பிறகு இசை கோகிலாவிடம், இவர் வந்ததில் இருந்து பாட்டு பாடணும், பாட்டு பாடணும் என்று சொல்லிட்டே இருக்கிறார் என்று கூறுகிறாள்.

அதற்கு கோகிலா, அம்மா சாமி பாட்டு தானே, நீங்களே பாடி விடுங்கள், பிரச்சனை முடிந்துவிடும் என்று கூறுகிறாள். அதற்கு இசை, அட நீ வேற, என் பெயரில் தான் இசை இருக்கு, ஆனால் எனக்கும் இசைக்கும் ரொம்ப தூரம், நான் அப்படியே பாடினாலும் சினிமா(Cinema) பாட்டுனா கூட ஓகே(Ok) எப்படியாவது பாடி விடலாம், ஆனால் சாமி பாட்டு எல்லாம் எனக்கு பாட தெரியாது என்று கூறுகிறாள். உடனே கோகிலா, இப்ப என்ன உங்களுக்கு சாமி பாட்டு பாடும் அவ்வளவு தானே, கவலையை விடுங்க, நீங்க இந்த வில்லாவுக்கு புதுசு, அதனால் என்ன பத்தி உங்களுக்கு தெரியவில்லை!!! எனக்கு இன்னொரு பேர் இருக்கு??? நான் சாதாரண கோகிலா இல்ல….. கூகுள்(Google) கோகிலா. இந்த வில்லாவில் கேட்டு பாருங்க என்ன பத்தி நிறைய சொல்லுவாங்க. இந்த வில்லாவில் யாருக்கு என்ன வேணும்-னு ஏன் கிட்ட சொன்னால் போதும் அடுத்த நிமிடமே கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் என்று கூறுகிறாள். அதற்கு இசை, இப்ப என்ன தான் சொல்ல வர என்று கேட்கிறாள்.

காட்சி(Scenario) 2:

உடனே கோகிலா, உங்களுக்கு பாட்டு பாட ஆள் தானே வேணும், என் கைவசம் ஒரு ஆள் இருக்கு, அவங்க பெயர் தாயம்மா என்று கூறுகிறாள். அதற்கு இசை, யார் அந்த தாயம்மா!!!! என்று கேட்கிறாள். அதற்கு கோகிலா, இந்த வில்லாவில் தாயம்மா யாருன்னு கேட்ட முதல் ஆள் நீங்க தான் என்று கூறுகிறாள். அதற்கு இசை, என்ன பில்டப்(Build Up) எல்லாம் ரொம்ப பயங்கரமா இருக்கிறது என்று கூறுகிறாள். அதற்கு கோகிலா, இந்த வில்லாவில் காது குத்துறதிலிருந்து அறுபதாம் கல்யாணம் வரைக்கும் எப்போதும் என்ன விசேஷம் நாளும் தாயம்மா பாட்டு இல்லாமல் நடக்கவே நடக்காது, சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பாட்டு என்றால் தாயம்மா தான், அவங்க பாடுவதை கண்ணை மூடி கேட்டால் கோவிலில் சாமி சாமி முன்னாடி நிக்கிற மாதிரி இருக்கும். பாட்டு மட்டும் இல்ல, சமையலும் சூப்பரா(Super) பண்ணுவாங்க. எல்லாத்துக்கும் மேல தாயம்மா ரொம்ப நல்லவங்க. ஆனால் அவங்களுக்குனு யாருமே இல்ல, அவங்களுக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டும் இருக்கிறாள், பாவம் அவளும் மனவளர்ச்சி இல்லாதவள். இப்போது தாயம்மா வர நேரம் தான், நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன். இசை அம்மா பாட்டைப் பற்றி கவலைய விடுங்க, தாயம்மா இருக்காங்க என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்புகிறாள்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 3:

உடனே இசை, யாரு அந்த தாயம்மா???? என்று சிரித்துக்கொண்டே கேட்கிறாள். அப்போது தான் தாயம்மா ஓட இன்றோடக்சன் சீன்(Introduction Scene) வருது. ஓப்பனிங் சீன்-ல(Opening Scene) தாயம்மா ஒரு வீட்டின் உள்ளிருந்து கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வருகிறார். தெரசா, தெரசா, என்று அழைத்துக் கொண்டு மிகவும் பதற்றமாக தெரசாவை தேடுகிறார். பக்கத்தில் இருக்கும் சிலரிடம் என் பொண்ணை பார்த்தீர்களா??? என்று அழுது கொண்டே தேடுகிறார். கொஞ்ச தூரத்தில் சில குழந்தைகள் தெரசாவை வம்புழுத்து கொண்டு இருக்கிறார்கள். தெரசா அழுது கொண்டு இருக்கிறாள். அதைப் பார்த்த தாயம்மா, அந்த குழந்தைகளை திட்டி அனுப்பி விட்டு தெரசாவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருக்கிறாள். அப்போது ஒரு அம்மா வந்து கடவுள் மாதிரி வந்து தெரசாவை காப்பாற்றி விட்டார் என்கிறார். அதற்கு தாயம்மா, கடவுள் எல்லா நேரமும் கூடவே இருக்க முடியாது என்று தான் அம்மா என்று ஒருவரை படைத்திருக்கிறார். அந்தக் கடவுளால் கூட காப்பாற்ற முடியல-னா கூட பெத்த புள்ளைய கண்டிப்பா அம்மா காப்பாத்துவா…. என்று கூறிவிட்டு அங்கிருந்து தெரசாவை அழைத்துச் செல்கிறார்.

காட்சி(Scenario) 4:

இசை வீட்டில் கிரகப்பிரவேசத்திற்கான வேலை எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது வீட்டிற்கு வெளியில் ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து வாலி இறங்குகிறான். இசை இன்று நடக்கப்போவது கிரகப்பிரவேசம் இல்லை கருமாதி, மொத்த குடும்பத்தையும் அழிக்கத்தான் நான் வந்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் போகிறான். கோகிலாவிடம் இசை அக்காவை பார்க்க வேண்டும் என்கிறான். அதற்கு கோகிலா, இசை அம்மா தம்பியா, வாங்க சார் உட்காருங்க, நான் போய் அம்மாவை கூட்டிட்டு வருகிறேன் என்கிறாள். கோகிலா இசையை பார்த்து, இசை அம்மா உங்களை பார்க்க உங்க தம்பி வந்திருக்கிறார் என்று கூறுகிறாள். உடனே இசை வாலியிடம் போய் நீ இப்போ எதுக்கு இங்க வந்த, வீட்டிற்கு வந்தவங்களை வாசலில் வைத்து பேசக்கூடாது என்று தான் வீட்டிற்கு உள்ளே வரச்சொல்லி பேசிக்கொண்டு இருக்கிறேன் என்கிறாள். அதற்கு வாலி சரி நான் எதற்கு வந்தேன் என்று சொல்லி விடுகிறேன். இதுல புடவையும் கொஞ்சம் இனிப்பும் இருக்கு, இத அப்பா உங்ககிட்ட கொடுக்கச் சொன்னார் என்கிறான். இசை மிகவும் சந்தோஷமாக அதை வாங்கிக் கொள்கிறாள். நிஜமாக தான் சொல்கிறாயா?? அப்பாவா கொடுத்து விட்டார் என்கிறாள். அதற்கு வாலி ஆமா சிஸ்டர்(Sister) அப்பா தான் கொடுத்து விட்டார். அன்றைக்கு சொன்னீங்கள்ள, அப்பா மனசுல எப்போதுமே நீங்க தான் இருக்கீங்க என்கிறான்.

காட்சி(Scenario) 5:

அதற்கு இசை, அப்பா எப்போதுமே இப்படித்தான் எல்லார் முன்னாடியும் மிகவும் கடினமாக நடந்து கொள்வது போல் நடிப்பார், ஆனால் மனதளவில் ரொம்ப சின்ன குழந்தை மாதிரி, நான் வீட்டிற்கு போனபோது நான் கொடுத்த இன்விடேஷன்-அ (Invitation) கையில கூட வாங்கவில்லை, ஆனால் மனசு கேட்காம எனக்கு புடவையும், இனிப்பும் கொடுத்து அனுப்பி இருக்கிறார். என் வாழ்க்கையில் இன்று தான் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன். அப்பா கிட்ட நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன் என்று சொல் என்கிறாள். அதற்கு வாலி, சரி சிஸ்டர்(Sister) நான் சொல்லி விடுகிறேன், அப்புறம் அப்பா இன்னொரு விஷயம் சொன்னார், சொல்ல சங்கடமா இருக்கு இருந்தாலும் சொல்கிறேன், இதை காரணமாக வைத்து கொண்டு அடிக்கடி வீட்டுக்கு வரவேண்டாம் என்று சொல்லச் சொன்னார் என்று கூறுகிறான். அதற்கு இசை, அப்பா எனக்காக இதை பண்ணினதே போதும், சீக்கிரம் என் மேல இருக்குற கோபம் போய்விடும் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு என்கிறாள். அதற்கு வாலி, சரி சிஸ்டர்(Sister) நான் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

மேலும் படிக்கதந்தையின் அன்பிற்கு ஏங்கும் மகள்

காட்சி(Scenario) 6:

கோகிலா அவளுடைய கணவனுக்கும் ஜூஸ்(Juice) எடுத்துட்டு வந்து கொடுக்கிறாள். அப்போது எதேச்சையாக தாயம்மாவை பார்க்கிறாள். கோகிலா தாயம்மாவிடம் போய், தாயம்மா வில்லாவுக்கு புதிதாக ஒரு குடும்பம் குடி வந்து இருக்கிறார்கள். கிரகப்பிரவேசத்துல சாமி பாட்டு பாட யாராவது இருக்கிறார்களா?? என்று கேட்டார்கள், நான் உன்னை கூட்டிட்டு வரேன் என்று சொல்லி விட்டேன், நீ வந்து ஒரு சாமி பாட்டு பாடிட்டு போ, அந்த சாரும்(Sir) அம்மாவும் ரொம்ப நல்ல டைப்(Type) வரியா?? என்று கேட்கிறாள். அதற்கு தாயம்மா, வேண்டாம் கோகிலா தெரசா வைத்துக்கொண்டு பொது இடத்தில் எல்லாம் விட்டுட்டு இருக்க முடியாது என்கிறார். அதற்கு கோகிலா, தெரசாவை நான் பார்த்துகிறேன், நீ எப்போதுமே பாடுவல்ல சாமி பாட்டு அதில் ஒன்று பாடினால், அவங்க ரொம்ப சந்தோஷபடுவாங்க, எனக்காக வா தாயம்மா என்கிறாள். அதற்கு தெரசா, தாயம்மா பாட்டு பாட பாட்டு பாட போறியா, அவங்க சாக்லேட்(Chocolate) தருவாங்களா? என்கிறாள். அதற்கு கோகிலா, சாக்லேட் என்ன உனக்கு ஐஸ்க்ரீமே(Ice Cream) தருவாங்க என்கிறாள். உடனே தெரசா, நம்ம போகலாம் தாயம்மா என்கிறாள். உடனே தாயம்மா சரி என்கிறார்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 7:

இசை மிகவும் சந்தோசமாக ஓடி வந்து விஜயிடம், புடவையையும்(Saree) ஸ்வீட்டையும்(Sweet) காட்டி இது யாரு கொடுத்தானு சொல்லுங்க பார்ப்போம் என்கிறாள். அதற்கு விஜய், அதுக்குள்ள உனக்கு Gift எல்லாம் வர ஆரம்பிச்சுடுச்சா என்கிறார். அதற்கு இசை, இது எங்க அப்பா கொடுத்துவிட்டார், இப்போது தான் வாலி வந்து கொடுத்துவிட்டுச் செல்கிறான் என்று மிகவும் சந்தோசமாக கூறுகிறாள். அதற்கு விஜய், உங்க அப்பாவுக்கு உன் மேல கோவம் போய்டுச்சா!! அப்படித்தானே அர்த்தம்!! சரி ஓகே(Ok) இந்த Function-ல உங்க அப்பா வாங்கி கொடுத்த இந்த புடவைய தான் கட்டனும், இது உனக்கு ரொம்ப ஸ்பெஷல்(Special) அதனால் இத தான் கட்ட வேண்டும் என்கிறார். அதற்கு இசை, சிரித்துக்கொண்டு ரொம்ப தேங்க்ஸ்(Thanks) விஜய் என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்புகிறாள்.

காட்சி(Scenario) 8:

வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு வில்லாவில் உள்ள அனைவருமே வந்துவிட்டார்கள். இப்போது Function Start ஆகுது. விஜய், இசை, சுந்தர் மூன்று பேரும் நின்று கொண்டு இருக்கிறார்கள். வீட்டின் விசேஷத்துக்கு வந்த எல்லோருக்கும் வணக்கம் சொல்கிறார்கள். ஒவ்வொருவரும் Gift கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு ஒவ்வொருத்தரும் அவங்கள அவங்களே Intro பண்ணிக்கிறாங்க. அதற்கு விஜய் இசையிடம், ஒவ்வொருதவங்களும் ஒவ்வொரு மாதிரி இருக்காங்க பார்த்து பக்குவமாக பழகு என்கிறார். எல்லோரும் வாருங்கள் பூஜையை ஆரம்பித்து விடலாம் என்கிறார் விஜய். பின்பு புரோகிதர் பூஜை ஆரம்பிக்கிறார். புரோகிதர் விஜயிடம் மாலையை எடுத்து அம்மா கழுத்துல போடுங்க என்கிறார், விஜயும் அப்படியே செய்கிறார். அடுத்த மாலையை பையனுக்கு போடுங்க என்று கூறுகிறார். விஜய் மாலையை எடுக்கும் பொழுது மாலை தவறி கீழே விழப் போகிறது, அப்போது தாயம்மா வந்து அந்த மாலையை கீழே விழாமல் பிடித்து விடுகிறார். அப்போதுதான் தாயம்மாவை விஜய் முதல் முறை பார்க்கிறார். விஜய் தாயம்மாவை மிகவும் ஆச்சரியமாக பார்க்கிறார்.

காட்சி(Scenario) 9:

மாலை தவறி கீழே விழப் போகிறது, அப்போது தாயம்மா வந்து அந்த மாலையை கீழே விழாமல் பிடித்து விடுகிறார். உடனே புரோகிதர் நல்ல வேளை மாலையை கீழே விழாமல் பிடித்து விட்டீர்கள் என்கிறார். விஜய் தாயம்மாவை மிகவும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே இருக்கிறார். அப்போது இசை, மாலையை சுந்தருக்கு போடுங்க என்கிறாள். உடனே விஜயும் மாலையை சுந்தருக்கு போடுகிறார். அடுத்து இசை மாலையை எடுத்து விஜய்க்கு போடுகிறாள். உடனே இசை கோகிலாவிடம் தாயம்மாவை பார்த்து யார் இவங்க என்று கேட்கிறாள். அதற்கு கோகிலா சொல்ல மறந்துவிட்டேன் இவங்கதான் தாயம்மா என்று அறிமுகப்படுத்துகிறாள். பெரிய பெரிய கம்பெனிக்கு(Company) எல்லாம் மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள் என்று கூறுகிறாள். உடனே விஜய் தாயம்மாவை பார்த்து உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேனே?? என்கிறார். அதற்கு ஒருவர், தம்பி நீங்கள் சென்னைக்கு புதுசா வந்த இருக்கிறீர்கள், ஆனால் இவர்கள் சென்னையிலேயே இருக்கிறவங்க இவங்கல எப்படி நீங்கள் பார்த்திருக்க முடியும் என்கிறார்.

காட்சி(Scenario) 10:

உடனே புரோகிதர், உட்காருங்க பூஜையை ஆரம்பிக்கலாம் என்று சொல்லி பூஜை ஆரம்பிக்கிறார். ஒரு பக்கம் பூஜை நடந்து கொண்டிருந்தாலும் விஜய் தாயம்மாவை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருக்கிறார். சிறிது நேரம் கழித்து பூஜையும் முடிகிறது. உடனே புரோகிதர், பூஜை நல்ல படியாக முடிந்தது, ஆனால் சாமி பாட்டு பாடி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும், ஆனால் நீங்க தான் சாமி பாட்டு பாட யாரும் இல்லனு சொல்லிட்டீங்களே என்கிறார். அதற்கு கோகிலா, சாமி என்ன இப்படி சொல்லிட்டீங்க!! எங்க தாயம்மா பாட்டை நீங்க கேட்டதில்லையே, முதலில் கேளுங்க அப்புறம் சொல்லுங்க. தாயம்மா ஒரு நல்ல பாட்டா எடுத்து விடு என்கிறாள். அதற்கு விஜய், இவங்க பாடுவாங்களா?? என்கிறார். அதற்கு மற்றொருவர், அவங்க சாமி பாட்டு பாட ஆரம்பித்து விட்டால் மேலே இருக்கிற சாமியே கீழே இறங்கி வந்து விடும் என்று கூறுகிறார். அதற்கு விஜய், அப்படியா!! அப்ப பாட சொல்லுங்க என்கிறார்.

காட்சி(Scenario) 11:

உடனே தாயம்மா, கையைக் கூப்பி, கண்களை மூடி பாட ஆரம்பிக்கிறார்.

ADVERTISEMENT

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்…..

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்…..

காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்…..

காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்…..

ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த…..

ADVERTISEMENT

ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த…..

பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவனன்றே…..

பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவனன்றே…..

அருள் செய்த பெம்மானிவனன்றே….

அருள் செய்த பெம்மானிவனன்றே….

ADVERTISEMENT

என்ற பாடலை மிக அழகாகப் பாடுகிறார்.

காட்சி(Scenario) 12:

இதில் Beauty என்ன என்றால், தாயம்மா பாடிய பாடலை விஜயும் பாடுகிறார். தாயம்மா பாடும் போது விஜயும் அந்த பாடல் வரிகளை மிகச்சரியாக வாயை அசைக்கிறார். அதை இசை வீடியோ எடுக்கிறாள். இசை மிக ஆச்சரியமாக விஜயை பார்க்கிறாள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எப்படி சாமி பாடலை இவ்வளவு சரியாக பாட முடியும் என்று ஆச்சரியமாக பார்த்துக்கொண்டே இருக்கிறாள். பாடல் பாடி முடிந்ததும் தாயம்மா,கோகிலா, தெரசா மூவரும் தாம்பூலப் பைகளில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு எல்லாம் போட்டு தாம்பூலப் பைகளை தயார் செய்து கொண்டு இருக்கிறார்கள். தாம்பூலப் பைகள் தயாரானதும் தாயம்மா எழுந்து இசை,விஜயிடம் சென்று, தாம்பூலப் பைகள் தயாராக இருக்கிறது என்கிறார். அதற்கு இசை விஜயிடம் நாம் அதை எல்லோருக்கும் கொடுத்து விடலாம் என்கிறாள். உடனே தாயம்மா அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார். உடனே இசை, தாயம்மா அங்க ஒரு Sweet Box இருக்கும், அதை எடுத்துட்டு வாங்க என்கிறாள். தாயம்மாவும் சரி என்று சொல்லிவிட்டு Sweet Box-ஐ எடுக்கச் செல்கிறார்.

மேலும் படிக்கநல்லது செய்வதால் வரும் அவமானங்கள்

காட்சி(Scenario) 13:

வாலி இசைக்கு கொடுத்த Sweet-ல் விஷத்தை கலந்து இருக்கிறான். இந்த விஷயத்தை வாலி ருத்ரனிடம் கூறிக் கொண்டு இருக்கிறான். அதற்கு ருத்ரன் இதப் பத்தி ஏன் எங்கிட்ட முன்னாடியே சொல்லவில்லை என்கிறார். அதற்கு வாலி, Relax Daddy ஏன் டென்ஷன்(Tension) ஆகிறாய், உனக்கு சர்ப்ரைஸாக(Surprise) இருக்கட்டும் என்று நினைத்து தான் சொல்லவில்லை என்கிறான். அதற்கு ருத்ரன், அதுக்கு இல்ல டா, கிரகப்பிரவேசம் நடக்கிற வீடு, அதனால் அங்கு நிறைய பேரு இருந்திருப்பாங்க, நீ ஸ்வீட் பாக்ஸ்(Sweet Box) கொடுத்தத அங்க யாராவது கண்டிப்பா பார்த்திருப்பாங்க, அடுத்து Police Enquiry அது இதுன்னு வரும் போது உன்ன போட்டு கொடுத்துட்டா நீ மாட்டிபியே??? என்ன பண்ண போற என்கிறார். அதற்கு வாலி, சிரித்துக்கொண்டே Daddy நீ வக்கீல்-க்கு குமாஸ்தா!!! நான் வக்கீல். Daddy இசை கிட்ட அவங்க அப்பா கொடுத்துவிட்டதா சொல்லி தான் அந்த Sweet Box-அ கொடுத்துட்டு வந்திருக்கிறேன். ஒருவேளை போலீஸ் என்கொயரி(Police Enquiry) வந்தா, உன் முதலாளி, என்னை வளர்க்கிற வளர்ப்பு அப்பா, அந்த Layer ஈஸ்வரமூர்த்தி தான் மாட்டிக் கொள்வார். நான் தப்பித்து விடுவேன். எப்படி என்னோட Plan என்கிறான்.

காட்சி(Scenario) 14:

அதற்கு ருத்ரன், சூப்பர் நான் உன்னை என்னோவோ நினைத்தேன், ஆனால் அப்பாவுக்கு தப்பாம பிறந்திருக்கிறாய். உன்னை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது என்கிறார். அதற்கு வாலி, இன்னும் கொஞ்ச நேரத்துல இசை செத்து போய்டுவா, அவ அப்பா ஜெயிலுக்கு போய்டுவான், அதுக்கப்புறம் அந்த மொத்த சொத்தையும் உன் மகன் வாலி தான் அனுபவிக்கப் போகிறான்…..என்கிறான். அதற்கு ருத்ரன், உன்னை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது என்கிறார். அதற்கு வாலி, இன்னும் கொஞ்ச நேரத்துல இசை செத்துட்டா அப்படின்னு ஒரு நல்ல செய்தி வரும், அப்புறம் அந்த ஈஸ்வரமூர்த்தி முன்னாடி நின்னு கதறி கதறி அழுகிற மாதிரி நடிக்கனும், So be prepare என்கிறான். அதற்கு ருத்ரன், அவ்வளவுதானே விடு வாலி, Oscar Award தேடி வந்து கொடுக்கிற அளவுக்கு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி விடுகிறேன் என்கிறார்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 15:

தாயம்மா Sweet Box-அ இசையிடம் கொடுப்பதற்காக எடுத்துச் செல்கிறார். அப்போது ரிமோட் கார்(Remote Car) வைத்து சில குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். தாயம்மா அந்த ரிமோட் காரில்(Remote Car) தெரியாமல் கால் வைத்து கீழே விழுந்து விடுகிறார். தாயம்மா கையிலிருந்த Sweet Box கீழே விழுந்து எல்லா Sweet-ம் கீழே விழுந்து விடுகிறது. அதைப் பார்த்த இசை மிகவும் கோபமாக தாயம்மாவை திட்டுகிறாள். அறிவு இல்லை உங்களுக்கு, இவ்வளவு வயசாயிடுச்சு ஒரு ஸ்வீட் பாக்ஸ்(Sweet Box) ஒழுங்கா எடுத்துட்டு வர தெரியாதா?? நல்ல நாள் அதுவுமா எங்க அப்பா வாங்கி கொடுத்தா எல்லா Sweet-ம் போயிடுச்சு, என் கண் முன்னாடி நிக்காதிங்க?? வெளியே போங்க என்கிறாள். உடனே தாயம்மா அழுது கொண்டே கீழே விழுந்த Sweet-அ எடுக்கிறார், அதற்கு இசை, அவங்கள வெளியே போக சொல்லு, கோகிலா நீ கிளீன்(Clean) பண்ணு என்கிறாள். அதற்குத் தெரசா, ஏன் தாயம்மா அவங்க உன்னை திட்றாங்க என்கிறாள். அதற்கு இசை, உங்க அம்மா பண்ண காரியத்துக்கு திட்டாம??? கொஞ்சுவாங்களா??? என்கிறாள். அதற்கு தெரசா, இசையை பார்த்து “போடி” என்கிறாள். அதற்கு இசை, மிகவும் கோபமாக ஏய் வெளியே போ!!! என்கிறாள். பின்பு தாயம்மாவும், தெரசாவும் வெளியே போகிறார்கள்.

காட்சி(Scenario) 16:

இசை விஜயின் மடியில் படுத்துக்கொண்டு அழுது கொண்டு இருக்கிறாள். Sorry விஜய் என் அப்பா கொடுத்துவிட்டு ஸ்வீட் பாக்ஸ்-அ(Sweet Box) கீழே போட்டதுனால ரொம்ப கோபப்பட்டு விட்டேன் என்கிறாள். அதற்கு விஜய், நீ தூங்கு இசை நான் போயிட்டு வீட்டில் சில வேலைகள் இருக்கு முடித்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். விஜய் வெளியே வந்த தாயம்மாவை பற்றி நினைத்துக் கொண்டு இருக்கிறார். அப்போது கோகிலா சார் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசலாமா என்கிறாள். அதற்கு விஜய், என்ன சொல்லுங்க என்கிறார். அதற்கு கோகிலா, Sir தாயம்மா ரொம்ப நல்லவங்க, எந்த வேலை கொடுத்தாலும் பொறுப்பாக செய்வாங்க, இன்னைக்கு தெரியாம அப்படி நடந்துருச்சு என்கிறாள். அதற்கு விஜய், எனக்கு எல்லாம் தெரியும், தாயம்மா மேல எந்த தப்பும் இல்லை என்கிறார். அதற்கு கோகிலா, ஆமா சார் தாயம்மா சாப்பிடாமல் கூட போயிடுச்சு வேலையெல்லாம் முடிச்சுட்டு கடைசியா சாப்பிடலாம்னு சொன்னாங்க, அதற்குள் இப்படி ஆயிடுச்சு, பாவம் அந்த தெரசா பொண்ணு பசியோடு போயிடுச்சு என்கிறாள்.

காட்சி(Scenario) 17:

அதற்கு விஜய், எனக்கு ஒரு உதவி பண்றீங்களா?? தாயம்மாக்கு சாப்பாடு எடுத்துட்டு போய் குடுத்துட்டு வந்துடுரிங்களா??? என்கிறார். அதற்கு கோகிலா, சார் நானே கேட்கலாம்-னு இருந்தேன்!!! நீங்களே சொல்லிட்டீங்க!! ஆனால் மேடம் எதுவும் சொல்லுவாங்களா?? என்கிறாள். அதற்கு விஜய், இசையிடம் சொல்ல வேண்டாம், அவ மேலயும் தப்பு இல்ல, அவங்க அப்பா கொடுத்து விட்டு Sweet Box, So அது கீழே விழுந்ததும் கொஞ்சம் Emotional ஆகி விட்டால், பாவம் தாயம்மா பசியில் இருக்கப் போறாங்க சாப்பாடு எடுத்துட்டு போய் கொடுத்து விட்டு வா என்கிறார். அதற்கு கோகிலா, சரி என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள். விஜயின் மைண்ட் வாய்ஸ்(Mind Voice) என்னமோ தெரியல அந்த அம்மாவை பார்க்கும் போது மனசுகுள்ள என்னமோ பண்ணுது, இன்றைக்கு தான் முதன்முறையாக அவங்கள பார்க்கிறேன், ஆனால் ஏற்கனவே பார்த்துப் பழகிய முகமாக இருக்கிறது, அவங்க பாடும் போது கூட அவங்க குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்கஒரு ஏழைத் தாயின் சோகக் கதை

காட்சி(Scenario) 18:

தாயம்மா இசையின் வீட்டில் நடந்த நிகழ்வை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். உடனே தெரசா, தாயம்மா நம்ப அவங்களுக்கு வேற Sweet வாங்கி கொடுத்துவிடலாம், நீ அழுகாத தாயம்மா என்கிறாள், அப்போது கோகிலா வருகிறாள். தாயம்மா உனக்கும் தெரசாவும் நான் சாப்பாடு எடுத்துட்டு வந்து இருக்கிறேன் என்கிறாள். அதற்கு தாயம்மா, அந்த வீட்டில் இருந்து எடுத்துட்டு வருகிறாயா?? என்கிறார். அதற்கு கோகிலா, நானா எடுத்துட்டு வரல அந்த விஜய் சார் தான் உனக்கும் தெரசாவும் கொடுத்து விட்டார் என்கிறாள். அதற்கு தாயம்மா, நிஜமாவா சொல்ற?? என்கிறார். அதற்கு கோகிலா, நிஜமாகத் தான் சொல்கிறேன், என்ன நீ என்னவே நம்ப மாட்டேங்கிற!! சத்தியமா விஜய் Sir தான் கொடுத்து விட்டார் என்கிறாள்.

ADVERTISEMENT

காட்சி(Scenario) 19:

அதற்கு தாயம்மா, இல்ல கோகிலா நீயே சொல்லு அந்த பொண்ணு பண்ணுனது சரியா!! என் வயசு என்ன?? அந்த பொண்ணு வயசு என்ன?? எப்படி பேசினாங்க-னு பார்த்தல்ல, வேணாம் கோகிலா நீ எடுத்துட்டு போய் விடு என்கிறார். அதற்கு கோகிலா, நான் சொல்றது ஒரு நிமிஷம் கேளு தாயம்மா, அந்த சார், மேடம்(Sir, Madam) ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கலாம், அந்த கல்யாணத்துக்கு மேடம் ஓட அப்பா ஒத்துக்கவே இல்ல, மேடம் அவங்க அப்பாவை எதிர்த்து வெளியே வந்து தான் விஜய் சாரை(Sir) கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கலாம், அதற்கு அப்புறம் இத்தனை வருஷம் கழிச்சு இப்ப தான் அவங்கள அப்பா சமாதானமாகி Sweet Box, பட்டு புடவை எல்லாம் கொடுத்து அனுப்பி இருக்காரு, அந்த மேடம் எவ்வளவு சந்தோஷபட்டாங்க தெரியுமா?? அந்த Sweet Box தான் கீழே விழுந்து வீணா போச்சு, அதான் மனசு தாங்கிக் கொள்ள முடியாமல் ஏதோ ஏதோ கோபத்துல பேசிட்டாங்க என்கிறாள்.