ADVERTISEMENT

TNPSC Group-4 Questions and Answers

டி.என்.பி.எஸ்.சி.(TNPSC) குரூப் -4 தேர்வு

பொதுத்தமிழ் – இலக்கணம்

1. கீழே காணப்படுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க:

a . கலம்பக இலக்கியத்தின் முதல் நூல் நந்திக்கலம்பகம்

b . காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட நந்திவர்ம பல்லவன் பற்றிய நூல்

c . நந்திக்கலம்பகத்தால் மாண்ட கதை நாடு அறியும் என்று தொண்டை மண்டல சதகமும், சோமேசர் முதுமொழி வெண்பாவும் நந்தி கதை உரைக்கின்றன d . ‘ அறம் பாடுதல் ‘ என்பது போர்த்தாக்குதல் முறை. இம்முறை நந்திக்கலம்பகத்தில் பாண்டிய மன்னனால் கையாளப்பட்டது

e . விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: d

2. கீழே காணப்பெறுவனவற்றுள் சரியான கூற்றுகள் எவை?

I. நிலையாமையைச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று , ‘முதுமொழிக் காஞ்சி’ இப்பெயரில் மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய நூல் , ‘அறவுரைக் கோவை’ என்றும் அழைக்கப்படுகிறது.

II. முதுமொழிக் காஞ்சியில், பதினொரு அதிகாரங்கள் உள்ளன

III . முதுமொழிக் காஞ்சி நூலில் உள்ள மொத்த பாடல்கள் – 100

ADVERTISEMENT

IV . முதுமொழிக் காஞ்சியில் மொத்தம் நூற்றுப்பத்துச் செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.

a . I மற்றும் III சரியானவை

b . I மற்றும் IV சரியானவை

c . II மற்றும் III சரியானவை

d . III மற்றும் IV சரியானவை

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: a

3. கீழ்க்காணும் திருக்குறளைத் தக்க மேற்கோள் தொடரால் நிரப்புக.

“ ஊழி பெயரினும் தாம்பெயரார் __________________________ ” .

a . சால்பென்னும் திண்மை உண்டாகப்பெறின்

ADVERTISEMENT

b . தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்

c . பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு

d . சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் e . விடை தெரியவில்லை

விடை: d

4. உரிய சொல்லால் நிரப்புக: அறனறிந்து மூத்த அறிவுடையார் ________ திறனறிந்து தேர்ந்து கொளல்.

ADVERTISEMENT

a . கேண்மை

b . நன்மை

c . வன்மை

d . தகைமை

e . விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: a

5. கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:

a . தேம்பாவணியில் அறம், பொருள், வீடு மட்டுமே பாடப்பட்டுள்ளன. இன்பம் பாடப்பெறவில்லை

b . தம்பாவணியை, ‘புறநிலைக் காப்பியம்’ என்று தன்னை புறநிலைக் காப்பியன் என்னும் தொன்னூலில் வீரமாமுனிவர் குறிப்பிடுகிறார்.

c . சீறாப்புராணத்தில் மூன்று காண்டங்களும், 92 படலங்களும் உள்ளன.

ADVERTISEMENT

d . அரபுச் சொற்கள், அரபுப்பெயர்கள் எஞ்ஞான்றும் இடம் பெறாமல் சீறாப்புராணத்தினை நற்றமிழால் யாத்த திறம் போற்றுதற்குரியது

e . விடை தெரியவில்லை

விடை: d

6. குமரகுருபரரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல்

a . மதுரைக் கலம்பகம்

ADVERTISEMENT

b . நந்திக்கலம்பகம்

c . கந்தர் கலிவெண்பா

d . நீதிநெறி விளக்கம்

e . விடை தெரியவில்லை

விடை: b

ADVERTISEMENT

7. சரியான விடையைத் தெரிவு செய்க:

‘ கிறித்தவக் கம்பர் ‘ எனப் புகழப் பெறுபவர்

a . வீரமாமுனிவர்

b . ஜி.யூ.போப்

c . எல்லீஸ்

ADVERTISEMENT

d . ஹென்றி ஆல்பர்ட்டு கிருட்டினணார்

e . விடை தெரியவில்லை

விடை: d

8. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:

a . சிலப்பதிகாரம், மணிமேகலை

ADVERTISEMENT

b . இன்னாநாற்பது, இனியவை நாற்பது

c . இராமாயணம், மகாபாரதம்

d . பாண்டியன் நெடுஞ்செழியன், கபிலர்

e . விடை தெரியவில்லை

விடை: d

ADVERTISEMENT

9. அதியமான் நெடுமானஞ்சியின் அவைக்களப் புலவராக திகழ்ந்தவர்

a . வெள்ளிவீதியார்

b . ஒளவையார்

c .காக்கை பாடினியார்

d . நக்கண்ணையார்

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: b

10. கீழே தரப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை?

I. குறுந்தொகைச் செய்யுட்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளையும், அதிக அளவாக ஏழு அடிகளையும் கொண்டு இருக்கின்றன. க

II . குறுந்தொகைச் செய்யுட்களைத் தொகுத்தவர் பூரிக்கோ

ADVERTISEMENT

III . குறுந்தொகைக்கு நக்கீர தேவநாயனார் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியுள்ளார்

IV . குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன.

a . II , III சரியற்ற

b . I , IV சரியற்றவை

c . I , III சரியற்றவை

ADVERTISEMENT

d . III , IV சரியற்றவை

e . விடை தெரியவில்லை

விடை: c

11. திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று அது மன்பதைக்கு – உலகுக்குப் பொது கூறியவர்

a . கி.ஆ.பெ. விசுவநாதம்

ADVERTISEMENT

b . கால்டுவெல்

c . திரு.வி.க

d . மு.வ

e . விடை தெரியவில்லை

விடை: c

ADVERTISEMENT

மேலும் படிக்கTNPSC Group-4 Questions and Answers

12. ‘ சின்னச்சீறா ‘ என்ற நூலை எழுதியவர்

a . பனு அகமது மரைக்காயர்

b . உமறுப்புலவர்

c . அப்துல் ரகுமான்

ADVERTISEMENT

d . சேக் மீரான்

e . விடை தெரியவில்லை

விடை: a

13. எச்.ஏ.கிருட்டிணனாருக்கு இலக்கணம் கற்பித்த ஆசிரியரின் பெயர்

a . மாணிக்கவாசகத் தேவர்

ADVERTISEMENT

b . சங்கர நாராயணர்

c . பிலவண சோதிடர்

d . தெய்வநாயகி

e . விடை தெரியவில்லை

விடை: a

ADVERTISEMENT

14. சூடாமணி நிகண்டு – ஆசிரியர்

a . திவாகர முனிவர்

b . பிங்கலம்

c . வீரமண்டல புருடர்

d . காங்கேயர்

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: c

15. ” ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே ” எனும் பாடலடிகள் இடம் பெற்ற நூல்

a . குறுந்தொகை

b . புறநானூறு

ADVERTISEMENT

c . பதிற்றுப்பத்து

d . பத்துப்பாட்டு

e . விடை தெரியவில்லை

விடை: b

16. சிறு பஞ்ச மூலத்தில் கடவுள் வாழ்த்துடன் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?

ADVERTISEMENT

a . தொண்ணூறு

b . தொண்ணூற்றேழு

c . நூறு

d . ஐம்பது

e . விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: b

17. தமிழில் காணும் முதல் சித்தர்

a . திருமூலர்

b . அருணகிரிநாதர்

c . தாயுமானவர்

ADVERTISEMENT

d . வள்ளலார்

e . விடை தெரியவில்லை

விடை: a

18. மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை

a . 10

ADVERTISEMENT

b . 20

c . 30

d . 40

e . விடை தெரியவில்லை

விடை: c

ADVERTISEMENT

19.பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி

a . யசோதர காவியம்

b . நாககுமார காவியம்

c . உதயகுமார காவியம்

d . வளையாபதி

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: d

20. வாய்மை எனப்படுவது

a . குற்றமோடு பேசுதல்

b . மற்றவர் வருந்த பேசுதல்

ADVERTISEMENT

c . சுடும் சொற்களைப் பேசுதல்

d . தீங்கு தராத சொற்களைப் பேசுதல்

e . விடை தெரியவில்லை

விடை: d