டி.என்.பி.எஸ்.சி.(TNPSC) குரூப் -4 தேர்வு
பொதுத்தமிழ் – இலக்கணம்
1. ‘ படிப்பித்தார் ‘ என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
a . படித்த
b . படிப்பி
c . படித்தல்
d . படி
e . விடை தெரியவில்லை
விடை: b
2. கயல்விழி என்பதன் இலக்கணக் குறிப்பு
a . வேற்றுமைத் தொகை
b . உவமைத்தொகை
c . பண்புத் தொகை
d . உம்மைத் தொகை
e . விடை தெரியவில்லை
விடை: b
3. பொங்கல் உண்டோம் என்பது
a . இடவாகு பெயர்
b . சினையாகு பெயர்
c . தொழிலாகு பெயர்
d . பொருளாகு பெயர்
e . விடை தெரியவில்லை
விடை: c
4. ‘ டைஸ் ‘ என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்
a . மாதம்
b . நாள்
c . வாரம்
d . ஆண்டு
e . விடை தெரியவில்லை
விடை: b
5. இவற்றுள் முற்றெச்சத்தை எடுத்து எழுதுக:
a . கண்ணன் உறங்கினான் விழித்தான்
b . கண்ணன் விழித்து எழுந்தான்
c . கண்ணன் எழுந்து படித்தான்
d . கண்ணன் படித்து முடித்தான்
e . விடை தெரியவில்லை
விடை: a
6. சொற்களை வரிசைப்படுத்தி மறைந்த பழமொழியினை கண்டறிக.
a . குப்பை துலங்க மேனி மேனி
b . மேனி குப்பை துலங்க மேனி
c . மேனி துலங்க குப்பை மேனி
d . துலங்க மேனி குப்பை மேனி
e . விடை தெரியவில்லை
விடை: c
7. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்:
a . நீர்வழிப்படுஉம் ஆருயிர் முறைவழிப்படூஉம் புனைபோல்
b . ஆருயிர் முறைவழிப்படூஉம் நீர்வழிப்படுஉம் புனைபோல்
c . முறைவழிப்படூஉம் ஆருயிர் புனைபோல் நீர்வழிப்படுஉம்
d . நீர்வழிப்படுஉம் புனைபோல் ஆருயிர் முறைவழிப்படுஉம்
e . விடை தெரியவில்லை
விடை: d
8. ” செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆறும் தருவது வினையே ” – இதில் ‘ வினை ‘ என்னும் சொல் குறிப்பது
a . தெரிநிலை வினைமுற்று
b . குறிப்பு வினைமுற்று
c . குறிப்புப் பெயரெச்சம்
d . வினைமுற்று
e . விடை தெரியவில்லை
விடை: a
9. வழூஉச் சொல்லற்ற தொடர் எது?
a . வலது பக்கச் சுவரில் எழுதாதே
b . வலப்பக்கச் சுவரில் எழுதாதே
c . வலப்பக்கச் சுவற்றில் எழுதாதே
d . வலது பக்கச் சுவற்றில் எழுதாதே
e . விடை தெரியவில்லை
விடை: b
10. கீழ்வருவனவற்றுள் பிழையில்லாச் சொற்றொடர் எது?
a . அவளது தந்தையும் எனது மகனும் கூறுவது எற்கத்தக்கது அல்ல
b . அவள் தந்தையும் என் மகனும் கூறுவன ஏற்கத்தக்கன அல்ல
c . அவளின் தந்தையும் என் மகனும் கூறுவன ஏற்கத்தக்கது அன்று
d . அவள் தந்தையும் எனது மகனும் கூறுவது எற்கத்தக்கது அன்று
e . விடை தெரியவில்லை
விடை: b
11. பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத சொல்லைக் கண்டறிக: பண்புத் தொகை
a . நற்றிறம்
b . நன்மொழி
c . செம்மொழி
d . தேமொழி
e . விடை தெரியவில்லை
விடை: d
12.பொதும்பர் – என்பதன் இலக்கணக் குறிப்பு – தேர்க:
a . உருவகம்
b . உம்மைத் தொகை
c . ஈற்றுப் போலி
d . ஆகுபெயர்
e . விடை தெரியவில்லை
விடை: c
13. வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க:
a . வெண்ணீர் தாவாரத்தில் ஓடியது
b . வெந்நீர் தாவாரத்தில் ஓடியது
c . வெந்நீர் தாழ்வாரத்தில் ஓடியது
d . வெண்ணீர் தாழ்வாரத்தில் ஓடியது
e . விடை தெரியவில்லை
விடை: c
14. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக:
a . முருகன் சிலப்பதிகாரத்தைப் படித்தான் b . முருகன் சிலப்பதிகாரத்தைப் படிப்பித்தான்
c . சிலப்பதிகாரம் முருகனால் படிக்கப்பட்டது
d . சிலப்பதிகாரத்தைப் படித்தவன் முருகன் e . விடை தெரியவில்லை
விடை: b
15. உழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க:
a . ஒருத்தி புட்டு வித்து சிலவு செய்தாள்
b . ஒருத்தி புட்டு விற்று செலவு செய்தாள் c . ஒருத்தி பிட்டு வித்து சிலவு செய்தாள்
d . ஒருத்தி பிட்டு விற்றுச் செலவு செய்தாள் e . விடை தெரியவில்லை
விடை: d
மேலும் படிக்க: TNPSC Group-4 Questions and Answers
16. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
a . யாமம் , யாப்பு , யாணர் , யவனர்
b . யவனர் , யாணர் , யாப்பு , யாமம்
c . யாணர் , யவனர் , யாமம் , யாப்பு
d . யாப்பு , யாமம் , யவனர் , யாணர்
e . விடை தெரியவில்லை
விடை: b
17. கீழ்க்காணும் பாடலிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?
” நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப் போல் காணுமே – அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் ஈந்த உபகாரம் நீர்மேல் எழுத்திற்கு நேர் ”
a . நல்லார் x தீயார்
b . உபகாரம் × உபத்திரவம்
c . ஈரம் x காய்ந்த
d . காணுமே x காணாதே
e . விடை தெரியவில்லை
விடை: c
18. ‘ வீ என்ற ஓரெழுத்து ஒருமொழி குறிக்காத பொருள்.
a . காற்று
b . மலர்
c . கொல்
d . பறவை
e . விடை தெரியவில்லை
விடை: a
19. வாக்கியங்களைக் கவனி:
கூற்று ( A ) : அனைவரும் தாய்மொழியைப் போற்றுக
காரணம் ( R ) : விழைவு , வேண்டுதல் , வாழ்த்தல் , வைதல் ஆகியவற்றுள் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியம் வியங்கோள் வாக்கியம்
இவற்றுள்:
a . A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A விற்கு சரியான விளக்கமல்ல
b . A சரி. ஆனால் R தவறு
c . A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A விற்கு சரியான விளக்கம்
d . A தவறு, ஆனால் R சரி
e . விடை தெரியவில்லை
விடை: c
20. பெயர்ச்சொல்லின் வகை அறிக:
‘ கேண்மை ‘
a . குணப்பெயர்
b . இடப்பெயர்
c . காலப்பெயர்
d . சினைப்பெயர்
e . விடை தெரியவில்லை
விடை: a
21. பொருத்தம் இல்லாச் சொல்லைத் தேர்வு செய்:
a . Cajole – மருட்டி இசைவி
b . Cajolement – மருட்டி வசப்படுத்துதல்
c . Caitiff – இணங்கச் செய்
d . Cajolery – பசப்பதல்
e . விடை தெரியவில்லை
விடை: c
22. இரண்டு உதடுகள் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துகள்
a . ய் , ர்
b . க் , ங்
C. ல் , ள்
d . ப் , ம்
e . விடை தெரியவில்லை
விடை: d
23. இலக்கணக் குறிப்பறிதல்
” நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே ‘ கூற்று A : செய்யுளிசையளபெடை
காரணம் ( R ): ஒரு சீரில் இயல்பாக உள்ள நெட்டெழுத்து அளபெடுத்து, அளபெடைக் குறியை நீக்கினால் செய்யுளில் சீர், தளை கெடும்
a . A சரி . ஆனால் R தவறு
b . A மற்றும் R இரண்டும் சரி . மேலும் R என்பது A விற்குச் சரியான விளக்கம்
c . A தவறு , ஆனால் R சரி
d . A மற்றும் R இரண்டும் தவறு
e . விடை தெரியவில்லை
விடை: b
24. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: ‘ தமிழக அரசு சிறந்த கலைஞர்களைக் கௌரவிக்கிறது ‘
a . செயப்பாட்டு வாக்கியம்
b . தொடர் வாக்கியம்
c . கலவை வாக்கியம்
d . செய்வினை வாக்கி
e . விடை தெரியவில்லை
விடை: d
25. விகுதிப் பெற்றுள்ள தொழிற்பெயரைக் கண்டறிக
a . தொண்டு
b . கூத்து
c . நசை
d . ஆட்டம்
e . விடை தெரியவில்லை
விடை: d
26. கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிதல்
‘ எத்திசையும் புகழ்மணக்க இருந்த
பெருந் தமிழணங்கே ‘
a . உம்மைத்தொகை , வினைத்தொகை
b . முற்றும்மை , பண்புத்தொகை .
c . இழிவு சிறப்பும்மை , உயர்வு சிறப்பும்மை
d . வினைத்தொகை , பண்புத்தொகை
e . விடை தெரியவில்லை
விடை: b
27. ஒரு பாடலில் சொல் பிரிவுறாது நின்று பலபொருள் தருவது
a . சிலேடை
b . செம்மொழிச் சிலேடை
c . பிரிமொழிச் சிலேடை
d . பிறிது மொழிதல்
e . விடை தெரியவில்லை
விடை: b
மேலும் படிக்க: TNPSC Group-4 Questions and Answers
28. வாக்கிங் போகும் போது மொபைல் யூஸ் பண்ண வேண்டாம் – சரியாக மொழிபெயர்க்கப்பட்ட வாக்கியத்தைக் கண்டறிக
a . நடைபயிற்சி செய்யும் போது செல்பேசியைப் பயன்படுத்த வேண்டாம்
b . நடைபயிற்சி போகும் போது அலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம்
c . நடைபயிற்சி போகும் போது தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம்
d . நடைபயிற்சியின் போது இணையதளம் பயன்படுத்த வேண்டாம்
e . விடை தெரியவில்லை
விடை: b
29. மரபுப் பிழையற்ற வாக்கியம் எது?
a . மயில் கூவியது ; குயில் குழறியது
b . குயில் கூவியது ; மயில் முழங்கியது
c . குயில் கத்தியது ; மயில் அலறியது
d . குயில் கூவியது ; மயில் அகவியது
e . விடை தெரியவில்லை
விடை: d
30 . கீழ்க்காணும் ‘ வல்லினம் மிகா இடம் ‘ குறித்த இலக்கணக் கூற்றில் பிழையான கூற்று எது?
a . வினைத்தொகையில் வல்லினம் மிகாது
b . உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது
c . இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது
d . நான்காம் வேற்றுமை விரியில் வரும் வல்லினம் மிகாது
e . விடை தெரியவில்லை
விடை: d
31. சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக?
a . திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி ஒலிப்படக்கருவி பயன்படுகிறது
b . திரைப்படம் மக்களை தன்பால் ஈர்க்கவல்லது
C. கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
d . செய்திபடங்கள் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்
e . விடை தெரியவில்லை
விடை: a
32. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க .
a . இலக்கியம் – இலக்கு + இயம்
b . செம்மொழி – செம்மை + மொழி
c . தமிழ்நாடு – தமிழ் + நாடு
d . வேரூன்றிய – வேரு + ஊன்றிய
e . விடை தெரியவில்லை
விடை: d
33. ஆங்கிலச்சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிக. இந்தச் செஞ்சுரி டென்ஷன் நிறைந்தது
a . இந்த நூற்றாண்டு பரபரப்பானது
b . இந்த ஆண்டு பதற்றம் நிறைந்தது
c . இந்த நூற்றாண்டு மனக்கவலை அளிப்பது
d . இந்த நூற்றாண்டு மன அழுத்தம் நிறைந்தது
e . விடை தெரியவில்லை
விடை: d
34. பொருத்தமில்லாத எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி
a . தேய்ந்து x வளர்ந்து
b . குழப்பம் x தெளிவு
c . நண்பர் x செறுநர்
d . கரத்தல் x மறைத்தல்
e . விடை தெரியவில்லை
விடை: d
35. கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க:
a . ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு , மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்
b . பாம்பாட்டிச் சித்தர் , குதம்பைச் சித்தர் , அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப் பெயர்கள்
c . எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர்கள் சித்தர்கள்
d . இரும்பைப் பொன்னாக்கும் இரசவாத வித்தை கற்று உலகில் செல்வராக வாழச் சித்தர்கள் அவாவினர்
e . விடை தெரியவில்லை
விடை: d