ADVERTISEMENT

சில எளிதான காலிஃபிளவர் சமையல்

நம் உடலில் உள்ள பல முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவது இந்த காலிஃப்ளவர் தான். எனவே இதை நம் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நம் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் விரைவில் குணமடையும். காலிஃப்ளவர் பயன்படுத்தி செய்யக் கூடிய சில உணவுகளை இங்கே பார்ப்போம்.

காலிஃப்ளவர் குருமா

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – ஒன்று

தக்காளி – இரண்டு

வெங்காயம் – இரண்டு

மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

இஞ்சி விழுது – ஒரு  டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

தேங்காய்த்துருவல் – ஒரு கப்

கசகசா – 1/2 டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

பச்சைமிளகாய் – நான்கு

பிரியாணி இலை – ஒன்று

ஏலக்காய் – இரண்டு

கிராம்பு – இரண்டு

அன்னாசிப் பூ – ஒன்று

ADVERTISEMENT

ஜாதிக்காய் – ஒன்று

பாலில் ஊற வைத்த முந்திரி – ஆறு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

ADVERTISEMENT

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

  • காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக நறுக்கி வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்துப் இரண்டு அல்லது மூன்று நிமிடம் வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துருவல், கசகசா, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பாலில் ஊற வைத்த முந்திரியை தண்ணீர் ஊற்றி நன்கு மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய், பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும். பின்பு வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளி, இஞ்சி விழுது, பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
  • பின்பு வேக வைத்த காலிஃப்ளவர், போதுமான உப்பு சேர்த்துக் கிளறி, வேகும் வரை வைக்கவும். பின்பு நாம் அரைத்து வைத்திருந்த தேங்காய்த்துருவல், கசகசா, சோம்பு கலவையை கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட வேண்டும்.
  • பின்பு பாலில் ஊற வைத்த முந்திரி கலவையை சேர்த்து, கடைசியாக கொத்தமல்லி,கறிவேப்பிலை உப்பு போட்டு ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
  • சுவையான காலிஃப்ளவர் குருமா தயார்.

மேலும் படிக்கசில எளிதான பலாக்காய் சமையல்

கோபி மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – ஒன்று

குடைமிளகாய் – ஒன்று

வெங்காயத்தாள் – சிறிதளவு

ADVERTISEMENT

கொத்தமல்லி தழை – சிறிதளவு

வெங்காயம் – இரண்டு

சோள மாவு – நான்கு டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு – நான்கு  டேபிள் ஸ்பூன்

மைதா மாவு –  நான்கு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

இஞ்சி விழுது – இரண்டு டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது – இரண்டு  டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகுத் தூள் –  ஒரு டீஸ்பூன்

சிக்கன் வறுவல் மசாலா –  ஒரு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

சோயா சாஸ்- இரண்டு டேபிள் ஸ்பூன்

தக்காளி சாஸ் –  இரண்டு டேபிள் ஸ்பூன்

மிளகாய் சாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

ADVERTISEMENT

செய்முறை:

  • காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக நறுக்கி வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்துப் இரண்டு அல்லது மூன்று நிமிடம் வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மிளகுத் தூள், சிக்கன் வறுவல் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, தேவைக்கேற்ப உப்பு, வேக வைத்த காலிஃப்ளவரையும் சேர்த்து நன்கு கலந்து, லேசாக நீர் தெளித்து பிசையவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், குறைந்த தீயில் வைத்து காலிஃப்ளவரை சிறிது சிறிதாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும். அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் இஞ்சி விழுது, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
  • பின்பு நறுக்கிய குடைமிளகாய், வெங்காயத்தாள், சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகாய் சாஸ், உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
  • கடைசியாக வெங்காயத்தாள், கொத்தமல்லி தழை, பொரித்தெடுத்த காலிஃப்ளவரை சேர்த்து ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
  • சூடான சுவையான கோபி மஞ்சூரியன் தயார்.

மேலும் படிக்கசில எளிதான மட்டன் உணவுகள்

காலிஃப்ளவர் கூட்டு

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – ஒன்று

கேரட் – மூன்று

பீன்ஸ் – ஆறு

பச்சை பட்டாணி – 50 கிராம்

ADVERTISEMENT

தக்காளி – ஐந்து

வெங்காயம் – இரண்டு

பச்சை மிளகாய் – மூன்று

இஞ்சி – இரண்டு துண்டு

பூண்டு – எட்டு பல்

ADVERTISEMENT

முந்திரி – பதினைந்து

பிரிஞ்சி இலை – ஒன்று

சீரகம் – ஒரு டீஸ்பூன்

ஓமம் – 1/4 டீஸ்பூன்

ஏலக்காய் – இரண்டு

ADVERTISEMENT

பட்டை – ஒன்று

எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு

இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்

பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

சீரகத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

மஞ்சள்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

தனியாத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

ப்ரஷ் கிரீம் – நான்கு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

கஸ்தூரி மேத்தி – ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • தண்ணீர், சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். அதில் நறுக்கிய காலிஃப்ளவரை சேர்த்து 3 நிமிடம் வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு  கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, 10 முந்திரி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து, இந்த கலவையை ஆறவைத்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • மீதமுள்ள முந்திரியை தனியாக வேக வைத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, சூடானதும் அதில் பிரிஞ்சி இலை, சீரகம், ஓமம், ஏலக்காய், சிறிய துண்டு பட்டை போன்றவற்றை சேர்க்கவும்.
  • அவை நன்கு பொரிந்தவுடன், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதன் பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • பின்பு மீதமுள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
  • அதனுடன் வேகவைத்த காய்கள், அரைத்து வைத்த முந்திரி விழுது, தக்காளி விழுதை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  • பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். அதில் ஃப்ரெஷ் க்ரீம், கஸ்தூரி மேத்தி, தேவையான அளவு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
  • சுவையான காய்கறி கூட்டு தயார்.

மேலும் படிக்கசில எளிதான மீன் சமையல்

காலிஃப்ளவர் வறுவல்

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – ஒன்று

ADVERTISEMENT

சோள மாவு – 50 கிராம்

அரிசி மாவு – 50 கிராம்

மைதா மாவு – 50 கிராம்

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

தனியா தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

சிக்கன் வறுவல் மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

  • காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக நறுக்கி வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்துப் இரண்டு அல்லது மூன்று நிமிடம் வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள்தூள், சிக்கன் வறுவல் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, தேவைக்கேற்ப உப்பு, வேக வைத்த காலிஃப்ளவரையும் சேர்த்து நன்கு கலந்து, லேசாக நீர் தெளித்து பிசையவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், குறைந்த தீயில் வைத்து காலிஃப்ளவரை சிறிது சிறிதாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
  • மொறுமொறு காலிஃப்ளவர் வறுவல் தயார்.

மேலும் படிக்கசில எளிதான பலாக்காய் சமையல்

மிளகு காலிஃப்ளவர்

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – ஒன்று

ADVERTISEMENT

வெங்காயம் – இரண்டு

சீரகம் – ஒரு டீஸ்பூன்

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகுத் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

கொத்தமல்லி இலை – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

  • காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக நறுக்கி வெதுப்பான நீரில் உப்பு சேர்த்துப் வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, சீரகத்தை லேசாக தாளிக்கவும். பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு காலிஃப்ளவரைப் போதுமான உப்பு, மிளகுத் தூள் சேர்ந்து எண்ணெயிலேயே நன்கு வேக விடவும்.
  • கடைசியாக நறுக்கிய கொத்துமல்லி இலையை சேர்த்து வதக்கி இறக்கவும்.
  • சுவையான மிளகு காலிஃப்ளவர் தயார்.

மேலும் படிக்கசில எளிதான சிக்கன் உணவு வகைகள்

ADVERTISEMENT

காலிஃப்ளவர் குழம்பு

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – ஒன்று

தக்காளி – மூன்று

பெரிய வெங்காயம் – இரண்டு

இஞ்சி – ஐந்து துண்டு

பூண்டு – பத்து பல்

ADVERTISEMENT

சின்ன வெங்காயம் – பத்து

பச்சை மிளகாய் – நான்கு

பட்டை – ஒன்று

தேங்காய்த்துருவல் – ஒரு கப்

கசகசா – 1/2 டீஸ்பூன்

ADVERTISEMENT

சோம்பு – ஒரு டீஸ்பூன்

முந்திரி – நான்கு

பிரியாணி இலை – ஒன்று

ஏலக்காய் – இரண்டு

கிராம்பு – இரண்டு

ADVERTISEMENT

அன்னாசிப் பூ – ஒன்று

ஜாதிக்காய் – ஒன்று

தனியா தூள் – மூன்று டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் –  ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி இலை – சிறிதளவு

புதினா – சிறிதளவு

ADVERTISEMENT

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

  • காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக நறுக்கி வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்துப் இரண்டு அல்லது மூன்று நிமிடம் வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • தேங்காய்த்துருவல், கசகசா, சோம்பு, முந்திரி,சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக பால் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து லேசாக தாளிக்கவும்.
  • பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
  • தக்காளி, பச்சை மிளகாய் நன்கு வதங்கியதும், தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, மிதமான தீயில் பத்து நிமிடம் நன்கு வேக விட வேண்டும்.
  • பின்பு தேங்காய்ப் பால், வேக வைத்த காலிஃப்ளவரை சேர்த்து ஒரு 5 நிமிடம் மூடி போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • கடைசியாக கொத்தமல்லி இலை, புதினா, கறிவேப்பிலை போட்டு ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
  • சுவையான காலிஃப்ளவர் குழம்பு தயார்.

4 comments

Leave a Reply

Your email address will not be published.