ADVERTISEMENT

சில எளிதான சிக்கன் உணவு வகைகள்

சிக்கன் சாப்பிடுவதால் உடலில் சூட்டை அதிகப்படுத்தும் என்பது பலரின் கருத்து. ஆனால் எப்போதாவது சிக்கன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் ஆடு இறைச்சி ஆகியவையில் கொழுப்பின் அளவு அதிகம். ஆனால் கோழி இறைச்சிக்கு கொழுப்பின் அளவு குறைவு.

சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்:

சிக்கன் – ஒரு கிலோ

தக்காளி – ஐந்து

பெரிய வெங்காயம் – மூன்று

இஞ்சி – ஐந்து துண்டு

ADVERTISEMENT

பூண்டு – பத்து பல்

சின்ன வெங்காயம் – பத்து

பச்சை மிளகாய் – இரண்டு

பட்டை – ஒன்று

தேங்காய்த்துருவல் – ஒரு கப்

ADVERTISEMENT

கசகசா – 1/2 டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

முந்திரி – நான்கு

பிரியாணி இலை – ஒன்று

ஏலக்காய் – இரண்டு

ADVERTISEMENT

கிராம்பு – இரண்டு

அன்னாசிப் பூ – ஒன்று

ஜாதிக்காய் – ஒன்று

தனியா தூள் – மூன்று டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் –  ஒரு டீஸ்பூன்

சிக்கன் குழம்பு மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

கொத்தமல்லி இலை – சிறிதளவு

புதினா – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

ADVERTISEMENT

செய்முறை:

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • தேங்காய்த்துருவல், கசகசா, சோம்பு, முந்திரி,சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக பால் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து லேசாக தாளிக்கவும்.
  • பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் சிக்கன், தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், சிக்கன் குழம்பு மசாலா சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, மிதமான தீயில் சிக்கனை பத்து நிமிடம் நன்கு வேக விட வேண்டும்.
  • பின்பு தேங்காய்ப் பால் கலவையை சேர்த்து ஒரு 5 நிமிடம் மூடி போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • கடைசியாக கொத்தமல்லி இலை, புதினா, கறிவேப்பிலை போட்டு ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
  • சுவையான சிக்கன் குழம்பு தயார்.

மேலும் படிக்கசில எளிதான காலிஃபிளவர் சமையல்

சிக்கன் வறுவல்

தேவையான பொருட்கள்:

சிக்கன் – ஒரு கிலோ

சோள மாவு – 50 கிராம்

அரிசி மாவு – 50 கிராம்

மைதா மாவு – 50 கிராம்

ADVERTISEMENT

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது –  ஒரு டேபிள் ஸ்பூன்

தனியா தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் –  ஒரு டீஸ்பூன்

சிக்கன் வறுவல் மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்

தயிர் – ஒரு கப்

உப்பு – தேவைக்கேற்ப

ADVERTISEMENT

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் சிக்கன், தயிர், சோள மாவு, மைதா மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள்தூள், சிக்கன் வறுவல் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து, லேசாக நீர் தெளித்து பிசையவும்.
  • இதை ஒரு மணி நேரம் அப்படியே ஊற விட வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், குறைந்த தீயில் வைத்து சிக்கன் துண்டுகளை போட்டுப் பொரித்தெடுக்கவும்.
  • மொறுமொறு சிக்கன் வறுவல் தயார்.

மேலும் படிக்கசில எளிதான வெரைட்டி ரைஸ் சமையல்

கோழி மிளகு ரசம்

தேவையான பொருட்கள்:

சிக்கன் – ஒரு கிலோ

சின்ன வெங்காயம் – ஆறு

தக்காளி – மூன்று

ADVERTISEMENT

பச்சை மிளகாய் – மூன்று

வெந்தயம் – ஒரு டீஸ்பூன்

சீரகம் – இரண்டு டீஸ்பூன்

மிளகு – ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்

ADVERTISEMENT

மிளகுத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

மஞ்சள்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய்தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

தனியாதூள் – மூன்று டேபிள் ஸ்பூன்

புளி – நெல்லிக்காய் அளவு

பட்டை – ஒன்று

லவங்கம் – இரண்டு

ஏலக்காய் – இரண்டு

ADVERTISEMENT

அன்னாசிப் பூ – ஒன்று

ஜாதிக்காய் – ஒன்று

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

ADVERTISEMENT

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பூண்டு,பச்சை மிளகாய், சீரகம், மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை லேசாக தட்டிக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசல், தக்காளி சேர்த்து நன்கு கைகளால் கரைத்துக் கொள்ள வேண்டும். நன்கு கரைந்ததும் சிறிது நேரம் கழித்து அதில், தட்டி வைத்திருந்த பூண்டு,பச்சை மிளகாய், சீரகம், மிளகு, கறிவேப்பிலை கலவையை சேர்த்து, மறுபடியும் நன்கு கைகளால் கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • சின்ன வெங்காயம், சீரகம் இரண்டையும் லேசாக தட்டிக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம், பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசிப் பூ, ஜாதிக்காய் போட்டு தாளிக்க வேண்டும்.
  • பிறகு சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து அரைத்த கலவையை எண்ணெயில் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
  • அது நன்கு வதங்கியதும், அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
  • பின்பு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், தனியாத்தூள், உப்பு, சிக்கன், சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை வேக விட வேண்டும்.
  • பின்பு ஏற்கனவே கரைத்து வைத்திருக்கும் தக்காளி, புளி கரைசலை ஊற்ற வேண்டும்.
  • அது ஒரு கொதி வந்ததும், அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
  • காரசாரமான கோழி மிளகு ரசம் தயார்.

மேலும் படிக்கசில எளிதான வடை சமையல்

ஹரியாலி சிக்கன்

தேவையான பொருட்கள்:

சிக்கன் – ஒரு கிலோ

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

தனியா தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

பிரியாணி இலை – ஒன்று

அன்னாசிப் பூ – இரண்டு

ஜாதிக்காய் – ஒன்று

வறுத்த வெங்காயம் – ஒரு கப்

ADVERTISEMENT

தயிர் –  ஒரு கப்

கொத்தமல்லி – ஒரு கப்

புதினா – ஒரு கப்

பச்சை மிளகாய் – மூன்று

முந்திரி – பத்து

ADVERTISEMENT

எண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் சிக்கன், தயிர், இஞ்சி விழுது, பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை நன்கு ஊறவிட வேண்டும்.
  • பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், வறுத்த வெங்காயம், முந்திரியை சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஊறவைத்த சிக்கனுடன் இந்த கலவையை சேர்த்து அதையும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, அன்னாசிப் பூ, ஜாதிக்காய் மற்றும் ஊற வைத்த சிக்கனை சேர்த்து 5 நிமிடம் அதிக தீயில் வைத்து சமைக்கவும். ஒரு கொதி வந்ததும் மிதமான தீயில் 10 நிமிடம் வைக்கவும்.
  • பிறகு தனியா தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வாணலியை மூடி 10 நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேக விட்டு இறக்கவும்.
  • சுவையான ஹரியாலி சிக்கன் தயார்.

மேலும் படிக்கசில எளிதான முட்டை உணவு வகைகள்

சிக்கன் கிரேவி

தேவையான பொருட்கள்:

சிக்கன் -1/2 கிலோ

தக்காளி – மூன்று

ADVERTISEMENT

வெங்காயம் – இரண்டு

சின்ன வெங்காயம் – பத்து

பச்சை மிளகாய் – இரண்டு

பட்டை – ஒன்று

இஞ்சி – ஐந்து துண்டு

ADVERTISEMENT

பூண்டு – பத்து பல்

பிரியாணி இலை – ஒன்று

ஏலக்காய் – இரண்டு

கிராம்பு – இரண்டு

அன்னாசிப் பூ – ஒன்று

ADVERTISEMENT

ஜாதிக்காய் – ஒன்று

தனியா தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் –  ஒரு டீஸ்பூன்

சிக்கன் குழம்பு மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி இலை – சிறிதளவு

புதினா – சிறிதளவு

ADVERTISEMENT

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து லேசாக தாளிக்கவும்.
  • பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் சிக்கன், தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், சிக்கன் குழம்பு மசாலா சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, மிதமான தீயில் சிக்கனை பத்து நிமிடம் நன்கு வேக விட வேண்டும்.
  • கடைசியாக கொத்தமல்லி இலை, புதினா, கறிவேப்பிலை போட்டு ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
  • சுவையான சிக்கன் கிரேவி தயார்.

மேலும் படிக்கசில எளிதான மீன் சமையல்

சிக்கன் சிந்தாமணி

தேவையான பொருட்கள்:

சிக்கன் -1/2 கிலோ

ADVERTISEMENT

சின்ன வெங்காயம் – பதினைந்து

காய்ந்த மிளகாய் – ஆறு

மிளகுத் தூள் – இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

இஞ்சி – ஐந்து துண்டு

பூண்டு – பத்து பல்

பச்சை மிளகாய் – இரண்டு

பட்டை – ஒன்று

கறிவேப்பிலை – சிறிதளவு

ADVERTISEMENT

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பிறகு சிக்கனை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக விட வேண்டும்.
  • பின்பு மிளகுத் தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மறுபடியும் மிதமான தீயில் 5 லிருந்து 10 நிமிடம் மூடி போட்டு வேகவிட வேண்டும்.
  • கடைசியாக கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை போட்டு ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
  • சுவையான காரசாரமான சிக்கன் சிந்தாமணி தயார்.

4 comments

Leave a Reply

Your email address will not be published.