ADVERTISEMENT

சில எளிதான மட்டன் உணவுகள்

கோழி இறைச்சியை விட ஆட்டு இறைச்சியில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் இருக்கின்றன. சிக்கனை தவிர்த்து மட்டனை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதில் சில உணவு வகைகளை, எப்படி சமைப்பது என்பதை பார்ப்போம்.

மட்டன் கோலா உருண்டை

தேவையான பொருட்கள்:

கொத்துக்கறி – 1/2 கிலோ

மல்லி – இரண்டு டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – எட்டு

சீரகம் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

சோம்பு – ஒரு டீஸ்பூன்

மிளகு – ஒரு டீஸ்பூன்

பெரிய வெங்காயம் – ஒன்று

பொட்டுக்கடலை மாவு – இரண்டு கையளவு

முட்டை – ஒன்று

ADVERTISEMENT

இஞ்சி – ஐந்து துண்டு

பூண்டு – பத்து பல்

சின்ன வெங்காயம் – ஆறு

பச்சை மிளகாய் – இரண்டு

பட்டை – ஒன்று

ADVERTISEMENT

பிரியாணி இலை – ஒன்று

கிராம்பு – ஒன்று

அன்னாசிப் பூ – ஒன்று

ஜாதிக்காய் – ஒன்று

தனியா தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

மட்டன் வறுவல் மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

ADVERTISEMENT

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

  • இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு மல்லி, காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு, மிளகு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்த விழுது, சிறிதளவு உப்பு, பெரிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் லேசாக வதக்க வேண்டும்.
  • வெங்காயம் லேசாக வதங்கியதும், கொத்துக்கறி சேர்த்து அதில் தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மட்டன் வறுவல் மசாலா, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
  • பின்பு இந்த கலவையை மிக்ஸியில் நன்கு அரைத்து, அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த கலவையுடன் பொட்டுக்கடலை மாவு, உப்பு, முட்டை, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து, சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு இந்த உருண்டைகளை அதில் மிதமான தீயில் வைத்து போட்டு எடுத்தால் காரசாரமான மட்டன் கோலா உருண்டை தயார்.

மேலும் படிக்கசில எளிதான மீன் சமையல்

மட்டன் குழம்பு

தேவையான பொருட்கள்:

மட்டன் – ஒரு கிலோ

ADVERTISEMENT

தக்காளி – நான்கு

கத்திரிக்காய் – நான்கு

இஞ்சி – ஐந்து துண்டு

பூண்டு – பத்து பல்

சின்ன வெங்காயம் – இருபது

ADVERTISEMENT

பச்சை மிளகாய் – இரண்டு

பட்டை – ஒன்று

தேங்காய்த்துருவல் – ஒரு கப்

கசகசா – 1/2 டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

முந்திரி – நான்கு

பிரியாணி இலை – ஒன்று

ஏலக்காய் – இரண்டு

கிராம்பு – இரண்டு

அன்னாசிப் பூ – ஒன்று

ADVERTISEMENT

ஜாதிக்காய் – ஒன்று

தனியா தூள் – மூன்று டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

மட்டன் குழம்பு மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி இலை – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

ADVERTISEMENT

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

  • இஞ்சி, பூண்டு, 6 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • முதலில் மட்டனை நன்கு கழுவி மஞ்சள் தூள்,எண்ணெய்,இஞ்சி, பூண்டு, 6 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • தேங்காய்த்துருவல், கசகசா, சோம்பு, முந்திரி,சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக பால் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து லேசாக தாளிக்கவும்.
  • பின்பு மீதமுள்ள சின்ன வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, 6 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் மட்டன், தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், மட்டன் குழம்பு மசாலா, கத்திரிக்காய் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, மிதமான தீயில் மட்டனை பத்து நிமிடம் நன்கு வேக விட வேண்டும்.
  • பின்பு தேங்காய்ப் பால் கலவையை சேர்த்து ஒரு 5 நிமிடம் மூடி போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். கடைசியாக கொத்தமல்லி இலை,  கறிவேப்பிலை போட்டு ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
  • சுவையான மட்டன் குழம்பு தயார்.

மேலும் படிக்க: சில எளிதான பலாக்காய் சமையல்

மட்டன் உப்பு கறி

தேவையான பொருட்கள்:

மட்டன் – ஒரு கிலோ

தக்காளி – ஒன்று

ADVERTISEMENT

இஞ்சி – ஐந்து துண்டு

பூண்டு – பதினைந்து பல்

சின்ன வெங்காயம் – இருபது

பச்சை மிளகாய் – இரண்டு

பட்டை – ஒன்று

ADVERTISEMENT

காய்ந்த மிளகாய் – பத்து

சோம்பு – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் – இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

ADVERTISEMENT

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

  • இஞ்சி, 6 பூண்டு, 6 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • முதலில் மட்டனை நன்கு கழுவி மஞ்சள் தூள்,எண்ணெய்,இஞ்சி, 6 பூண்டு, 6 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்த விழுது, சிறிதளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும், சோம்பு, காய்ந்த மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
  • காய்ந்த மிளகாய் சிறிது வதங்கியதும், தக்காளி, மீதமுள்ள சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • இந்த கலவை நன்கு வதங்கியதும், நாம் வேக வைத்த மட்டனை அதில் சேர்த்து, நன்கு கிளறி, மூடி போட்டு 5 லிருந்து 10 நிமிடம் வரை மூடி வைக்க வேண்டும்.
  • சிறிது நேரம் கழித்து மூடியை எடுத்து கிளறிவிட்டு, கடைசியாக மிளகு தூள் சேர்த்து, அதையும் 5 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கினால், சூடான, சுவையான, காரசாரமான மட்டன் உப்பு கறி தயார்.

மேலும் படிக்கசில எளிதான பிரியாணி உணவு வகைகள்

மட்டன் வெள்ளைக் குருமா

தேவையான பொருட்கள்:

மட்டன் – ஒரு கிலோ

தக்காளி – நான்கு

ADVERTISEMENT

மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்

இஞ்சி – ஐந்து துண்டு

பூண்டு – பதினைந்து பல்

சின்ன வெங்காயம் – இருபது

பச்சை மிளகாய் – ஐந்து

ADVERTISEMENT

பட்டை – ஒன்று

தேங்காய்த்துருவல் – ஒரு கப்

கசகசா – 1/2 டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

பிரியாணி இலை – ஒன்று

ADVERTISEMENT

ஏலக்காய் – இரண்டு

கிராம்பு – இரண்டு

அன்னாசிப் பூ – ஒன்று

ஜாதிக்காய் – ஒன்று

பாலில் ஊற வைத்த முந்திரி – ஆறு

ADVERTISEMENT

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

  • இஞ்சி, 6 பூண்டு, 6 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • முதலில் மட்டனை நன்கு கழுவி மஞ்சள் தூள்,எண்ணெய், இஞ்சி, 6 பூண்டு, 6 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்த விழுது, சிறிதளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • தேங்காய்த்துருவல், கசகசா, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பாலில் ஊற வைத்த முந்திரியை தண்ணீர் ஊற்றி நன்கு மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய், பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும். பின்பு வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளி, இஞ்சி, 6 பூண்டு, 6 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
  • பின்பு வேக வைத்த மட்டனை சேர்த்துக் கிளறி, வேகும் வரை வைக்கவும். பின்பு நாம் அரைத்து வைத்திருந்த தேங்காய்த்துருவல், கசகசா, சோம்பு கலவையை கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட வேண்டும்.
  • பின்பு பாலில் ஊற வைத்த முந்திரி கலவையை சேர்த்து, கடைசியாக கொத்தமல்லி,கறிவேப்பிலை உப்பு போட்டு ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
  • சுவையான மட்டன் வெள்ளைக் குருமா தயார்.

மேலும் படிக்கசில எளிதான வடை சமையல்

ADVERTISEMENT

மட்டன் சுக்கா வறுவல்

தேவையான பொருட்கள்:

மட்டன் – ஒரு கிலோ

தக்காளி – நான்கு

சின்ன வெங்காயம் – பதினைந்து

பச்சை மிளகாய் – இரண்டு

பட்டை – ஒன்று

ADVERTISEMENT

இஞ்சி – ஐந்து துண்டு

பூண்டு – பத்து பல்

பிரியாணி இலை – ஒன்று

ஏலக்காய் – இரண்டு

கிராம்பு – இரண்டு

ADVERTISEMENT

அன்னாசிப் பூ – ஒன்று

ஜாதிக்காய் – ஒன்று

தனியா தூள் – மூன்று டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

மட்டன் வறுவல் மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி இலை – சிறிதளவு

ADVERTISEMENT

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

  • இஞ்சி, 6 பூண்டு, 6 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • முதலில் மட்டனை நன்கு கழுவி மஞ்சள் தூள்,எண்ணெய்,இஞ்சி, 6 பூண்டு, 6 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்த விழுது, சிறிதளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து லேசாக தாளிக்கவும். பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் மட்டன், தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், மட்டன் வறுவல் மசாலா சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, மிதமான தீயில் மட்டனை பத்து நிமிடம் நன்கு வேக விட வேண்டும்.
  • கடைசியாக கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை போட்டு ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
  • சுவையான மட்டன் சுக்கா வறுவல் தயார்.

4 comments

Leave a Reply

Your email address will not be published.