ADVERTISEMENT

சில எளிதான பிரியாணி உணவு வகைகள்

பிரியாணி என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பிரியாணி எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்பதில் சந்தேகமில்லை. எல்லோருக்கும் பிடித்த பிரியாணி எப்படி செய்வது என்பதை பார்ப்போம்

ஆம்பூர் பிரியாணி

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – ஒரு கிலோ

மட்டன் – ஒரு கிலோ

தக்காளி – நான்கு

வெங்காயம் – மூன்று

ADVERTISEMENT

இஞ்சி – ஐந்து துண்டு

பூண்டு – பத்து பல்

சின்ன வெங்காயம் – எட்டு

பச்சை மிளகாய் – எட்டு

பட்டை – ஒன்று

ADVERTISEMENT

பிரியாணி இலை – ஒன்று

ஏலக்காய் – இரண்டு

கிராம்பு – இரண்டு

அன்னாசிப் பூ – இரண்டு

ஜாதிக்காய் – ஒன்று

ADVERTISEMENT

நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

தயிர் – 1/2 கப்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மட்டன் மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்

தனியா பொடி – இரண்டு டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

உப்பு – தேவையான அளவு

புதினா இலைகள் – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

குங்குமப்பூ – ஒரு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

ஃபுட் கலர் – ஒரு டீஸ்பூன்

முந்திரி – பத்து

திராட்சை – ஐந்து

பொரித்த வெங்காயம் – 1/2 கப்

செய்முறை:

  • பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • முதலில் மட்டனை நன்கு கழுவி மஞ்சள் தூள்,எண்ணெய்,இஞ்சி, பூண்டு, 6 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இரண்டு அல்லது மூன்று முறை நல்ல தண்ணீரில் நன்கு அரிசியைக் கழுவ வேண்டும்.
  • அடுப்பில், பாத்திரத்தை வைத்து அரிசியின் அளவுக்கு இரு மடங்கு தண்ணீர் ஊற்றி, மசாலாப் பொருட்களைப் போட்டு கொதித்தவுடன், பாசுமதி அரிசி சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடம் வேக விட வேண்டும்.
  • அரிசி பாதி வெந்தவுடன், நீரை வடித்துக் கொள்ள வேண்டும்.
  • பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
  • நெய் மற்றும் எண்ணெய் சூடானதும் சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக தாளிக்கவும்.
  • பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு தக்காளி, மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள்தூள், மட்டன் மசாலா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு, தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம், மூடி வைக்க வேண்டும்.
  • வேக வைத்த மட்டன் சேர்த்து, பாத்திரத்தை சிறிது நேரம் மூடி மட்டனை வேக விட வேண்டும். மட்டன், மசாலாவும் நன்கு கலந்து, எண்ணெய் மேற்பகுதியில் பிரிந்து வர வேண்டும்.
  • வேக வைத்த அரிசியை மட்டன் மசாலாவுடன் சேர்க்க வேண்டும். தேவையான உப்பு, பொரித்த வெங்காயம், பாலில் ஊற வைத்த குங்குமப்பூ சேர்த்து மூடி மிகவும் குறைவான தீயில் வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து பிரியாணி தயாராகிவிடும்.
  • பின்பு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஃபுட் கலர், புதினாவை தூவி சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
  • ஆம்பூர் பிரியாணி தயார்.

மேலும் படிக்கசில எளிதான காலிஃபிளவர் சமையல்

ADVERTISEMENT

சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – ஒரு கிலோ

சிக்கன் – ஒரு கிலோ

தக்காளி – நான்கு

வெங்காயம் – மூன்று

இஞ்சி – ஐந்து துண்டு

ADVERTISEMENT

பூண்டு – பத்து பல்

சின்ன வெங்காயம் – எட்டு

பச்சை மிளகாய் – எட்டு

பட்டை – ஒன்று

பிரியாணி இலை – ஒன்று

ADVERTISEMENT

ஏலக்காய் – இரண்டு

கிராம்பு – இரண்டு

அன்னாசிப் பூ – இரண்டு

ஜாதிக்காய் – ஒன்று

நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

தயிர் – 1/2 கப்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

சிக்கன் மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்

தனியா பொடி – இரண்டு டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ADVERTISEMENT

புதினா இலைகள் – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

குங்குமப்பூ – ஒரு டேபிள் ஸ்பூன்

ஃபுட் கலர் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

செய்முறை:

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இரண்டு அல்லது மூன்று முறை நல்ல தண்ணீரில் நன்கு அரிசியைக் கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுப்பில், பாத்திரத்தை வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். நெய் மற்றும் எண்ணெய் சூடானதும் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய், சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக தாளிக்கவும்.
  • பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு தக்காளி, மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள்தூள், சிக்கன் மசாலா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள், தேவைக்கேற்ப உப்பு, தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம், மூடி வைக்க வேண்டும்.
  • பின்பு அளவு தண்ணீர், சிக்கன் சேர்த்து பாத்திரத்தை சிறிது நேரம் மூடி சிக்கனை வேக விட வேண்டும். சிக்கன், மசாலாவும் நன்கு கலந்து, எண்ணெய் மேற்பகுதியில் பிரிந்து வர வேண்டும்.
  • பின்பு அரிசியை சிக்கன் மசாலாவுடன் சேர்க்க வேண்டும்.
  • தேவையான உப்பு, பாலில் ஊற வைத்த குங்குமப்பூ, ஃபுட் கலர் சேர்த்து மூடி மிகவும் குறைவான தீயில் வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து பிரியாணி தயாராகிவிடும்.
  • சிக்கன் பிரியாணி தயார்.

மேலும் படிக்கசில எளிதான வடை சமையல்

மீன் பிரியாணி

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – ஒரு கிலோ

மீன் – 1/2 கிலோ

தக்காளி – நான்கு

வெங்காயம் – மூன்று

ADVERTISEMENT

எலுமிச்சை சாறு – இரண்டு டேபிள் ஸ்பூன்

இஞ்சி – ஐந்து துண்டு

பூண்டு – பத்து பல்

சின்ன வெங்காயம் – எட்டு

பச்சை மிளகாய் – எட்டு

ADVERTISEMENT

பட்டை – ஒன்று

பிரியாணி இலை – ஒன்று

ஏலக்காய் – இரண்டு

கிராம்பு – இரண்டு

அன்னாசிப் பூ – இரண்டு

ADVERTISEMENT

ஜாதிக்காய் – ஒன்று

நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

தயிர் – 1/2 கப்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் –  ஒரு டீஸ்பூன்

மிளகாய் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்

தனியா பொடி – இரண்டு டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

உப்பு – தேவையான அளவு

புதினா இலைகள் – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

குங்குமப்பூ – ஒரு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

ஃபுட் கலர் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

  • முதலில் மீனை நன்கு கழுவி அதில் உப்பு, எலுமிச்சை சாறு, 2 பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இரண்டு அல்லது மூன்று முறை நல்ல தண்ணீரில் நன்கு அரிசியைக் கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுப்பில், பாத்திரத்தை வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். நெய் மற்றும் எண்ணெய் சூடானதும் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய், சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக தாளிக்கவும்.
  • பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு தக்காளி, மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள், தேவைக்கேற்ப உப்பு, தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம், மூடி வைக்க வேண்டும்.
  • பின்பு அளவு தண்ணீர் மற்றும் மீன் சேர்த்து, பாத்திரத்தை சிறிது நேரம் மூடி, மீன்னை வேக விட வேண்டும். பின்பு அரிசியை மீன் மசாலாவுடன் சேர்க்க வேண்டும்.
  • தேவையான உப்பு, பாலில் ஊற வைத்த குங்குமப்பூ, ஃபுட் கலர் சேர்த்து மூடி, மிகவும் குறைவான தீயில் வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து பிரியாணி தயாராகிவிடும்.
  • மீன் பிரியாணி தயார்.

மேலும் படிக்கசில எளிதான உணவு வகைகள்

இறால் பிரியாணி

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – ஒரு கிலோ

இறால் – ஒரு கிலோ

தக்காளி – நான்கு

ADVERTISEMENT

வெங்காயம் – மூன்று

எலுமிச்சை சாறு – இரண்டு டேபிள் ஸ்பூன்

இஞ்சி – ஐந்து துண்டு

பூண்டு – பத்து பல்

சின்ன வெங்காயம் – எட்டு

ADVERTISEMENT

பச்சை மிளகாய் – எட்டு

பட்டை – ஒன்று

பிரியாணி இலை – ஒன்று

ஏலக்காய் – இரண்டு

கிராம்பு – இரண்டு

ADVERTISEMENT

அன்னாசிப் பூ – இரண்டு

ஜாதிக்காய் – ஒன்று

நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

தயிர் – 1/2 கப்

ADVERTISEMENT

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகாய் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்

தனியா பொடி – இரண்டு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

புதினா இலைகள் – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

ADVERTISEMENT

குங்குமப்பூ – ஒரு டேபிள் ஸ்பூன்

ஃபுட் கலர் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

  • முதலில் இறாலை நன்கு கழுவி அதில் உப்பு, எலுமிச்சை சாறு, 2 பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இரண்டு அல்லது மூன்று முறை நல்ல தண்ணீரில் நன்கு அரிசியைக் கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுப்பில், பாத்திரத்தை வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். நெய் மற்றும் எண்ணெய் சூடானதும் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய், சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக தாளிக்கவும்.
  • பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு தக்காளி, மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள், தேவைக்கேற்ப உப்பு, தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 10 நிமிடம், மூடி வைக்க வேண்டும்.
  • பின்பு இறால் மற்றும் அளவு தண்ணீர் சேர்த்து, பாத்திரத்தை சிறிது நேரம் மூடி, இறாலை வேக விட வேண்டும். பின்பு அரிசியை இறால் மசாலாவுடன் சேர்க்க வேண்டும்.
  • தேவையான உப்பு, பாலில் ஊற வைத்த குங்குமப்பூ, ஃபுட் கலர் சேர்த்து மூடி, மிகவும் குறைவான தியில் வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து பிரியாணி தயாராகிவிடும்.
  • இறால் பிரியாணி தயார்.

4 comments

Leave a Reply

Your email address will not be published.