ADVERTISEMENT

சில எளிதான முட்டை உணவு வகைகள்

முட்டையை வேக வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. நம் உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலுக்கும், நம் உணவில் முட்டையைச் சேர்த்துக் கொண்டால் போதுமானதாக இருக்கும். அதில் சில உணவுகளை இங்கே பார்ப்போம்.

முட்டை பொரியல்

தேவையான பொருட்கள்:

முட்டை – நான்கு

வெங்காயம் – இரண்டு

பச்சை மிளகாய் – இரண்டு

கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

சீரகம் – ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் – இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

ADVERTISEMENT

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

  • வாணலியில், எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு நன்கு பொரிய விட வேண்டும்.
  • பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அத்துடன் தேவையான உப்பு, மஞ்சள் தூள், மிளகுப்பொடியைச் சேர்த்துக் கிளறவும்.
  • கடைசியாக முட்டையை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறவும்.
  • சுவையான முட்டை பொரியல் தயார்.

மேலும் படிக்கசில எளிதான உணவு வகைகள்

முட்டை பிரியாணி

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 1/2 கிலோ

முட்டை – நான்கு

தக்காளி – மூன்று

ADVERTISEMENT

வெங்காயம் – இரண்டு

இஞ்சி – ஐந்து துண்டு

பூண்டு –  பத்து பல்

சின்ன வெங்காயம் – எட்டு

பச்சை மிளகாய் – எட்டு

ADVERTISEMENT

பட்டை – ஒன்று

பிரியாணி இலை – ஒன்று

ஏலக்காய் – இரண்டு

கிராம்பு – இரண்டு

அன்னாசிப் பூ – இரண்டு

ADVERTISEMENT

ஜாதிக்காய் – ஒன்று

நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

தயிர் – இரண்டு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

முட்டை மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்

தனியா பொடி – இரண்டு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

புதினா இலைகள் – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

ADVERTISEMENT

ஃபுட் கலர் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

  • முதலில் முட்டையை வேக வைத்து, தோல் உரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • பிறகு வேக வைத்த முட்டையை அதில் சேர்த்து, குறைந்த தீயில் வைத்து, மூடி போட்டு, 10 நிமிடம் அப்படியே விட வேண்டும். அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இரண்டு அல்லது மூன்று முறை நல்ல தண்ணீரில் நன்கு அரிசியைக் கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • அடுப்பில், பாத்திரத்தை வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். நெய் மற்றும் எண்ணெய் சூடானதும் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய், சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக தாளிக்கவும்.
  • பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு தக்காளி, மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள்தூள், முட்டை மசாலா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள், தேவைக்கேற்ப உப்பு, தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம், மூடி வைக்க வேண்டும். மசாலா நன்கு கலந்து, எண்ணெய் மேற்பகுதியில் பிரிந்து வர வேண்டும்.
  • பின்பு அரிசியை மசாலாவுடன் சேர்க்க வேண்டும். அளவு தண்ணீர், தேவையான உப்பு, ஃபுட் கலர், முட்டை சேர்த்து மூடி மிகவும் குறைவான தீயில் வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து பிரியாணி தயாராகிவிடும்.
  • முட்டை பிரியாணி தயார்.

மேலும் படிக்கசில எளிதான வடை சமையல்

முட்டை கிரேவி

தேவையான பொருட்கள்:

முட்டை – நான்கு

தக்காளி – மூன்று

வெங்காயம் – இரண்டு

ADVERTISEMENT

சின்ன வெங்காயம் – எட்டு

பச்சை மிளகாய் – நான்கு

பட்டை – ஒன்று

இஞ்சி – ஐந்து துண்டு

பூண்டு – பத்து பல்

ADVERTISEMENT

சோம்பு – ஒரு டீஸ்பூன்

பிரியாணி இலை – ஒன்று

ஏலக்காய் – இரண்டு

கிராம்பு – இரண்டு

அன்னாசிப் பூ – ஒன்று

ADVERTISEMENT

ஜாதிக்காய் – ஒன்று

தனியா தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

முட்டை மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி இலை – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

ADVERTISEMENT

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

  • முதலில் முட்டையை வேக வைத்து, தோல் உரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • பிறகு வேக வைத்த முட்டையை அதில் சேர்த்து, குறைந்த தீயில் வைத்து, மூடி போட்டு, 10 நிமிடம் அப்படியே விட வேண்டும். அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து லேசாக தாளிக்கவும்.
  • பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், முட்டை மசாலா சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, மிதமான தீயில், மூடி போட்டு 5 நிமிடம், மூடி வைக்க வேண்டும்.
  • மசாலா நன்கு கலந்து, எண்ணெய் மேற்பகுதியில் பிரிந்து வர வேண்டும். பின்பு முட்டை சேர்த்து, மூடி மிகவும் குறைவான தீயில் வைக்க வேண்டும்.
  • கடைசியாக கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை போட்டு ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
  • சுவையான முட்டை கிரேவி தயார்.

மேலும் படிக்கசில எளிதான வெரைட்டி ரைஸ் சமையல்

முட்டை சாதம்

தேவையான பொருட்கள்:

முட்டை – மூன்று

வெங்காயம் – இரண்டு

ADVERTISEMENT

அரிசி – 1/2 கிலோ

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

மிளகுத்தூள் – இரண்டு டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • அரிசி குழைந்து விடாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில், எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் போட்டு நன்கு பொரிய விட வேண்டும்.
  • பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • தேவையான உப்பு, மிளகுப்பொடியைச் சேர்த்துக் கிளறவும்.
  • பின்பு முட்டையை சேர்த்து நன்கு கிளறவும்.
  • கடைசியாக தேவையான உப்பு, வேக வைத்த சாதத்தை போட்டு கிளறவும்.
  • சுவையான முட்டை சாதம் தயார்.

மேலும் படிக்கசில எளிதான பிரியாணி உணவு வகைகள்

முட்டை சோயா வறுவல்

தேவையான பொருட்கள்:

தக்காளி – இரண்டு

ADVERTISEMENT

பெரிய வெங்காயம் – ஒன்று

சோயா – ஒரு கப்

முட்டை – இரண்டு

இஞ்சி – ஐந்து துண்டு

பூண்டு – பத்து பல்

ADVERTISEMENT

சின்ன வெங்காயம் – ஐந்து

பச்சை மிளகாய் – இரண்டு

பட்டை – ஒன்று

கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்

தனியா தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

மிளகாய் தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

சோள மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் சோயா துண்டுகளை போட்டு, நன்கு வேக விட்டு, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சோயா, முட்டை, மிளகாய் தூள், உப்பு, சோள மாவு, அரிசி மாவு, மிளகுத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசையவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், குறைந்த தீயில் வைத்து, சோயா துண்டுகளை போட்டுப் பொரித்தெடுக்கவும்.  அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக தாளிக்கவும்.
  • பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு தக்காளி, மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள்தூள், தேவைக்கேற்ப உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம், மூடி வைக்க வேண்டும்.
  • மசாலா நன்கு கலந்து, எண்ணெய் மேற்பகுதியில் பிரிந்து வர வேண்டும்.
  • பின்பு மசாலாவுடன் பொரித்தெடுத்த சோயா துண்டுகளை சேர்த்து மூடி மிகவும் குறைவான தியில் வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து முட்டை சோயா வறுவல் தயாராகிவிடும்.

மேலும் படிக்கசில எளிதான மீன் சமையல்

ADVERTISEMENT

முட்டை குழம்பு

தேவையான பொருட்கள்:

முட்டை – நான்கு

தக்காளி – மூன்று

பெரிய வெங்காயம் – இரண்டு

இஞ்சி – ஐந்து துண்டு

பூண்டு – பத்து பல்

ADVERTISEMENT

சின்ன வெங்காயம் – பத்து

பச்சை மிளகாய் – ஐந்து

பட்டை – ஒன்று

தேங்காய்த்துருவல் – ஒரு கப்

கசகசா – 1/2 டீஸ்பூன்

ADVERTISEMENT

சோம்பு – ஒரு டீஸ்பூன்

முந்திரி – நான்கு

பிரியாணி இலை – ஒன்று

ஏலக்காய் – இரண்டு

கிராம்பு – இரண்டு

ADVERTISEMENT

அன்னாசிப் பூ – ஒன்று

ஜாதிக்காய் – ஒன்று

தனியா தூள் – மூன்று டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

முட்டை குழம்பு மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி இலை – சிறிதளவு

ADVERTISEMENT

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

  • முதலில் முட்டையை வேக வைத்து, தோல் உரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • பிறகு வேக வைத்த முட்டையை அதில் சேர்த்து, குறைந்த தீயில் வைத்து, மூடி போட்டு, 10 நிமிடம் அப்படியே விட வேண்டும். அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • தேங்காய்த்துருவல், கசகசா, சோம்பு, முந்திரி,சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக பால் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து லேசாக தாளிக்கவும்.
  • பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், முட்டை குழம்பு மசாலா சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, மிதமான தீயில், மூடி போட்டு 5 நிமிடம், மூடி வைக்க வேண்டும்.
  • மசாலா நன்கு கலந்து, எண்ணெய் மேற்பகுதியில் பிரிந்து வர வேண்டும்.
  • பின்பு தேங்காய்ப் பால் கலவையை சேர்த்து ஒரு 5 நிமிடம் மூடி போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • பின்பு முட்டை சேர்த்து, மூடி மிகவும் குறைவான தீயில் வைக்க வேண்டும்.
  • கடைசியாக கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை போட்டு ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
  • சுவையான முட்டை குழம்பு தயார்.