வாலி ருத்ரனிடம் விஜயை கொள்ள முயற்சி செய்த கதையை சொல்லிக் கொண்டு இருக்கிறான். அப்பா அந்த அந்த இசையோட புருஷனும் அவள் பிள்ளையும் ரோட்டு ஓரமா நின்னுட்டு இருந்தாங்க அப்பா, கார் விட்டு அடிச்சு தூக்கலாம்-னு தான் நினைத்தோம் ஜஸ்ட் மிஸ்(Just Miss) ஆயிடுச்சு அப்பா என்கிறான். அதற்கு ருத்ரன், ஒரு காரியத்தை எடுத்தா அதை சரியா செஞ்சு முடிக்கணும், இல்லனா அதை தொடவே கூடாது….
இது என்ன சாதாரண விஷயம்-னு நினைச்சியா??? கொலைக் கேஸ்(Case), அதுவும் ஈஸ்வரமூர்த்தி குடும்பத்துல கையை வைக்கிறோம், அந்த ஆள் Evidence இல்லாத கேஸ்-ல(Case) கூட கேள்வி மேல கேள்வி கேட்டு நோண்டி நோண்டி குற்றவாளியவே குற்றத்தை ஒத்துக்க வச்சுடுவான், அவரு வீட்டுல கையை வைக்கணும்-னா கவனமா பிளான்(Plan) போட்டு இருக்கணும், சொதப்பிட்டீயே டா!!! ஒருத்தன அடிக்கணும்-னு முடிவு பண்ணிட்டேனா நம்ம அடிக்கிற அடி அவன் மேல சரியா படனும், அதே மாதிரி அழிக்கணும்-னு முடிவு பண்ணிட்டேனா முடிச்சுறணும், இந்த விட்ட குறை தொட்ட குறை இருந்தால் நமக்கு தான் டா பிரச்சனை, இது என்ன சின்ன பிள்ளைங்க விளையாடுற விளையாட்டு-னு நினைச்சியா?? என்கிறார்.
காட்சி(Scenario) 1:
அதற்கு வாலி, இல்ல Daddy, Clear skitch தான் Daddy, காரை விட்டு அடிச்சு தூக்கிட்டு ஆக்சிடெண்ட்(Accident) கேஸ்-னு கேஸ மாத்திட்டு போயிட்டே இருந்திருக்கலாம், கடைசி நேரத்தில் ஒரு கிழவி வந்து காரியத்தையே கெடுத்துட்டா Daddy என்கிறான். அதற்கு ருத்ரன், இந்தக் கதையெல்லாம் என் கிட்ட சொல்லாத, அடுத்த டைம் தெளிவா பிளான் பண்ணி காரியத்தை முடி, இல்லன்னா பண்ணாத…. என்று சொல்லி கோவமாக போனை கட் செய்கிறார்.
உடனே வாலி போனை கட் பண்ணிட்டு டிரைவரை(Drive) திட்டுகிறான், டேய் நீ மட்டும் காரைவிட்டு ஏத்திருந்தா அவன் சாவுக்கு சங்கு ஊதிருப்பாங்க, நானும் எங்க அப்பாகிட்ட அசிங்கப்பட்டு இருக்க மாட்டேன், காரியத்தையே சொதப்பிட்டீயே டா என்கிறான். உடனே சேகர், Sir கடைசி நேரத்தில் அந்த கிழவி வந்து எல்லாத்தையும் கெடுத்துருச்சு என்கிறான்.
காட்சி(Scenario) 2:
அதற்கு வாலி, Yes…. கிழவி……கிழவி…… யார் அந்த கிழவி, அன்றைக்கும் அப்படித்தான் ஒரு கிழவி விஷம் கலந்த Sweet Box-அ சாப்பிடாமல் தட்டிவிட்டுருக்கா!!! இன்றைக்கு ஒரு கிழவி விஜயை ஆக்சிடெண்ட்ல(Accident) இருந்து காப்பாற்றி இருக்கா!!! ஒரு வேளை இரண்டு பேரும் ஒரே ஆளா இருப்பாங்களோ!! அப்படியே இருந்தாலும் தான் உயிரை கூட பெருசா மதிக்காமல் எதுக்கு அவனை காப்பாற்றனும், யாரா இருப்பா??? ஒன்னும் புரியலையே??? என்கிறான். அதற்கு சேகர், சார் நீங்க சொன்னீங்க-னு தான் சார் செஞ்சேன், போலீஸ் கம்ப்ளைன்ட்(Police Complaint) ஏதாவது ஆச்சுன்னா நீங்க தான் சார் காப்பாற்றனும் என்கிறான். அதற்கு வாலி, அட ச்சீ வாய மூடு, ஆமா நீ எதுக்கு பயப்படுற, கொடுத்த காரியத்தை ஒழுங்கா செய்ய தெரியல, இதுல பயம் வேற, Spot-ல உன்னை யாரும் பார்த்திருக்க மாட்டாங்க, அங்க நடந்த கலவரத்தில் வண்டி நம்பரையும் யாரும் நோட்(Mote) பண்ணுன மாதிரி தெரியல, அப்படியும் உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் பார்த்துகிறேன், நீ வண்டியை எடு என்று சொல்லி இருவரும் காரில் ஏறி செல்கிறார்கள்.
மேலும் படிக்க: தந்தையின் அன்பிற்கு ஏங்கும் மகள்
காட்சி(Scenario) 3:
இசையும் தாயம்மாவும் ஹாஸ்பிடலில்(Hospital) விஜயை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இசை விஜயை பார்த்து மிகவும் வருத்தமாக அழுது கொண்டே இருக்கிறாள். உடனே தாயம்மா, இசை அம்மா தம்பி கண் முழிச்சிட்டாரா? என்று கேட்கிறார். அதற்கு இசை, உங்கள தான் நான் அப்பவே போக சொல்லிட்டேன்-ல, இன்னும் ஏன் இங்கேயே நின்னுட்டு இருக்கீங்க என்கிறாள். அதற்கு தாயம்மா, இசை அம்மா தம்பி கண் முழிச்சதும் அவர ஒரே ஒரு தடவ பார்த்துட்டு போய் விடுகிறேன், அப்போ தான் என் மனசு ஆறும், தப்பா நினைச்சுக்காதீங்க என்கிறார். அதற்கு இசை, ஏன் இது வரைக்கும் நீங்க பண்ணுனது எல்லாம் பார்த்தா, உங்கள பார்த்தாலே அப்படியே பத்திகிட்டு வருது, உங்களைப் பார்த்ததில் இருந்து எனக்கு எல்லாமே தப்பு தப்பா தான் நடக்குது, தயவு செய்து என் முன்னாடி நிக்காதீங்க போய் விடுங்கள் என்று கோபமாக பேசுகிறாள், அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், இனிமேல் நீங்க எப்பவுமே என் வீட்டு பக்கமே வந்துராதீங்க…. போங்க….என்கிறாள்.
காட்சி(Scenario) 4:
உடனே தாயம்மா, அழுது கொண்டே இசையை பாவமாக பார்த்துக் கொண்டு இருக்கிறார். உடனே இசை, சில ஜென்மங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரிய மாட்டேங்குது, இங்கே வந்து என் உயிர வாங்குது என்கிறாள். உடனே தாயம்மா அழுது கொண்டே அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார். அப்போது ஐசியூவில் இருந்து ஒரு சிஸ்டர் வெளியே வந்து Patient கண் முழிச்சுட்டாரு, ரொம்ப நேரம் பேசாதீங்க, உடனே பார்த்து விட்டு, பேசி விட்டு வெளியே வந்துருங்க என்று சொல்கிறாள். உடனே இசை, சரி என்று சொல்லிவிட்டு சுந்தரை தூக்கிக் கொண்டு உள்ளே போகிறாள்,
காட்சி(Scenario) 5:
விஜயை பார்த்து அழுகிறாள். அதற்கு விஜய், அழுகாத இசை எனக்கு தான் ஒன்னும் ஆகலல, பாரு நீ அழுகவும் சுந்தரரும் அழுகிறான், என்ன ரொம்ப பயந்துட்டியா?? அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுட்டு நான் போக மாட்டேன் என்கிறான். அதற்கு இசை, ஒரு செகண்ட்ல(Second) என் உயிரே போயிடுச்சு விஜய் உங்களுக்கு ஏதாவது ஆகியிருந்தால் நான் என்ன பண்ணுவேன், எனக்கும் சுந்தரிக்கும் உங்கள விட்டா வேற யார் இருக்கா என்று சொல்லி அழுகிறாள். அதற்கு விஜய் இங்க பாரு இசை நான் உன் கூட நூறு வருஷம் எப்படி எல்லாம் வாழனும்-னு கற்பனை பண்ணி வெச்சு இருக்கேன் தெரியுமா!! அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டு போக மாட்டேன் பொண்டாட்டி என்கிறான்.
மேலும் படிக்க: ஒரு தாயின் பாசப் போராட்டம்
காட்சி(Scenario) 6:
அப்புறம் தாயம்மா எங்க இசை என்று கேட்கிறான். அதற்கு இசை, அவங்கள எதுக்கு கேக்குறீங்க?? அவங்களால தானே உங்களுக்கு இப்படி ஆயிடுச்சு, நான் சொன்ன மாதிரி நீங்களே சாம்பல போய் கொட்டி இருந்தா உங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் ஆயிருக்காதுல்ல என்கிறாள். அதற்கு விஜய், அவங்களால எனக்கு Accident ஆச்சுன்னு உனக்கு யார் சொன்னா? அவங்களால தான் நான் இப்போது உன் முன்னாடி உயிரோட இருக்கேன், தான் உயிரை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாம அவங்க தான் குறுக்க வந்து என்ன இழுத்துப் பிடித்து காப்பாத்துனாங்க, அவங்கள பார்த்து முதல Thanks சொல்லணும் இசை, இல்ல வெறும் Thanks சொன்னால் பத்தாது, அவங்களுக்கு வேற ஏதாவது செய்யணும், எங்க அவங்க, இசை….உன்ன தான் கேக்குறேன் எங்க அவங்க என்கிறார்.
காட்சி(Scenario) 7:
அதற்கு இசை, Sorry விஜய் அவங்களால தான் உங்களுக்கு Accident ஆயிடுச்சுன்னு நெனச்சு அவங்கள நான் திட்டிட்டேன், அவங்கள இங்கிருந்து போகச் சொல்லி விட்டேன் என்கிறாள். அதற்கு விஜய், என்ன இசை சொல்ற?? அவங்கள திட்டி அனுப்பிவிட்டாயா?? என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி செஞ்சுட்டியே!!! விசாரிக்க மாட்டியா நீ?? எல்லாத்துலையும் உனக்கு அவசரம் தான், பாவம் அவங்க, அவங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்கிறார். அதற்கு இசை, இல்ல விஜய் உங்களுக்கு Accident ஆயிடுச்சுன்னு சொன்னதும் நான் ரொம்ப டென்ஷன்(Tension) ஆயிட்டேன் அதான் என்கிறாள். அதற்கு விஜய், தப்பு பண்ணிட்டியே இசை என்று வருத்தப்படுகிறார். அதற்கு இசை, இல்லை விஜய் அந்த அம்மா உங்கள பாத்துட்டு போறேன்-னு தான் சொன்னாங்க, நான் தான் அவங்கள விடல என்கிறாள். அதற்கு விஜய், நமக்கு உதவி செஞ்சவங்களுக்கு நன்றி சொல்லாம அனுப்புனதே தப்பு, ஆனால் நீ அவங்கள திட்டி வேற வெளியே அனுப்பி இருக்க, அது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா??? என்கிறார்.
காட்சி(Scenario) 8:
அதற்கு இசை, Sorry விஜய் என்கிறாள். அதற்கு விஜய், உனக்கு ஆரம்பத்திலிருந்து தாயம்மாவை பிடிக்காது, அதான் அவங்க எது பண்ணினாலும் உனக்கு தப்பாவே தெரியுது, பாரு இசை உலகத்திலேயே மோசமான குணம் எது தெரியுமா….காரணமே இல்லாம ஒருத்தவங்கள வெறுக்கிறது தான், தாயம்மா ரொம்ப நல்லவங்க இசை, மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பொண்ண வச்சுக்கிட்டு யாரோட ஆதரவும் இல்லாமல் Chennai-ல வாழ்வது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை இசை என்கிறார். அதற்கு இசை, அந்த அம்மா இப்போ தான் போனாங்க, Gate-அ கூட தாண்டிருக்க மாட்டாங்க, நான் கூட்டிட்டு வந்துடுறேன் என்கிறாள். அதற்கு விஜய், சீக்கிரம் போ அவங்க போயிட போறாங்க என்கிறான். அதற்கு இசை, சரி நீங்க டென்ஷன்(Tension) ஆகாதீங்க, நான் போய் கூட்டிட்டு வருகிறேன், சுந்தர் நீ அப்பா கூட இரு, அம்மா இப்ப வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.
மேலும் படிக்க: பாசம் மற்றும் பணம் இவற்றில் எது வெல்லும்
காட்சி(Scenario) 9:
தாயம்மா அழுது கொண்டே ஹாஸ்பிடலில்(Hospital) உள்ள சாமிகிட்ட நின்னு Prayer செய்து கொண்டு இருக்கிறார், அந்த தம்பிக்கு எதுவும் ஆகக்கூடாது, அவருக்கு இப்படியான அதிர்ச்சியில அந்த இசை அம்மா என்னை கண்டபடி திட்டிட்டாங்க, உனக்கே தெரியும் எத்தனையோ கஷ்டங்களையும் அவமானங்களையும் கடந்து வந்தவ நான், பரவா இல்லை வயசுல சின்னப் பொண்ணு தானே, ஏதோ கோபத்துல பேசிடிச்சு, நான் எதையும் மனசுல வச்சுகல, அவங்க பேசுன எல்லாத்தையும் மறக்க முயற்சி பண்றேன், என்னை நம்பி தானே அந்த தம்பி கோயிலுக்கு வந்துச்சு, அவருக்கு எதுவும் ஆகாம நீ தான் பார்த்துக்கனும், உன்னை விட்டா எனக்கு வேற யார் இருக்கா என்று சொல்லி அழுது Prayer செய்துவிட்டு கிளம்புகிறார். இசை தாயம்மாவைத் தேடி கீழே வருகிறாள்.
காட்சி(Scenario) 10:
சிவகாமியும் முத்தையாவும் ஹாஸ்பிடல்(Hospital) வாசலில் காரில் வந்து இறங்குகிறார்கள். இருவரும் உள்ளே போகிறார்கள். சிவகாமி முத்தையாவிடம், ஏங்க நீங்க நல்லா விசாரிச்சிங்களா?? நம்ம பையன் கார் ஓட்டும் போது ரொம்ப கவனமா தானே ஓட்டுவான், இது ஆக்சிடெண்ட்(Accident) தானா??? இல்லை யாராவது என் புள்ளைய அடிச்சுட்டாங்களா?? என்கிறாள். அதற்கு முத்தையா, இப்ப எங்க போய் விசாரிக்கிறது, முதல பிள்ளைய போய் பார்ப்போம், அப்புறம் விசாரிக்கலாம் என்று சொல்கிறார். இருவரும் ரிசப்ஷனில்(Reception) விஜயைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது தாயம்மா அங்க தான் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். அப்போது முத்தையாவுக்கு ஒரு போன் வருகிறது. முத்தையா போனை எடுத்து சொல்லுங்க நான் முத்தையா தான் பேசுகிறேன் என்கிறார். “முத்தையா” என்ற பெயரைக் கேட்டதும் தாயம்மா மிகவும் பயந்து நிமிர்ந்து பார்க்கிறார். முத்தையாவையும் சிவகாமியையும் பார்த்து தாயம்மா மிகவும் அதிர்ச்சி அடைகிறார். அப்போது Flash Back Scene எல்லாம் கொஞ்சம் காட்றாங்க???? உடனே தாயம்மா, அய்யோ!!!!! இவங்க எதுக்கு இங்க வந்து இருக்காங்கனு தெரியலையே என்று சொல்லி தலையில் முக்காடு போட்டு மூஞ்சியை மறைக்கிறார்.
காட்சி(Scenario) 11:
அப்போதும் சில Flash Back Scene-அ தாயம்மா நினைத்துப் பார்க்கிறார்கள். ஒரு பொண்ணு ஒரு குழந்தையை கையில் வைத்து கொண்டு மறைந்து மறைந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள், சில ரவுடி பசங்க அவங்க தேடுற மாதிரி Flash Back Scene-அ காட்றாங்க, அந்த பொண்ணு அவங்க கண்ணுல படாம ஓடி ஓடி ஒழிந்து கொண்டு இருக்கிறாள். ரவுடி பசங்க அவளைத் தேடி தேடிப் பார்த்துவிட்டு இல்லை-னு சொல்லிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார்கள். அப்போது திடீரென ஒரு குழந்தை அழுவுற சத்தம் கேட்குது, உடனே எல்லோரும் திரும்பி தேட ஆரம்பிக்கிறார்கள். அதோட Flash Back முடிகிறது. தாயம்மா Flash Back Scene-அ நினைச்சு பாக்குற Gap-ல முத்தையாவும் சிவகாமியும் ரிசப்ஷனில்(Reception) இருந்து எங்கேயோ போயிடுறாங்க. தாயம்மா தேடி தேடி பார்க்கிறார். ஆனால் அவங்க இரண்டு பேரும் எங்க போனாங்க-னு தெரியலை. இசை தாய்ம்மாவைத் தேடி கொண்டு இருக்கிறாள். தாயம்மா சிவகாமியையும் முத்தையாவையும்தேடிக் கொண்டிருக்கிறார். முத்தையாவும் சிவகாமியும் விஜய் Room-அ தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.