ADVERTISEMENT

சில எளிதான பலாக்காய் சமையல்

பலாப்பழத்தை போலவே பலாக்காய்களிலும் பல உணவுகளை சமைக்கலாம். சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்கள், அசைவ உணவு சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், இந்த பலாக்காயை சமைத்து உண்டால், இறைச்சியை உண்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. பலாக்காயை வைத்து செய்யக்கூடிய சில உணவுகளை கீழே காண்போம்.

பலாக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்:

பலாக்காய் – 250 கிராம்

தக்காளி – இரண்டு

சின்ன வெங்காயம் – பத்து

பூண்டு – எட்டு பல்

ADVERTISEMENT

தேங்காய்த்துருவல் – ஒரு கப்

கசகசா – 1/2 டீஸ்பூன்

மல்லி – மூன்று டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – ஐந்து

சீரகம் – இரண்டு டீஸ்பூன்

ADVERTISEMENT

சோம்பு – ஒரு டீஸ்பூன்

மிளகு –  ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

கடுகு – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

  • பலாக்காயை கொஞ்சம் சிறிய துண்டுகளாக நறுக்கவும். மோர், தண்ணீர் மற்றும் உப்பு கலந்து அதில் நறுக்கிய துண்டுகளை போட்டு ஊற வைக்க வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு மல்லி, காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு, மிளகு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து, மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதே கடாயில் எண்ணெய் விட்டு தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய்த்துருவல், கசகசா சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதையும் மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பலாக்காயை போட்டு வதக்க வேண்டும்.
  • பின்பு நாம் அரைத்து வைத்திருந்த மசாலா அனைத்தையும் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட வேண்டும்.
  • கடைசியாக கொத்தமல்லி, உப்பு போட்டு ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
  • சுவையான பலாக்காய் குழம்பு தயார்.

மேலும் படிக்க: சில எளிதான காலிஃபிளவர் சமையல்

பலாக்காய் வறுவல்

தேவையான பொருட்கள்:

பலாக்காய் – 250 கிராம்

ADVERTISEMENT

எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

தக்காளி – இரண்டு

வெங்காயம் – இரண்டு

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

பூண்டு விழுது –  ஒரு டேபிள் ஸ்பூன்

தனியா தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

ADVERTISEMENT

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

  • பலாத்துண்டுகளை கொஞ்சம் சிறிய துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை உப்பு நீரில் வேக வைக்கவும்.
  • நன்கு வெந்ததும், நீரை வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
  • பின்பு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளி, இஞ்சி விழுது, பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
  • பின்பு வேக வைத்த பலாக்காய் சேர்த்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, பெருங்காயத்தூள், போதுமான உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கிளறி, வேகும் வரை வைக்கவும்.
  • கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
  • சுவையான பலாக்காய் வறுவல் தயார்.

மேலும் படிக்க: சில எளிதான முட்டை உணவு வகைகள்

பலாக்காய் பிரியாணி

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – இரண்டு

பச்சை மிளகாய் – இரண்டு

பிரியாணி இலை – ஒன்று

ADVERTISEMENT

ஏலக்காய் – இரண்டு

கிராம்பு – நான்கு

மிளகு – ஒரு டீஸ்பூன்

அன்னாசிப் பூ – இரண்டு

ஜாதிக்காய் – ஒன்று

ADVERTISEMENT

நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

திராட்சை – ஐந்து

முந்திரி – ஐந்து

பலாக்காய் – 250 கிராம்

ADVERTISEMENT

அரிசி – 1/2 கிலோ

தயிர் – 1/2 கப்

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

தனியா பொடி –  ஒரு டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

புதினா இலைகள் – சிறிதளவு

குங்குமப்பூ –  ஒரு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

பொரித்த வெங்காயம் – 1/2 கப்

செய்முறை:

  • பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • இரண்டு அல்லது மூன்று முறை நல்ல தண்ணீரில் நன்கு அரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மற்றொரு அடுப்பில், பாத்திரத்தை வைத்து அரிசியின் அளவுக்கு இரு மடங்கு தண்ணீர் ஊற்றி, மசாலாப் பொருட்களைப் போட்டு கொதித்தவுடன் அரிசி, சிறிது உப்பு சேர்த்து 15-20 நிமிடம் வேக விட வேண்டும்.
  • அரிசி பாதி வெந்தவுடன், நீரை வடித்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
  • அதில் வெங்காயம், இஞ்சி விழுது, பூண்டு விழுது, பச்சை மிளகாய், சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதங்கியவுடன், பலாக்காய் துண்டுகளைப் போட்டு, தயிரையும், மற்ற மசாலா பொடிகளையும் சேர்த்து வதக்க வேண்டும்.
  • வாணலியை சிறிது நேரம் மூடி பலாக்காயை வேக விட வேண்டும்.
  • பலாக்காயும், மசாலாவும் நன்கு கலந்து, எண்ணெய் மேற்பகுதியில் பிரிந்து வர வேண்டும்.
  • வேகவைத்த அரிசியை பலாக்காய் மசாலாவுடன் சேர்க்க வேண்டும்.
  • அரிசியையும், மசாலாவையும் நன்றாகக் கலந்து, தேவையான உப்பு, பொரித்த வெங்காயம், பாலில் ஊற வைத்த குங்குமப்பூ சேர்த்து மூடி, மிகவும் குறைவான தீயில் வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து பிரியாணி தயாராகிவிடும்.
  • பின்பு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஃபுட் கலர், புதினாவை தூவி சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
  • சுவையான பலாக்காய் பிரியாணி தயார்.

மேலும் படிக்க: சில எளிதான பிரியாணி உணவு வகைகள்

பலாக்காய் குருமா

தேவையான பொருட்கள்:

பலாக்காய் – 250 கிராம்

தக்காளி – இரண்டு

வெங்காயம் – இரண்டு

ADVERTISEMENT

மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்

இஞ்சி விழுது –  ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது –  ஒரு டேபிள் ஸ்பூன்

தேங்காய்த்துருவல் –  ஒரு கப்

கசகசா – 1/2 டீஸ்பூன்

ADVERTISEMENT

சோம்பு –  ஒரு டீஸ்பூன்

பச்சைமிளகாய் – நான்கு

பிரியாணி இலை – ஒன்று

ஏலக்காய் – இரண்டு

கிராம்பு – இரண்டு

ADVERTISEMENT

அன்னாசிப் பூ – ஒன்று

ஜாதிக்காய் – ஒன்று

பாலில் ஊற வைத்த முந்திரி – ஆறு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

ADVERTISEMENT

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

  • பலாக்காயை கொஞ்சம் சிறிய துண்டுகளாக நறுக்கவும். மோர், தண்ணீர் மற்றும் உப்பு கலந்து அதில் நறுக்கிய துண்டுகளை போட்டு ஊற வைக்க வேண்டும்.
  • பின்பு குக்கரில் தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் கலந்து அதில் நறுக்கிய பலாக்காயைப் போட்டு 1 விசில் விட வேண்டும். நீரை வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • தேங்காய்த்துருவல், கசகசா, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பாலில் ஊற வைத்த முந்திரியை தண்ணீர் ஊற்றி நன்கு மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய், பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
  • பின்பு வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளி, இஞ்சி விழுது, பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
  • பின்பு வேக வைத்த பலாக்காய், போதுமான உப்பு சேர்த்துக் கிளறி, வேகும் வரை வைக்கவும். பின்பு நாம் அரைத்து வைத்திருந்த தேங்காய்த்துருவல், கசகசா, சோம்பு கலவையை கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட வேண்டும்.
  • பின்பு பாலில் ஊற வைத்த முந்திரி கலவையை சேர்த்து, கடைசியாக கொத்தமல்லி,கறிவேப்பிலை உப்பு போட்டு ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
  • சுவையான பலாக்காய் குருமா தயார்.

மேலும் படிக்க: சில எளிதான உணவு வகைகள்

பலாக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்:

பலாக்காய் – 250 கிராம்

பச்சைமிளகாய் – இரண்டு

ADVERTISEMENT

பூண்டு – ஆறு பல்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – ஆறு

தேங்காய்த்துருவல் – ஒரு கப்

எண்ணெய் – தேவைக்கேற்ப

ADVERTISEMENT

கடுகு – ஒரு டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – இரண்டு

மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

ADVERTISEMENT

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:

  • பலாக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். குக்கரில் தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் கலந்து அதில் நறுக்கிய பலாக்காயைப் போட்டு 2 விசில் விட வேண்டும்.
  • வேகவைத்த பலாக்காயை கைகளில் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
  • தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, சீரகம்,உப்பு மற்றும் சின்ன வெங்காயம் இவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, பால் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் அனைத்தையும் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
  • பின்பு வேக வைத்து மசித்து வைத்திருந்த பலாக்காயை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
  • அடுப்பை குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் மூடி போட்டு மூடி வைக்க வேண்டும்.
  • கடைசியாக நாம் எடுத்து வைத்திருந்த தேங்காய்ப்பால் மற்றும் கொத்தமல்லி சேர்த்து மறுபடியும் 5 நிமிடம் மூடி போட்டு வேக விட வேண்டும்.
  • சுவையான பலாக்காய் பொரியல் தயார்.

மேலும் படிக்க: சில எளிதான வெரைட்டி ரைஸ் சமையல்

பலாக்காய் வடை

தேவையான பொருட்கள்:

பலாக்காய் – 250 கிராம்

கறிவேப்பிலை – சிறிதளவு

ADVERTISEMENT

கொத்தமல்லி தழை – சிறிதளவு

கடலைப் பருப்பு – ஒரு கப்

சோம்பு –  ஒரு டேபிள் ஸ்பூன்

வெங்காயம் – ஒன்று

பூண்டு – பத்து பற்கள்

ADVERTISEMENT

மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  • பலாக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். குக்கரில் தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் கலந்து அதில் நறுக்கிய பலாக்காயைப் போட்டு 2 விசில் விட வேண்டும்.
  • வேகவைத்த பலாக்காயை கைகளில் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
  • முதலில் கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, கரகரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதனுடன் மசித்த பலாக்காய், வெங்காயம், தோலோடு லேசாக நசுக்கிய பூண்டு, மிளகாய் தூள் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ள வேண்டும்.
  • வாணலியில், எண்ணெய்யை ஊற்றி நன்றாகக் காய்ந்ததும், மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி, உள்ளங்கைகளில் வைத்து லேசாக அழுத்தி எண்ணெய்யிலிட்டுப் பொரிக்க வேண்டும்.
  • மிதமான தீயில் சில நிமிடம் திருப்பிப்போட்டு வேகவைத்து கருகிவிடாமல் சிவந்த நிறத்தில் எடுத்தால், மொறுமொறு பலாக்காய் வடை தயார்.

மேலும் படிக்க: சில எளிதான வடை சமையல்

ADVERTISEMENT

பலாக்கொட்டை சிப்ஸ்

தேவையான பொருட்கள்:

பலாக்கொட்டை – பத்து

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் –  ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

ADVERTISEMENT

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பலாக்கொட்டைகளை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இந்த பலாக்கொட்டை நீளவாக்கில் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி, அதை வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, காய வைத்த பலாக்கொட்டைகளை வறுத்தெடுக்க வேண்டும்.
  • கடைசியாக அதில் உப்பு, மிளகுத்தூள், மஞ்சள் தூள் மூன்றையும் நன்கு கலந்து குலுக்கி ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
  • குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
  • மிகவும் சுலபமான கேரளா ஸ்டைல் பலாக்கொட்டை சிப்ஸ் தயார்.