பிரியாணி என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பிரியாணி எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்பதில் சந்தேகமில்லை. எல்லோருக்கும் பிடித்த பிரியாணி எப்படி செய்வது என்பதை பார்ப்போம்
ஆம்பூர் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – ஒரு கிலோ
மட்டன் – ஒரு கிலோ
தக்காளி – நான்கு
வெங்காயம் – மூன்று
இஞ்சி – ஐந்து துண்டு
பூண்டு – பத்து பல்
சின்ன வெங்காயம் – எட்டு
பச்சை மிளகாய் – எட்டு
பட்டை – ஒன்று
பிரியாணி இலை – ஒன்று
ஏலக்காய் – இரண்டு
கிராம்பு – இரண்டு
அன்னாசிப் பூ – இரண்டு
ஜாதிக்காய் – ஒன்று
நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
தயிர் – 1/2 கப்
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்
மட்டன் மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
தனியா பொடி – இரண்டு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புதினா இலைகள் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
குங்குமப்பூ – ஒரு டேபிள் ஸ்பூன்
ஃபுட் கலர் – ஒரு டீஸ்பூன்
முந்திரி – பத்து
திராட்சை – ஐந்து
பொரித்த வெங்காயம் – 1/2 கப்
செய்முறை:
- பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
- இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- முதலில் மட்டனை நன்கு கழுவி மஞ்சள் தூள்,எண்ணெய்,இஞ்சி, பூண்டு, 6 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இரண்டு அல்லது மூன்று முறை நல்ல தண்ணீரில் நன்கு அரிசியைக் கழுவ வேண்டும்.
- அடுப்பில், பாத்திரத்தை வைத்து அரிசியின் அளவுக்கு இரு மடங்கு தண்ணீர் ஊற்றி, மசாலாப் பொருட்களைப் போட்டு கொதித்தவுடன், பாசுமதி அரிசி சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடம் வேக விட வேண்டும்.
- அரிசி பாதி வெந்தவுடன், நீரை வடித்துக் கொள்ள வேண்டும்.
- பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
- நெய் மற்றும் எண்ணெய் சூடானதும் சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக தாளிக்கவும்.
- பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்பு தக்காளி, மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள்தூள், மட்டன் மசாலா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு, தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம், மூடி வைக்க வேண்டும்.
- வேக வைத்த மட்டன் சேர்த்து, பாத்திரத்தை சிறிது நேரம் மூடி மட்டனை வேக விட வேண்டும். மட்டன், மசாலாவும் நன்கு கலந்து, எண்ணெய் மேற்பகுதியில் பிரிந்து வர வேண்டும்.
- வேக வைத்த அரிசியை மட்டன் மசாலாவுடன் சேர்க்க வேண்டும். தேவையான உப்பு, பொரித்த வெங்காயம், பாலில் ஊற வைத்த குங்குமப்பூ சேர்த்து மூடி மிகவும் குறைவான தீயில் வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து பிரியாணி தயாராகிவிடும்.
- பின்பு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஃபுட் கலர், புதினாவை தூவி சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
- ஆம்பூர் பிரியாணி தயார்.
மேலும் படிக்க: சில எளிதான காலிஃபிளவர் சமையல்
சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – ஒரு கிலோ
சிக்கன் – ஒரு கிலோ
தக்காளி – நான்கு
வெங்காயம் – மூன்று
இஞ்சி – ஐந்து துண்டு
பூண்டு – பத்து பல்
சின்ன வெங்காயம் – எட்டு
பச்சை மிளகாய் – எட்டு
பட்டை – ஒன்று
பிரியாணி இலை – ஒன்று
ஏலக்காய் – இரண்டு
கிராம்பு – இரண்டு
அன்னாசிப் பூ – இரண்டு
ஜாதிக்காய் – ஒன்று
நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
தயிர் – 1/2 கப்
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்
சிக்கன் மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
தனியா பொடி – இரண்டு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புதினா இலைகள் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
குங்குமப்பூ – ஒரு டேபிள் ஸ்பூன்
ஃபுட் கலர் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
- முதலில் சிக்கனை நன்கு கழுவி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இரண்டு அல்லது மூன்று முறை நல்ல தண்ணீரில் நன்கு அரிசியைக் கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
- அடுப்பில், பாத்திரத்தை வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். நெய் மற்றும் எண்ணெய் சூடானதும் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய், சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக தாளிக்கவும்.
- பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்பு தக்காளி, மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள்தூள், சிக்கன் மசாலா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள், தேவைக்கேற்ப உப்பு, தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம், மூடி வைக்க வேண்டும்.
- பின்பு அளவு தண்ணீர், சிக்கன் சேர்த்து பாத்திரத்தை சிறிது நேரம் மூடி சிக்கனை வேக விட வேண்டும். சிக்கன், மசாலாவும் நன்கு கலந்து, எண்ணெய் மேற்பகுதியில் பிரிந்து வர வேண்டும்.
- பின்பு அரிசியை சிக்கன் மசாலாவுடன் சேர்க்க வேண்டும்.
- தேவையான உப்பு, பாலில் ஊற வைத்த குங்குமப்பூ, ஃபுட் கலர் சேர்த்து மூடி மிகவும் குறைவான தீயில் வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து பிரியாணி தயாராகிவிடும்.
- சிக்கன் பிரியாணி தயார்.
மேலும் படிக்க: சில எளிதான வடை சமையல்
மீன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – ஒரு கிலோ
மீன் – 1/2 கிலோ
தக்காளி – நான்கு
வெங்காயம் – மூன்று
எலுமிச்சை சாறு – இரண்டு டேபிள் ஸ்பூன்
இஞ்சி – ஐந்து துண்டு
பூண்டு – பத்து பல்
சின்ன வெங்காயம் – எட்டு
பச்சை மிளகாய் – எட்டு
பட்டை – ஒன்று
பிரியாணி இலை – ஒன்று
ஏலக்காய் – இரண்டு
கிராம்பு – இரண்டு
அன்னாசிப் பூ – இரண்டு
ஜாதிக்காய் – ஒன்று
நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
தயிர் – 1/2 கப்
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
தனியா பொடி – இரண்டு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புதினா இலைகள் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
குங்குமப்பூ – ஒரு டேபிள் ஸ்பூன்
ஃபுட் கலர் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
- முதலில் மீனை நன்கு கழுவி அதில் உப்பு, எலுமிச்சை சாறு, 2 பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இரண்டு அல்லது மூன்று முறை நல்ல தண்ணீரில் நன்கு அரிசியைக் கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- அடுப்பில், பாத்திரத்தை வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். நெய் மற்றும் எண்ணெய் சூடானதும் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய், சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக தாளிக்கவும்.
- பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்பு தக்காளி, மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள், தேவைக்கேற்ப உப்பு, தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம், மூடி வைக்க வேண்டும்.
- பின்பு அளவு தண்ணீர் மற்றும் மீன் சேர்த்து, பாத்திரத்தை சிறிது நேரம் மூடி, மீன்னை வேக விட வேண்டும். பின்பு அரிசியை மீன் மசாலாவுடன் சேர்க்க வேண்டும்.
- தேவையான உப்பு, பாலில் ஊற வைத்த குங்குமப்பூ, ஃபுட் கலர் சேர்த்து மூடி, மிகவும் குறைவான தீயில் வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து பிரியாணி தயாராகிவிடும்.
- மீன் பிரியாணி தயார்.
மேலும் படிக்க: சில எளிதான உணவு வகைகள்
இறால் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – ஒரு கிலோ
இறால் – ஒரு கிலோ
தக்காளி – நான்கு
வெங்காயம் – மூன்று
எலுமிச்சை சாறு – இரண்டு டேபிள் ஸ்பூன்
இஞ்சி – ஐந்து துண்டு
பூண்டு – பத்து பல்
சின்ன வெங்காயம் – எட்டு
பச்சை மிளகாய் – எட்டு
பட்டை – ஒன்று
பிரியாணி இலை – ஒன்று
ஏலக்காய் – இரண்டு
கிராம்பு – இரண்டு
அன்னாசிப் பூ – இரண்டு
ஜாதிக்காய் – ஒன்று
நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
தயிர் – 1/2 கப்
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
தனியா பொடி – இரண்டு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புதினா இலைகள் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
குங்குமப்பூ – ஒரு டேபிள் ஸ்பூன்
ஃபுட் கலர் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
- முதலில் இறாலை நன்கு கழுவி அதில் உப்பு, எலுமிச்சை சாறு, 2 பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இரண்டு அல்லது மூன்று முறை நல்ல தண்ணீரில் நன்கு அரிசியைக் கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- அடுப்பில், பாத்திரத்தை வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். நெய் மற்றும் எண்ணெய் சூடானதும் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய், சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக தாளிக்கவும்.
- பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்பு தக்காளி, மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள், தேவைக்கேற்ப உப்பு, தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 10 நிமிடம், மூடி வைக்க வேண்டும்.
- பின்பு இறால் மற்றும் அளவு தண்ணீர் சேர்த்து, பாத்திரத்தை சிறிது நேரம் மூடி, இறாலை வேக விட வேண்டும். பின்பு அரிசியை இறால் மசாலாவுடன் சேர்க்க வேண்டும்.
- தேவையான உப்பு, பாலில் ஊற வைத்த குங்குமப்பூ, ஃபுட் கலர் சேர்த்து மூடி, மிகவும் குறைவான தியில் வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து பிரியாணி தயாராகிவிடும்.
- இறால் பிரியாணி தயார்.