மீன் சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள். ஆனால் மீன் சாப்பிடுவதால் நமது உடலுக்கும் பல சத்துக்கள் கிடைக்கின்றன. மீனை பொரித்து சாப்பிடுவதை விட, குழம்பு வைத்து சாப்பிடுவது நல்லது. மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் இந்த சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. மீன் வைத்து சமைக்கக் கூடிய சில சமையல் வகைகளை இங்கே பார்ப்போம்.
நெத்திலிமீன் தொக்கு
தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் – ஒரு கிலோ
தக்காளி – நான்கு
புளி – நெல்லிக்காய் அளவு
சோம்பு – ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – இருபது
இஞ்சி – ஐந்து துண்டு
பூண்டு – பத்து பல்
பச்சை மிளகாய் – ஆறு
பட்டை – ஒன்று
கடுகு – ஒரு டீஸ்பூன்
தனியா தூள் – மூன்று டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
மீன் வறுவல் மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
- மீனை நன்கு கழுவி அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக தாளிக்கவும்.
- பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்பு தக்காளி, மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள்தூள், மீன் வறுவல் மசாலா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம், மூடி வைக்க வேண்டும்.
- சிறிது நேரம் கழித்து மூடியை எடுத்து கிளறிவிட்டு, புளி கரைசலை சேர்க்க வேண்டும். அதையும் 5 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
- கடைசியாக மீன் சேர்த்து லேசாக குலுக்கி விட வேண்டும்.
- அதையும் 5 நிமிடம் நன்கு வேக வைத்து, கொத்தமல்லி இலை தூவி இறக்கினால், சூடான நெத்திலி மீன் தொக்கு தயார்.
மேலும் படிக்க: சில எளிதான சிக்கன் உணவு வகைகள்
ஃபிஷ் ஃபிங்கர்
தேவையான பொருட்கள்:
மீன் – பத்து துண்டு
எலுமிச்சை சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்
சோள மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்
பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்
தனியா தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
மீன் வறுவல் மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்
முட்டை – ஒன்று
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
- மீனை நீளவாக்கில் துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் மீன், எலுமிச்சை சாறு, முட்டை, சோள மாவு, மைதா மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள்தூள், சிக்கன் வறுவல் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து, லேசாக நீர் தெளித்து பிசையவும்.
- இதை ஒரு மணி நேரம் அப்படியே ஊற விட வேண்டும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், குறைந்த தீயில் வைத்து மீன் துண்டுகளை, பிரட் துகள்களில் லேசாக பிரட்டி, எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
- மொறுமொறு ஃபிஷ் ஃபிங்கர் தயார்.
மேலும் படிக்க: சில எளிதான மட்டன் உணவுகள்
ஃபிஷ் பொடிமாஸ்
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – இரண்டு
மீன் – ஐந்து துண்டு
இஞ்சி – ஐந்து துண்டு
பூண்டு – பத்து பல்
சின்ன வெங்காயம் – எட்டு
பச்சை மிளகாய் – இரண்டு
பட்டை – ஒன்று
கடுகு – ஒரு டீஸ்பூன்
தனியா தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
மிளகுத் தூள் – இரண்டு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
மீன் வறுவல் மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் மீன் துண்டுகளை போட்டு, நன்கு வேக விட்டு, முள் நீக்கி விட்டு, மீன் சதைகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக தாளிக்கவும். பின்பு பெரிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்பு மீன் சதை, மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள்தூள், மீன் வறுவல் மசாலா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம், மூடி வைக்க வேண்டும்.
- கடைசியாக மிளகுத் தூள், கொத்தமல்லி இலை தூவி இறக்கினால், சூடான ஃபிஷ் பொடிமாஸ் தயார்.
மேலும் படிக்க: சில எளிதான பலாக்காய் சமையல்
மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
மீன் – 1/2 கிலோ
தக்காளி – இரண்டு
பெரிய வெங்காயம் – ஒன்று
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம் – இருபது
தேங்காய்த்துருவல் – ஒரு கப்
கசகசா – 1/2 டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
பூண்டு – பத்து பல்
பச்சை மிளகாய் – மூன்று
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
தனியா தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
மீன் குழம்பு மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
- மீனை நன்கு கழுவி அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, சோம்பு, கசகசா, தேங்காய்த்துருவல், 10 சின்ன வெங்காயம், 5 பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- அவை நன்கு வதங்கியதும், அதில் தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மீன் குழம்பு மசாலா, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- இந்தக் கலவையை ஆற வைத்து, மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். புளியில் தண்ணீர் ஊற்றி அதை நன்கு கரைத்து, அந்தக் கரைசலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பெரிய வெங்காயம் மற்றும் சீரகத்தை லேசாக தட்டி அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
- அவை பொரிந்ததும் வெங்காயம், சீரகம் சேர்த்து அரைத்த விழுதை அதில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
- பின்பு மிக்ஸியில் அரைத்த மசாலா கலவையை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 லிருந்து 10 நிமிடம் வரை, மூடி வைக்க வேண்டும்.
- சிறிது நேரம் கழித்து மூடியை எடுத்து கிளறிவிட்டு, புளி கரைசலை சேர்க்க வேண்டும். அதையும் 5 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
- கடைசியாக மீன் சேர்த்து லேசாக குலுக்கி விட வேண்டும். அதையும் 5 நிமிடம் நன்கு வேக வைத்து, கொத்தமல்லி இலை தூவி இறக்கினால், சூடான மீன் குழம்பு தயார்.
மேலும் படிக்க: சில எளிதான பிரியாணி உணவு வகைகள்
ஃபிஷ் கட்லட்
தேவையான பொருட்கள்:
மீன் – ஐந்து துண்டு
பெரிய வெங்காயம் – ஒன்று
உருளைக்கிழங்கு – இரண்டு
பீன்ஸ் – ஐந்து
கேரட் – ஒன்று
இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்
பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்
தனியா தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
மீன் வறுவல் மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்
பிரட் துகள்கள் – தேவைக்கேற்ப
முட்டை – ஒன்று
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் மீன் துண்டுகளை போட்டு, நன்கு வேக விட்டு, முள் நீக்கி விட்டு, மீன் சதைகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் ஆகியவற்றை நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நன்கு மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், மசித்து வைத்த உருளைக்கிழங்கு, வேக வைத்த பீன்ஸ், கேரட், மீன் சதை, மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள்தூள், மீன் வறுவல் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, கொத்தமல்லி, கறிவேப்பிலை தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து, நன்கு வதக்க வேண்டும்.
- இதை சிறு சிறு கட்லட் துண்டாக தட்டிக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், குறைந்த தீயில் வைத்து கட்லட் துண்டுகளை, முட்டையில் டிப் செய்து, பிரட் துகள்களில் லேசாக பிரட்டி, எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
- மொறுமொறு ஃபிஷ் கட்லட் தயார்.
மேலும் படிக்க: சில எளிதான வெரைட்டி ரைஸ் சமையல்
மீன் வறுவல்
தேவையான பொருட்கள்:
மீன் – பத்து துண்டு
எலுமிச்சை சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்
சோள மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
பூண்டு – பத்து பல்
இஞ்சி – நான்கு துண்டு
முட்டை – ஒன்று
தனியா தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
மீன் வறுவல் மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
- மிக்ஸியில் சீரகம், சோம்பு, மிளகு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் சோள மாவு, அரிசி மாவு, எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா, மஞ்சள்தூள், மீன் வறுவல் மசாலா, முட்டை, சீரகம், சோம்பு, மிளகு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்த விழுது, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து, லேசாக நீர் தெளித்து பிசையவும்.
- இந்த கலவையை மீனில் தடவி அதை ஒரு மணி நேரம் அப்படியே ஊற விட வேண்டும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், குறைந்த தீயில் வைத்து, மீன் துண்டுகளை போட்டுப் பொரித்தெடுக்கவும்.
- மொறுமொறு மீன் வறுவல் தயார்.