ADVERTISEMENT

சில எளிதான உணவு வகைகள்

தினமும் என்ன சமைக்க வேண்டும் என்பது பலருக்கு பெரிய சவாலாகவே இருக்கிறது. அவர்களுக்காகவே சில எளிதான உணவு வகைகளை இங்கே பார்ப்போம்.

தக்காளி குருமா

தேவையான பொருட்கள்:

தக்காளி – நான்கு

வெங்காயம் – இரண்டு

மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

தேங்காய்த்துருவல் – ஒரு கப்

கசகசா – 1/2 டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

பச்சைமிளகாய் – நான்கு

ADVERTISEMENT

பிரியாணி இலை – ஒன்று

ஏலக்காய் – இரண்டு

கிராம்பு – இரண்டு

அன்னாசிப் பூ – ஒன்று

ஜாதிக்காய் – ஒன்று

ADVERTISEMENT

பாலில் ஊற வைத்த முந்திரி – ஆறு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

ADVERTISEMENT

செய்முறை:

  • தேங்காய்த்துருவல், கசகசா, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பாலில் ஊற வைத்த முந்திரியை தண்ணீர் ஊற்றி நன்கு மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய், பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
  • பின்பு வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளி, இஞ்சி விழுது, பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
  • பின்பு நாம் அரைத்து வைத்திருந்த தேங்காய்த்துருவல், கசகசா, சோம்பு கலவையை கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட வேண்டும்.
  • பின்பு பாலில் ஊற வைத்த முந்திரி கலவையை சேர்த்து, கடைசியாக கொத்தமல்லி,கறிவேப்பிலை உப்பு போட்டு ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
  • சுவையான தக்காளி குருமா தயார்.

மேலும் படிக்கசில எளிதான சிக்கன் உணவு வகைகள்

மீல் மேக்கர் கிரேவி

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் -ஒரு கப்

தக்காளி – இரண்டு

வெங்காயம் – ஒன்று

சின்ன வெங்காயம் – ஐந்து

ADVERTISEMENT

பச்சை மிளகாய் – இரண்டு

பட்டை – ஒன்று

இஞ்சி – ஐந்து துண்டு

பூண்டு – பத்து பல்

பிரியாணி இலை – ஒன்று

ADVERTISEMENT

ஏலக்காய் – இரண்டு

கிராம்பு – இரண்டு

அன்னாசிப் பூ – ஒன்று

ஜாதிக்காய் – ஒன்று

தனியா தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

கொத்தமல்லி இலை – சிறிதளவு

புதினா – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

ADVERTISEMENT

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் மீல் மேக்கர் துண்டுகளை போட்டு, நன்கு வேக விட்டு, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து லேசாக தாளிக்கவும்.
  • பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் மீல் மேக்கர், தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, மிதமான தீயில் பத்து நிமிடம் நன்கு வேக விட வேண்டும்.
  • கடைசியாக கொத்தமல்லி இலை, புதினா, கறிவேப்பிலை போட்டு ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
  • சுவையான மீல் மேக்கர் கிரேவி தயார்.

மேலும் படிக்கசில எளிதான மீன் சமையல்

மீல் மேக்கர் வறுவல்

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் – ஒரு கப்

சோள மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன்

மைதா மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

முட்டை – ஒன்று

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

தனியா தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

ADVERTISEMENT

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கர், சோள மாவு, மைதா மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு விழுது, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து, லேசாக நீர் தெளித்து பிசையவும்.
  • இதை ஒரு மணி நேரம் அப்படியே ஊற விட வேண்டும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், குறைந்த தீயில் வைத்து மீல் மேக்கர் துண்டுகளை போட்டுப் பொரித்தெடுக்கவும்.
  • மொறுமொறு மீல் மேக்கர் வறுவல் தயார்.

மேலும் படிக்கசில எளிதான மட்டன் உணவுகள்

காய்கறி குருமா

தேவையான பொருட்கள்:

தக்காளி – மூன்று

வெங்காயம் – இரண்டு

காலிஃப்ளவர் – ஒன்று

கேரட் – மூன்று

ADVERTISEMENT

பீன்ஸ் – ஆறு

பச்சை பட்டாணி – 50 கிராம்

மிளகாய்த்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

மஞ்சள்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

தனியாத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

தேங்காய்த்துருவல் – ஒரு கப்

ADVERTISEMENT

கசகசா – 1/2 டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

பச்சைமிளகாய் – நான்கு

பிரியாணி இலை – ஒன்று

ஏலக்காய் – இரண்டு

ADVERTISEMENT

கிராம்பு – இரண்டு

அன்னாசிப் பூ – ஒன்று

ஜாதிக்காய் – ஒன்று

பாலில் ஊற வைத்த முந்திரி – ஆறு

கறிவேப்பிலை – சிறிதளவு

ADVERTISEMENT

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

  • தேங்காய்த்துருவல், கசகசா, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பாலில் ஊற வைத்த முந்திரியை தண்ணீர் ஊற்றி நன்கு மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய், பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும். பின்பு வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளி, இஞ்சி விழுது, பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
  • பின்பு காய்கள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
  • பின்பு நாம் அரைத்து வைத்திருந்த தேங்காய்த்துருவல், கசகசா, சோம்பு கலவையை கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட வேண்டும்.
  • பின்பு பாலில் ஊற வைத்த முந்திரி கலவையை சேர்த்து, கடைசியாக கொத்தமல்லி,கறிவேப்பிலை உப்பு போட்டு ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
  • சுவையான காய்கறி குருமா தயார்.

மேலும் படிக்கசில எளிதான வெரைட்டி ரைஸ் சமையல்

வடகறி

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு – ஒரு கப்

ADVERTISEMENT

வெங்காயம் – இரண்டு

தக்காளி – மூன்று

இஞ்சி – ஐந்து துண்டு

பூண்டு – பத்து பல்

சின்ன வெங்காயம் – எட்டு

ADVERTISEMENT

பச்சை மிளகாய் – ஆறு

பட்டை – ஒன்று

சோம்பு – ஒரு டீஸ்பூன்

பிரியாணி இலை – ஒன்று

ஏலக்காய் – ஒன்று

ADVERTISEMENT

கிராம்பு – இரண்டு

அன்னாசிப் பூ – ஒன்று

ஜாதிக்காய் – ஒன்று

லவங்கம் – இரண்டு

தனியா தூள் – மூன்று டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

மிளகாய் தூள் – இரண்டு டேபிள் ஸ்பூஒன்றுன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

புதினா இலைகள் – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

ADVERTISEMENT

செய்முறை:

  • இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடலைப்பருப்பை ஊற வைத்து, நீரை வடித்து விட்டு சோம்பு, கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு சேர்த்து அரைக்கவும். அரைத்த கடலைப்பருப்பை ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய், லவங்கம் சேர்த்துத் தாளிக்கவும்.
  • இத்துடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்த விழுது, தக்காளி, பச்சைமிளகாய், நறுக்கிய புதினா, கொத்துமல்லி இலையைச் சேர்க்கவும்.
  • பின்பு தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், தேவைக்கேற்ப உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  • பின்பு ஆவியில் வேக வைத்த கடலைப்பருப்பை உதிரியாக மசாலாவில் சேர்த்து, தண்ணீர் வற்றி திக்கான பதத்தில் வரும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • சுவையான வடகறி தயார்.

மேலும் படிக்கசில எளிதான காலிஃபிளவர் சமையல்

காய்கறி சூப்

தேவையான பொருட்கள்:

கேரட் – ஒன்று

பீன்ஸ் – ஐந்து

முட்டைக்கோஸ் – சிறிதளவு

வெங்காயத்தாள் – சிறிதளவு

ADVERTISEMENT

வெங்காயம் – ஒன்று

பூண்டு – ஐந்து பல்

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

சோள மாவு – மூன்று டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

ADVERTISEMENT

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

  • காய்கறிகளை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • பூண்டை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • சோள மாவு, தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் பூண்டை போட்டு வதக்க வேண்டும்.
  • பின்பு வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும், வெட்டி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.
  • பின்பு தேவையான அளவு தண்ணீர்,உப்பு சேர்த்து மூடி போட்டு, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • கடைசியாக சோள மாவு கலவை, மிளகுத் தூள் மற்றும் வெங்காயத்தாள் சேர்க்க வேண்டும். அதையும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • காய்கறி சூப் தயார்.

மேலும் படிக்கசில எளிதான முட்டை உணவு வகைகள்

முருங்கைக்கீரை சூப்

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு

தக்காளி – ஒன்று

இஞ்சி – இரண்டு துண்டு

ADVERTISEMENT

பூண்டு – ஐந்து பல்

சின்ன வெங்காயம் – எட்டு

பச்சை மிளகாய் – இரண்டு

காய்ந்த மிளகாய் – இரண்டு

கடுகு – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

சீரகம் – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

ADVERTISEMENT

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

  • இஞ்சி பூண்டை லேசாக தட்டிக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக தாளிக்க வேண்டும்.
  • பின்பு சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டை சேர்த்து வதக்க வேண்டும்.
  • வெங்காயம், தக்காளியை லேசாக வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர், உப்பு, முருங்கைக்கீரை சேர்த்து வதக்க வேண்டும். 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • கடைசியாக மிளகுத் தூள் சேர்க்க வேண்டும். அதையும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • முருங்கைக்கீரை சூப் தயார்.