ADVERTISEMENT

சில எளிதான வடை சமையல்

காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் மிகச் சிறந்த சிற்றுண்டி வடை. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சில வடை உணவுகளை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

அவல் வடை

தேவையான பொருட்கள்:

அவல் – ஒரு கப்

அரிசி மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன்

ரவை – ஒரு டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – இரண்டு

ADVERTISEMENT

பச்சை மிளகாய் – மூன்று

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ADVERTISEMENT

எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:

  • அவலை சிறிதளவு தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் நன்கு ஊற விட வேண்டும். தண்ணீரை வடிகட்டி, நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
  • அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், அரிசி மாவு, ரவை, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மிளகுத் தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ள வேண்டும்.
  • வாணலியில், எண்ணெய்யை ஊற்றி நன்றாகக் காய்ந்ததும், ஒரு இலையில் எண்ணெய்யை தடவி, சிறுசிறு உருண்டைகளாக்கி, எடுத்து உருட்டி தட்டி, நடுவில் துவாரம் போட்டு எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
  • மிதமான தீயில் சில நிமிடம் திருப்பிப்போட்டு வேகவைத்து, சிவந்த நிறத்தில் எடுத்தால், மொறுமொறு அவல் வடை தயார்.

மேலும் படிக்கசில எளிதான காலிஃபிளவர் சமையல்

சாதம் வடை

தேவையான பொருட்கள்:

சாதம் – இரண்டு கப்

ADVERTISEMENT

பெரிய வெங்காயம் – இரண்டு

பச்சை மிளகாய் – மூன்று

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

ADVERTISEMENT

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:

  • வேக வைத்த சாதத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், மிளகுத் தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ள வேண்டும்.
  • வாணலியில், எண்ணெய்யை ஊற்றி நன்றாகக் காய்ந்ததும், ஒரு இலையில் எண்ணெய்யை தடவி, சிறுசிறு உருண்டைகளாக்கி, எடுத்து உருட்டி தட்டி, நடுவில் துவாரம் போட்டு எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
  • மிதமான தீயில் சில நிமிடம் திருப்பிப்போட்டு வேகவைத்து, சிவந்த நிறத்தில் எடுத்தால், மொறுமொறு சாதம் வடை தயார்.

மேலும் படிக்கசில எளிதான முட்டை உணவு வகைகள்

ADVERTISEMENT

முட்டை வடை

தேவையான பொருட்கள்

வேகவைத்த முட்டை – மூன்று

முட்டை – ஒன்று

அரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்

கடலை மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – ஒன்று

ADVERTISEMENT

பச்சை மிளகாய் – இரண்டு

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ADVERTISEMENT

எண்ணெய் – தேவையான அளவு

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

ADVERTISEMENT

செய்முறை:

  • முட்டையை வேக வைத்து துருவிக் கொள்ள வேண்டும். அதனுடன் அரிசி மாவு, கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, பூண்டு விழுது, மிளகாய் தூள், மிளகுத் தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ள வேண்டும்.
  • ஒரு முட்டையை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில், எண்ணெய்யை ஊற்றி, ண்ணெய் நன்றாகக் காய்ந்ததும், மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி, உள்ளங்கைகளில் வைத்து லேசாக அழுத்தி, வடைபோல் தட்டி, முட்டையில் டிப் செய்து, எண்ணெய் காய்ந்ததும் பொரித்தெடுக்கவும்.
  • மிதமான தீயில் சில நிமிடம் திருப்பிப்போட்டு வேகவைத்து, சிவந்த நிறத்தில் எடுத்தால், மொறுமொறு முட்டை வடை தயார்.

மேலும் படிக்கசில எளிதான உணவு வகைகள்

முட்டைக்கோஸ் வடை

தேவையான பொருட்கள்:

முட்டைக்கோஸ் – 1/2

கடலைப் பருப்பு – ஒரு கப்

பெரிய வெங்காயம் – ஒன்று

பச்சை மிளகாய் – இரண்டு

ADVERTISEMENT

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ADVERTISEMENT

எண்ணெய் – தேவையான அளவு

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

ADVERTISEMENT

செய்முறை:

  • கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, கரகரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, பூண்டு விழுது, மிளகாய் தூள், மிளகுத் தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ள வேண்டும்.
  • வாணலியில், எண்ணெய்யை ஊற்றி நன்றாகக் காய்ந்ததும், மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி, உள்ளங்கைகளில் வைத்து லேசாக அழுத்தி, வடைபோல் தட்டி எண்ணெய் காய்ந்ததும் பொரித்தெடுக்கவும்.
  • மிதமான தீயில் சில நிமிடம் திருப்பிப்போட்டு வேகவைத்து, சிவந்த நிறத்தில் எடுத்தால், மொறுமொறு முட்டைக்கோஸ் வடை தயார்.

மேலும் படிக்கசில எளிதான வெரைட்டி ரைஸ் சமையல்

கேரட் வடை

தேவையான பொருட்கள்:

கேரட் – இரண்டு

கடலைப் பருப்பு – ஒரு கப்

பெரிய வெங்காயம் – ஒன்று

பச்சை மிளகாய் – இரண்டு

ADVERTISEMENT

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ADVERTISEMENT

எண்ணெய் – தேவையான அளவு

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

ADVERTISEMENT

செய்முறை:

  • கேரட்டை துருவிக் கொள்ள வேண்டும். கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, கரகரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, பூண்டு விழுது, மிளகாய் தூள், மிளகுத் தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ள வேண்டும்.
  • வாணலியில், எண்ணெய்யை ஊற்றி நன்றாகக் காய்ந்ததும், மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி, உள்ளங்கைகளில் வைத்து லேசாக அழுத்தி, வடைபோல் தட்டி எண்ணெய் காய்ந்ததும் பொரித்தெடுக்கவும்.
  • மிதமான தீயில் சில நிமிடம் திருப்பிப்போட்டு வேகவைத்து, சிவந்த நிறத்தில் எடுத்தால், மொறுமொறு கேரட் வடை தயார்.

மேலும் படிக்கசில எளிதான பிரியாணி உணவு வகைகள்

உளுந்த வடை

தேவையான பொருட்கள்:

உளுத்தம்பருப்பு – 1/2 கிலோ

பெரிய வெங்காயம் – ஒன்று

பச்சை மிளகாய் – இரண்டு

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

ADVERTISEMENT

கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:

  • உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், மிளகுத் தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ள வேண்டும்.
  • வாணலியில், எண்ணெய்யை ஊற்றி நன்றாகக் காய்ந்ததும், ஒரு இலையில் எண்ணெய்யை தடவி, சிறுசிறு உருண்டைகளாக்கி, எடுத்து உருட்டி தட்டி, நடுவில் துவாரம் போட்டு எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
  • மிதமான தீயில் சில நிமிடம் திருப்பிப்போட்டு வேகவைத்து, சிவந்த நிறத்தில் எடுத்தால், மொறுமொறு உளுந்த வடை தயார்.

மேலும் படிக்க: சில எளிதான பலாக்காய் சமையல்

வாழைப்பூ வடை

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ – ஒன்று

கடலைப் பருப்பு – ஒரு கப்

பெரிய வெங்காயம் – ஒன்று

ADVERTISEMENT

பச்சை மிளகாய் – இரண்டு

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

ADVERTISEMENT

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

ADVERTISEMENT

கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:

  • வாழைப்பூவைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, கரகரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், வாழைப்பூ, பச்சை மிளகாய், இஞ்சி விழுது, பூண்டு விழுது, மிளகாய் தூள், மிளகுத் தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ள வேண்டும்.
  • வாணலியில், எண்ணெய்யை ஊற்றி நன்றாகக் காய்ந்ததும், மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி, உள்ளங்கைகளில் வைத்து லேசாக அழுத்தி, வடைபோல் தட்டி எண்ணெய் காய்ந்ததும் பொரித்தெடுக்கவும்.
  • மிதமான தீயில் சில நிமிடம் திருப்பிப்போட்டு வேகவைத்து, சிவந்த நிறத்தில் எடுத்தால், மொறுமொறு வாழைப்பூ வடை தயார்.

மேலும் படிக்கசில எளிதான மட்டன் உணவுகள்

கீரை வடை

தேவையான பொருட்கள்:

கீரை -ஒரு கட்டு

கடலைப் பருப்பு – ஒரு கப்

பெரிய வெங்காயம் – ஒன்று

ADVERTISEMENT

பச்சை மிளகாய் – இரண்டு

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

ADVERTISEMENT

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

ADVERTISEMENT

கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:

  • கீரையை ஆய்ந்து , அலசிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, கரகரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீரை, பச்சை மிளகாய், இஞ்சி விழுது, பூண்டு விழுது, மிளகாய் தூள், மிளகுத் தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ள வேண்டும்.
  • வாணலியில், எண்ணெய்யை ஊற்றி நன்றாகக் காய்ந்ததும், மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி, உள்ளங்கைகளில் வைத்து லேசாக அழுத்தி, வடைபோல் தட்டி எண்ணெய் காய்ந்ததும் பொரித்தெடுக்கவும்.
  • மிதமான தீயில் சில நிமிடம் திருப்பிப்போட்டு வேகவைத்து, சிவந்த நிறத்தில் எடுத்தால், மொறுமொறு கீரை வடை தயார்.

மேலும் படிக்கசில எளிதான மீன் சமையல்

பருப்பு வடை

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு – ஒரு கப்

பெரிய வெங்காயம் – ஒன்று

பச்சை மிளகாய் – இரண்டு

ADVERTISEMENT

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ADVERTISEMENT

எண்ணெய் – தேவையான அளவு

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

ADVERTISEMENT

செய்முறை:

  • கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, கரகரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, பூண்டு விழுது, மிளகாய் தூள், மிளகுத் தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ள வேண்டும்.
  • வாணலியில், எண்ணெய்யை ஊற்றி நன்றாகக் காய்ந்ததும், மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி, உள்ளங்கைகளில் வைத்து லேசாக அழுத்தி, வடைபோல் தட்டி எண்ணெய் காய்ந்ததும் பொரித்தெடுக்கவும்.
  • மிதமான தீயில் சில நிமிடம் திருப்பிப்போட்டு வேகவைத்து, சிவந்த நிறத்தில் எடுத்தால், மொறுமொறு பருப்பு வடை தயார்.

மேலும் படிக்கசில எளிதான சிக்கன் உணவு வகைகள்

வெங்காயத்தாள் வடை

தேவையான பொருட்கள்:

வெங்காயத்தாள் – ஒரு கைப்பிடி அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி தழை – சிறிதளவு

கடலைப் பருப்பு – ஒரு கப்

ADVERTISEMENT

சோம்பு – ஒரு டீஸ்பூன்

வெங்காயம் – ஒன்று

பூண்டு – பத்து பற்கள்

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ADVERTISEMENT

பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, கரகரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள், வெங்காயம், தோலோடு லேசாக நசுக்கிய பூண்டு, மிளகாய் தூள் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ள வேண்டும். வாணலியில், எண்ணெய்யை ஊற்றி நன்றாகக் காய்ந்ததும், மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி, உள்ளங்கைகளில் வைத்து லேசாக அழுத்தி எண்ணெய்யிலிட்டுப் பொரிக்க வேண்டும்.
  • மிதமான தீயில் சில நிமிடம் திருப்பிப்போட்டு வேகவைத்து கருகிவிடாமல் சிவந்த நிறத்தில் எடுத்தால், மொறுமொறு வெங்காயத்தாள் வடை தயார்.